மனித புனிதர் எம்.ஜி.ஆர் விழா- 2015
வலைப் பூ அன்பர்களுக்கு,
வணக்கம்!
பிரான்ஸ் எம்.ஜி.ஆர் பேரவையின் சார்பில் 25/10/2015
நடந்தேறிய விழாவில் அதன் தலைவர் திரு முருகு பத்மநாபன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,
"கவிமலர்" நிகழ்ச்சியில்,
புதுவைவேலு இயற்றி,
திரையுலக சார்பிலும்,
பத்திரிகையுலக சார்பிலும் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களின் முன்பு வாசித்தளித்த கவிதை இது!
எந்த விதமான விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் தராமல் எழுதப் பட்ட கவிதையாக மட்டும் இதனை படிக்க வேண்டுகிறேன்.
நன்றி!
"கவிமலர்"
இது!
பேரவை பேர் போற்றும்
பேர் ஒளித் திருவிழா!
பேர் உவகை உற்றெடுக்கும்
பேர் ஆனந்த பெருவிழா!
பேரவை பேர் போற்றும்
பேர் ஒளித் திருவிழா!
பேர் உவகை உற்றெடுக்கும்
பேர் ஆனந்த பெருவிழா!
இது!
கார்மேகம் புவி செழிக்க வரும்
கவி மழை கலை விழா!
கலைவேந்தர் எம்.ஜி.ஆர்
பொன்மனச் செம்மலின்,
நூற்றாண்டுக்கு முன்வரும் புகழ் விழா!
கார்மேகம் புவி செழிக்க வரும்
கவி மழை கலை விழா!
கலைவேந்தர் எம்.ஜி.ஆர்
பொன்மனச் செம்மலின்,
நூற்றாண்டுக்கு முன்வரும் புகழ் விழா!
வாய்ப்பு தந்தீர் வணங்குகிறேன்!
வாய்மை வள்ளல் புகழ் மந்திரம் வாசிக்கிறேன்
அன்னை சத்யா! தாயின் மடியில், பிறந்தாரே!
புன்னகை சிந்தும் பொன்மனச் செம்மலே - ராமா!
வாய்மை வள்ளல் புகழ் மந்திரம் வாசிக்கிறேன்
அன்னை சத்யா! தாயின் மடியில், பிறந்தாரே!
புன்னகை சிந்தும் பொன்மனச் செம்மலே - ராமா!
வறுமையின் அருமை அறிந்தாரே - ராமா!
ஊருக்கு உழைத்து, உலகப் புகழ் பெற்றாரே - ராமா!
மக்களின் நெஞ்சமெல்லாம் நீயே - ராமா!
தஞ்சமாகி நிற்கின்றாயே - ராமா!
பசிப் பிணி போக்கினாயே - ராமா!
உமது வசிப்பிடம்! இராமாவரமே ராமா!
உலகத் தமிழ் மாநாடு நாயகரே - ராமா!
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் தந்தாயே - ராமா!
தமிழக ஆட்சிக்கு மாட்சிமை செய்தாயே - ராமா!
உனது பெரும்புகழை இன்று போற்றுகிறேன் !
எம்.ஜி. ராமச்சந்திரன் என்னும்- நாமா!
எங்கும் எம்மவரே! ஏழைகளின் நம்மவரே!
எங்கும் நிறைந்து! மனதில் தங்கும்!
மக்கள் திலகத்தின் மங்காப் புகழ்
ஓங்கி ஒளிரட்டும் ஒளி விளக்காய்
தாங்கி சிறக்கட்டும் தரணியில் செழித்து!
கன்னலின் சுவைமிகு கன்னித் தமிழ் பேச்சு!
கண்டியில் பிறந்த கருணை வள்ளல்
( Nawalapitiya près de Kandy )
காஞ்சித் தலைவரின் அரும் மூச்சு!
பொன்வண்ண மேனி யார்?
பொருள், அமுது படைத்த கேணி யார்?
தென்னாட்டு காந்தி அறிஞர் அண்ணாவின்
இதயக் கனி யார்?
ஊருக்கு உழைத்து, உலகப் புகழ் பெற்றாரே - ராமா!
மக்களின் நெஞ்சமெல்லாம் நீயே - ராமா!
தஞ்சமாகி நிற்கின்றாயே - ராமா!
பசிப் பிணி போக்கினாயே - ராமா!
உமது வசிப்பிடம்! இராமாவரமே ராமா!
உலகத் தமிழ் மாநாடு நாயகரே - ராமா!
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம் தந்தாயே - ராமா!
தமிழக ஆட்சிக்கு மாட்சிமை செய்தாயே - ராமா!
உனது பெரும்புகழை இன்று போற்றுகிறேன் !
எம்.ஜி. ராமச்சந்திரன் என்னும்- நாமா!
எங்கும் எம்மவரே! ஏழைகளின் நம்மவரே!
எங்கும் நிறைந்து! மனதில் தங்கும்!
மக்கள் திலகத்தின் மங்காப் புகழ்
ஓங்கி ஒளிரட்டும் ஒளி விளக்காய்
தாங்கி சிறக்கட்டும் தரணியில் செழித்து!
கன்னலின் சுவைமிகு கன்னித் தமிழ் பேச்சு!
கண்டியில் பிறந்த கருணை வள்ளல்
( Nawalapitiya près de Kandy )
காஞ்சித் தலைவரின் அரும் மூச்சு!
பொன்வண்ண மேனி யார்?
பொருள், அமுது படைத்த கேணி யார்?
தென்னாட்டு காந்தி அறிஞர் அண்ணாவின்
இதயக் கனி யார்?
எந்நாளும் மறவாத
இறவாப் புகழ் இதய வீணை
நமது எம்.ஜி.ஆர்!
நமது எம்.ஜி.ஆர்!
சுட்டால் பொன் சிவக்கும் எழில் மேனி
எம்.ஜி.ஆர் அவர்களது திருமேனி
இவர்! சுடப் பட்டபோதும்,
படுத்துக் கொண்டே பரங்கி மலை தொகுதியில்,
வெற்றிக்கனியை பறித்தவர்
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
சொல்ல சொல்ல மனம் இனிக்கும்-இவர்
மெல்ல எழுந்தால் அரங்கில் அனல் பறக்கும்!
வெல்லும் ஆற்றல் இவரது இரட்டை விரலுக்குண்டு
நல்லுலகமே! அறியும் மனிதப் புனிதரின் தொண்டு!
ஆம்!
புருக்ஃளீன் மருத்துவமனையில்
சிகிச்சையில் இருந்தபோதும்,
அண்டை நாட்டில் இருந்தபடியே
வெற்றி மகுடம் சூடி!
ஆட்சியை அரங்கேற்றிக் காட்டிய
அவதாரப் புருஷர் எம்.ஜி.ஆர்!
இவர் உள்ள வரை ,
இவரது ஆட்சியை!
வெல்லும் வல்லமை
எவருக்கும் இருந்தது இல்லை!
அனையா விளகாய்!
அறிதுயில் கொள்ளும்
அண்ணா சமாதியின் அருகே !
மன்னாதிமன்னா – நீ !
கண்ணயர்ந்து மீளா உறக்கம்
கொள்ளும் காட்சி!
பேரறிஞர் மீது பேரன்பு கொண்டதற்கு
அதுவல்லவோ? சாட்சி!!!
புரட்சித் தலைவரின் வெற்றி மந்திரம்
அண்ணாயிசம்
அந்த மந்திரச் சொல்லின் மகத்துவம்தான் என்ன?
இதோ!
*** கையேந்தி இரந்து நிற்கும் இரவலனே இல்லாத...
*** கஞ்ச நெஞ்சனின் இதயமில்லாத! கடும்பார்வை கொல்லாத...
*** தேவைகள், குற்றங்கள், பொய்மையே இல்லாத...
** உலகம் பழிப்புரை கேளாத...
*** உடலாலும், உள்ளத்தாலும் பிணிவயப்படாத மனித இனம்,
--- எங்கே வாழ்நாள் நீடிக்குமோ?
--- எங்கே அச்சம் மடியுமோ?
--- எங்கே இன்பம் சுரக்குமோ? - அத்தகு புன்னகை பூத்த நிலம் நோக்கி..
குடிசையில் வாழும் மனிதனை கோபுரம் நோக்கி அழைத்துச் செல்லும் லட்சியமே
"அண்ணாயிசம்"
அறம் !
மறம் !
திறம் !
இவற்றை வரமாய் பெற்று
இராமாவரத்தில்
வாழ்ந்த வரலாற்றுப் புருஷர்
எம் ஜி ஆர்!
பலர்!
ஏரெடுத்து பார்க்காத
ஏழைகளை....
தமிழக அரசு என்னும்
தேரெடுத்து வந்து
பார் போற்ற
பல நலத் திட்டங்கள் தந்த
பாரிவள்ளல் எம் ஜி ஆர்!
அண்ணா விரும்பும் அருமைத் தமிழே!
வள்ளுவன் பாடிய அறம் தமிழே!
கம்பன் நாடிய விருத்தம் தமிழே!
ஔவை தந்தருளிய தனித் தமிழே
பாவேந்தர் பாடிய புரட்சித் தமிழே!
பாரதி பாடிய உணர்ச்சித் தமிழே
ஆழ்வார்கள் பாடிய அமுதத் தமிழே
நாயன்மார்கள் நல்கிய நற்றமிழே!
தஞ்சை பல்கலைக் கழகம் தந்த தங்கத் தமிழே!
அதிமுக வின் இதய தெய்வத் தமிழே!
சூது கவவாத சுடர் தமிழே!
சத்துணவு படைத்த தர்மத் தமிழே
இரட்டை விரலால் கோட்டையை பிடித்த வெற்றித் தமிழே!
பட்டங்கள் பல பெற்ற பண்புத் தமிழே!
மக்கள் உள்ளங்களை வென்ற அன்புத் தமிழே!
உலகத் தமிழர் போற்றும் உயர் தமிழே!
உலகம் உள்ள வரை உமது புகழும் வாழும்!
அகிலம் புகழ! ஆர்ப்பரிக்கும் அலைகடலை!
முகில்கூடி , தேடி, ஓடி வரும் முழு நிலவை!
புகழ்பாடி! புகழ்பணிகள்புரியக் கண்டேன்
புவியில் எம்.ஜி.ஆர் பேரவையின் செயலை
வாழ்த்தி நின்றேன்!
முகில்கூடி , தேடி, ஓடி வரும் முழு நிலவை!
புகழ்பாடி! புகழ்பணிகள்புரியக் கண்டேன்
புவியில் எம்.ஜி.ஆர் பேரவையின் செயலை
வாழ்த்தி நின்றேன்!
நன்றி! வணக்கம்!
புதுவை வேலு
இந்த காணொளிப் பதிவு சென்ற ஆண்டு 2014 ஆம் ஆண்டு
"கவி மலர் "
நிகழ்ச்சியின் ஒலிப்பதிவு
இந்த ஆண்டுக்குரிய 2015 காணொளியை பிறகு வெளியிடுகிறேன்.
நன்றி!
அருமை
RépondreSupprimerவாழ்த்துக்கள் நண்பரே
தம +1
நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
மக்கள் திலகம் அவர்களின் புகழ் பாடும் கவிதையை இரசித்தேன். அருமை. வாழ்த்துக்கள்!
RépondreSupprimerநன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
நிகழ்வு சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள். த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி கவிஞரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமையான கவிதை! வாழ்த்துகள் நண்பரே!
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
மக்கள் திலகம் எம் ஜி. ராமச்சந்திரனுக்கு கவி மலர் தூவிப் போற்றியது நன்று அருமை வாழ்த்துக்கள்
RépondreSupprimerநன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
கவிதை வரிகளை மட்டும் மிகவும் உண்மையாக ரசித்தேன் நண்பரே....
RépondreSupprimerஇன்று தமிழ் நாடு திரைப்படக்காரர்களிடம் சிக்கி இப்படியாகிப் போனதின் ஆணிவேர்......
நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துகள்....
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை, அருமை அற்புதமான கவிதை வரிகள்! வாழ்த்துக்கள் நண்பரே!
RépondreSupprimerத ம 6
நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தேர்ந்தெடுத்த கவிதை வரிகள். கவிதையை நாங்கள் வழக்கம்போல் நடுநிலையோடுதான் படித்தோம். வழக்கம்போல அருமையே. நன்றி.
RépondreSupprimerநன்றி முனைவர் அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வாழ்த்துகள்!
RépondreSupprimerநன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு