நோய் செய்யா நிற்கும் அளவறிந்து
வாய்வேண்டி கேட்கும் உப்பு
வாய்வேண்டி கேட்கும் உப்பு
வணிகம் வானாளவிய வண்ணம் வியாபித்து வரும் இவ்வேளையில்,
‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்று உரக்கச் சொல்லி உசுப்பேற்றியே, நாம் உண்ணும் எல்லா
உணவுப் பண்டங்களிலும் உப்பைச் சேர்த்து விடுகிறோம். ஆனால்,
`உப்பைத் தின்னவன் தண்ணிய குடிப்பான்’
‘ தப்பை செஞ்சவன் தண்டனை பெறுவான்’
என்றொரு பழமொழியும் இருக்கிறது என்பதை தற்போது நாம் நினைவில் கொள்ளும் தருணம்
வந்து விட்டது.
சிலர் உணவில் அளவுக்கு அதிகமாக உப்பை தப்பாக சேர்த்துக் கொண்டு, நோய் என்னும் தண்டனையை
பெற்றுக் கொள்ளுகிறார்கள்.
‘அரை உப்பு ஆரோக்கியத்தின் அறிகுறி’ என்பதை அவர்கள் தற்போது உணரத் துவங்கி
இருப்பது பாரட்டுக்குரிய அம்சமே!
நம் உடலில் உப்பின் அளவு கூடுவதாலும் குறைவதாலும் பல்வேறு விளைவுகள்
ஏற்படுகின்றன.
உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும்.
நீரிழிவு நோய்க்கு காரணமாகும்.
உயர் ரத்த அழுத்தத்துக்கு உப்பு முழு முதல் காரணம்.
மனிதன் ஆரோக்கியமாக வாழ, ஒரு நாளைக்கு 2 கிராம் அளவுக்கு மேல்
உப்பு தேவையில்லையாம்.
உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப படபடப்பும் குறைவதை
நாம் உணரலாம்.
கட்டுப்படுத்தலாம்
பழங்கள், காய்கறிகளில் அதிகமாக இருக்கும் பொட்டாசியம் சத்து உடலில் உப்பு சேர்வதைக்
கட்டுப்படுத்துகிறது. அதனால், இவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். இதிலிருந்து பெறப்படும் வைட்டமின் - பி, சிறுநீரகச்
செயல்பாட்டைச் சீராக்கி, ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருப்பதற்கு உதவும்.
உப்பின் அதிகப்படியான பயன்பாடு, உடலுக்குப் பாதிப்பைத்
தருவதைப் போன்றே, அயோடின் சத்து குறைபாட்டாலும் சில வகையான பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படும்.
இதில் முக்கியமானது, முன் கழுத்துக் கழலை நோய். புத்திக்கூர்மை இல்லாமல் மந்தமாக
இருக்கும் நிலைக்கும், உடலில் போதுமான அளவுக்கு அயோடின் இல்லாததே காரணம்.
தினமும் 30 நிமிடங்கள் வேகமாக நடப்பது, ஓட்டப் பயிற்சி, நீச்சல் போன்றவற்றைச்
செய்வதன் மூலம் உடலில் உப்பு தங்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
வியர்வையின் மூலமாக உப்பு அதிகம் வெளியேறுகிறது.
சிறுநீரகத்துக்கு வேலைப் பளுவும் குறைகிறது. இந்த நடைமுறைகளைக் கடைப்பிடித்தால், உடலில் உப்பு
ஏற்படுத்தும் பிரச்சினைகளையும் கட்டுப்படுத்தலாம்.
உணவில் உப்பை அளவாக சேர்த்துக் கொள்வதால் பெறும் நன்மைகள்
உடல் எடை குறைக்க உணவில் உப்பின் அளவை குறைத்து உட்கொள்ளும் போது, உடல் எடையை விரைவில்
குறைக்கலாம்..
உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமான உடல் நலன் பெற
முடியும். மேலும், உடலில் உப்புச்சத்து அதிகமாகும் பட்சத்தில், பல உடல்நல கோளாறுகள் வர வாய்ப்பிருக்கிறது.
உயர்
இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மற்றும்
உடல்நிலையை
கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
உணவில்
உப்பின் அளவை குறைத்துக் கொள்வதன் மூலமாக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
இது மற்றுமின்றி சிறுநீரகம், வயிறு சார்ந்த கோளாறுகளும் ஏற்படாமல் பார்த்துக்
கொள்ளலாம்.
உப்புச்சத்து
அதிகரிக்கும் போது பக்கவாதமும் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
எலும்புகள்
வலுவடையும்
உப்புச்சத்து
அதிகரிக்கும் போது நம் உடலில் உள்ள கால்சியம் சத்து குறைக்கிறது. எனவே, உப்பின் அளவை குறைத்துக் கொள்ளும் போது, உங்கள் எலும்புகள் வலுவடையும்.
நீரிழிவு
உடலில்
உப்புச்சத்து அதிகரிக்கும் போது இரத்த அழுத்தம் அதிகரிக்கும் ,
இதன் காரணமாக நீரிழிவு நோய் அதிகரிக்கும்.
குமட்டல்
உடலில்
உப்புச்சத்து அதிகரிக்கிறது என்பதற்கான அறிகுறியாய் குமட்டல் ஏற்படும். எனவே, அவ்வாறான அறிகுறிகள் தோன்றும் போது, உணவில் உப்பின் அளவைகுறைத்துக் கொள்ளவேண்டும்.
சிறுநீரகம்
உடலில் உப்பின் அளவு அதிகரிப்பதால் சிறுநீரக
கோளாறுகள் ஏற்படுகின்றன என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலும், சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்களுக்கு அவர்களது உடலில் உப்புச்சத்து
அதிகமாக காணப்படுகிறது.
உப்பு என்றால் தெரியுமா? என்று கேட்டால்,
'உணவில் சுவைக்கு சேர்ப்பார்களே அதுதானே உப்பு' என்றால்,
அது! பாதிதான் சரியான பதில்.
உணவில் சேர்ப்பது உப்பின் ஒரு வகை மட்டுமே!
'அமிலத்தில் அல்லது நீரில் கரையும் எந்தப் பொருளும் ‘உப்பு' என்று வகைப்படுத்துகிறார்கள் வேதியியல் விஞ்ஞானிகள்.
ஏராளமான உப்பு வகைகள் இருக்கிறது.
உப்பு பற்றிய சில சுவையான தகவல்கள் இங்கே...
நாம் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்வது சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பு. இதில் ஒரு குளோரின் அணுவுடன், 23 பங்கு சோடியம் அணுக்கள் இணைந்திருக்கும்.
மனிதன் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உப்பை பயன்படுத்தி இருக்கிறான்.
3500 ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்திய ஓவியத்தில் உப்பு தயாரிக்கும் முறை சான்றாக கிடைத்துள்ளது.
சகாரா பாலைவனத்தில் உப்பு படிவுகளை அவர்கள் வெட்டி எடுத்து வணிகம் செய்துள்ளார்கள்.
இறந்தவர்களின் உடலை பாதுகாக்க முதன்முதலில் உப்பை பயன் படுத்தியவர்கள்
எகிப்தியர்கள் ஆவர்.
சோடியம் கார்பனேட்,
சோடியம் பை கார்பனேட்,
சோடியம் குளோரைடு,
சோடியம் சல்பேட்
-ஆகிய 4 உப்புக்களின் கலவை 'நார்டான்' எனப்படுகிறது.
இதைக் கொண்டுதான் எகிப்தியர்கள் 'மம்மி'க்களை பாதுகாத்தனர்.
பழங்காலத்தில், மத்திய ஆப்பிரிக்க பகுதிகளில் 10 அங்குல நீளமும், இரண்டு அங்குல தடிமனும் கொண்ட உப்புக் கட்டிகளை நாணயங்களாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தியாவில் பழங்காலத்தில் 5 வகை உப்புக்களை தயாரித்து பயன்படுத்தி இருக்கிறார்கள்.
சமுத்ரா எனப்படும் கடல் உப்பு,
மண்ணில் இருந்து எடுக்கப்படும் ‘உத்பேஜா’
உறைந்து படிவங்களாக கிடைக்கும் ‘ரோமகா உப்பு’
‘அவுத்பிதா’ மற்றும் ‘சைந்தவா
-ஆகிய உப்பு வகை சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கடல் நீரில் இருந்து உப்பு பிரித்தெடுக்கும் முறையை கண்டுபிடித்தவர்கள் ஜெர்மானியர்கள்.
வெனிஸ் நாட்டிற்கும் ஜெனோவாவுக்கும் இடையே நடந்த 'பெர்ராரா போர்' போருக்கு 'உப்பு போர்' என்று மற்றொரு பெயரும் உண்டு.
உப்பு வணிகத்தில் ஏற்பட்ட பகையும் இந்த போருக்கு காரணம்.
பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்டதன் பின்னணியில் உப்பிற்கும் பங்கு இருக்கிறது. பிரெஞ்சு புரட்சி ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்று,
பதினாறாம் லூயி மன்னர் உப்பின்மீது உயர் வரியை சுமத்தியதே.
நமது நாட்டின் சுதந்திரப்போர் தீவிரம் அடைந்தது உப்பு சத்தியாகிரகத்திற்கு பின்புதான்.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அதிக உப்பு உற்பத்தி செய்யப் படுகிறது.
இரண்டாவது இடம் தமிழ்நாட்டிற்கு. தமிழகத்தில் தூத்துக்குடியில் மிகுதியாக உப்பு உற்பத்தி நடக்கிறது.
இந்தியாவில் இமாசல பிரதேசத்தின் மாண்டி பகுதியில் பாறைகளில் இருந்து உப்பு வெட்டி எடுக்கப்படுகிறது.
முதன் முதலாக உப்பில் அயோடின் (1924-ல்) கலந்து விற்பனை செய்தவர்கள் அமெரிக்காவின் 'மார்டான் சால்ட்' என்ற உப்பு நிறுவனத்தினர்.
பண்டமாற்று வணிகத்தில் மதிப்பு மிக்க பொருளாகவும் ‘உப்பு’ பயன்படுத்தப்பட்டது.
வட ஆப்பிரிக்காவின் வெவ்வேறு பாகங்களில் வாழ்ந்த மூரிஷ் நாடோடி வணிகர்கள் உப்புக்காக கிராமுக்கு கிராம் தங்கத்தைக் கொடுத்தனர்;
மத்திய ஆப்பிரிக்க பழங்குடியினர் சிலர் பாறை-உப்புப் பாளங்களை பணமாக பயன்படுத்தினர்.
சம்பளம் என்பதற்கான ஆங்கில வார்த்தையாகிய
“சாலரி” என்பது சாலரியம் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து பிறந்தது.
இந்த சாலரியம்,
உப்பு என்று பொருள்படும் சால் என்ற வார்த்தையிலிருந்து உருவானது.
இது பண்டைய ரோம வீரர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை,
பணத்தோடு உப்பும் வழங்கப்பட்ட சம்பளத்தை குறித்தது.
கிரேக்கர்கள் உப்பை கொடுத்து அடிமைகளை வாங்கினர்,
இதுவே, “ உப்புக்கு விலைபெறாதவன்” என்ற பழமொழி உருவாக வழிவகுத்தது.
அமெரிக்க இதய நோய்க் கழகம் தற்போது பரிந்துரைப்பது,
'யாரும் 6 கிராமுக்கு மேல் உப்புச் சேர்க்க வேண்டாம்'
என்பது. அப்படியானால் நாம் எல்லோரும் அரை உப்புதான் சாப்பிட வேண்டும்.
இனி, சமையலில் அயோடின் கலப்பில்லாத இயற்கையான
உப்பு
(கல் உப்பு) "அரை உப்பு மட்டுமே சேர்ப்போம்"
நோயின்றி நிறைவான வாழ்வு வாழ்வோம்.
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று (941)
தகவல்
புதுவை
வேலு
நன்றி:(boldsky.health)
வணக்கம்
RépondreSupprimerஐயா
யாவருக்கும் பயன்பெறும் தகவல் பகிர்வுக்கு நன்றி த.ம 1
எனது பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுக் கீற்றுக்கள்:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
Supprimerஉப்பிட்டவரை உள்ளளவும் நினை - பழமொழி
"அளவான உப்பு நலமான வாழ்வு"
"உப்பு" பதிவுக்கு கருத்திட்டவரை உயிருள்ளவரை மறவேன்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
RépondreSupprimerதகவல்கள் கொட்டிக் கிடக்கும் அற்புதமான பகிர்வு
விரிவான பகிர்வுக்கு மனமார்ந்த நன்றியும்
வாழ்த்துக்களும்...
வணக்கம்
Supprimerஉப்பிட்டவரை உள்ளளவும் நினை - பழமொழி
"அளவான உப்பு நலமான வாழ்வு"
"உப்பு" பதிவுக்கு கருத்திட்டவரை உயிருள்ளவரை மறவேன்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உப்பு கூடுதலாகச் சேர்க்கக்கூடாது. இருந்தாலும் உப்பைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ளலாம். நன்றி.
RépondreSupprimerவணக்கம்
Supprimerஉப்பிட்டவரை உள்ளளவும் நினை - பழமொழி
"அளவான உப்பு நலமான வாழ்வு"
"உப்பு" பதிவுக்கு கருத்திட்டவரை உயிருள்ளவரை மறவேன்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அப்பப்பா! நாம் சாதாரணமாக நினைக்கும் உப்பைப் பற்றி எவ்வளவு உபயோகமான தகவல்கள்.பகிர்ந்தமைக்கு நன்றி!
RépondreSupprimerவணக்கம்
Supprimerஉப்பிட்டவரை உள்ளளவும் நினை - பழமொழி
"அளவான உப்பு நலமான வாழ்வு"
"உப்பு" பதிவுக்கு கருத்திட்டவரை உயிருள்ளவரை மறவேன்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
உப்பைப் பற்றி இவ்வளவு தகவல்களா? பிரமிக்க வைத்துவிட்டீர்கள் நண்பரே!
RépondreSupprimerத ம 4
வணக்கம்
Supprimerஉப்பிட்டவரை உள்ளளவும் நினை - பழமொழி
"அளவான உப்பு நலமான வாழ்வு"
"உப்பு" பதிவுக்கு கருத்திட்டவரை உயிருள்ளவரை மறவேன்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சுவையான தகவல்கள் நல்ல சுவை... நன்றி ஐயா...
RépondreSupprimerவணக்கம்
Supprimerஉப்பிட்டவரை உள்ளளவும் நினை - பழமொழி
"அளவான உப்பு நலமான வாழ்வு"
"உப்பு" பதிவுக்கு கருத்திட்டவரை உயிருள்ளவரை மறவேன்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இவ்வளவு இருக்கா? என்று பிரமிக்கும் படியாக இருந்தது பகிர்வு. நன்றிங்க.
RépondreSupprimerவணக்கம்
Supprimerஉப்பிட்டவரை உள்ளளவும் நினை - பழமொழி
"அளவான உப்பு நலமான வாழ்வு"
"உப்பு" பதிவுக்கு கருத்திட்டவரை உயிருள்ளவரை மறவேன்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பயனுள்ள பகிர்வு! நன்றி!
RépondreSupprimerவணக்கம்
Supprimerஉப்பிட்டவரை உள்ளளவும் நினை - பழமொழி
"அளவான உப்பு நலமான வாழ்வு"
"உப்பு" பதிவுக்கு கருத்திட்டவரை உயிருள்ளவரை மறவேன்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பலருக்கும் பயனுள்ள விடயங்கள் நண்பா மிக்க நன்றி பகிர்வுக்கு....
RépondreSupprimerவணக்கம்
Supprimerஉப்பிட்டவரை உள்ளளவும் நினை - பழமொழி
"அளவான உப்பு நலமான வாழ்வு"
"உப்பு" பதிவுக்கு கருத்திட்டவரை உயிருள்ளவரை மறவேன்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பயன் மிகு பதிவு! விரிவான விளக்கம்!
RépondreSupprimerஊக்கம் என்னும் தேன் தடவி ஆக்கத்தை வாழ்த்தியமைக்கு
Supprimerநன்றி புலவர் அய்யா அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு
உப்பிட்டவரை உளமாற பாராட்ட வேண்டும் புதுவை வேலு அவர்களே, நல்ல பயனுள்ள கட்டுரை.
RépondreSupprimersattia vingadassamy
உளமாற பாராட்டிய நல்லறமிக்க நண்பருக்கு நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே
RépondreSupprimerமிகவும் சரியான கருத்து
Supprimerமிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே
RépondreSupprimerமிகவும் சரியான கருத்து
Supprimerமிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
உப்பு கூடினால் தப்பு, இதை ஓங்கி உரைப்பதே நம் நட்பு. கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
RépondreSupprimer