இன்று ஒரு தகவல்
'மூதறிஞர் இராஜாஜி அவர்களின் சாணக்கிய மூளை'
ஒரு முறை மூதறிஞர் இராஜாஜி அவர்கள் பதவியில் இருந்த போது, கடுமையான நிதி பற்றாக்குறை நிலவிய சமயம் அது! அப்பொழுது ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
அதாவது ,"சுடுகாடுகளுக்கு சுற்றுக்சுவர் கட்டப்பட வேண்டும் என்று!முடிவுஎடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
இராஜாஜி அவர்கள் தனது முடிவை அவையில் அறிவித்தார்! நிதிநிலையை கருத்தில் கொண்டு! எப்படி தெரியுமா?
சுடுகாட்டுக்கு சுற்றுச்சுவர் அவசியம் கட்டப்பட வேண்டுமா?
வேண்டாம் என்பதே என் கருத்து என்றார் இராஜாஜி.
ஏனென்றால்?
"சுடுகாட்டுக்குள் உள்ளே போனவன் வெளியே வரமாட்டான்!"
"வெளியில் இருப்பவனும்,
உள்ளே போவதற்கு விரும்ப மாட்டான்! "
எனவே அவசியமற்றது என்றார்.
பார்த்தீர்களா இராஜாஜியின் சாணக்கிய மூளையை!
-(கவிஞர் வைரமுத்துவின் மேடை பேச்சில் கேட்டது)
-/0/-
மூளை எப்படி நினைவுகளை சேமிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ?
மூளை எப்படி நினைவுகளை சேமிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ?
மூளையில் எப்படி நினைவுகள் சேமிக்கப்படுகிறது என்பது பற்றி !
ஓர் புதிய ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மூளையின் மூலக்கூறு மற்றும் செல்லுலார்களில் ஏற்படக் கூடிய மாற்றங்களினால்தான் நினைவுகள் சேமிக்கப்படுகிறது என்று ஆராய்ச்சியில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நீங்க ஆரோக்கியமா இருக்க உங்க மூளைய இளமையா வெச்சுக்கோங்க.... !
இதன் மூலம், நினைவிழப்பு சார்ந்த மூளைப் பிரச்சனை உள்ள நபர்களுக்கு, அவர்களது நினைவுகளை மீட்டுடெக்க இந்த ஆராய்ச்சி உதவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.
இது மருத்துவ உலகில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்
என்று அவர்கள் நம்புகின்றனர்.
மூளைப் புற்றுநோய் பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
!மேலும், மூளையில் எவ்வாறு நினைவுகள் சேகரிக்கப்படுகிறது, சேமிக்கப்படுகிறது என்பதனை பற்றிப் பார்க்கலாம்...
மூளை எப்படி நினைவுகளை சேமிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ?
1/10 நியூரான் ஒவ்வொரு முறையும் நமது மூளையில் நினைவுகள் சேமிப்பு ஆகும் போது, ஓர் நுண்ணிய இழை ஒரு நியூரானில் இருந்து எலெக்ட்ரோக் கெமிக்கலாக மாறி மற்றொரு அண்டை நியூரானுடன் இணைய வைக்கிறது.
டென்ட்ரைடிக் ஸ்பைன்ஸ் (Dendritic spines)
புதிய இணைப்பை உண்டாக்கும் இழைகளை டென்ட்ரிடிக் ஸ்பைன்ஸ் என்று கூறுகின்றனர். பல சோதனைகளுக்கு பின், இந்த ஸ்பைன் உருவாவதற்கு புரதம், Asef2 முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. Asef2 எனப்படும் கூறு, மூளை வளர்ச்சியினோடும், மது மற்றும் மன அழுத்தத்தினால், மூளையில் ஏற்படும் நிகழ்வுகளோடும் சார்புடையது ஆகும்.
.மூளை எப்படி நினைவுகளை சேமிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா!!
2/10 டென்ட்ரைடிக் ஸ்பைன்ஸ் (Dendritic spines) அவ்வாறு புதிய இணைப்பை உண்டாக்கும் இழைகளை டென்ட்ரிடிக் ஸ்பைன்ஸ் என்று கூறுகின்றனர். பல சோதனைகளுக்கு பின், இந்த ஸ்பைன் உருவாவதற்கு புரதம், Asef2 முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்படுகிறது. (Asef2 எனப்படும் கூறு, மூளை வளர்ச்சியினோடும், மது மற்றும் மன அழுத்தத்தினால், மூளையில் ஏற்படும் நிகழ்வுகளோடும் சார்புடையது ஆகும்)
மூளைப் பிரச்சனைகளுக்கான தீர்வு...
டென்ட்ரைடிக் ஸ்பைன்ஸில் (Dendritic spines) ஏற்படும் மாறுதல்கள், நியூரலாஜிக்கல் மற்றும் வளர்ச்சியடையும் கோளாறுகளான மனவளர்ச்சி குன்றுதல், ஞாபக மறதி, நினைவுகள் இழந்துப் போவது போன்றவைகளோடு தொடர்புடையதாக இருக்கிறது என்று முதன்மை ஆராய்ச்சியாளர் டொன்னோ வெப் (Donno Webb) கூறியுள்ளார்.
டென்ட்ரைட்ஸ் மற்றும் ஏக்ஸான்ஸ் (Dendrites and Axons) நியூரான் செல்கள், மூளையில் குறுக்க நெடுக்க நெசவு போல கடந்திருக்கும் டென்ட்ரைட்ஸ் மற்றும் ஏக்ஸான்ஸை தயாரிக்கிறது. (இவை நீளமான ஃபைபர் போன்று இருக்குமாம்)
ஏக்ஸான்ஸ் (Axons) ஏக்ஸான்ஸ், ஒரு நியூரானில் இருந்து மற்றொரு அண்டை நியூரானுடன் இணைய வைக்கும் டென்ட்ரைட்சின் எலெக்ட்ரோக் கெமிக்கல் குறியீடுகளை அனுப்புகிறது.
தொடர்பு எப்போது ஒரு டென்ட்ரைட் ஏக்ஸான்ஸுடன் தொடர்புக் கொள்கிறதோ, அப்போதிருந்து ஸ்பைனில் வளர்ச்சியடையவும், அனுப்பப்படும் குறியீடுகளை பின்பற்றவும், கடைப்பிடிக்கவும் செய்கிறது.
புதிய இணைப்பு ஏக்ஸான்ஸ் மற்றும் ஸ்பைன், இரு பாதியான நரம்புபினைப்புடைய இணைவளைவு சந்திப்பினை உருவாக்குகிறது. இந்த புதிய இணைப்பு தான் நினைவுகளை சேகரிக்கவும், சேமிக்கவும் அடிப்படையாக இருக்கின்றது.
மனவளர்ச்சி குன்றுதல் முதிர்ச்சியற்ற ஸ்பைன் தான் மனவளர்ச்சி குன்றுதளுக்கு காரணமாக இருக்கிறது. புதிதாக உருவாகியிருக்கும் இணைவளைவு சந்திப்பினோடு, ஏக்ஸான்ஸ் சரியாக இணையாமல் இருப்பது தான் இதற்கு காரணமாம்.
ஞாபக மறதி
அல்சைமர் ஸ்பைனில் தோய்வு அல்லது குறைபாடு ஏற்படுவதன் காரணமாகவே ஞாபக மறதி வருகிறது.
இதனால் தான் அல்சைமர் பாதிப்பு உள்ளவர்களால் புதிய நினைவுகளை சேமிக்க முடிவதில்லை மற்றும் பழைய நினைவுகளும் வலுவிழந்து மறந்து போய் விடுகின்றன.
புதிய மருந்து ஆராய்ச்சியாளர்கள், நினைவுகள் எப்படி சேமிக்கப்படுகிறது, பாதிப்படைகிறது என்று கண்டுப்பிடித்துவிட்டோம்.
இனி, இதை சரி செய்யும் சரியான மெக்கானிஸம் கொண்ட மருந்தினை கண்டுப்பிடித்துவிட்டால், இழந்த நினைவுகளை மீட்டெடுக்க முடியும் என்று கூறியிருக்கின்றனர்.
தகவல் பகிர்வு:
விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் பல இப்படித்தான் மூளையைக் குழப்பும்.
RépondreSupprimer
Supprimerஉண்மைதான் முனைவர் அய்யா அவர்களே!
ஆனால்? குழப்பத்தில்தானே தெளிவும் பிறக்கின்றது.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
தெளிவான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்.. அறிந்திடாத தகவல் பகிர்வுக்கு நன்றி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் கவிஞரே!
Supprimerகவிதை போட்டியின் அலுவல்கள் முடிந்ததா?
இடைவிடாத அலுவலிடையேயும் இங்கு வந்து
தாங்கள் அளிக்கும் உற்ச்சாக கருத்துக்கள் கவிதை மனம் சிறப்பு அய்யா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அறியாத செய்திகளை வழங்கியமைக்கு நன்றி நண்பரே
RépondreSupprimerராஜாஜியின் கூற்று ஆகா
தம +1
Supprimerநன்றி கரந்தையார் அவர்களே!
நற்கருத்து அளித்தமைக்கு!
நட்புடன்,
புதுவை வேலு
முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் சரியாக சொல்லியுள்ளார். தகவலுக்கு நன்றி!
RépondreSupprimerதகவலை அறிந்தமைக்கும், கருத்தினை தந்தமைக்கும் நன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
சுடுகாட்டுக்குச் சுவர் பற்றிய கருத்து அருமை. மூளையைத் தெளிவாக்கும் அளவு பயனுள்ள செய்திகள். பகிர்வுக்கு நன்றி.
RépondreSupprimerதங்களது கருத்தினை காணும்போதெல்லாம் ஒரு விதமான எழுச்சி எழுகிறது மனதில்
Supprimerகருத்து பிறக்கிறது மூளையில்!
நன்றி முனைவர் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
தெளிவான விளக்கம்... நன்றி ஐயா...
RépondreSupprimer"தெளிவான விளக்கம்." என்று தெளிவுரையாய் கருத்தினினை தந்த எமது
Supprimerவார்த்தைச் சிதருக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உங்கள் பதிவின் மூலம் நிறைய கருத்துக்களை தெரிந்து கொள்ள முடிகிறது சகோ.
RépondreSupprimerநன்றி சகோதரி!
Supprimerதங்களது பதிவுகளின் மூலம் நாங்களும் வித விதமான சமையல் வகைகளை
நாள்தோறும் கண்டு வருகிறோம். ஒவ்வொன்றும் சுவையோ சுவை!
நட்புடன்,
புதுவை வேலு
மூளையின் செயல்பாட்டினை எளிமையாக விளக்கிய பதிவு... ராஜாஜியின் குறிப்புடன் தொடங்கியது மிக பொருத்தம்.
RépondreSupprimerநன்றி
சாமானியன்
வாருங்கள் பதிவுலக இராஜா (ஜி) அவர்களே!
RépondreSupprimerமூலை முடுக்கெல்லாம் தேடியும் பிடிபடாத
உம்மை இந்த மூளை பதிவின் மூலம் கண்டு பிடித்து விட்டேன் பார்த்தீர்களா?
அது சரி! வேலை அலைச்சல் எல்லாம் தீர்ந்து விட்டதா?
விடி வெள்ளி எப்போது காணப் போகிறீர்கள்?
வாழ்த்துகள்! வாருங்கள்! நண்பரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
முதலில் எனது அன்பு வணக்கத்தையும்,
RépondreSupprimerவலைச்சரத்தில் இன்றைய சிறப்பு பதிவாளராக தேர்வானமைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களது கருத்தினை கண்டு மகிழ்ச்சி!
நன்றி முனைவர் இரா.குணசீலன் அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு
அனைத்துத் தகவல்களையும் படித்து என் மூளையில் ஏற்றிக்கொள்ள மிகவும் முயற்சித்தேன். பகிர்வுக்கு நன்றிகள். :)
RépondreSupprimerஏற்றம் தரும் பணியிலும் எழுச்சியுடன் வந்து கருத்தினை தந்த வைகோ அய்யாவை வணங்கிறேன். நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
இராஜாஜி நல்லா சொல்லி இருக்கிறார்....
RépondreSupprimerமூளை தகவல் அறிய வேண்டிய ஒன்று நன்றி சகோ
தம + 1
மூதறிஞரின் சாணக்கிய மூளைக்கு பாராட்டு தெரிவித்த கருத்தை வரவேற்கின்றேன்
Supprimerநன்றி சகோ!
நட்புடன்,
புதுவை வேலு
நல்லதொரு பதிவு ஐயா! ஆனால், மறதிக்கு எல்லாம் மருந்துகள் கண்டுபிடிப்பது கடினம் ஐயா. இப்போது இருக்கும் நல்ல மருந்துகளே கூட ஓரளவிற்குத்தான் பயனளிக்கின்றன. நியூரோ சய்ன்ஸ் கொஞ்சம் மூளைக்கு அப்பாற்பட்டதே. மட்டுமல்ல நாம் மறதி வாராமல் இருக்க நிறைய மூளைக்கு வேலை கொடுக்கும் சில விடயங்களை நாம் செய்தாலெ போதும் என்பதுதான் மருத்துவர்களின் அறிவுரை.......அருமையாகச் சொல்லி இருக்கின்றீர்கள் ஐயா!
RépondreSupprimer
RépondreSupprimerஆசானே!
மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
மனம் நிறைய மகிழ்ச்சி!
நன்றி வருக! வருக!
நட்புடன்,
புதுவை வேலு
மூளை பற்றிய தகவல்களை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.என் மூளைல் ஏறுமா?
RépondreSupprimerமூதறிஞரின் சாணக்கிய மூளைக்கு பாராட்டு தெரிவித்த கருத்தை வரவேற்கின்றேன்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
இராஜாஜி தான் எல்லாம் சொல்வாரே, ஆனாலும் தாங்கள் சொன்ன தகவல்கள், விளக்கம் அருமை. என் மண்டையில் ஏற்றிக்கொள்ள முயல்கிறேன் புதுவையாரே,நன்றி. வாழ்த்துக்கள்.
RépondreSupprimerமூதறிஞரின் சாணக்கிய மூளைக்கு பாராட்டு தெரிவித்த கருத்தை வரவேற்கின்றேன்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
சுடுகாட்டு மூளை சாரி சுடுகாட்டு சுவர் விபரம் அறியக் கண்டேன் நண்பரே.. மேலும் மூளையைப் பற்றிய எனக்கு சம்பந்தம் இல்லாத விடயமும் அறிந்து கொள்ள வைத்தமைக்கு நன்றி நண்பரே....
RépondreSupprimerசாணக்கிய மூளைக்கு பாராட்டு தெரிவித்த கருத்தை வரவேற்கின்றேன்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
இது என் மூளையில் ஏறவில்லை !மன்னிக்க!
RépondreSupprimerமூதறிஞரின் சாணக்கிய மூளைக்கு பாராட்டு தெரிவித்த கருத்தை வரவேற்கின்றேன்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
சுற்றுச் சுவர் இல்லையென்றால் நாய்க்கு கொண்டாட்டம்தான் ,பிணத்தின்,கை, காலை வெளியே இழுத்து போட்டுவிடும் :)
RépondreSupprimerசாணக்கிய மூளைக்கு பாராட்டு தெரிவித்த கருத்தை வரவேற்கின்றேன்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ஆனாலும் -
RépondreSupprimerமூதறிஞரின் பேச்சையும் உதாசீனம் செய்தவன் - தமிழன்!..
சுடுகாட்டையும் ஆக்ரமிப்பு செய்து பட்டா போட்டு விற்றவன் தமிழன்!..
இன்னும் சொல்லலாம் - வேண்டாம்!..
அரிய தகவல்களுக்கு மிக்க நன்றி.. வாழ்க நலம்!..
மிக்க நன்றி.. வாழ்க நலம்!..
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமையான பதிவு
RépondreSupprimerஅல்சைமர் ஒரு கொடுமையான வியாதி..
ஆமா டீப் ப்ளூ சி பார்த்தீர்கள்தானே , அல்சைமருக்கு மருந்து கண்டுபிடிப்பதுதான் கதையே... சுறாவை வைத்து!
நன்றி தோழரே!
Supprimerநல்ல விடயத்தை அறியத் தந்தமைக்கு!
மகிழ்கின்றேன்!
நட்புடன்,
புதுவைவேலு
தம +
RépondreSupprimerமுத்திரை பதிக்கும் வித்தக வாக்கிற்கு நன்றி தோழரே!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு
மிக அருமையான பதிவு தோழர் ... வாழ்த்துக்கள்
RépondreSupprimerமிக்க நன்றி.. வாழ்க நலம்!..
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு