dimanche 7 février 2016

"நலம் காட்டும் நகம்"..

 "அகத்தின் அழகு நகத்தில் தெரியும்"





நகத் தூசுக்கு பொருள் பெறாத விடயங்களா ? இவைகள் என்பதை நண்பர்களே படித்து விட்டுச் சொல்லுங்களேன்.

'கைப்புண்ணிற்கு ண்ணாடித் தேவையா'? ன்பது பழமொழி.  
ஆனால் ம் கை விரல் நகங்களைக் கொண்டே நமது உடல் ஆரோக்கியத்தைக் கா‌‌ட்டும் வகையில் னித உடல் அமைப்பட்டுள்ளதை சற்று எண்ணிப்பாருங்களேன்.
 

நகம்


மாந்தர்களின் புறங்கை,  புறங்கால் பக்கத்தில் விரல்களின் நுனிப்பகுதியில் கெட்டியாக சற்று வளைந்த தகடு போல் உள்ள பகுதியாகும். இது நாளும் வளர்ந்துகொண்டிருக்கும் நகமியம் அல்லது கெரட்டின்என்னும் ஒரு புரதப்பொருளால் ஆன பகுதியாகும்.
  
விரல் நுனிகளில் ஏராளமான உணர் நரம்பு கூட்டங்கள் நிறைந்துள்ளன. இந்த விரல் நுனிகளை பாதுகாக்க, இயற்கையால் வழங்கப்பட்ட பாதுகாப்பு கவசம்தான் நமது நகங்கள்.

நகங்களை பாதுகாப்பாக வைத்தால்தான் விரல்களையும் சக்தி குறையாமல் பாதுகாக்க முடியும்.
சில விலங்குகளில் இது (நகம் )  உகிர்  எனவும் கூறப்படும்.  

சங்க இலக்கியப் பாடல்களில் "உகிர்" (நகம்) என்னும் சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.

உதிரங் துவரிய வேங்கை யுகிர்போ
லெதிரி முருக்கரும்ப வீர்ந்தண்கார் நீங்க - எதிருநர்க்
கின்பம் பயந்த விளவேனில் காண்டொறுந்
துன்பங் கலந்தழிவு நெஞ்சு.

ஐந்திணை ஐம்பது  
[பருவம் கண்டழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.]
(பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் அகப்பொருள் கூறும் நூல்களுள் ஒன்று
ஐந்திணை ஐம்பது
இதை எழுதியவர் மாறன் பொறையனார் என்னும் புலவர்.
இது கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் எனக் கருதப்படுகின்றது.)

இந்தப் பாடலின் கருத்தாவது,

இரத்தம் தோய்ந்த புலியின் நகம்போல,
பருவத்தோடு ஒன்றிய முருக்க மலர்கள் அரும்ப,
ஈரமான குளிர்ந்த கார்மேகம் நீங்கிப் போக,
காதலனும் காதலியும் ஒருவருக்கு ஒருவர் எதிரில் இருந்து
இன்பம் தந்த இள வேனில்பார்க்கும் போது  எல்லாம்,
துன்பம் கலந்து அழிகின்றது மனம்.
அவளின் பிரிவுத் துயரம்நம்மை ஏதோ செய்கிற மாதிரி,
கவித்துவ வரிகள் இங்கு கவரி வீசுகிறது அல்லவா? 







அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம்.


நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்பதை மருத்துவர்கள் கூறிவிடுவார்கள்

நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல 'கரட்டின்' என்ற  புரதத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு,
மற்றும் ரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும்.

நகங்கள் இல்லாவிட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டுவிடும். 

நகம் பற்றிய தோற்றத்தைக் கண்டு ஆய்வாளர்கள் பொதுவாகக் கூறும் கருத்துக்கள்:

நகங்கள் பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொருத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும். ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்.
 
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இதய நோயால்பாதிக்கப்பட்டிருந்தால் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல ரத்தமும், கெட்ட ரத்தமும், கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும். நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிமூக்கு போல வளைந்து இருக்கும்.

ரத்த சோகை ஏற்பட்டு இரும்புச்சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்சர்க்கரையின் அளவு அதிகமாகவும் புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.

நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம் புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். நகங்களுக்கு வண்ணம் தீட்டுவதால் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம். நகத்தில் சின்னச் சின்ன குழிகள் உண்டாகி அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால்சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகக் கொள்ளலாம்.

ரத்தத்தில் சர்க்கரை அதிக அளவு இருந்தால் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக அமிலத்தன்மையுள்ள சோப்பு மற்றும் புளிக்கரைசல் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது. நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக்கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியை ஏற்படுத்தும்.

நகத்தை பற்களால் கடிக்கக்கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம்.

நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.
சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும் போது நகங்களையும், சுத்தம் செய்ய வேண்டும்


நகங்களின் இடுக்குகளில் தங்கும்- நுண்ணுயிரிகளால் வயிற்றுக்கோளாறு வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியன உண்டாகும்.

நகங்கள் அழகுடன் திகழ வேண்டுமானால் காய் கனிகளை நிறைய உட்கொள்ள வேண்டும்.

இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால், நகங்களை சுத்தமாக கழுவிக் கொண்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம்.




நகம் எல்லோருக்கும் ஒரே சீராக வளர்வதில்லை.  கால் விரல் நகங்களை விட, கை விரல் நகங்கள் நான்கு மடங்கு மிக வேகமாக வளரும்.
ஆள் காட்டி விரல் நகம், சுண்டு விரல் நகத்தை விட மிக வேகமாக வளரும். ஒரு மாதத்துக்கு சராசரியாக, 3 மில்லி மீட்டர் நீளத்திற்கு நகங்கள் வளரும்.  கை விரல் நகங்கள் விழுந்து, புதிதாக முழுவதும் வளர வேண்டு மென்றால், சுமார் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள்வரைஆகும்.
 மனிதனின் வெளிப்புறத்தை மூடியிருக்கும் சருமத்தையும், ரோமத்தையும் போலவேநகமும் அமைந்திருக்கிறது.

விரல்கள் மெல்லியதாக இருப்பதால் அவைகளின் பாதுகாப்புக்காகத்தான், ஒவ்வொரு விரல்நுனியிலும் நகங்கள் இயற்கையாக அமைந்திருக்கின்றன.
ஒருவருடைய வயது,  அவர் ஆணா? பெண்ணா?  அவரது அன்றாட உழைப்புசாப்பாடு விஷயங்கள்,  பரம்பரை மற்றும் பருவ காலங்களைப் பொறுத்தே,  நகங்கள் வளரும், நீளமும் வேகமும், அமையும்.

மனிதன் இறந்த பிறகுநகத்திற்கு கீழுள்ள தோலிலும், தசையிலும் உள்ள தண்ணீர் குறைந்து விடும். அதனால் தோல் சுருங்கிஇறுக ஆரம்பித்து விடும்.

தோல் சுருங்கி இறுகி விடுவதால்நகம் மேலே நீளமாக, பெரிதாக தெரிய ஆரம்பிக்கும்.
 
நகத்திற்கு உள்ளே தெரியும் நிறத்தை வைத்தே, என்ன நோய் இருக்கும்? என்று ஓரளவு கண்டுபிடித்து விடலாம். 
 உடம்பு ஆரோக்கியமாக இருக்கிறதா? இல்லையா? என்பதை நகத்தைப் பார்த்தே சொல்லி விடலாம். 

கைவிரல் நகங்களைப் பார்த்தே,  உடலில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றும் கண்டுபிடித்து விடலாம்.

நகங்களின் குறுக்கேஅதிக பள்ளமான கோடுகள் தெரிந்தால் வயதாகி விட்டது என்று அர்த்தம். 

நகத்தின் இயற்கை நிறம் போய், வேறு நிறம் தென்பட்டாலோ, மிகமிக மெல்லியதாக இருந்தாலோமிக மிக தடியாக இருந்தாலோ, சுலபமாக உடைந்து போகிற மாதிரி இருந்தாலோ, பிளவு இருந்தாலோ, வெடிப்பு இருந்தாலோ, பள்ளமான கோடுகள் இருந்தாலோ, வெள்ளைப் புள்ளிகள் இருந்தாலோ, மொத்த நகமும் குவிந்து வளைந்து இருந்தாலோ, லேசாக வளைந்திருக்காமல் தட்டையாக இருந்தாலோ, உள்பக்கம் நகத் தூசிக்கு வளைந்திருந்தாலோ, உடலில் ஏதோவொரு இடத்தில் நோய் இருக்கிறது என்பதை காட்டும் அறிகுறியாக கருதுவார்கள்.

சிலருக்கு நகம் அதனுடைய இயற்கையான நிறத்தில் இல்லாமல், நிறம் மாறி, அழுக்காக இருப்பது போல் தோன்றும். "பங்கஸ் என்று சொல்லக்கூடிய ஒருவகை கிருமியினால் ஏற்படும் நோயே, நகத்தை இவ்வாறு பாதிக்கச் செய்கிறது. 

நீல நிறத்தில் கைவிரல் நகம் இருந்தால், "சயனோஸிஸ்" என்று சொல்லப்படும் நோயின் அறிகுறி இருக்கிறதென்றும் அதாவது ரத்தத்தில் சரியாக இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு, மிக குறைவாக இருக்கிறதென்று கூறுவதுண்டு.




நகம் கடித்தல்.

நகம் கடித்தல் (Nail biting, அல்லது onychophagia) மனிதர்களின் அசாதாரண பழக்கவழக்கங்களில் ஒன்று.இது ஒரு வகை நோயாகவும் கருதப்படுகிறது. 


மனஅழுத்தம், மனமுரண், குழப்பம், தாழ்வுமனப்பான்மைstress,
ஒத்துப் போக முடியாமை,
இக்கட்டான மனநிலை போன்றதான பலவித உள்ளியல் காரணிகளால் இப்பழக்கம் ஏற்படுவதாகவே ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
சிறியவர்களில் இருந்து பெரியவர்கள் வரை வயது பேதமின்றி பலரும் நகம் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். 

நகம் கடிக்கும் பழக்கும் பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கி விடுகிறது.
பருவ வயதில் அனேகமானவர்கள் இப்பழக்கத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்கள். 

குறிப்பிட்ட சிலரால் இப்பழக்கத்திலிருந்து விடுபட முடிவதில்லை. அவர்கள் வயது வந்த பின்னரும் இப்பழக்கத்தைத் தொடர்கிறார்கள். அனேகமானோர் தம்மை மறந்த நிலையிலேயே நகங்களைக் கடிக்கிறார்கள்.

பலர் தமது இந்தச் செயற்பாட்டினால் திருப்தியின்மையை அடைந்தாலும், இந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள்.
நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் ந‌ம்‌மி‌‌ல் பலரு‌க்கு இரு‌க்கலா‌ம். எ‌ப்போதாவது மன‌க்கவலை‌ ஏ‌ற்படு‌ம் போது நக‌ம் கடி‌ப்பது ஒரு ‌சில‌ர்.  ஆனா‌ல் எ‌ப்போது‌ம் நக‌த்தை தேடி‌த் தேடி கடி‌ப்பது ‌சிலரு‌க்கு பழ‌க்கமாகவே இரு‌க்‌கிறது. அ‌வ்வாறு நக‌ம் கடி‌க்கு‌ம் பழ‌க்க‌ம் இரு‌ப்பது கூட நர‌ம்பு ‌ச‌ம்ப‌ந்தமான ‌பிர‌ச்‌சினையாக இரு‌க்கலா‌‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள். 

டென்ஷனாகும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். நகம் நடிக்கும் பழக்கம் நம் உடலுக்கு நாமே கேடு ஏற்படுத்தி கொள்வதற்கு சமம். த‌ன்ன‌ம்‌பி‌க்கை குறைவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் நக‌ம் க‌டி‌க்கு‌ம் பழ‌க்க‌‌ம் உ‌ள்ளவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்க‌ள் எ‌ன்‌கிறது ஒரு ஆ‌ய்வு.





நகம் பாதுகாப்பு :

நகங்கள் சுத்தமாக ஈரமின்றி இருக்க வேண்டும். 
நகங்களை நேராக வெட்டுங்கள். 
நகங்களை கடிக்கக் கூடாது. 
நகங்களை டின்களை திறக்க, பிய்க்க கத்தி போல் உபயோகிக்கக் கூடாது. 
கால் நகங்களை சின்னதாக வெட்டி விட வேண்டும். 


உள் வளர்ந்த நகத்தினை சரி செய்ய மருத்துவரின் உதவி கொண்டே சிகிச்சை பெற வேண்டும்.  நகப் பூச்சுகளை அளவாகப் பயன்படுத்துங்கள். 


ரசாயனம் மற்றும் கடுமையான வேலைகளுக்கு கையுறை, காலுறை பயன்படுத்துங்கள். 







நகம் கடிக்கும் பழக்கத்தினை நிறுத்துங்கள். 

காரமான சோப்புகளை பயன்படுத்தாதீர்கள். 

அளவான, முறையான காலணி அணியுங்கள். 


ஷூ அணிந்தால் நல்ல காற்றோட்டம் இருக்கட்டும்



பாதிப்புகளுக்கு உடனடி சிகிச்சை எடுங்கள்.

நகங்கள் கருமையுடன் சொத்தையாகி இருந்தால்,
துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து பற்று போட்டு வந்தால்விரைவில் சொத்தை மறையும்.

நகங்களைச் சுற்றித் தடித்து வலியிருந்தால், வெதுவெதுப்பான நீரில், டெட்டால், பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து , சிறிது நேரம் ஊறவைத்து கழுவினால், வலி நீங்கி நகம் சுத்தமாகும்.

ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி, விரல்களின் மீது தேய்த்து ஊற வைத்தால், நகங்கள் உடையாமல் இருக்கும்.

வெற்றிலையில் சிறிதளவு சுண்ணாம்பு கலந்து அரைத்து, நகத்தில் வைத்துக் கட்டினால், நகத்தைச் சுற்றி வரும் புண் (நகச் சுத்தி) குணமாகும்.
முருங்கைக் கீரை, பப்பாளி , மாம்பழம், பேரீச்சம் பழம் போன்ற உணவு வகைகள் நகத்தைப் பாதுகாக்க உதவும். 

இளஞ்சூடான நீரில், துளசி மற்றும் புதினாவைப் போட்டு விரல்களை 10 நிமிடம் வைத்தால், கிருமிகள் இறந்து நகம் சுத்தமாகும்.


"நலம் சொல்லும் நகங்களோடு  நாம் வாழ்வோம்!"

பகிர்வு 
புதுவை வேலு
நன்றி: இணையம்

7 commentaires:

  1. நலம் காட்டும் நகம்..

    நல்லதொரு பதிவு.. வாழ்க நலம்..

    RépondreSupprimer
    Réponses
    1. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு பதம் என்பதைப் போன்று
      தங்களை ஒட்டுமொத்த பதிவாளர்களின் கருத்தாகவே பார்க்கிறேன் அருளாளர் அய்யா அவர்களே!
      நலம் சொல்லும் கருத்து நன்று!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. நகத்துக்கு இவ்வளவு விடயங்களா ? ஆச்சர்யமாக இருக்கிறது நிறைய தெரிந்து கொண்டேன் நன்றி நண்பா

    RépondreSupprimer
  3. நகத்தைப் பார்த்தே உடல் நலம் உரைத்திட முடியும் என்று ஆயுர்வேத மருத்துவர்கள் சொல்வதுண்டு. எங்கள் குடும்ப ஆயுர்வேத மருத்துவர் உட்பட...நல்ல பதிவு.

    RépondreSupprimer
  4. நகத்தைக்கொண்டு அகத்தை அறியலாம் என்று அருமையாக விளக்கியுள்ளீர்கள் ... நன்றி!!! கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer