jeudi 26 février 2015

"தையலை வதைக்க காத்திருக்கும் "தைராய்டு"

 இன்று ஒரு தகவல்

தைராய்டு குறைபாட்டைப் பொருத்தவரை இந்தியாவில் "பெண்கள்" தைராய்டு பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் நடைபெற்ற ஆய்வின் முடிவில் 10 இல் ஒருவருக்கு தைராய்டு தொடர்பான பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் 2640 பச்சிளங்குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தைராய்டு பிரச்னை உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே 'தைராய்டு' குறித்த விழிப்புணர்வும், பரிசோதனையும் மிகவும் அவசியமாகும்.

இது குறித்த ஒரு விழிப்புணர்வு பதிவாக  மட்டுமே  இந்த 'மருத்துவ பதிவினை' பகிர்ந்து அளிக்கின்றேன். 

'தைராய்டுஎன்பது என்ன?

நமது உடம்பில்பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவை, ஹார்மோன்களை உற்பத்தி செய்துஉடலில் உள்ள செல்களுக்கு அவற்றை செலுத்திஅந்த செல்களை வேலை செய்ய வைக்கும். அவற்றில் ஒன்றுதான்தொண்டையில் இருக்கும்,  'தைராய்டு' சுரப்பி.
இது சுரக்கும் ஹார்மோனின் பெயர், 'தைராக்சின்'.

2.  'தைராய்டு' சுரப்பியின் பயன் என்ன?

இதயத்தை, சீராக வைக்க உதவுகிறது. உடல் வளர்ச்சிக்கும்உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கும் 'தைராக்சின்' ஹார்மோன்கள் பெரிதும் உதவுகின்றன. அதோடு, மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இனப்பெருக்க உறுப்புகளின் வேலைகள், சரியாக நடைபெற மறைமுகமாக உதவுகிறது.

3.  'தைராய்டு' குறைபாட்டில் இருவகை உள்ளதா?

ஆம்! ஒன்று தைராய்டு அதிகமாக சுரப்பது,
  
மற்றொன்று, தைராய்டு குறைவாக சுரப்பது.

4.  'தைராய்டு' இருப்பதற்கான அறிகுறிகள்?

முடி உதிர்தல், மூட்டுகளில் வலிஉடல் சோர்வு ஆகியவை. உடல் சோர்வு வழக்கமானதை விட வித்தியாசமாக இருக்கும். மாதவிடாயில் பிரச்னை, கழுத்து வீக்கம்மன அழுத்தம் ஏற்படுவதோடு எந்த நேரமும், ஒருவித மன கஷ்டத்துடன்எதையும் சரியாக செய்ய முடியாத நிலை உருவாகும்.
 
5.   'தைராய்டின்' பாதிப்புகள் என்னென்ன

அதிகமாக, 'தைராக்சின்' சுரந்தால் எடை குறையும்இதயத்துடிப்பு அதிகமாகும்கோபம்தூக்கமின்மைமாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மைவயிற்றுப்போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும். 

'தைராக்சின்' குறைவாக சுரந்தால், மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்குமுறையற்ற மாதவிடாய்தோலின் மிருதுத் தன்மை குறைவதுஅதிகமான முடி உதிர்தல்மலச்சிக்கல், உடல் வலிமன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

6.  'தைராய்டு' பிரச்னை உள்ளோர் தவிர்க்க வேண்டிய உணவுகள்?

'தைராய்டு' குறைவாக சுரக்கும் பிரச்னை இருந்தால், முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது. 

7.   'தைராய்டு' காரணத்தால்தான்,  "கழுத்துப் பகுதி" வீக்கமடைகிறதா?

    'தைராய்டு' சுரப்பியின் செயல்பாடு முறையாக இல்லாதபோது, கழுத்துப்

  பகுதியில் அமைந்துள்ள 'தைராய்டு' சுரப்பி வீக்கமடைந்துகழுத்தில்

  வீக்கத்தை உண்டாக்கும். சில நேரங்களில்அயோடின் குறைபாட்டாலும்

    கழுத்து வீக்கம் ஏற்படலாம்.

8.  'தைராய்டு' பிரச்னை இருந்தால்மூட்டுகள் வலிக்குமா?

மூட்டு வலி மற்றும் கடுமையான உடல் வலி போன்றவை 'தைராய்டு' பிரச்னைக்கான அறிகுறிகள்தான்! அதோடு 'தைராய்டு' ஹார்மோன்கள் உடலில் அதிகமாக இருந்தால், அவை தசை பிடிப்புகளை ஏற்படுத்துவதோடுஉடலில் அங்கங்கே வலியையும் உண்டாக்கும். இத்தகைய வலி கடுமையாக இருக்கும்.

9. 'தைராய்டு' சுரப்பியில் கட்டிகள் வருமாமே?

ஆம்! தைராய்டு சுரப்பியில் முதலில் சிறு கட்டிகள் வர வாய்ப்புண்டு.

அந்த கட்டிகள் நாளடைவில் புற்றுநோயாகவும் மாறலாம்.

இதுமட்டுமல்லாமல்தைராய்டு சுரப்பியில் நேரடியாக கூட புற்றுநோய்

கட்டிகள் வரும்.

10. தைராய்டு குறைபாட்டை முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா?

பொதுவாகமக்களுக்கு வரக்கூடிய குறைபாடு தைராக்சின் குறைவாக

சுரப்பது. இக்குறைபாடு ஒரு முறை வந்துவிட்டால் தைராக்சின்

மருந்துகளை வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும்.

ஆனால், தைராக்சின் அதிகமாக சுரந்தால் மாத்திரை மற்றும் அறுவை

சிகிச்சையின் மூலம் முற்றிலுமாக குணப்படுத்தலாம்.

எனவே, பாதிப்புக்குஉள்ளானவர்கள் உரியநேரத்தில் உரிய சிகிச்சைமேற்க்கொண்டு பிணி நீக்கமற நீங்கி நீடூழி வாழ்வீராக!

தகவல்: புதுவை வேலு

நன்றி: 'தினமலர்'
 
எஸ்.ஜாகிர் உசைன்
(நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர்.) 

33 commentaires:

  1. அறியாத பல தகவல்களை
    இந்தப் பதிவின் மூலம் அறிந்தேன்
    பயனுள்ள பகிர்வு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. புதிய உபயோகமான தகவல்களுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. நல்ல விழிப்புணர்வு பகிர்வு.
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. எனக்கு தெரியாத சில தகவல்களை உங்களுடைய பதிவின் மூலம் தெரிந்து கொண்டேன்.
    என்னுடைய நேற்றய பதிவு முட்டை 65 நீங்கள் அசைவப் பிரியரா ?

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அனைவருக்கும் பயனுள்ள பதிவு நண்பரே....நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. மிகச் சிறப்பான பதிவு ஐயா! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. எளியநடை யில்தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும்;
    இலக்கணநூல் புதிதாக இயற்றுதலும் வேண்டும்.
    வௌியுலகில், சிந்தனையில் புதிது புதிதாக
    விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெலாங் கண்டு
    தௌிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
    செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்.
    எளிமையினால் ஒருதமிழன் படிப்பில்லை யென்றால்
    இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும்.

    உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்
    ஒருத்தர்தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
    சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!
    தமிழ்மொழியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்.
    இலவசநூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.
    எங்கள்தமிழ் உயர்வென்று நாம்சொல்லிச் சொல்லித்
    தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந்தோ மில்லை.
    தகத்தகா யத்தமிழைத் தாபிப்போம் வாரீர்!

    இது போன்ற தங்களின் பணிகள் இன்னும் தொடரட்டும் அய்யா!

    நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. தைராய்ட் குறை பற்றிய முக்கிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. மிகச் சிறப்பான பதிவு.தைராய்ட் குறை பற்றிய முக்கிய தகவல்கள்.அனைவருக்கும் பயனுள்ள பதிவு.நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. தைராய்டைப் பற்றி தைரியமாய் தெரிந்து கொண்டேன் நண்பரே.......

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. தைராய்டைப் பற்றிய பயனுள்ள தகவல்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. தைராய்டைப் பற்றி அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதியமைக்கு நன்றி. பல தெளிவுகளை தங்களது இப்பதிவு தந்துள்ளது.

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. தைராய்டைப் பற்றிய பயனுள்ள தகவல் நன்றி!
    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. த ம 3

    தொடருங்கள் அய்யா!

    RépondreSupprimer
    Réponses
    1. மருத்துவ பதிவினை மதிக்கும் மாண்பினை, மனம் நெகிழ்ந்து போற்றுகிறேன்.
      வருகைக்கும், பெருமை தரும் கருத்தினை, தந்தமைக்கும் "குழலின்னிசை"யின் இனிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. பல நாட்களுக்கு பிறகு மருத்துவ பதிவை கண்டு மகிழ்ச்சி. பயனுள்ள தகவல். அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy