vendredi 19 juin 2015

'வலைப்பூ' புறாவே! வருக!





கடவுச் சீட்டு
 இல்லாமல் !
புலம்பெயர்ந்து
 செல்லும் !
புள்ளினமே ! புறாவே!




தூய அன்பின்
 தூது இலக்கண(ம்)
நூற்பாவே!
 புறாவே!


கோயில் மாடத்தில்
 மகுடம் சூடி
வீற்றிருக்கும்
 மாடப் புறாவே!


அன்பின் அகநானூறு
 அழகை!
ஜெகத்தில் காட்டும்
 காதல் புறாவே!


சரித்திரநாயகர்
 சாண்டில்யன்
தலைப் பூவைச் சூடிய
 கடல் புறாவே!


பாலின் வெண்மை
 நிறமொத்த
வெள்ளைப் புறாவே!



தமிழகத்தில்
 தழைத்து வளரும்
மரகதப் புறாவே!

பகையில்லா பாரதம் !
 புகையில்லா பாரதம் !
வகை காணும் நாள்
 புவியில் வரவேண்டும்
கவிப் புறாவே!


வலைச்சரம் வாசல் வந்து
 கலைச்சரம் தொடுப்பதற்கு
பதிவர்கள் வரவேண்டும்
 வரவேற்க புறப்படு !
வலைப் பூ புறாவே!

புதுவை வேலு

35 commentaires:

  1. சாதி மதம் நிறம் கடந்து (பதிவர்கள்) மனித நேயம் வளர வலைப்புறாவை தூது விட்ட புதுவை வேலு அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் .

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. மிகவும் இரசித்தேன்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. தங்களின் புதுமையான புறா விடு தூதுப் பதிவும் படங்களும் மிக அருமை.
    புறாவைத்தான் அமைதிக்கும் சமாதானத்திற்கும் எப்போதுமே ஓர் அடையாளமாகச் சொல்வார்கள்.

    //கோயில் மாடத்தில் மகுடம் சூடி வீற்றிருக்கும் மாடப் புறாவே! //

    சமய ஒற்றுமைக்கும் புறாக்களே எடுத்துக்காட்டுகள் என நான் சமயத்தில் எடுத்துக்கொள்வது உண்டு .... ஹிந்துக்கோயில்களில் மட்டுமல்லாது, இஸ்லாமிய, கிறிஸ்தவ கோயில்களுக்கும் இவை அவ்வப்போது பயணித்து அங்குள்ள மசூதிகள், தேவாலயங்கள் போன்றவற்றிலும் இடம்பிடித்து வருவதுண்டு என்பதால். :)

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. இந்த நேரத்தில் பதிவுலகில் சமாதான வலைப்புறாக்கள் தேவைதான். பதிவை இரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. புறா தூது அவசியமே... அருமையாக வரிகள்..

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அழகோ அழகு... மிகவும் ரசித்தேன்...

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. Ce commentaire a été supprimé par l'auteur.

    RépondreSupprimer
  8. அவசியமான நேரத்தில் அவசியமான பதிவே... இதை அனைத்து பதிவர்களும்... புரிந்து கொள்ளல் வேண்டும். நன்றி நண்பரே..

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. தக்க நேரத்தில் தகுந்த பகிர்வு.

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி ! சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. ஒவ்வொரு படமும் அழகு, கவிதையும் அழகு மொத்தத்தில் பதிவு அருமை, வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. படங்களும் பாவரிகளும் நன்று
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. ஆஹா புறாக்களின் படங்களும் பாக்களும் - அழகு!
    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. பாடலும் படங்களும் அருமை!
    த ம 5

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. புறாவிடம் வேண்டுதலா?
    பலிக்கட்டும்
    தம +

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. புறாப்படங்களுடன் புறப்பட்டுவந்த புறாக் கவிதைகள் சிறப்பு! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. படங்கள் அழகு! கவிதை மிக அருமை!

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. புறாவிடு தூதா!!? நன்று!

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. கவிதையை சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  19. கவிதை அருமையாக இருக்கிறது. . எட்டாவது வகுப்பில் படித்த சக்தி முற்றப் புலவரின் நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படுபனையின்
    கிழங்கு பிளந்தன்னப் பவளக்கூர்வாய் செங்கால்நாராய். போல. ரஸித்துப் படித்தேன். அன்புடன்

    RépondreSupprimer