பைந்தமிழ் பருகிய
கண்ணனின் தாசன்
பசுந்தேனி னுமினிய பாடலை
படைத்தார்
இதந்தரும் இதயத் தினிய
கவிஞர்
என்றும் வாழ்வார் இறவாப்
புகழொடு!
ஏசுகாவியம் எழுதிய
வாசுவின் தாசன்
மாசில்லாத மாணிக்க கவி யரசரானார்
தத்துப் பிள்ளையாய் வளர்ந்த
நல்முத்தையா
தத்துவப் பாடல்களின்
வளர்சொத்து அய்யா!
பொன்மொழி சிந்தும்
வெண்மதி கவிஞர்
சேரமான் காதலியை
சிறப்பித்த கவிஞர்
அர்த்தமுள்ள இந்துமதம்
வடித்த கவிஞர்
ஆராதித்து மகிழ்வோம்
அன்னைத் தமிழால்!
முத்தமிழே இவர் கவியின்
மூலதாரம்
முத்தான கவிதைக்கு
இவர்தான் ஆதாரம்
நித்யகவியே! நின்புகழ்
என்றும் அழிவதில்லை
சரித்திரத்தில்
நின்புகழுக்கு இணையுமில்லை.
வணக்கம்
RépondreSupprimerஐயா
நினைவு சுமந்த வரிகள் தித்திக்குது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் கவிஞரே!
Supprimerமுத்தான பாடல்களை வித்தாக தந்த வித்தக கவிஞர் கண்ணதாசன் அவர்களது நினைவு நாளில் அவரது பதிவுக்கு சிறப்பு செய்தமைக்கு நன்றி கவிஞரே!
வருகையும், வாக்கும் சிறப்பு!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
கண்ணதாசனுக்கு நிகரேது. நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.
RépondreSupprimerவணக்கம் முனைவர் அய்யா,
Supprimer"நித்யகவியே! நின்புகழ் என்றும் அழிவதில்லை
சரித்திரத்தில் நின்புகழுக்கு இணையுமில்லை.
நிகரில்லா நித்யப் புகழ் கவியை போற்றி சிறப்பித்தமைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம் அய்யா! கவி சக்கரவர்த்திக்கு நினைவு பகுர்வு அருமை!!! நன்றி
RépondreSupprimerவணக்கம் வாருங்கள் நண்பரே!
Supprimerகவித்துவத்தை காதலித்த கவிஞர் கண்ணதாசன் என்பது
உலகறிந்த வரலாறு!
இசைப் பாடலில்தான் அவரது உயிர்த் துடிப்பு நிறைந்து இருந்தது.
தங்களது வலிமை தரும் கருத்துக்கும், வருகைக்கும் வளமான நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
படைப்பதனால் நான் இறைவன்
RépondreSupprimerஎன்றார்
மரணமில்லா பெரு வாழ்வு வாழும்
கவியரசரின் நினைவினைப் போற்றுவோம்
தம +1
வணக்கம்
Supprimerகாரைக் குடி கவிஞர் கண்ணதாசன் அவர்களை
கரந்தையார் புகழ்ந்த விதம், வரிகள், சிறப்புக்கு சிறப்பாக, அமைந்தது நண்பரே!
வருகைக்கும், வாக்கிற்கும் வளமான நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அதனால் தான் அவர், ‘நான் நிரந்தரமானவன் அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.’ என்று பாடினார். கவியரசரின் நினைவு நாளில் படைத்த கவிதாஞ்சாலி க்கு பாராட்டுக்கள்!
RépondreSupprimerவாருங்கள் அய்யா!
Supprimerகவியரசு கண்ணதாசன் அவர்களின் பாடலை, நினைவூட்டி பாராட்டியதை எண்ணி பெருமை அடைகின்றேன். அன்னைத் தமிழால் ஆராதித்து புகழ் கருத்து புனைந்தமைக்கு
மிக்க நன்றி! அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான பகிர்வு. மறக்க முடியாதவர் அவர்.....
RépondreSupprimerவணக்கம் நண்பரே!
Supprimerதலை சிறந்த பாடலாசிரியருக்கு,
தலை நகரத்தார் செய்த சிறப்புமிகு கருத்து தலையானது.
வருகைக்கும், வாக்கிற்கும் நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
கவிஞருக்கு அருமையான பாமாலை நண்பரே..
RépondreSupprimerவாருங்கள் நண்பா!
Supprimerஅருமை பாராட்டிய அற்புத வரிகள் குழலின்னிசைக்கு வெகு சிறப்பு!
மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
கவியரசருக்கு - சூட்டப்பட்ட அழகான கவிமாலை!..
RépondreSupprimerவாழ்க நலம்!..
வணக்கம்
Supprimerஅருளாளர் அய்யாவின் வருகைக்கும், வாழ்த்தாக அமைந்த கருத்தைனை தந்தமைக்கும்
குழலின்னிசை நன்றி பாராட்டுகிறது அய்யா!
தொடர் வருகை சிறக்கட்டும். மேலும் பல நல்ல பதிவுகளுக்கு அது ஊக்கச்கிதியாக மலரட்டும்.
மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
Supprimerதொடர் வருகை சிறக்கட்டும். மேலும் பல நல்ல பதிவுகளுக்கு அது ஊக்க சக்தியாக மலரட்டும்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
கவிஞர் கண்ணதாசனின் நினைவுநாளில் அற்புதமான பாமாலை. உங்கள் தமிழ்த் தொண்டு தொடரட்டும்.
RépondreSupprimerவணக்கம் அய்யா!
RépondreSupprimerகவியரசு கண்ணதாசனுக்கு குழலின்னிசை சாற்றிய "பாமாலை"யினை சிறப்பித்தமைக்கு
நன்றி!
தமிழ்த் தொண்டுக்கு தோள் தந்து உதவுங்கள்.
மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பாமாலை நன்று! உமக்கும் வாழ்த்துகள்!
RépondreSupprimerவணக்கம் அய்யா,
Supprimerதொட்டணைத் தூறும் மணற்கேணியாய் ரெட்டணைப் புலவர் தரும்
புகழ் கருத்து சிறப்புறும் சீரொடு சிறந்து.
நன்றி அய்யா
நட்புடன்,
புதுவை வேலு
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் படைப்புகளை கோர்த்து, அவருக்கே கவிதையாய் எழுதி மாலை சூடியது அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
வாருங்கள் நண்பர் சத்யா அவர்களே!
RépondreSupprimerமாபெரும் கவிஞருக்கு தாங்கள் தந்தருளிய
தகைமை கருத்து சிறப்பு!
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
மறக்க இயலாத கவிஞர்! எத்தனை எத்தனப் பாட்கள் எழுதியுள்ளார்.
RépondreSupprimerவணக்கம் அய்யா!
RépondreSupprimerகவியரசு கண்ணதாசனுக்கு குழலின்னிசை சாற்றிய "பாமாலை"யினை சிறப்பித்தமைக்கு
நன்றி!
தமிழ்த் தொண்டுக்கு தோள் தந்து உதவுங்கள்.
மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு