dimanche 11 juin 2017

"நெஞ்சம் நெகிழ்கையிலே"



புத்தியுள்ள வாசகனின்
நித்திரைக் கட்டிலோ?
மெத்த படிப்பதற்கோ
மெத்தையான பஞ்சறிவோ?


நெஞ்சம் நெகிழ்கையிலே
நெஞ்சடைப்பு வருவதில்லை!
கஞ்சம் மனதில் வேண்டாம்
கல்வி பகிர்ந்து வாழுங்களேன்!


-புதுவை வேலு

6 commentaires:

  1. அருமை நண்பா வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. உந்து சக்தியான ஊக்கத்தை மனமுவந்து அளித்து,
      எழுத, உற்சாகத்தை அளித்தமைக்கு,
      இனிய நன்றி நண்பா!
      முதல் கருத்து முத்தாய்ப்பான கருத்து!

      Supprimer
  2. புத்தகப்படுக்கை ஸூப்பர். தூக்கம் வராதபோது சட்டென ஒரு புத்தகம் உருவிப் படிக்கலாம்! லைட் இருக்கும் இல்லே?

    RépondreSupprimer


  3. தூக்கம் வராதபோது சட்டென ஒரு புத்தகம் உருவிப் படிக்கலாம்! லைட் இருக்கும் இல்லே?
    நடுவுல சில புத்தகங்கள் காணாது
    கட்டில் ஏங்கும்!
    இனிய ரசனைமிகு கருத்து!
    நன்றி நண்பரே!

    RépondreSupprimer
  4. புத்தியுள்ள வாசகனின்
    நித்திரைக் கட்டிலோ?
    மொத்தமாக வாசிக்கவோ
    மெத்தையான பொத்தகங்களோ?

    RépondreSupprimer
  5. முத்திரை பதித்து வரும்
    சித்திரை பௌர்ணமி வரிகளன்றோ?
    உமது வரிகளால் உருவான உயர் கருத்து!
    நன்றி ஐயா!

    RépondreSupprimer