jeudi 29 septembre 2016

"திருமலை தனிலே தவ சுப்ரபாதம்"


 மயக்கத்தை தந்த மாயக் கண்ணனின்  பாடல் இது!
கண்ணனின் லீலைகளை...
கண்ணனின் தாசன்   அழகு தமிழில் அள்ளித் தந்த பாடல் இது!
எழுத்து வடிவில் படிப்போம்
எழுதியவரின் தமிழை நாம் சுவைப்போம்.


கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை


நல்லவர் செல்வது அவனது பாதை
நாடிய மனிதன் உலகத்தில் மேதை


கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


  
                                                               
ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான்
அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான்


காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே
பாட்டினில் வருவது புல்லாங் குழலே


கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


கோபியர் நடுவே கண்ணனின் நாதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்


குருவாயூரில் குழந்தையின் கீதம்
தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம்


திருமலை தனிலே தவ சுப்ரபாதம்
தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம்



படம்: சுப்ரபாதம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்

8 commentaires:

  1. அருமையான பகிர்வு நண்பரே

    RépondreSupprimer
  2. மிக மிக அற்புதமான பாடல்
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  3. பலமுறை கேட்டுள்ளேன். தங்கள் பதிவு மூலமாகக் காணும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    RépondreSupprimer
  4. உளமார்ந்த நன்றி

    RépondreSupprimer