dimanche 4 octobre 2015

"சிந்தனை செய்வாயடி மயிலே"




 

புண்படா உடம்பு  (நோய் இல்லாத உடம்பு),
புரைபடா மனம்  (குற்றம் இல்லாத மனம்),
பொய்படா ஒழுக்கம்  (பொய் இல்லாத ஒழுக்கம்).

உடம்பு புண்படாது, மனம் புரைபடாது, ஒழுக்கம் பொய்படாது நடந்து காட்டுவதே  நல்வாழ்க்கை நெறியாகும் என்று போற்றியவர்
'கருவிலே திருவாய்க்கப் பெற்ற வள்ளலார் அவர்கள் பிறந்த தினம் 
இன்று 05/10/1823.

 அருள்மிகு வள்ளலார்


சிந்தனை செய்வாயடி மயிலே!
சிந்தையில் இடம் தருவாயடி மயிலே!
வந்தனம் புரிவாயடி மயிலே!
வாழ்த்தி மகிழ்வாயடி மயிலே!

ளிக்குள் கலந்தாரடி மயிலே
ஒர் இறைவன் என்றாரடி மயிலே
அருளியக்கம் கண்டாரடி மயிலே
அன்னமிட்டு மகிழ்ந்தாரடி மயிலே!

ஜீவகாருண்யம் புரிந்தாரடி மயிலே!
ஜீவநதியாய்த் தெரிந்தாரடி மயிலே!
வாடிய பயிரால் வாடினாரடி மயிலே!
வாழ்வித்து மகிழ்ந்தாரடி மயிலே!

ருட்பெருஞ்சோதியாய் ஒளிர்ந்தாரடி மயிலே!
தனிப் பெருங்கருணை புரிந்தாரடி மயிலே!
ஆறுதிருமுறை அருளினாரடி மயிலே!
அறம் என்னும் வரம் தந்தாரடி மயிலே!



தைப்பூசம் ஒளி மாயர் மயிலே!
வடலூர் வள்ளலாரடி மயிலே!
அணையா சோதியில் கலந்தாரடி மயிலே!
ஆதவனாய்த் தோன்றுவாரடி மயிலே!







புதுவை வேலு









"சிந்தனை செய்வாயடி மயிலே"  

வள்ளலார் பற்றிய புதுவை வேலு வின் கவி ஒளியை, உயிர் ஒளியாய் உலகில்  பரவச் செய்த சுப்பு தாத்தா அவர்களின் ஆசி வேண்டி வணங்கி நிற்கின்றேன்! 

நன்றி!

மேலும், எனது பார்வையில் வள்ளலார் பற்றிய பதிவினைக் கண்டு மகிழ 

இணைப்பு: 

நன்றி: திரு சுப்பு தாத்தா/you tube 

15 commentaires:

  1. அந்த தெய்வீக முகத்தைக் காணும்போதே மனம் நிறைவடையும். நல்ல பகிர்வுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நல்ல பதிவு என்று பாராட்டி கருத்தினை தந்தமைக்கு நன்றி முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. ஆஹா
    அருட்பெரும் சோதி தனிப்பெரும் கருணை எனச் சொன்ன
    வள்ளலார் பிறந்த நாளன்று இந்தப் பதிவைக் காண நான்
    பெரும் பேறு பெற்றேனே ! என நினைத்து,

    இந்தப் பாடலை பாடலாம் என்று, பாடியும் விட்டேன்.
    படிக்கும்போதே பாடிவிட்டேன். படித்துக்கொண்டே வரும்போது தான்
    கவனித்தேன். இதை யாரோ பாடி இருக்கிறார்களே என.

    அதை கேட்டுப் பார்த்தேன். நானே தான்.

    அந்த நான் என்னும் எண்ணம் இருக்ககூடாது.
    தன்னை மறந்து தன்னைச் சுற்றி உள்ள
    எல்லா உயிர்களை மட்டுமே நினைத்த
    அந்த வள்ளலின் சிறப்பை யான்
    இன்னும் ஒரு முறை பாடுவேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com

    RépondreSupprimer
    Réponses

    1. சிந்தனை செய்வாயடி மயிலே!
      இந்த பாடலை மீண்டும் ஒரு முறை பாடி குழலின்னிசைக்கு பெருமை சேர்த்தமைக்கு
      அன்பு நன்றி திரு சுப்பு தாத்தா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. ‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலார் அவர்கள் பிறந்த இந்நன்னாளில், அவரை போற்றி கவிதை படைத்த தங்களுக்கும், அந்த கவிதையை அழகாய் பாடிய சுப்பு தாத்தா அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் மனம் வாடினேன் என்ற வள்ளலார் பற்றிய பதிவினை பாராட்டி கருத்து வழங்கிய அய்யா அவர்களுக்கு அன்பின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.......

    வள்ளலார் பற்றிய பாடல் நன்று. சுப்பு தாத்தா பாடியதையும் கேட்டு ரசித்தேன்.

    RépondreSupprimer
  5. குழலின்னிசை வழங்கிய வள்ளலார் பற்றிய பாடலை கேட்டு ரசித்து கருத்தினை பாராட்டி வழங்கிய நண்பருக்கு மிக்க நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  6. தாத்தா மிகவும் நன்றாக பாடியுள்ளார் வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. ஆமாம்! தங்கள் கருத்து நன்று!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. மிகச்சிறப்பான பகிர்வு! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே!
      இனிய கருத்து இதயத்திற்கு இதம் பயக்கும்
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. வாழ்க வள்ளலார் கொள்கை!

    RépondreSupprimer
  9. நாடி வந்து நல்ல கருத்து நலமுடனே தந்தமைக்கு நன்றி புலவர் அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. வணக்கம் அய்யா!
    "சிறந்த பக்திப் பா வரிகள்" என்றமைக்கு மிக்க நன்றி! தொடர்கிறேன்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer