jeudi 25 septembre 2014

நன்றி இசை





அன்பு அருளாளர் துளசிதரன் தில்லைகாத்து அவர்கள்

இன்றைய "வலைச் சரம் என்னும் மாலையில்,  பிறந்து மூன்று
மாதங்கள் மட்டுமே ஆகிய நிலையில், "குழலின்னிசை"
மலரின் வாசத்தை நுகர்ந்து, அவ்வாசத்தை "வலைச்சரம்" மாலையில் தொடுத்து,
பூவுலகில் மணக்கச் செய்ததை எண்ணி என் மனம் மகிழ்வுற்றது. மனங்கனிந்த நன்றி!








 நன்றி இசை




கல்லிலே கலைவண்ணம் காணு மன்பர்
 சொல்லிலே இன்பத்தை ஏந்தி நிற்பார்
வில்லேந்தும் இராமனுக் குகந்த மாலை
 துளசியை நாமமாக சூடி நிற்பார்

வலைச் சரத்தில் குழலின்னிசை இசைத்தீரே!
இசைகேட்டால் பூவுலகம் பூத்துக் குலுங்கும்
திசையெட்டும் தீந் தமிழ் படைப்பை நானளிப்பேன்
மிசைமிகு வாழ்த்தொளியை வழங்குவீரே!

-புதுவை வேலு/யாதவன் நம்பி.






/




திரு.தில்லைக் காத்து துளசிதரன் அவர்களுக்கும்,இந்த இனிய செய்தியை வலைதளம்  மூலம் என்னிடம் கொண்டு வந்து சேர்த்த நண்பர் சாமானியன் அவர்களுக்கும் வள்ளுவம் கூறும் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.




செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்ற லரிது.

                     -திருவள்ளுவர்


 
 

 வணக்கத்திற்குரிய வலை தள நண்பர்கள் மற்றும் படித்து இன்புறும் அனைத்து அன்பர்கள்  அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி மாலையைச் சூட்டி எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


புதுவை வேலு

 




Aucun commentaire:

Enregistrer un commentaire