vendredi 2 octobre 2015

"உலக வசிப்பிட தினம்"

                                                ( உலக வசிப்பிட தினம்  அக்டோபர் -3)



உலகில் உறுதி செய்யப்பட்ட வசிப்பிடம்

உயிர்களுக்கு வேண்டுதல் வேண்டும்!


அலகு உள்ள பறவைகளுக்கோ அது!இலகு


ஆறாம் அறிவுள்ள  ஏதிலிகளுக்கோ எட்டாத நிலவு


கனாக் காணும்  நிலா! கனவு!



புதுவை வேலு

19 commentaires:

  1. உண்மையை உணர்த்தும் இனிய கவிதை!..

    RépondreSupprimer
    Réponses
    1. அருளாளர் அய்யா அவர்களின் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி!
      முதல் கருத்து முக்கனி சுவை!
      நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. பொருத்தமான நேரத்தில் சரியான தலைப்பு. நல்ல கவிதை. தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படம். வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்துக்கும், வருகைக்கும் குழலின்னிசையின் இனிய நன்றி முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. நன்று..
    இத்தினம் இவ்வருடம் Oct 5 அன்று வருகிறது

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      மலரும் நினைவுகள் பதிவருக்கு எனது நன்றியும்! வாழ்த்துகளும்!
      உலக வசிப்பிடம் தினம் என்பது தாங்கள் குறிப்பிட்ட நாளில் வருகிறது என்பதற்கான
      ஆதாரத் தகவல் தந்தால் குழலின்னிசை ஏற்க தயாராக உள்ளது. குழலின்னிசை பெற்ற தகவலின் அடிபடையில் தெரிவித்த கருத்து இது நண்பரே!
      கவிதையானது எந்த நாளாக இருப்பினும் பொதுவாக பொருந்தும் நிலையில் உள்ளது நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. கவிதை நன்று நண்பரே...

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை பாராட்டிய தேவக்கோட்டையாரின் வாக்கிற்கு நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. படமும் அதற்கேற்ப கவிதையும் சிறப்பு!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      வருகைக்கும், இனிய வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
      தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    // அலகு உள்ள பறவைகளுக்கோ அது!இலகு
    ஆறாம் அறிவுள்ள ஏதிலிகளுக்கோ எட்டாத நிலவு//

    இதில் எட்டாத நிலவு என்பதை எட்டாத இலக்கு என்று மாற்றினால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் அய்யா!
      வணக்கம்!
      தங்களது கருத்தை நெறிபட தந்தமைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. கவிதை அருமை! வாழ்த்துக்கள்!

    // அலகு உள்ள பறவைகளுக்கோ அது!இலகு
    ஆறாம் அறிவுள்ள ஏதிலிகளுக்கோ எட்டாத நிலவு//

    இதில் எட்டாத நிலவு என்பதை எட்டாத இலக்கு என்று மாற்றினால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கத்திற்குரிய அய்யா அவர்களுக்கு,
      ஏதுமில்லாத ஏதிலிகளாக, நிராயுத பாணிகளாக பரிதாபத்தின் பண்புக்குள் துன்பப் பட்டு
      துடிக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு "இலக்கு" இருக்குமா? என்பது கேள்விக் குறியே?
      இருப்பினும் சிலரது பார்வையில் அது சரியாக இருக்கலாம்! அல்லது இல்லாமலும் போகலாம்.
      கவிதையை யாத்தவன் என்கிற முறையில் எனக்கு எட்டாத நிலவு! என்பது எட்டாத கனி என்னும் பொருள்போல்வே தெரிகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
      எனினும் நாளும் நல்லக் கருத்தினை வழங்கி வரும் தங்களுக்கு குழலின்னிசை என்றும் நன்றியினை சொல்ல கடமைப் பட்டிருக்கிறது.
      தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. ஆறாம் அறிவுள்ள ஏதிலிகளுக்கோ எட்டாத நிலவு.
    அருமையான வலிமைமிகு வரிகள், அவர்களின் உணர்வை சொல்லிய விதம் சிறப்பு, புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பர் சத்யா,

      "ஆறாம் அறிவுள்ள ஏதிலிகளுக்கோ எட்டாத நிலவு.

      அருமையான வலிமைமிகு வரிகள்,

      அவர்களின் உணர்வை சொல்லிய விதம் சிறப்பு"

      தங்களின்பாராட்டுரைக்கு பணிவான வணக்கங்கள்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வணக்கம் நண்பரே!
    தங்களது வருகைக்கும், அழைப்புக்கும் மிக்க நன்றி!
    குழலின்னிசையின் மனம், அமைதியைத் தான் விரும்புகிறது.
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. வானமே கூரையாகும் வழிநடைப் பாதை வீடாம்-இங்கே
    வாழ்பவர் கோடி கோடி!

    RépondreSupprimer
  11. வணக்கத்திற்குரிய அய்யா அவர்களுக்கு,
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer