தள்ளாடும் அகவையிலும்
சொல்லாளர் உ.வே.சா
வில்லாக புறப்பட்டு
நல்நூல்களை காத்திட்டார்
தமிழ் தாத்தாவின் புகழொலி
விண்ணைத் தொட்டு ஒலிக்கட்டும்.
புதுவை வேலு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்,
இன்று உலக மொழியாக
உருவெடுத்து வரும் உன்னத மொழியாம் நம்
தமிழ் மொழிக்கு
தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர் உத்தமதானபுரம்
வேங்கடசுப்பையர் சாமிநாதன்
என்கின்ற உ.வே.சா அவர்கள்.
பழந்தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் நிலைபேறுடைய பெயர் உ.வே.
சாமிநாதையர். பதிப்பு நுட்பங்களைத் தம் அனுபவத்தின் மூலமாக அறிந்து
செம்மையாகச் செய்த அவர் பல்வேறு தளங்களில் ஆளுமை கொண்டவர்
.
மிகுந்த புலமையாளர், உரையாசிரியர், உரைநடை
எழுத்தாளர், தம் காலச்
செய்திகளைப் பதிவாக்குவதில் பெருவிருப்புடைய ஆவணக்காரர், சிறந்த
ஆசிரியர்
என அவரைப் பலவாறு கணிக்கலாம்.
இவர் தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால், தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகம் அறியச் செய்தவர். உ.வே.சா 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான
ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்தார்.
உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரித்திரம் எனும் தலைப்பில்
ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக
எழுதி வந்தார். இது 1950 ஆம் ஆண்டில்
தனிப் புத்தக வடிவம் பெற்றது.
இது தவிர இவரது வாழ்க்கை வரலாறு தமிழ் தாத்தா எனும்
தலைப்பில் தொலைக்காட்சித் தொடராகவும் எடுக்கப்பட்டு சென்னைத் தொலைக்காட்சி
நிலையத்தாரால் (தூர்தர்சன்) ஒளிபரப்பப்பட்டது.
உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.
உ. வே. சா தமிழுக்கும் இலக்கியத்துக்கும் ஆற்றிய பங்களிப்பினைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முனைவர் பட்டம் அளித்தது. இது தவிர மகா மகோ பாத்தியாய மற்றும் தக்க்ஷிண கலாநிதி எனும் பட்டமும் பெற்றுள்ளார்.
இந்திய அரசு, பிப்ரவரி 18, 2006 ம் ஆண்டில் இவரது நினைவு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
உத்தமதானபுரத்தில் உ.வே.சா வாழ்ந்த இல்லம் தமிழ்நாடு அரசால் நினைவு இல்லமாக்கப்பட்டுள்ளது.
1942-ல் இவர் பெயரால் சென்னை பெசன்ட் நகரில் டாக்டர் உ.வே.சா நூல் நிலையம் அமைக்கப்பட்டு இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
லண்டனில் உள்ள மெட்ரோ
ரயிலில் உலகின் சிறந்த கவிதைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே,
நமது குறுந்தொகையும்
இடம் பெற்றிருக்கிறது.
செம்புலப்பெயனீராரின்
‘யாயும் யாயும்
யாராகியரோ’ பாடலும்,
அதற்கு ஏ.கே.
ராமானுஜன் செய்திருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பும் அங்கே காட்சிக்குக்
கொடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழின்
உச்சங்களுள் ஒன்றாகக் கருதப்படும் குறுந்தொகை, உலகின் வேறொரு திசையைக்
கவித்துவத்தாலும் அதன் மூலம் சொல்லப்படும் காதலாலும் இணைக்கிறது. குறுந்தொகைக்கு
எத்தனையோ பதிப்புகளும் உரைகளும் இருந்தாலும், உ.வே.சா-வின் உரை தனிச்சிறப்பு பெற்றது.
உ.வே.சா. தனது பதிப்பில் 100 பக்கங்களுக்கு மேல் நீளும் அறிமுகம் ஒன்றைக்
கொடுத்திருப்பார். குறுந்தொகை மூலமாகக் கிடைக்கும் செய்திகளை யெல்லாம் ஒருங்கே
திரட்டி, அந்த
அறிமுகத்தை எழுதியிருக்கிறார்
உ.வே.சா.
ஐந்து திணைகள் குறித்த செய்திகள், சங்ககால
வாழ்க்கை முறை, மரம்,
செடி, கொடி, விலங்குகள், பறவைகள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்கள்,
பாடியோர் குறிப்புகள்
என்று உ.வே.சா. இந்தப் பதிப்பில் நம்மைப் பிரமிக்க வைக்கிறார். ஒரு ஆய்வுப்
பதிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உ.வே.சா. ஏற்படுத்திய உச்சம்தான் இந்தப்
பதிப்பு.
மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரம்பிள்ளையிடம் கல்வி பயின்று, கும்பகோணம், சென்னை ஆகிய இடங்களிலுள்ள அரசாங்கக்
கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, "மகாமகோபாத்தியாய," "டாக்டர்" என்னும் பட்டங்களைப்
பெற்று வாழ்ந்தவர், உ.வே.
சாமிநாதையர். நீருக்கும் நெருப்புக்கும் இரையாகவிருந்த தமிழைத் தடுத்துக்
காப்பாற்றிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர். ஏட்டுச் சுவடிகளிலிருந்த இலக்கியத்தை
அச்சு வாகனத்திலேற்றியவர். எட்டுத் தொகையில் ஐந்து நூல்களையும் பத்துப் பாட்டையும்
காப்பிய நூல்களையும் மற்றும் எண்ணற்ற இலக்கிய நூல்களையும் செம்மையான முறையில்
பதிப்பித்தவர். பல உரை நடை நூல்களைப் படைத்தவர்.
வாழைபோல் தன்னையே
தமிழுக்கு ஈந்து சென்ற தமிழ் தாத்தா வின் புகழ் தமிழ் உள்ள வரை நிலைத்து நிற்கும்.
இந்த இனிய நாளில் தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்களை நெஞ்சில் நிறுத்தி
வணங்குவோமாக!
புதுவை வேலு
நன்றி: (செய்திகள்)
தி இந்து / மாலைமலர்
தமிழ் தாத்தா உ வே சாவின் அருந்தமிழ் தொண்டினை விளக்கும் அருமையான பதிவு.
RépondreSupprimerநன்றி
சாமானியன்
Supprimerதமிழ் தாத்தா உ வே சாவின் அருந்தமிழ் தொண்டிற்கு சிறப்பு செய்தமைக்கு
மிக்க நன்றி சாமானியரே!
நட்புடன்,
புதுவை வேலு
உ.வே.சா. அவர்களின் உரை தனிச்சிறப்பு என்பதில் சந்தேகமேயில்லை...
RépondreSupprimerசிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா...
Supprimerஉ.வே.சா. அவர்களின் உரை தனிச்சிறப்பை போற்றியமைக்கு மிக்க நன்றி
வார்த்தைச் சித்தரே!
நட்புடன்,
புதுவை வேலு
தமிழ்த்தாத்தாவின் பெருமைகளைத் தமிழ்ப்பேரர்களோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி. அவரை நினைவுகூர்ந்து பதிந்தமைக்குப் பாராட்டுகள்.
RépondreSupprimer
Supprimerதமிழ்த்தாத்தாவின் பெருமைகளை நினைவுகூர்ந்து பாராட்டி கருத்து தந்தமைக்கு
மிக்க நன்றி முனைவர் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
தமிழ் தாத்தா பற்றிய அறியாத தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
RépondreSupprimer
Supprimerதமிழ் தாத்தா பற்றிய அறியாத தகவல்களை அறிந்து, பாராட்டி கருத்து புனைந்தமைக்கு
மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தமிழ்த் தாத்தாவை நினைவுகூர்ந்து - அவருடைய பெருமைகளை
RépondreSupprimerபதிவில் பகிர்ந்து கொண்டமைக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்!.
தமிழ்த் தாத்தாவை நினைவுகூர்ந்து பாராட்ட வந்தமைக்கு மிக்க நன்றி
Supprimerஇறையருள் இனியவரே!
நட்புடன்,
புதுவை வேலு
வாழைபோல் தன்னையே தமிழுக்கு ஈந்து சென்ற தமிழ் தாத்தா அடைமொழி அருமை, உண்மையும் கூட, அவரை நினைவுகூர்ந்து பதிந்தமைக்குப் வாழ்த்துகள்.
RépondreSupprimerவாழைபோல் தன்னையே தமிழுக்கு ஈந்து சென்ற தமிழ் தாத்தாவை புகழ்ந்து கருத்து
Supprimerபகிர்ந்தமைக்கு இனிய நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
தமிழ் தாத்தா உ .வே சா வின் பதிவு மிக அருமையான பதிவு.
RépondreSupprimerதமிழ் தாத்தா உ .வே சா வின் பதிவின் சிறப்பை போற்றியமைக்கு மிக்க நன்றி சகோதரி!
Supprimerநன்றியுடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
நாள் உணர்ந்து பதிவாக பதிவிட்டமைக்கு நன்றி மிக தெளிவான விளக்கம்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தமிழ் தாத்தா உ .வே சா வின் பதிவிற்கு சிறப்பு செய்தமைக்கு இனிய நன்றி கவிஞரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தமிழ் தாத்தா உ .வே சா வின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்வோம்.
RépondreSupprimer
Supprimerவாருங்கள் நண்பா!
இனிய கருத்தை வரவேற்று போற்றுகிறேன்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தமிழ்த் தாத்தாவின் நினைவினைப் போற்றுவோம்
RépondreSupprimer
RépondreSupprimerவாருங்கள் நண்பரே! திருவாளர் கரந்தையாரே!
"தமிழ்த் தாத்தாவின் நினைவினைப் போற்றுவோம்"
இனிய கருத்தை வரவேற்று போற்றுகிறேன்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தமிழ் தாத்தாவின் தமிழ்த் தொண்டு அளப்பரியது! பகிர்வுக்கு நன்றி!
RépondreSupprimer
Supprimerநண்பர் "தளீர் சுரேஷ்" கருத்தும் பெருமைக்கும், பாராட்டுக்கும் உரியது என்பதை
வலைப் பூவுலகம் சொல்லுமே வரிசையின் நின்று!
வருகையின் வாசம் இங்கும் வீசட்டும் நண்பரே!
நன்றி
நட்புடன்,
புதுவைவேலு
தமிழ் தாத்தா அவர்களுக்கு மரியாதை செய்த சிறப்பு பெருமை, தமிழ் பற்று உள்ள புதுவை வேலு அவர்களே, நன்றி.
RépondreSupprimersattia vingadassamy
அன்பு நண்பர் சத்யா அவர்களே!
RépondreSupprimer"தமிழ் தாத்தா"வுக்கு மரியாதை செய்தோம்!
சுப்பு தாத்தா புதுவை வேலுவின் தமிழ் சிறப்பு பாடலை பாடி
குழலின்னிசைக்கு சிறப்பு செய்துள்ளதை கண்டீரா நண்பரே!
காண்க: https://www.youtube.com/watch?v=5nxndlaqRww
நன்றி
நட்புடன்,
புதுவைவேலு
தமிழ்தாத்தா பற்றிய பதிவு அருமை ஐயா! உரிய அங்கீகாரம்!
RépondreSupprimer
RépondreSupprimerதமிழ்த் தாத்தாவின் நினைவினைப் போற்றுவோம்
தமிழ் தாத்தா பற்றிய அறியாத தகவல்களை அறிந்து, பாராட்டி கருத்து புனைந்தமைக்கு
மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு