இறைவன் அனைத்து இடங்களிலும், நீக்கமற
நிறைந்திருப்பவன் என்று சொன்னால்,
நாத்திகவாதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
நாத்திகர்கள் சொல்வதை, ஆன்மிகவாதிகள் ஒப்புக் கொள்ள
மாட்டார்கள். அதேசமயம்,
ஆன்மிகவாதியோ, நாத்திகவாதியோ
யாராக இருந்தாலும், அனைவரையுமே கோப
உணர்ச்சி
ஆட்டிப் படைக்கிறது என்ற உண்மையை, ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும்.
கோபத்திற்கு இன, மொழி, நாடு, வயது, ஆண், பெண், ஊர்வன, பறப்பன, நடப்பன என்று, எந்த
பேதமும் இல்லை !
அரை விநாடியில் கோபப்பட்டு, ஆயுள் முழுவதும்
துயரப்படுவோர் நம்மில் அநேகர் உண்டு.
இது!
"கோபத்தின் கொடுமையை விளக்கும் கதை"
கலியுகம் துவங்கும் நேரம். காமன், கோபன் எனும்
இருவர் உலகை ஆட்டிப் படைத்துக்
கொண்டிருந்தனர். அப்போது கட்டியங்காரன், காமனின்
குணாதிசயங்களை விவரித்துக்
கொண்டு வந்தான். காமனுக்கு அடிபணியாத உயிர்கள் இல்லை !
அவன், பெரும் பெரும்
முனிவர்களைக் கூட, வசப்படுத்தி
இருக்கிறான். அப்பேற்பட்ட சக்தி
படைத்தவன்... என்று காமனின் ஆற்றலை
கூறினான்.
அப்போது கட்டியங்காரனின் அருகில்
இருந்த கோபன், கட்டியங்காரனின்
பேச்சை யாரும் நம்பாதீர்கள். சின்னஞ்சிறு குழந்தைகளிடம்,
காமனின் ஆட்டம் செல்லாது.
நோயாளிகள் மற்றும் முதியவர்கள், ஆகியோரிடமும் "காமனின்"
ஆற்றல் அடிபட்டு போய் விடும். ஆனால், "கோபனான" என் சக்தி தான் எல்லா
இடங்களிலும்
செல்லுபடியாகும்.
ஆண், பெண், படித்தவன், படிக்காதவன், பெரியவன் - சிறியவன், ஏழை – பணக்காரன், நோயாளி-
ஆரோக்கியசாலி என அனைவரையும்
ஆட்டிப் படைப்பேன்.
'மா முனிவர்களை' கூட ஆட்டிப் படைத்து, அவர்களின் தவ
ஆற்றலை தள்ளாட வைத்திருக்கிறேன்.
எனக்கு கால நேரம், இடம், பொருள் என்பதெல்லாம் கிடையாது. தாய் - தாரம், தகப்பன் -
பிள்ளை,
குரு - சிஷ்யன் என, எல்லா பேதங்களையும் அடித்து நொறுக்கி, அனைவரையும்
குப்பையாக்குபவன் நான்.
சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகி எரிந்து போனவன் காமன்.
ஆகையால், காமனை விட
கோபனான நான் தான் பெரியவன்... என்று, சொல்லி
முடித்தான்.
உண்மை தானே !... கோபத்தை விட, கொடுமை உண்டா? சற்று அமைதியாக இருக்கும் போது,
கோபத்தின் கொடுமையை, அதனால், ஏற்படும் விளைவை யோசித்தாலே போதும் கோபம் கொள்வது!
சரியா ? தவறா ? என்பது நமக்கே புரியும் அல்லவா?
"நாவினால்
சுட்ட வடு"
ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும்.
கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல்
எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.
நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது.
அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும்
என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.
அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி
நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.
ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத்
தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம்
தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.
முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள்
முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான்
உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!
நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன்
கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி
அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே
அவனுக்கு இருக்கவில்லை.
அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும்
அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில்
அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க
அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.
எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப்
போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை
மகனுக்குக் காட்டி "கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த
ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக்
கேட்டாலும், அந்த சொல் தைத்த
இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்"
என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.
மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து
வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.
புதுவை வேலு
நன்றி: தினமலர்
பட உதவி: கூகுள்
தந்தை - மகன் : அழகான உவமை...
RépondreSupprimerநல்ல கருத்தினை நயம்பட உரைத்தீர் நண்பரே!
Supprimerவருகை தந்த வார்த்தைச் சித்தருக்கு சிறப்பு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
செய்கூலி, சேதாரம் இல்லாமல்...! - படித்துள்ளீர்களா...?
RépondreSupprimerஇணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Angry.html
"செய்கூலி, சேதாரம் இல்லாமல்...! - படித்துள்ளீர்களா?"
Supprimerஇன்றே படித்தேன்!
இன்புற்றேன்!
ஒற்றுமை கருத்தை பதிலாய் பதிவில் தந்துள்ளேன் பாருங்கள்!
பின்னூட்ட புயலே புறப்பட்டு சென்று!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான நீதிக் கதை நண்பரே
RépondreSupprimerநன்றி
அருவி போல் புறப்பட்டு வந்து
Supprimerநீதி கதைக்கு மதி நுட்பமிகு கருத்தினை தந்த கரந்தையாருக்கு
குழலின்னிசையின் நன்றி ஓசை ஒலிக்கட்டும்!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல பதிவு. இதைத்தான் “தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
RépondreSupprimerதன்னையே கொல்லுஞ் சினம்.” என்று அய்யன் திருவள்ளுவரும் சொல்லியிருக்கிறார்.
வள்ளுவனை வாய்மொழிந்து வழங்கிய அருங்கருத்து
Supprimerநறுமலராய் மணம் வீசுது அய்யா!
வருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
சிந்தனைக்கு அறிவான கதையை சொல்லி சிகரத்தில் ஏற்றி விட்டீர்கள் பதிவை.. பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
"சிந்தனைக்கு அறிவான கதையை சொல்லி சிகரத்தில் ஏற்றி விட்டீர்கள் பதிவை"
Supprimerவந்தனம் செய்து வணங்குகிறேன் நண்பரே!
வருகைக்கு வளமான நன்றியை உளமாறக் கூறுகின்றேன்!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான சிந்தனைக்குறிய கதை நண்பரே...
RépondreSupprimer
Supprimerவா! நண்பா வா!
சிந்தனைக்குரிய கதை என்று கதைத்தமைக்கு (கூறுதல்),
நயமிகு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அப்பா மகனுக்கு கொடுத்த அறிவுரை மிக அருமை சகோ. இறுதியில் மகன் திருந்தினாலும் முன்பு கோபப்பட்டதற்கு ஆணி எற்ப்படுத்திய வடுவைப் போல என்று சொல்லி இருப்பது மிக மிக அருமை சகோ.
RépondreSupprimerஎன்னுடைய இன்றைய பதிவு அபியும் நானும் !!!
இனிய பின்னூட்டம் !
Supprimerதங்களது தளம் வந்து பதிவை பார்த்தேன்!
கருத்தினை வடித்தேன்! காண்பீர்!
நன்றியுடன்,
புதுவை வேலு
கோபம் தவிர்க்கச் சொல்லும் அருமையான பதிவு! குட்டிக்கதை சிறப்பு! வாழ்த்துக்கள்!
RépondreSupprimer"மிளிரும்" தளீர் சுரேஷ் தரும் கருத்தினை ஏற்கின்றேன்!
Supprimerதொடர்ந்து வருக! நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அறிவான கதை,அருமையான சிந்தனை. வாழ்த்துக்கள்.நன்றி.
RépondreSupprimer"அறிவான கதை,அருமையான சிந்தனை"
Supprimerபடித்துணர்ந்து பதிவினை பாராட்டிய பாங்கினை
ஏற்கின்றேன் எளிமையுடன்!
தொடர்க சகோதரி!
நன்றியுடன்,
புதுவை வேலு
"சற்று அமைதியாக இருக்கும் போது,கோபத்தின் கொடுமையை, அதனால் ஏற்படும் விளைவை யோசித்தாலே போதும் கோபம் கொள்வது!சரியா ? தவறா ? என்பது நமக்கே புரியும்"இவ்வரிகள் மிகவும் அருமை.
RépondreSupprimer"நாவில் சுட்ட வடு" கதையின் மூலம் ,மனதில் ஒரு நல்ல சிந்தனையை ஆணி அடித்துவிட்டீர்.நன்றி.
வாழ்க வளமுடன்...
பின்னூட்டத்திலும் முன்னெடுத்து செல்ல வேண்டிய அருங்கருத்தை
Supprimerஅழகிய கோலமாக வரைந்தீர் சகோதரி!
வாழ்த்துகள்!
குழலின்னிசையில் இணைந்தமைக்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவைவேலு
ஆன்மிகவாதியோ, நாத்திகவாதியோ யாராக இருந்தாலும், அனைவரையுமே கோப உணர்ச்சி ஆட்டிப் படைக்கிறது ( இல்லை - சுழ்நிலை, உறுதியான உண்மை, பெரும் சமயம் பொறாமை, பொய்யை நிரூபிக்க போராட்டம் போன்ற காரணிகள் அடிமை படுத்துகிறது) என்ற உண்மையை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். அருமையான வாழ்வியல் நெறி புதுவை வேலு அவர்களே, நல்ல கருத்து, வாழ்த்துக்கள்.
RépondreSupprimerவிரைவாக வலைதளத்தில் பதிய தாமதத்துக்கு காரணம் இருக்கிறது நண்பரே.
sattia vingadassamy
சூழ்நிலை,
Supprimerஉறுதியான உண்மை,
பெரும் சமயம் பொறாமை,
பொய்யை நிரூபிக்க போராட்டம்
போன்ற காரணிகள்தான்
ஆன்மிகவாதியோ, நாத்திகவாதியோ யாராக இருந்தாலும், அனைவரையுமே கோப உணர்ச்சி ஆட்டிப் படைக்கிறது!
அடிமை படுத்துகிறது.
மறுக்க முடியாத உண்மை!
கோபத்தில் இருந்து விடுபட்டு
"நலம் தரும் நல்வாழ்வு" பெற வேண்டும்
என்பதே! எமது,
பதிவின் நோக்கம் திரு சத்யா அவர்களே!
நட்புடன்,
புதுவைவேலு
அருமையான பதிவு! கோபம் நாடு, இனம், மொழி, மதம், சாதி எல்லாம் கடந்ததுவே!
RépondreSupprimer
RépondreSupprimerதங்களதுஅருங்கருத்து நறுமலராய் மணம் வீசுது அய்யா!
வருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு