lundi 10 août 2015

"அநியாய வட்டி சும்மா! அதிரும் இல்ல!!!"

"மீட்டர் வட்டி சும்மா! மிரளும் இல்ல!!!"






ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல்நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்என்று கேட்டார்.
தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை ஒன்றை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். 
அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.
பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.
பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட்,  தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.
தெனாலிராமனைப் பார்த்து என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்று பணம் தருவதாக சொன்னாயே? இன்னும் தரவில்லையே உடனே கொடு! என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான்.

அநியாய வட்டி வாங்கும் சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.

 சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன்.  என்னுடன் நீயும் வா”  என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டான்.

போகும் போது குதிரையையும், கூடவே ஒரு பூனையையும், அழைத்துச் சென்றான்.

சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. 

அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து  உன் குதிரை என்ன விலைஎன்று கேட்டான்.
அதற்கு தெனாலிராமனோ!!!!
குதிரையின் விலை 1 பவுன்தான்.  இந்த பூனையின் விலையோ 500 பவுன்.
ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் குதிரையைக் கொடுப்போன்என்றான்.
தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும், குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.

பின்பு, தெனாலிராமன் சேட்டிடம், ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். 
ஆனால்?  ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான்.

குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயேஎன்றான்.

அதற்கு தெனாலிராமன் ஐயா சேட்டே! 
குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன் நீ வாங்க மாட்டேன் என்கிறாயே
இது என்ன நியாயம்என்றான்.

சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.

மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின்பு, தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.

இதைக் கேட்டதும் அநியாய வட்டிக்கு ஆசை பட்டவர் ஆடி மாதத்தில் ஆடித்தான் போனார்.


மன்னர் கிருஷ்ண தேவராயர் தீர்ப்பைக் கேட்டதும்............

"அநியாய வட்டி சும்மா! அதிரும் இல்ல!!!"

"மீட்டர் வட்டி சும்மா! மிரளும் இல்ல!!!"

பகிர்வு:
புதுவை வேலு
நன்றி: (todayindia).

28 commentaires:

  1. கேட்ட கதைதான். இருந்தாலும் மீண்டும் கேட்கும்போதும் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா!
      கோவைக் குசும்பு பேசும் தங்களை என்ன வசும்பு தடவி வரவழைப்பது?
      என்று தங்களை நேரில் பார்த்த கில்லர்ஜியிடம் கேட்க இருந்தேன்!
      ஆஹா! வசும்பின் வாசம் பிடித்தே வந்து விட்டீர்கள் போலிருக்கிறது!
      வருகைக்கு நன்றியும், வணக்கமும்!
      தங்களின் வருகை
      கொடுத்த பணம் கைக்கு வந்த திருப்தி!
      குழந்தை மனதுக்காரர் இனி குழலின்னிசைக்கு மயங்குவாரா?
      மருதமலையானே மர்மத்துக்கு விடையளி!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. நிஜமாய் மிளிருதய்யா!
      வார்த்தைச் சித்தரே உமது வார்த்தை!
      வருகை சிறக்கட்டும்.
      நன்றி!
      மிக்க மகிழ்ச்சி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. இக்கதையை முன்னர் நான் கேட்டுள்ளேன். இருந்தாலும் கேட்கக் கேட்க, படிக்கப் படிக்க இது ஒரு பாடம் என்பதை உணரலாம். எக்காலத்திற்கும் பொருந்தும் கதை.

    RépondreSupprimer
    Réponses
    1. "படிக்க இது ஒரு பாடம்" அனைவரும் அறிவுற்று பின்பற்ற வேண்டிய வாசகம் தந்தமைக்கு நன்றி முனைவர் அய்யா!
      இந்தக் கதையில் சொல்லாடல் அல்லவா? அசல் சொக்கத் தங்கமாய் ஜொளிக்கிறது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. இப்பவும் அநியாய வட்டி வாங்குறவங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது பஞ்சாயத்து இருந்தா நல்லாருக்கும்....

    RépondreSupprimer
    Réponses
    1. கொடுத்த காசு கைக்கு வருமா? வராதா? என்று கையில் தாயத்து வாங்கி கட்டிக் கொண்டு நிற்பவர்களுக்கு இது போன்ற பஞ்சாயத்து கிடைத்தால் நலமே! நண்பரே!
      வருகை தொடர்க!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அந்த அநியாயத்துக்கு இந்த அநியாயமே சரியாய் போச்சு :)

    RépondreSupprimer
    Réponses
    1. செய்த உதவியை நினைத்து பார்ப்பதுதான் மனிதனின் மாண்பு
      அந்த மாண்பின் வழி நிற்போம்*
      நியாயத்துக்கு நியாயம்தான் ஆகாயம்!
      நன்றி பகவான் ஜி!
      சிறப்புறட்டும் சிறப்பு வருகை!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer

  6. இப்போதுதான் இந்த கதையை அறிந்தேன், அநியாயமாய் ஆசைப்படுவோர் அவதிப்படுவார்/ஏமாறுவார் என்பதை விளக்கும் இந்த கதையை பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. வருக அய்யா!
      "அநியாயமாய் ஆசைப்படுவோர் அவதிப்படுவார்/ஏமாறுவார்"

      தங்கள் கருத்து குழலின்னிசையில் இடம்பெற வேண்டும் என்று என்றும் ஆசை பட்டது உண்டு! அவதிப் பட்டு ஏமாந்ததும் உண்டு!
      இன்று எனது ஆசையை பூர்த்தி செய்து விட்டீர்கள்!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அதிகமாக ஆசைப்படுபவர்களுக்கு ஏற்ற சரியான கதை. நீங்கள் கதையை பகிர்ந்த விதமும் அருமை சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி!
      அழகிய கருத்தை பழகிய தமிழில் பக்குவமாய் பரிமாறி உள்ளீர்கள்!
      மகிழ்ச்சி! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. அநியாய வட்டியும் மீட்டர் வட்டியும் இபபவும் தமிழ்நாட்டில் அதிருந்கிட்டேதான் இருக்கு தலீவரே.....

    RépondreSupprimer
    Réponses
    1. இதுவும் ஒரு வகை "சிசேரியன்"தான் தோழரே!
      கட்டப் பஞ்சாயத்தும், கந்துவட்டியும் கொடுமை!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வணக்கம்,
    அவர்கள் தீர்ப்பு சரி.
    ஆனால் நாம் கஷ்டம் என்று வாங்கும் போது,,,,,,,,,,,
    இதன் உண்மை எல்லாம் உணரனும்,
    பகிர்வுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நாம் கஷ்டம் என்று வாங்கும் போது,,,,,,,,,,,
      இதன் உண்மை எல்லாம் உணரனும்,
      100/100 மறுக்கமுடியாத உண்மை!
      நிச்சயமாய் உணரத்தான் வேண்டும்.
      வாங்கும் போது கடவுள்!
      கொடுக்கும் போது கோட்டானா?
      இந்த கதையில் இடம்பெற்ற சொல்லாடல்தான் என்னை ரசிக்க வைத்தது.ஆனால் தெனாலிராமன் சொல்லில் உண்மை உறவாடுவதை ரசிக்கலாம் அல்லவா?
      நன்றி சகோதரி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. நல்லதொரு பாடம் ரசனையோடு இருந்தது நண்பரே... வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. ரசித்து பாராட்டியமைக்கு குழலின்னிசையின் நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அறிந்த கதைதான்! சுவாரஸ்யமாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. ரசித்து பாராட்டியமைக்கு குழலின்னிசையின் நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. தெனாலி ராமன் கில்லாடி!


    பணம் கொடுத்தான் அநியாய வட்டி சேட்டு!
    தெனாலி ராமன் வைத்தான் வேட்டு!!

    RépondreSupprimer
    Réponses
    1. ரசித்து பாராட்டியமைக்கு குழலின்னிசையின் நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. தெனாலி ராமன் கதை தெரிந்திருந்தாலும் நீங்கள் சொன்ன விதம்..அருமை....
    அவனது சமயோசிதம் தானே இத்தனைக் கதைகள் பிரக்கக் காரணம்...

    RépondreSupprimer
    Réponses
    1. ரசித்து பாராட்டியமைக்கு குழலின்னிசையின் நன்றி அய்யா!
      வருகை தவறாது சிறக்கட்டும் ஆசானே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. தெரிந்த கதை.... உங்கள் பாணியில் படித்து ரசித்தேன்!

    த.ம. +1

    RépondreSupprimer
    Réponses
    1. ரசித்து பாராட்டியமைக்கு குழலின்னிசையின் நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer