vendredi 1 août 2014

"ஆடிப்பூரம் " (அஷ்டமா சித்திகளும் கைகூடும் விரதம்)



"ஆடிப்பூரம்"


(அஷ்டமா சித்திகளும் கைகூடும் விரதம்) 














ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் "ஆடிப்பூரம்` என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூமாதேவி ஆண்டாளாக அவதரித்த நன்னாள் ஆடிப் பூரம்.

ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன் சூரியனின் ராசியான சிம்மத்திலும் பரிவர்த்தனை பெற்றிருந்தபோது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி பூர நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். காதலித்து அரங்கநாதனையே கரம் பற்றியவள்.

ஆடிப்பூரத் திருவிழா ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புத்தூரிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலும், மற்றும் பல திருமால் ஆலயங்களிலும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. உலக மாதாவாகிய பார்வதி தேவி ருதுவான தினமாகவும் இந்நாள் கருதப்படுகிறது.

அன்னையை விரதமிருந்து தரிசித்தால் அஷ்டமா சித்திகளும் கைகூடும் உன்னத நாளிது. பெருமாளுக்கு மாலை தொடுப்பதற்காக பெரியாழ்வார் அமைத்த நந்தவனமே இது. அழகிய நந்தவனத்தின் மத்தியில் கட்டப்பட்டுள்ள இந்த மண்டபத்தில் திருப்பாவையின் 30 பாக்களும் பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

கருவறையில் குழந்தை ஒன்று நிற்பது போன்ற கோலத்தில், குறுகுறு பார்வையுடன் ஆண்டாள் சிலை உள்ளது. ஆண்டாளுக்கு அருகே துளசி மாடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டாள் பிறந்த பூர நட்சத்திரம் வரும் ஒவ்வொரு மாதமும் இந்த நந்தவனத்திற்கு ஆண்டாள் எழுந்தருளுவது

வழக்கம்.


புதுவை வேலு

நன்றி:(maalai malar)



Aucun commentaire:

Enregistrer un commentaire