samedi 13 septembre 2014

இன்று ஒரு தகவல் (சிலிண்டரின் சிறப்பு)






இன்று ஒரு தகவல்



சிலிண்டரின் சிறப்பு



வளர்ந்த நாடுகளை தவிர்த்துவிட்டு வளரும் நாடுகளில் (இந்தியா) வாழும் மக்கள் யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியாமான தகவல் இதோ உங்களுக்காக :

சிலிண்டருக்கும் எக்ஸ்பையரி டேட் இருக்கு..

 

 


சமையல் செய்ய நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளைக்கும் ஒரு ஆயுட்காலம் உள்ளது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா... ஆம்.. நம்பித்தான் ஆக வேண்டும்


இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்வதன் மூலம் ஒரு பெரும் ஆபத்தைத் தவிர்க்கலாம். ஒரு பெரும் விபத்தைத்  தவிர்க்க இந்த ஒரு நிமிடம் உதவுமென்றால் நீங்கள் நிச்சயம் இதனை படிப்பீர்கள்.



மருந்து மாத்திரைகள், உணவு பொருட்கள், என எதற்கும் ஒரு குறிப்பிட்ட ஆயுட்காலம், காலாவதியாகும் காலம் என்று உண்டல்லவா? அதுபோலத்தான் நாம் பயன்படுத்தும் சமையல் எரிவாயு உருளைக்கு அதாவது உலோகத்தால் செய்யப்பட்ட அந்த உருளைக்கும் ஆயுட்காலம் என்று ஒன்று உள்ளது.



அதை எப்படி அறிந்து கொள்வது என்றால், எரிவாயு உருளையின் மேலே, வட்டவடிவ கைப்பிடியை தாங்கி நிற்கும் மூன்று பட்டையான கம்பிகள் இருக்கிறதல்லவா? அதில் உட்பக்கம் பார்த்தால் கொள்கலனின் ஆயுட்காலம், காலவதியாகும் தேதி பதிவு செய்யப்பட்டிருக்கும்.



அதை கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.. அதில் ஒரு வருடத்தை நான்காக பிரித்து ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒரு எழுத்தை கொடுத்திருப்பார்கள். அதாவது முதல் காலாண்டிற்கு A எனவும், இரண்டாம் காலாண்டிற்கு B எனவும், மூன்றாம் காலாண்டுக்கு C...இப்படி மொத்தம் நான்காக A,B,C,D எனப்பிரித்து காலாவதியாகும் ஆண்டையும் குறிப்பிட்டிருப்பார்கள்.



உங்கள் வீட்டில் இருக்கும் சிலிண்டரின் அந்த பட்டையில் A. 20 என்று போட்டிருந்தால், அதில்   A என்பது முதல் காலாண்டையும், 20 என்பது இரண்டாயிரத்து இருப்பதாம் வருடத்தையும் குறிக்கிறது.



ஜனவரி, பிப்ரவரி,மார்ச் முதல் காலாண்டு A



ஏப்ரல்,மே,ஜூன் இரண்டாம் காலாண்டு B



ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மூன்றாம் காலாண்டு C



அக்டோபர், நவம்பர், டிசம்பர் நான்காம் காலாண்டு D



உதராணமாக B-12 என்று போட்டிருந்தால், இரண்டாம் காலாண்டு ஜூன் முடிய 2012 என்று பொருள்படும்.



சரி சிலிண்டரின் ஆயுள் காலத்தை தெரிந்து என்ன செய்யப் போகிறோம் என்று கேட்காதீர்கள்.

 

 

இனி உங்கள் வீட்டுக்கு வரும் சிலிண்டர்களில் அதன் ஆயுட் காலத்தையும் பரிசோதியுங்கள்.  ஒருவேளை உங்கள் சிலிண்டரின் ஆயுட் காலம் கடந்த ஆண்டே முடிந்திருந்தாலோ அல்லது முந்தைய மாதத்தில் முடிந்திருந்தாலோ அந்த சமையல் எரிவாயு கொள்கலனை உடனடியாக கொண்டு வந்தவரிடமே திருப்பி தந்துவிட்டு நடப்பு தேதியில் பயன்படுத்த தக்க கொள்கலனைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

 



காலாவதியான சிலிண்டரை வாங்கி விபத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க இதனை உங்களது உறவுகள் மற்றும் நண்பர்களுக்கும் கூறலாம்.

  இன்பம் பெறுக இவ்வையகம்! நன்றி!

புதுவை வேலு



நன்றி:தினமணி/தினமலர்






1 commentaire:

  1. காலாவதியான சிலிண்டரை சரண்டர் செய்ய தகவல் தந்ததற்கு நன்றி ... !!! கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer