mercredi 31 mai 2017

அமுத மொழியின் ஆனந்த ராகம்




அமுத மொழி பேசி அழைக்கின்றான்
ஆனந்த குழலெடுத்து ராக- ராதாவை!


தடாகம் தகதகக்க தவிக்கின்றாளோ?
தாமரையாய் தளிர்மேனி ராதை!


ராதையின் நெஞ்சமே! - என்றும்
கண்ணனுக்கு சொந்தமே!


'குழலின்னிசை' மயக்கத்தில் மயங்குகிறாள்!
குளிக்கையிலே! குலமகள் ராதை !


இதழின் வழியே இரவு  விடியலை!
இதமாய் இசைக்கிறான் கண்ணன்


பட்டாம் பூச்சிகள் பரவசத்தில் பறந்து
தட்டாது சொல்லும் ராதையின் காதலை!


செவ்விதழில் செந்தேனிசை இசைக்கின்றான்
செம்மணலில் பெய்த மழையாய் காதலை!


-புதுவை வேலு







12 commentaires:

  1. அருமை நண்பா இசைக்கட்டும் தொடர்ந்து.....

    RépondreSupprimer
    Réponses
    1. இசை நாடி
      இன்ப நாடி
      மிசைஎழிலோடு
      தேன் கருத்து தந்தமைக்கு நன்றி நண்பா

      Supprimer
  2. Réponses
    1. பார்த்தேன்
      ரசித்தேன்
      பக்கம் வந்து கருத்தை
      வார்த்தேன் என்றீர்!
      இனிய நண்பருக்கு நன்றி!

      Supprimer
  3. அழகான வரிகளுடன் ’அமுத மொழியின் ஆனந்த ராகம்’ நன்றாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

    //ராதையின் நெஞ்சமே! - என்றும்
    கண்ணனுக்கு சொந்தமே!//

    கண்ணன் நம் எல்லோருக்கும் சொந்தமே ! :)

    RépondreSupprimer
    Réponses
    1. அனைவருக்கும் சொந்தமானவன்
      ஆனந்த கிருஷ்ணன்.
      ஆம் ஐயா!
      நற்கருத்து! நலம்! நன்றி!

      Supprimer
  4. குழலின்னிசையில் நாங்களும்தான் மயங்கிவிட்டோம்.

    RépondreSupprimer
    Réponses



    1. ஆனந்த கானம்
      அன்பின் வேதம்
      மயக்கும் இசையில் மயங்கிய கருத்தோ மகிமை!

      Supprimer
  5. கவிதையினப் படிக்கப் படிக்க
    அந்த இரம்மியமான சூழல்
    எமக்குள்ளும்
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. அற்புதம்! ஆனந்த கருத்தை அள்ளித் தந்தமைக்கு நன்றி ஐயா!

      Supprimer
  6. "ராதையின் நெஞ்சமே! - என்றும்
    கண்ணனுக்கு சொந்தமே!" என
    அருமையாகச் சொன்னீர்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. அற்புதம்! ஆனந்த கருத்தை அள்ளித் தந்தமைக்கு நன்றி ஐயா

      Supprimer