mardi 2 février 2016

"வெற்றிக் கூட்டணி"


படம் சொல்லும் பாடம்



நிரந்தரத் தலைவராய்
நீடித்து நிற்பவரின்...
தந்திர தேசத்து
மந்திர வாசகம் இதுதானோ?

கூட்டணி சேர்க்கை
கூப்பாடு ஒருபுறம்!
பாதிக்கு பாதி
பங்கீடு மறுபுறம்

பத்தாண்டுக்கு ஒருமுறை
தந்திரத்தை மாற்றுவது
போதாது! பலிக்காது!
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
ஐயமின்றி மாற்றுபவரே!

வெற்றித் தலைவராய்
வெளிச்சத்துக்கு வருவார்!

புதுவை வேலு

பட உதவி: இணையம்

22 commentaires:

  1. சிந்திக்கவைக்கும் கவிதை.

    RépondreSupprimer
    Réponses

    1. தந்திர தேசத்து மந்திர வாசகம்
      தனி மரத்தை தனித்துவம் காண செய்து விட்டதோ?
      நனிமிகு கருத்தினைத் தந்தமைக்கு நன்றி நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. நல்ல சிந்தனை. நடக்குமா என்பது ஐயமே.

    RépondreSupprimer
    Réponses
    1. *நடக்கும் என்பார் நடக்காது
      *நடக்காது என்பார் நடந்து விடும்
      ஐயமின்றி வாக்களிக்க முடியுமா? என்று பார்ப்போம்!
      முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. நாம் தந்திரத்தை மாற்றுவோம்

    RépondreSupprimer
    Réponses
    1. நாம் தந்திரத்தை மாற்றினால்
      அவர்கள் தேர்தல் எந்திரத்தை அல்லவா மாற்றி விடுவார்கள்.
      நண்பரே வருகைக்கும், வாக்கிற்கும் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. தம.உ

    யோசனையை தூண்டுகிறது...

    RépondreSupprimer
    Réponses
    1. சிந்தனை செய் மனமே!
      செய்தால் தீ வினை அகன்றிடுமே!
      நன்றி சகோ!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. நல்ல சிந்தனைதான் ஆனால் மாற்றம் வருமா...

    RépondreSupprimer
    Réponses
    1. ஏமாற்றம் தராத
      மாற்றம் வர வேண்டும்
      நன்றி ஆசானே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. சரியாய் சொன்னீர்கள்!

    RépondreSupprimer

  7. வெற்றித் தலைவராய்
    வெளிச்சத்துக்கு யார் வருவார்!
    -என்று சொல்லவே இல்லையே அய்யா!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  8. அறிஞர் அண்ணாவின் நினைவினைப் போற்றுவோம்

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பர் கரந்தையார் அவர்களே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. Réponses
    1. நல்லதோர கவிதை -என்று
      நலம்பட பூங்கருத்து பூத்தமைக்கு,
      புதுவை வேலுவின் நன்றி நண்பரே,
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. சிந்திப்போம்

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே,
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. சிந்திப்போம்

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே,
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. பத்தாண்டுக்கு ஒருமுறை
    தந்திரத்தை மாற்றுவது
    பத்தாது பத்தாது என்று
    ஐந்தாண்டுகொரு முறை
    மக்கள் நெற்றியில் பட்டை
    நாமம் சாற்றுகின்ற அரசியல்
    வியாதிகளைச் சிறப்பாகப்
    படம் பிடித்துக் காட்டிய நீவிர் வாழி!

    RépondreSupprimer
  13. முதன்முறை பேராசிரியர் அய்யா அவர்களின் பெருவரவு
    மகிழ்ச்சி அய்யா!
    கூட்டணி தத்துவத்தைப் பற்றிய அய்யாவின் சிறப்புபார்வை எதார்த்தம்.
    நன்றி அய்யா! வருகை சிறக்க வேண்டுகிறேன்

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer