mardi 4 octobre 2016

அருட்பெருஞ்சோதி வள்ளலார்



 

ஒளிரும் ஒளிக்குள் ஒன்றான ஓங்காரம்
ஒலிக்கும்  திசையெட்டும் திரு அருட்பா
உளியோடு உறவாடும் கற் சிலையும்
களிப்பில் கரையாதோ ஓதுதலாலே!

துயர் நீக்கும் அருமருந்தே அருட்பா
பயிர் செழிக்க வரும்   நன்மழையே!
வயிறு பசித்திருக்க, விழி விழித்திருக்க,
மெய் தனித்திருக்க,  வாழியவே!  

வடலூர் வள்ளலார் தாள் வாழி
மடல் சிறக்க வரும் பா வாழி!
அணையா ஜோதி அருள் வடிவே
உனையே போற்றினோம் வாழியவே


புதுவை வேலு





11 commentaires:

  1. வள்ளலாரைக் கண்டேன். மன நிறைவடைந்தேன்.

    RépondreSupprimer
  2. அருமையான பதிவு

    வடலூர் வள்ளலார் கோவிலுக்கு 2015 மாசி வந்திருந்தேன்.

    RépondreSupprimer
  3. வள்ளலாரின் கவிதைப்பா நன்று நண்பா

    RépondreSupprimer
  4. வள்ளலாரைப் பாடும் வேலு அய்யா தாள் வாழி
    இப்போ இது முகநூலில்

    RépondreSupprimer
  5. அருமை. வடலூர் செல்ல வேண்டும் அடுத்த தமிழகப் பயணத்திலாவது....

    RépondreSupprimer
  6. நற்றமிழ் நன்றி
    வடலூர் செல்ல வேண்டும்! அருமை.))))

    RépondreSupprimer
  7. பலவருடங்களாக வள்ளலாரின் திருவருட்பா பாடும்போது உள்ளம் உருகி அழுவதுண்டு .. அது ஒரு ஆன்மீக சுகம் கண்ட கனா காலம் ... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer