இனிப்பும் கசக்கும்
(சிறுகதை)
ஹரி தனது மனைவி மாலதியை அவளது அலுவலகத்தில் இருந்து அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டல் நோக்கி
பயணமானான் உடல்நிலை சரியில்லாமல்
இருக்கும் தன் தாய் பாக்கியத்தை
பார்பதற்காக!
என்னங்க பார்வையாளர்கள்
நேரம் எத்தனை மணி வரைக்கும் தெரியுமா?
ஓ! தெரியுமே 4.30PM T0 7.00 PM வரைக்கும்.
சரிங்க! கொஞ்சம் வண்டியை 'சரவண பவன்' பக்கம் நிறுத்துங்க! நாம் காபி சாப்பிட்டுவிட்டு கையோடு
மாமிக்கும் ப்ளாஸ்க்கில் காபி வாங்கிட்டு போயிடலாம் என்றாள்.
மாலதியின் காபி ஆர்டர் உடனடியாகவே அப்பீல் இல்லாமலே
வாழ்க்கை கெஜட்டில் ஏற்றப் பட்டது.
ஹாஸ்பிட்டல் வாயிலில் வண்டியை பார்க்கிங் செய்துவிட்டு
இருவரும் உள்ளே நுழைந்தனர்.
படுக்கையில் படுத்திருந்த பாக்கியம் தனது மகனையும், மருமகளையும்
பார்த்ததும் பரவசம் அடைந்தார். தனது கைகளை கொண்டு ஜாடை காண்பித்து உள்ளே
கூப்பிட்டார்!.
தாயின் நலனை விசாரித்தபடியே கையில் கொண்டு வந்த காபியை
மனைவியிடம் கொடுத்துவிட்டு அங்கிருக்கும் ரிப்போர்ட்டை படிக்கலானான்.
அப்போது மருமகள் கொடுத்த ஹோட்டல் காபியை ஒரு வாய்
குடித்ததும் பாக்கியத்தின் முகம் மாறியது.
இதை உணர்ந்த இருவரும் ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொள்ள சட்டென்று ஞாபகம் வந்தவளாய் தனது ஹான்ட் பேக்கில் இருந்து
சர்வர் மடித்துக் கொடுத்த சர்க்கரை
பொட்டலத்தை அவள் தேடி எடுப்பதற்குள்,
தனது மகனை பார்த்து இப்படி கூறலானார்!
இதோ பாருடா ஹரி!
என்னோட மருமகள் என்
மேல் கொண்டுள்ள பாசத்தை !
காபியில் சர்க்கரை கொஞ்சம் கூட இல்லாமல் கொடுக்கும் அன்பை ! அக்கறையை !
ஏன் தெரியுமா?.
இனிப்பும்
கசக்கும் வியாதி
சர்க்கரை வியாதி
அதுதான் எனக்கும் உள்ளதே
என்றாள்!
புதுவை வேலு
சர்வதேச நீரிழிவு நோய் தினம்(14/11/2014)
உறவுகளுக்கு இடையேயான நேர்மறையான எண்ணங்களை பளிச்சென்று
RépondreSupprimerஉணர்த்தும் சிறுகதை...
அருமை நண்பரே....
நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களது வருகை!
Supprimerமிக்க மகிழ்ச்சி!
மிகவும் நேர்மையான நேர்த்தியான விமர்சனம் நண்பரே!
வருகை தொடர நல்ல படைப்புகளை தருவதற்கு முயற்சிக்கிறேன்.
நன்றியுடன்!
புதுவை வேலு
இன்றைய வாழ்வியல் யதார்த்தம்
RépondreSupprimer"வாழ்வியல் யதார்த்தம் மிகவும் பொருத்தமான விமர்சன சொல்!
Supprimerகரந்தையாரின் கருத்து மிகவும் போற்றத்தக்கது!
வருகைக்கு மிக்க நன்றி!
விரைவில் தங்களை தொடர்பு கொள்கிறேன்.
நன்றியுடன்,
புதுவை வேலு
ஒரு சம்பவம் மாதிரி இருந்தாலும் முடிவில் ட்விஸ்ட் எதார்த்தம்
RépondreSupprimerதங்களது விமர்சன கருத்தினை மிகவும் விரும்பி ரசித்தேன்.
Supprimerஇதுபோன்ற உண்மை விமர்சனம் உள்ளத்தில் உவகையை உண்டு பண்ணுகிறது!
வருகைக்கு மிக்க நன்றி!
புதுவை வேலு
நாளுக்கேற்ற செய்தி சொல்லும் கதை. வாழ்த்துக்கள்.
RépondreSupprimerஇடம், பொருள் ஏவள் என்று தமிழ்கூறும் நல்லுலகம் நமக்கு நவின்று உள்ளது அல்லவா? அதனாலோ என்னவோ நாளுக்கேற்ற செய்தி சொல்லும் கதையாக இது
Supprimerஅமைந்து விட்டதோ என்னவோ?
ஒவ்வொரு பதிவிற்கும் தாங்கள் தருகின்ற கருத்துஎனது படைப்பிற்கு நிச்சயம் வலிமை சேர்க்கும் என்பதில் துளியும் ஐயம் இல்லை அய்யா!
வருகைக்கு மிக்க நன்றி!
புதுவை வேலு
சோதனை இடுகை
RépondreSupprimerசாதிக்க பிறந்தவரெல்லாம்
Supprimerசோதிக்கவும் செய்வாரோ?
வருகைக்கு மிக்க நன்றி!
புதுவை வேலு
அன்பரே!
RépondreSupprimerதங்களின் மின்னஞ்சல் முகவரி வேண்டுகிறேன்.
கருத்துகள் நேரடியாகப் பதிவாகிவிடுகின்றதால் கேட்கிறேன்.
ஒரு கருத்திட்டிருந்தேன் வந்ததா ?
தர விரும்பினால் தர வேண்டுகிறேன்.
நன்றி
நண்பரே!
Supprimerதங்களது கருத்து எனக்கு கிட்டவில்லை!
விரைவில் கேட்டதை தருகிறேன்!
நட்புடன்,
புதுவை வேலு
சிறுகதை சர்க்கரை பாேல் இனித்தது . வாழ்த்துக்கள்! நன்றி !
RépondreSupprimerவாழ்த்தினை வடித்தீர்!
Supprimerநவில்கின்றேன் நன்றியினை
நல்லதொரு கருத்தினை பதிவு செய்தமைக்கு
பாராட்டுக்கள் சகோதரி!
புதுவை வேலு
இனிப்பும் கசக்கும் சிறுகதை மனதை இனிக்க செய்தது, அருமை, புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
அன்பரே!
Supprimerநாளோரு மேனி
பொழுதொரு வண்ணம்
தாங்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் யாவும்
பசுமரத்தாணிபோல் மனதில் பதிந்து விடுகிறது
புதிய முயற்சிக்கு தாங்கள் தரும் கருத்துக்கள்
ஊக்கத்தையும் ஆக்கத்தையும் அள்ளித் தருகிறது!
நன்றியுடன்,
புதுவை வேலு
மிக மிக அருமையான கதை! இனிக்கவல்லவா செய்தது!!!. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் எல்லோருமே இனிய மனிதர்கள்.ஹஹஹ் இனிப்பும் கசப்பும் மாறி மாறி வருவதுதானே வாழ்க்கை!!
RépondreSupprimerஅனைவரும்
Supprimer(சர்க்கரை வியாதி உள்ளவர்கள்) இனிப்பு நோயின்றி இனிதே வாழ இறைவனை வேண்டுவோம்
நன்றி
புதுவை வேலு
யதார்த்தமான கதை. நேர்மறையாய் முடிகிறது...அருமையாக இருக்கிறது சகோ
RépondreSupprimerஇறையருள் நிறைய பெற்றவரிடமிருந்து
Supprimerமனதுக்கு நிறைவான பாராட்டுக்கள்!
மிக்க நன்றி சகோதரி
வருகை தொடர வேண்டுகிறேன்.
புதுவை வேலு