mercredi 28 octobre 2015

"வெற்றித் தீர்மானம்"




ஒரு ஊரில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதை. 
பலர் தங்கள் நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடுவர்.


ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” 
ஐயா! அறிஞரே! 
நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே!
தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது? என்று அவனைக் கேட்டால் ?,அவன் "வெள்ளி " என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” என்றார்.

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். 

 தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” என்று கேட்டார்!

பையன்,
 தங்கம்” என்று சொன்னான்


 உடனே அவர், பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?” என்றார்!

பையன் சொன்னான்  ” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும்மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார்  இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ” என்பார்.

நான் உடனே "வெள்ளி"யை எடுத்துக் கொள்வேன். 
உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.  நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது.
தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது.
நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால்! அன்றோடு இந்த விளையாட்டு நின்று இருக்கும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று இருக்கும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்! 

வாழ்க்கையில் !!!
பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம்
மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு!
ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
ஆனால்?  வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

பகிர்வு:

புதுவை வேலு
நன்றி: (அறிவு கதைகள்)




32 commentaires:

  1. அருமையான சிந்தனைப்பகிர்வு சில நேரத்தில் முட்டாள் போல இருப்பதும் நன்மையே!

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பர் "தனிமரம்" சிவநேசன் அவர்களே வருக!
      முதல் கருத்து முதல்தரமான முத்தாய்ப்பு கருத்து தந்தமைக்கு
      மிக்க நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. எல்லாமே நம் நோக்கத்தில் இருக்கிறது
    அருமை நண்பரே
    தம +1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம் கரந்தையார் அவர்களே!
      'எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்'
      கதையின் இறுதி வரிகளுக்கு சிறப்பு சேர்த்தீர்கள்
      நண்பரே நன்றி!
      "எல்லாமே நம் நோக்கத்தில் இருக்கிறது"
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமையாக கதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வெற்றித் தீர்மானத்தில்
      கருத்து கையெப்பம் இட்டமைக்கு
      நன்றி கவிஞரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. நல்ல சிந்தனை. அதே சமயம் நல்ல ஒரு பாடமும் கூட.

    RépondreSupprimer
    Réponses
    1. படம் சொல்லும் பாடத்தோடு நில்லாமல்
      கதை சொல்லும் பாடத்தையும் "வெற்றித் தீர்மானம்"
      பாராட்டி சிறப்பு செய்தீர்கள் முனைவர் அய்யா!
      நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. ஆகா....! கதை மிகவும் அருமை ஐயா...

    RépondreSupprimer
    Réponses
    1. வார்த்தைச் சித்தர்
      திண்டுக்கல் தனபாலன்
      வார்த்திட்ட வல்லமை கருத்து
      வெல்லும் துணிவை தந்திடும்.
      நன்றி அய்யா

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. //எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!//

    சரியாக சொன்னீர்கள். பொருள் பொதிந்த கதையை பகிர்ந்தமைக்கு நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. பொருள் பொருந்திய கதை
      பெருமகனார் தந்த சிறப்பு
      நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. சிந்திக்க வைத்த பதிவு நண்பரே!
    த ம 5

    RépondreSupprimer
    Réponses
    1. வலைப் பதிவர் திருவிழாவின்-2015
      வெற்றித் திருமகனார்
      'வெற்றித் தீர்மானம்'
      கண்டு கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!
      தொடர்க நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. Réponses
    1. வாருங்கள் சகோதரி
      வரவேண்டும் தர வேண்டும்
      இனிய நள பாகம் சுவைமிகு
      நினைவில் நிற்கும் கருத்தினை குழலின்னிசைக்கு.
      நன்றி சகோ,
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. அருமையான பகிர்வு

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் அய்யா!
      அருமை பகன்ற அன்புள்ளத்திற்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம்,
    மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு!
    ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

    நல்ல சிந்தனை! தெளிவான வரிகள்!

    RépondreSupprimer
    Réponses
    1. தெளிவான வரிகளை தேர்ந்தெடுத்து மதி ஒளியாய், வீசு தென்றாய்
      மனம் மகிழ கருத்தினை புனைந்த புலவர் அய்யா அவர்களின் அருங்கருத்துக்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை தேர்வு செய்வது சரியே! நல்ல கதை புதுவை வேலு அவர்களே.
    ஆனால் முக்கோணத்தில் மாட்டாமல் இருந்தால் சரி.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பர் சத்யா அவர்களே வருக!
      தங்களின் முக்கோணம் சிந்தனை கருத்து
      சிந்திக்க வைத்துள்ளது. நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. சிறப்பான கதை! பகிர்வுக்குநன்றி!

    RépondreSupprimer
  13. சிறப்பு கருத்து சிந்தியமைக்கு நன்றி நண்பரே
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. நல்லதொரு பாடம் கிடைத்தது நண்பா... இனி நானும் இதையே கடைப்பிடிப்பேன்

    RépondreSupprimer
    Réponses
    1. கதை "வெற்றித் தீர்மானம்" சொல்லும் பாடம்
      படித்து கருத்தை வடித்தமைக்கு நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. #பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், #
    ஓட்டை சட்டியென்றாலும் கொழுக்கட்டை வெந்தால் நமக்கு சரிதானே :)

    RépondreSupprimer
  16. வெற்றித் தீர்மானத்தில்
    கருத்து கையெப்பம் இட்டமைக்கு
    நன்றி பகவான் ஜி

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  17. சிறப்பான கதை ஐயா..நல்ல பகிர்வு

    RépondreSupprimer
  18. வெற்றித் தீர்மானத்தில்
    கருத்து கையெப்பம் இட்டமைக்கு
    நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  19. அருமையான பகிர்வு. நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. வெற்றித் தீர்மானத்திற்கு
      நல்ல வெகுமானம் தந்தமைக்கு
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer