மக்கள் ஒவ்வொருவரின் நம்பிக்கை, கலாசாரம், சமுதாயம் சார்ந்த சுதந்திரம் என அனைத்து வகையிலான உரிமைகளையும் நம்பிக்கையையும் பாதுகாப்பதே இந்திய அரசின் முன்னுரிமை என யுனெஸ்கோ அரங்கில் பிரதமர் மோடி பேசினார்.
முதல் நிகழ்ச்சியாக யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில்  உரை நிகழ்த்தும்போது, தனது உரையில் இந்தியாவில் உள்ள சமூக கட்டமைப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்தின் 70-வது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "பெருமை மிகுந்த யுனெஸ்கோ அரங்கில் பேச வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெருமை கொள்கிறேன்
.
சமீப காலங்களில் பல இன்னல்களை உலக நாடுகள் சந்திக்க நேர்ந்திருந்தாலும் அவை அனைத்தையும் எதிர்கொண்டு வளர்ந்து நிற்கும் நிறுவனமாக யுனெஸ்கோ உள்ளது. உலக நாடுகளின் நிலை தற்போது திடமாக உள்ளதென்றால் அதற்கு யுனெஸ்கோவின் பங்கு குறிப்பிட வேண்டியது.
இந்தியாவில் பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், கல்வி அளிக்கவும், 'பேட்டி பச்சோ- பேட்டி படோ' எனும், தேசிய அளவிலான விழிப்புணர்வு திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
கங்கையை தூய்மைப்படுத்தும் திட்டம், அனைவருக்கும் வீடு, அனைவருக்கும் மின்சாரம் என அனைத்து மக்களுக்குமான வளர்ச்சி திட்டங்களை எனது அரசு செய்து வருகிறது.
அறிவியல் என்பது இந்திய மக்களின் முன்னேற்றத்துக்கானது. அறிவியலே மனித குலத்தின் வளர்ச்சி என்று மகாத்மா காந்தி கூறினார். அமைதியும், முன்னேற்றமும் தான் நமது நமது எதிர்கால குறிக்கோள்.
இந்தியாவின் கலாச்சாரத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கல்வியே உறுதியான வளர்ச்சியை அளிக்கும். அதற்கு கலாச்சாரம் உறுதுணையாக அமையும். ஆனால் கலாச்சாரத்தை போற்றுவது பிரிவினைக்கு காரணமாக இருக்க கூடாது. அறிவியல் இந்த மக்களின் எதிர்கால முன்னேற்றததுக்கும், பாதுகாப்புக்கும் பயன்படுவதாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் நம்பிக்கை, கலாசாரம், சமுதாயம் சார்ந்த சுதந்திரம் என அனைத்து வகையிலான உரிமைகளும் பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சமூகம் முன்னேற்றமடைய ஒவ்வொரு குடிமகனும் கைக்கோர்க்க வேண்டும். பலவீனமான குடிமகனை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்வதே உண்மையான வளர்ச்சி, உண்மையான முன்னேற்றம். அதுவே வளர்ச்சியின் அளவுகோள்" என்றார்.




 link:https://www.youtube.com/user/narendramodi


யோகாசனத்தின் சிறப்பை சீர் தூக்கி பார்க்கும் காலம் கனிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும்!


இந்த ஆண்டின் யுனெஸ்கோவின் மிக முக்கியமான அறிவிப்பு   இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்  மூலம் அவையில் அறிவிப்பு செய்யப் பட்டது!
அது!

21/06/2015  "உலக யோகாசனம் தினம்".

ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெருமை படக் கூடிய இந்த அறிவிப்போடு யுனெஸ்கோவின் இந்த இனிய நிகழ்ச்சி நிறைவுற்றது.




புதுவை வேலு


நன்றி;news 7/DMR