mardi 3 mars 2015

"அச்சத்தை அறிவால் வெல்க!"





பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை மார்ச் 5  துவங்கி, வரும் 31ம் தேதி முடிகிறது.

நாளை, தமிழ் முதல் தாள், நாளை மறுநாள், தமிழ் இரண்டாம் தாளுக்கு தேர்வு நடக்கிறது. மொத்தம், 6,256 பள்ளிகளில், 2,377 மையங்களில், 3.91 லட்சம் மாணவர்களும், 4.52 லட்சம் மாணவியரும் தேர்வு எழுதுகின்றனர்; தனித் தேர்வர்கள், 43,000 பேர். புதுச்சேரியில், 14,000க்கும் மேற்பட்டோர் தேர்வெழுதுகின்றனர்.
தேர்வினை எழுதும் மாணவ மாணவியர் அனைவருக்கும் வெற்றியினை பெற்று  அவர்களது,
இலட்சியக் கனவு நனவாக குழலின்னிசை  வாழ்த்து இசை இசைக்கின்றது.



அச்சத்தை அறிவால் வெல்க!

 

 

 


பட்டியலிட்டு படி கண்ணே! வெற்றி
பட்டியலில் இடம் பெறுவாய் முன்னே
சுட்டியே விடை தருவாய் கண்ணே!
சுறுசுறுப்பின் சுடராவாய் கண்ணே!



முயற்சியே உனது அயற்சியை போக்கும்
பயிற்சியே உனது அறிவினை பூக்கும்
உழைப்பினை உறுதுணையாய் கொண்டு உழு!
தழைக்கும் நன்மதிப்பெண்ணை பெற்றுஎழு!



தேர்வினை எழுதி தேர்ச்சியை பெறுக!
தேவையற்ற அச்சத்தை வெல்க!


புதுவை வேலு

36 commentaires:

  1. சமயத்திற்கேற்ற பயனுள்ள குறிப்பு.

    RépondreSupprimer
    Réponses
    1. முதல் வருகை தந்து " சமயத்திற்கேற்ற பயனுள்ள குறிப்பு" என்று பின்னூட்டக் கருத்தினை தந்து, வாழ்த்திய அய்யாவுக்கு, வழங்கி மகிழ்கின்றேன் மனமார்ந்த நன்றியினை!
      தொடருங்கள் அய்யா!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. வணக்கம்
    விலாவாரியான தகவலுடன் மற்றும் சிறு கவியுடன் பதிவை அசத்தியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி...மாணவர்களுக்கு வாழ்த்தக்கள்.த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் தமிழ்மணம் வாக்கினை அளித்து பதிவுக்கு பெருமை சேர்த்த நண்பர் ரூபன் அவர்களுக்கு குழலின்னிசை நன்றி பாராட்டி மகிழ்கின்றது! மேலும்
      தேர்வு எழுதும் மாணவ மாணவியருக்கு வாழ்த்தினை தெரிவித்த பாங்கு மிகவும் போற்றத்தக்கது கவிஞரே!
      தொடர் வருகை புரிக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. "//முயற்சியே உனது அயற்சியை போக்கும்//" - அருமை அருமை நண்பரே.
    சமயத்துக்கு ஏற்ற நல்லதொரு கவிதை.

    RépondreSupprimer
    Réponses
    1. "முயற்சியே உனது அயற்சியை போக்கும்//" - அருமை அருமை நண்பரே"
      ஆமாம் நண்பர் சொக்கன் அவர்களே!
      இந்த இனிய கவிதை வரிகள் உங்களுக்கும் சாலப் பொருந்தும்!
      நல்ல பணி நாடி வந்து இல்லறம் செழிக்க,
      வளம் கொழிக்க வாழ்த்துகிறேன்!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. தங்கள் வழிகாட்டலும் வாழ்த்தும் நல்ல பயனைத் தரும்.

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை தந்து வாழ்த்தி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி கவிஞர் அய்யா அவர்களே!
      தொடர்ந்து நல்லாதரவு நல்கிட வேண்டுகிறேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அருமை...

    முயற்சி + பயிற்சி = என்றும் வெற்றி...

    RépondreSupprimer
    Réponses
    1. பயிற்சி இல்லாதவர்களுக்கு முயற்சியை முன்னிலைபடுத்தி விட்டு பிறகு
      அயர்ச்சி இல்லாமல் அனைவருக்கும் பெரிய உதவி புரிந்து வரும் வார்த்தைச் சித்தரின் கருத்தினை வணங்கி ஏற்கின்றேன்! வள்ளுவனின் குறள் தொட்டு!
      வாருங்கள் பின்னூட்டத்தின் புயலே!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. தன்னம்பிக்கையூட்டும் கவிதை..

    அருமை.. பாராட்டுகள்!..

    RépondreSupprimer
    Réponses
    1. சொல்லினம் சுமந்து வந்து,
      புள்ளினம் போல் பறந்து வந்து,
      தன்னம்பிக்கை கருத்தினை பதிந்து விட்டு
      சென்ற, துரை செல்வராஜூ" அய்யாவை வணங்கி
      மகிழ்கின்றேன்!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அச்சத்தை அறிவால் வெல்வோம்.... (ஏட்டுக் கல்வி அறிவு மூலமா.? அனுபவக் கல்வி அறிவு மூலமா,?)

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் தோழரே!

      அச்சத்தை அறிவால் வெல்வோம்.... (ஏட்டுக் கல்வி அறிவு மூலமா.? அனுபவக் கல்வி அறிவு மூலமா,?)
      அனுபவக் கல்வி= வைரம் பாய்ந்த கட்டை
      ஏட்டுக் கல்வி = வைரத்தை உடைக்கும் கட்டை
      மூலத்தை அறிவால் உணர்க தோழரே!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. பிளஸ் 2 எழுதப் போகும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துரையும் கவிதையும் மிக அருமை சகோ.

    என்னுடைய ப்ளாக் வருகின்ற 6 ஆம் தேதி 3rd anniversary ! அன்றைய பதிவு அசோகா அல்வா ! நீங்கள் எனது வலைபூவுக்கு கண்டிப்பாக வருகை தர வேண்டும். Advance Thanks சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தங்களது வலைப் பூ
      கலைமகள் அருள்பெற்ற பூவாக திகழ்ந்து அனைவரும் நாடி வந்து நலம் பாராட்டும்
      தன்னிகரற்ற தளமாகத் திகழ வாழ்திதுகிறேன்.
      வலைப் பூ சூட வருவேன்!
      அசோகா அல்வா மிச்சம் இருக்கட்டும்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. இன்று மூன்றாம் ஆண்டு தொடக்கத்துக்கு ஏன் வரவில்லை ? உங்களுக்குள்ள அல்வா இருக்கிறது. எடுத்துக்கொள்ள வாருங்கள் சகோ ..

      Supprimer
  9. மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்! வாருங்கள் ராஜபாட்டை - ராஜா அவர்களே!
      வாழ்த்துகளை வணங்கி ஏற்கின்றேன்!
      வருகை தொடர்க!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. Réponses
    1. "இலவசமாக ரீ - சார்ஜ் செய்ய ஒரு அருமையான இணையதளம் "
      நன்றி நண்பரே!
      அவசியம் தொடர்கிறேன்!
      அனைவரையும் தொடரவும் செய்கின்றேன்!
      தகவலுக்கு நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. சரியான நேரத்தில் வாழ்த்திய தங்களுக்கு நன்றி சகோ, அச்சத்தை அறிவால் வெல்வோம். அருமையான வரி. நன்றி,

    RépondreSupprimer
    Réponses
    1. சரியான நேரத்தில் தங்களை போன்றவர்கள் தரும் வாழ்த்துகள்
      மாணவர்களை சென்றடைய குழலின்னிசை புரியும் ஒரு சிறிய பணி!
      வருகைக்கு மிக்க நன்றி சகோதரி!

      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. நல்ல கவிதை, மாணவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் மருந்து. அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. நல்ல கவிதை, மாணவர்களுக்கு புத்துணர்ச்சி தரும் மருந்து என பாராட்டு பத்திரம் வாசித்தருளிய அருமை நண்பரே!
      தங்களது பாராட்டுக்கு குழலின்னிசை நிச்சயம் தன்னை தகுதி படுத்திக் கொள்ள முயலும்!
      வருகைக்கும், வளமான கருத்திற்கும், உளமார்ந்த நன்றி உமக்கு!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. உங்களுடன் சேர்ந்து நாங்களும் வாழ்த்துகிறோம்.

    RépondreSupprimer
    Réponses
    1. நட்பின் வாசம் நுகர்ந்தேன்!

      வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. தன்னம்பிக்கை வரிகள் நண்பா
    தமிழ்மணம் 6

    RépondreSupprimer
  15. தங்களின் தவறாத தமிழ் மணம் வாக்கு, தன்னம்பிக்கையை தாரை வார்த்து தருகிறது நண்பா!
    வருகைக்கும், வாக்கிற்கும் நன்றி! தொடர்க!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  16. நல்ல அறிவுரை...சமயத்துக்கு ஏற்ப

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் ஆசானே!
      தங்கள்,
      வருகையில் தெரிகிறது அய்யா தாமதம்!
      ஆனால்,
      பின்னூட்டம் தருகிறது "மனதிற்கு இதம்"
      இதுதான் சமயத்திற்கேற்ப தரும்,
      இமயம் தொட்ட கருத்து என்பார்களோ அய்யா!

      வருகை பெருமை சேர்க்கிறது! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. உங்களின் வாக்கு பொன்னாகட்டும்,தேர்ச்சி விகிதம் சரித்திரம் காணாத அளவுக்கு உயரட்டும் :)
    த ம 8

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் பகவான் ஜீ,
      உங்களின், த ம 8 வாக்கு பொன்னாகட்டும்!
      அதனால்" குழலின்னிசை"யின் வாக்கு வங்கி வளரட்டும்!
      நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றியைத் தேடி தந்தமைக்கு
      பக "வான் ஜீயை வணங்குகிறேன் நன்றியினை சொல்லி!
      வருகை தொடரட்டும் நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. ‘அச்சத்தை அறிவால் வெல்க’ என்ற சொற்றொடர் தேர்வு எழுதும், இன்று எழுதப்போகும் மாணவர்களுக்கு நிச்சயம் தன்னம்பிக்கையூட்டும். நல்ல பதிவு.

    RépondreSupprimer
  19. மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    வருகை பெருமை சேர்க்கிறது! நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  20. "அச்சத்தை அறிவால் வெல்க!" பிளஸ் 2 எழுதப் போகும் மாணவ மாணவிகளுக்கான புத்துணா்ச்சி டானிக். அருமையான கவிதை! பரீட்சை எழுதப் போகும் அனைத்து மாணவ
    மாணவிகளுக்கும் "குழல் இன்னிசை" மூலம் எனது வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer