( "மரங்கொத்தி
பறவையின் மீது மரநாய் ஒன்று சவாரி செய்ததை இங்கிலாந்தை சேர்ந்த அமெச்சூர்
புகைப்படக் கலைஞர் மார்டின் லீ-மே எடுத்து பதிவு செய்துள்ளார்")
புத்தி சொல்லும் மரங்கொத்தி
சிறகுகளை விரித்தபடி
கூர் அலகு சிரித்தபடி
மர நாயை சுமந்தபடி
வானில் பறக்கும்
மரங்கொத்தி பறவைக்கும்
தெரிகிறது!
சுமப்பது
சுமை அல்ல
சுகமே என்று!
ஆனால்?
பெற்றோரை
பாரமாக கருதும்
சில உள்ளங்கள்
உணர்வதில்லையே
ஏன்?
ஒரு புகைப்படத்தை வைத்து மிக அருமையாக சிந்திக்கக்கூடிய ஒரு கவிதையை படைத்தமைக்கு நன்றி.
RépondreSupprimerஅந்த சில உள்ளங்கள் உணர்ந்துவிட்டால் தான் அவர்கள் மனிதர்களாகி விடுவார்களே!!
உன்னதமான வரிகளுக்கு உரமாக அமைந்தது நண்பரே!
Supprimerசொக்கத் தங்கமான "சொக்கரின்" சொர்க்க வாசலை
தட்டித் திறந்த, உமது கருத்து பின்னூட்டம்!
உணர்ந்தவர்கள் சுமப்பார்களா? சுகம் காண்பார்களா?
காலம் மட்டுமே காத்திருந்து பதில் சொல்லும்?
காலனின் காலடியில் மிதிபடும்போது!
வருகைக்கு மிக்கநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை! அருமை!! படம் மூலம் பாடம் சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!
RépondreSupprimer"படம் வைத்து பாடம் சொல்லி விட்டோம்"
Supprimerதேவையற்ற ஜடம் என்று,
மடத்தில் கொண்டு சென்று
தள்ளும், சிலர்,
இதை படித்தாவது திருந்த வேண்டாம்!
உணர்ந்தாலே போதும் அய்யா!
கந்தையாகாத சிந்தையை பெறுவர்!
வருகைக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
நானும் கண்டேன் ஆனால் நல்லக் கவிதையை உங்களிடம் உண்டேன்
RépondreSupprimerகவிதையை கண்டதும் உண்டதைக் கொண்டு பேர் உவகை கொண்டேன்.
Supprimerகவியாழி கண்ணதாசன் அவர்களின் வரவினை கண்டு மிக்க மகிழ்ச்சி!
வருகையும் வாக்கும் தொடர்க!
நன்றியுடன்,
புதுவை வேலு
Fb - ல் இந்தப் படம் வந்தது..
RépondreSupprimerஆனால் - தங்களிடமிருந்து -
காட்சிக்குக் கருத்துடன் கவிதையும் பிறந்தது!..
காட்சியையும் கருத்தினையும் பாராட்டி பின்னூட்டம் புனைந்த
Supprimerதுரை செல்வராஜூ அய்யாவின் மாட்சிமைக்கு மிக்க நன்றி!
வருக! தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை...
RépondreSupprimerபெற்றோர்கள் ஆகும் போது தான் உணர்வார்களோ...?
வள்ளுவனை முன்னிறுத்தி முழு நிலவாய் வலம் வரும்
Supprimerவார்த்தைச் சித்தரே! உமது வாக்கு மெய்ப் பட வேண்டும்!
வெற்றியும் பெற வேண்டும்!
வருகைக்கும் வளம் சேர்க்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!
மீண்டும் வருக!
நன்றியுடன்,
புதுவை வேலு
சில உள்ளங்கள் அல்ல, பல உள்ளங்கள் அவ்வாறு நினைக்கின்றன. அனைத்திற்கும் இவ்வாறான உள்ளங்கள் பதில் அளித்துத்தானே ஆகவேண்டும். அந்த சந்தர்ப்பத்தை அவர்களும் எதிர்கொண்டுதானே ஆகவேண்டும்.
RépondreSupprimerநூறு சதவீத உண்மையை நுட்பமாய் நுண்ணறிவுக்கு எட்டும் வகையில்
Supprimerகருத்தாய் பகின்றுள்ளீர்கள் முனைவர் அய்யா அவர்களே!
நிச்சயமாய் அவர்களும், என்றாவது ஒரு நாள்,
எதிர் கொண்டுதான் தீர வேண்டும்.
சிந்தனைத் தேரோட்டம் சிறப்பு அய்யா!
நன்றியுடன்,
புதுவை வேலு
படம் + கவிதை அருமை சகோ.
RépondreSupprimerநல்ல கருத்தான கவிதை அழகு
தம +1
இன்னும் நான்கு பேர் அதிகமாக படிப்பதற்கு வழி செய்து உள்ளீர்கள்
Supprimerதம +1 வாக்கினை அளித்து. மிக்க மகிழ்ச்சி! சகோதரி! நன்றி!
அருமையை உணர்கின்றேன்! பெருமை சேர்க்கும் பதிவுகளாய் தருவதற்கு
முயல்கிறேன்!
வருகையும் வாக்கும் தொடரட்டும்.
நன்றியுடன்,
புதுவை வேலு
படத்தால் பாட்டு சொன்ன உங்கள் பா அருமை. அழகிய புகைப்படம்.
RépondreSupprimerபாட்டாலே புத்தி சொல்லும்
Supprimerபாவலர்கள் பலர் உண்டு!
அவர் போல் அல்லாது,
படத்தாலே பாட்டெழுத பறவை!
மரநாய் சுமந்தபடி சிறகை விரித்தது
இன்று!
நலம்நாடி நல்ல கருத்தை தந்தமைக்கு
இனிய நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
அழகான படமும் கருத்தான கவிதையும். பாராட்டுகள்.
RépondreSupprimerஅழகான படமும் கருத்தான கவிதையும் என்றுரைத்த,
Supprimerசகோதரி கீத மஞ்சரி அவர்களே!
தங்களை போன்றோர், தளம் வந்து பலம் சேர்க்கும்,
கருத்தினை தருவதை இன்முகத்தோடு வரவேற்கின்றேன்
வருகையோடு வாக்கும் சேர்த்து நிற்க வேண்டுகிறேன்.
மிக்க நன்றி! தொடர்க!
நன்றியுடன்,
புதுவை வேலு
மரங்கொத்தி ஒரு நாள்தான் சுமக்கும்.... சில உள்ளங்கள் வாழ்நாள் முழுவதும் பெற்றோரை சுமப்பதால் பாரமாக இருக்கும்...????
RépondreSupprimerதோழரே!
Supprimerபத்து மாதம் பத்தியம் இருந்து பெற்றவளை
அட்லீஸ்ட்!
ஒரு பத்து வருடமாவது சுமந்தால் தான் என்ன?
இது குறைந்த பட்ச கருத்து!
மரங்கொத்தியின் வாழ்நாள் எவ்வளவு?
மறு நாள் எது? என்னவென்று அது அறியாத போது,
அந்த ஒருநாளே போதும்! தோழரே!
நட்புடன்,
புதுவை வேலு
சுகமான சுமையே.
RépondreSupprimerஊன பறவையாக இருந்தால் இன்னும் சிறப்பே, (தன் நிலை பாராது, உதவி செய்யும் குருவியே ???? பலன்/விடை/கடமை/அறம் வலியுடன் திருப்தியான மவுனமே).
நல்ல படம் சொல்லும் பாடம் புதுவை வேலு அவர்களே.
sattia vingadassamy
கானம் பாடும் பறவையை
Supprimerஊனம்
நிச்சயம் ஊனப்படுத்தாது
ஊனத்தின் உயர்வை உலகுக்கு சொல்லி
உயரப் பறக்கும்!
புகழால் சிறக்கும்!
நல்ல வேறுபாடு உடைய
மாற்று சிந்தனைமிகு கருத்துபின்னூட்டம்! ஏற்கின்றேன்
நண்பர் சத்தியா அவர்களே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அற்புதமான வாழ்வியல் உண்மை நண்பா..
RépondreSupprimerதமிழ் மணம் வைகை 6
வாழ்வியல் உண்மையை உணர்ந்து,
Supprimerவாக்கிட்டு வாழ்த்தியமைக்கு
மிக்க நன்றி நண்பா!
நட்புடன்,
புதுவை வேலு
புகைப்படம் நன்று. படம் மூலம் நீங்கள் சொன்ன கருத்தும் நன்று. பாராட்டுகள்.
RépondreSupprimerஅன்பின் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு,
Supprimerபுதுதில்லி புதுவையை பாராட்டி கருத்து பின்னுட்டம்
இட்டது இனிய சிறப்பு!
தங்களின் தரமிகு பதிவினைப் போல!
வருகைக்கும், வாழ்த்திற்கும் குழலின்னிசையின் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தமிழ்மண மரபுப்படி என் வாக்கை பதிவு (8) செய்துவிட்டேன் நண்பரே...
RépondreSupprimerபோற்றுதலுக்குரிய தமிழ் மரபு!
Supprimerவணங்குகிறேன்! நன்றி சொல்லி தோழரே!
நட்புடன்,
புதுவை வேலு
So how did this picture happen?
RépondreSupprimerIt was an unusual sight to encounter on a stroll on a dull day in March.
A strangled, distressed squawking and a flash of green grabbed the attention of Martin Le-May and his wife Ann as they walked around Hornchurch Country Park, Greater London in the UK.
Hiding behind a tree with binoculars to get a better view, the pair was stunned to witness a ferocious tussle between a green woodpecker and a weasel.
And then something amazing happened: the woodpecker took flight with the weasel clinging onto its back.
The photographs capturing the moment are extraordinary. They’ve been shared thousands of times on social media and have been picked up by a plethora of news outlets. But how extraordinary was the event itself, and what exactly was going on?
Unlike many other woodpeckers, [green woodpeckers] spend a lot of time feeding on the ground on ants around ants’ nests... The weasel will hang around and wait for an opportunity to eat sort of anything that they can
“I’ve never seen anything like it,” says Dr Stuart Marsden, reader in Conservation Ecology at Manchester Metropolitan University in the UK, who has studied green woodpeckers extensively.
Weasels are ferocious predators that usually predate mammals – they can take on animals bigger than themselves and often eat rabbits. But it’s more unusual for them to attack birds.
“I wouldn’t think that woodpeckers are often taken,” says Dr Marsden. But woodpeckers are ground birds. Weasels go after their eggs and babies, and sometimes adults that are trying to defend the nest.
He thinks the woodpecker was probably feeding in the grass when it was ambushed. The birds’ diet is mainly ants.
“Unlike many other woodpeckers, they spend a lot of time feeding on the ground on ants around ants’ nests."
“The weasel will hang around and wait for an opportunity to eat sort of anything that they can eat.
“They are really vicious and clever,” he adds.
“Unfortunately it’s gripped on here and it’s been taken for a ride.”
Naturalist and broadcaster Iolo Williams told the BBC: “These are truly amazing photographs. It’s worth remembering that weasels have a truly catholic diet – I’ve seen them taking fully grown rabbits.
“They are incredible predators, so I don’t think it’s that remarkable that one tried to take a woodpecker.
“What is remarkable was that it was captured on camera.”
Weasel vs woodpecker
Green woodpeckers grow to around 32cm (12.5in) in length while male weasels measure around 20-22cm (7.9-8.6in) and females reach 15-18cm (5.9-7in)
In weight, green woodpeckers vary from 180 to 220g (5.6-7.8oz), while adult weasels usually weigh between 106-131g (3.7-4.6oz) for males and 55-69g (1.9-2.4oz) for females.
Dr Marsden told BBC Earth: “For a bird like that to take off from the ground, to lift itself off the ground with a heavy [load] on its back is quite impressive really.”
Share this story
இந்த மரங்கொத்தி பறவையின் படம் பற்றிய பிபிசி செய்தி.
அந்த மரநாயை அது சுகமாக சுமக்கவில்லை. தான் தப்புவதற்காக தூக்கிக் கொண்டு பரந்துள்ளது. இல்லாவிடில் மரநாய் பசியாறியிருக்கும்.
இங்கு எதுவும், அன்பாலோ கருணைலோ நடக்கவில்லை.
வணக்கம் யோகன் அவர்களே!
Supprimerவருகையை வரவேற்கின்றேன்!
அதே சமயம் தங்களது பின்னூட்டத்திற்கு விளக்கம் சொல்லவும் காத்திருக்கிறேன்!
முதலாவதாக நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டியது,
இந்த படம் குறித்த செய்தியை குழலின்னிசை பதிவானது படத்திற்கு கீழே!
( "மரங்கொத்தி பறவையின் மீது மரநாய் ஒன்று சவாரி செய்ததை இங்கிலாந்தை சேர்ந்த அமெச்சூர் புகைப்படக் கலைஞர் மார்டின் லீ-மே எடுத்து பதிவு செய்துள்ளார்")
இவ்வாறு பதிவு செய்து இருப்பதை நீங்கள் கவனித்தீர்களா இல்லையா?
சவாரி என்ற சொல்லிலேயே நீங்கள் சொன்ன BBC செய்தியை இது! உறுதி செய்கிறது!
இரண்டாவது எனது பதிவின் தலைப்பு
"படம் சொல்லும் பாடம்"
நான் எழுதியது "புத்தி சொல்லும் மரங்கொத்தி" கவிதை
படத்தை பார்த்தவுடன் எனது உள்ளத்தில் உள்ளதை கவிதையாய் வடித்தேன்!
"உள்ளத்தில் உள்ளது கவிதை!
உணர்ச்சி பெருக்கெடுப்பது கவிதை!
என்று கவிதைக்கு பல விளக்கங்கள் உள்ளன!
சமூக அக்கறையுடன், மறைந்து வரும் மனிதாபமிக்க செயலை,
அத்தகைய செயலை செய்யாதிருக்க வலியுறுத்தி, எழுதப் பட்ட நேர்மறையான எழுத்துக்களை உள்ளடக்கியது இந்த கவிதை
என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்!
அறிவீர்கள்! அல்லது அறியப் படுவீர்கள் என்று எண்ணுகிறேன்!
நன்றி!
புதுவை வேலு
http://www.bbc.com/earth/story/20150303-weasel-riding-woodpecker
RépondreSupprimerஇந்த மரங்கொத்தி பறவையின் படம் பற்றிய பிபிசி செய்தி.
இந்த மரங்கொத்தி பறவையின் படம் பற்றிய பிபிசி யின் மேலான செய்திகளை
Supprimerதெரிந்து கொண்டேன்! மகிழ்ச்சி லிங்க் தந்து விட்டதற்கு!
நன்றியுடன்,
புதுவை வேலு
படத்தால் பிறந்த கவிதை அருமை நண்பரே
RépondreSupprimerவாழ்வியல் உண்மையை நயம்பட உரைத்தீர்
நன்றி நண்பரே
தம +1
வாழ்வியல் உண்மையை நயம்பட பாராட்டியமைக்கு மிக்க நன்றி:
Supprimerகரந்தையாரே!
மீண்டும் வருக!
நன்றியுடன்,
புதுவை வேலு
பறவைக்குள்ள பாசம் கூட மனிதனுக்கு இல்லையே :)
RépondreSupprimerத ம +!
பணம் பற்றி பறவை அறியாது அல்லவா?
Supprimerபணத்தை அறிந்த மனிதன் குணத்தை அறிய மறுக்கிறான்
"பணம் பந்தியிலே
குணம் குப்பையிலே"
பணம் இருந்தால் பாசம் தன்னாலே வந்து விடும் பகவான் ஜீ
வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
"மரங்கொத்தி பறவைக்கு தொிந்தது மனிதனுக்கு தொியவில்லை
RépondreSupprimerசுமப்பது சுகம் என்று" .படத்துக்கேற்ற மிக அருமையான கருத்துள்ள கவிதை! வாழ்த்துக்கள்!
வாருங்கள் சகோதரி!
Supprimerஇப்போதெல்லாம் வருகையில் தாமதம் உள்ளதே?
அலுவல்கள் அதிகமோ?
தங்களது பணிச் சுமை குறையட்டும்!
தங்கள் கருத்து பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சண்டையின் முடிவில் தன் உயிரை காப்பற்றிக்கொள்ள மரங்கொத்தி பறக்கிறது. ஆனால் மரநாய் வடிவில் காலன்தேவன் அதன் முதுகிலேய சவாரி செய்கிறான். விடாது கருப்பு ... பாவம் மரங்கொத்தி. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
RépondreSupprimerசண்டையின் முடிவில் தன் உயிரை காப்பற்றிக்கொள்ள மரங்கொத்தி பறக்கிறது. ஆனால் மரநாய் வடிவில் காலதேவன் அதன் முதுகிலேய சவாரி செய்கிறான். விடாது கருப்பு ... பாவம் மரங்கொத்தி. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
RépondreSupprimer