நெஞ்சம் மறப்பதில்லை
அறிவு பொக்கிஷம் "அறிஞர் அண்ணா"
"ஒன்றே குலம்
ஒருவனே தேவன்" என்னும் இறை கோட்பாட்டையும்,
"கடமை கண்ணியம்
கட்டுப்பாடு" என்னும்
வாழ்வியல் கோட்பாட்டையும்
உலகுக்கு
உவந்தளித்த உதய சூரியனுக்கு, பேரறிஞர் அண்ணா
அவர்களுக்கு இன்று வயது 106.( அண்ணாத்துரை பிறந்த தினம்: 15-9-1909)
தமிழர்களின் நெஞ்சங்களில் மஞ்சமிட்டு, புகழால் உயிர் வாழும் உன்னதத் தலைவர்.அறிஞர் அண்ணா என்று சொன்னால் அது மிகையாகாது. தமிழுக்கு அவர் ஆற்றிய அருஞ்சிறப்புகளை இன்று நினைவு கூறுவதை தமிழர்களாகிய நமது" நெஞ்சம் மறப்பதில்லை"
அண்ணாதுரை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் (முன்னாளில் கஞ்சிவரம்) செப்டம்பர்
15,
1909-ல்
நடராசன் மற்றும் பங்காரு அம்மாளுக்கும் நடுத்தர குடும்பத்தில் மகனாகப் பிறந்தார்.
அவர் தந்தை ஒரு கைத்தறி நெசவாளர். அவர் தமக்கையார் ராசாமணி அம்மாளிடம் வளர்ந்தார்.
மாணவப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம்புரிந்தார். அவர்களுக்கு குழந்தை
பிறக்கவில்லை. ஆகையால் அவர் தமக்கையின் பேரக்குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர்.
1934-ல், இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்), மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியல் மற்றும் அரசியல்
பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். பின்பு பச்சைப்பன்
உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.
அன்றைய
காலகட்டத்திலும் கொஞ்சம் படித்துவிட்டால்.... ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும், அதிலும் கல்லூரியில்
படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் என்ற மனப்பான்மையும் ஆங்கில மோகமும்
அதிகமிருந்தது.
ஆங்கிலம் பேசினால் கவுரவம் என்று எண்ணிய காலமது.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அண்ணா விடுமுறையில் அவர்
பாட்டியின் இல்லம் அடைந்தபொழுது அவரின் பாட்டியார் சிறிதளவு ஆங்கிலம் பேசிக்
காட்டுமாறு எவ்வளவு வற்புறுத்தியும் ஆங்கிலம் பேச மறுத்து ஆங்கிலம் பேசினால்
உனக்கென்ன புரியும், தவிர நாம் இப்பொழுது பேசிக்கொண்டுதான் இருக்கின்றோம். தேவையில்லாமல்
வேண்டாம் என்று மறுத்துவிட்டார்.
அவர் பாட்டியின் அன்புக் கட்டளையாக இருந்தாலும், போலியாக, தேவையில்லாமல் ஆங்கிலம் பேசுவதில் அண்ணாவிற்கு உடன்பாடில்லை.
அண்ணாதுரை
மூடநம்பிக்கை மற்றும் சமயச் சுரண்டல்களையும் பலமாகச் சாடினார், ஆனால் என்றுமே
அவற்றின் சமூக தத்துவார்த்தங்களில் தலையிட்டதோ எதிர்த்ததோ இல்லை.
பெரியாரின்
பாசறையில்…
இளைஞர் அண்ணா,
பெரியாருடன் ஏன்
இணைந்தார் என்பதற்கு அவரது பதில்: “பெரியாரின்
சீர்திருத்தக் கருத்துகள்தான் எனக்கு மிகவும் பிடித்தன.
கல்லூரியை விட்டு வெளியே வந்ததும்
அவரிடத்தில்தான் நான் சிக்கிக்கொண்டேன். அன்று முதல் அவர்தான் என் தலைவர்.”
திராவிடர்
கழகத்திலிருந்து 1949-ல் பிரிந்த பிறகும் பெரியார் அளித்த நல்லுணர்வுகளை அண்ணா
தொடர்ந்து போற்றிவந்தார்.
1967-ல் தமிழகத்தின் முதல்வராகப்
பொறுப்பேற்பதற்கு முன்பு பெரியாரைச் சந்தித்து அண்ணா வாழ்த்து பெற்ற நிகழ்வு
இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இறுதி
நிகழ்வாக பெரியார் தன்னைவிட 40
வயது இளையவரான (பெரியாரின் வயது 70 மணியம்மையாரின்
வயது 30) மணியம்மையாரை மணம்புரிந்ததால் அண்ணாதுரை தனது
ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.
1967 பிப்ரவரியில் சென்னை மாநில முதல் அமைச்சர் ஆனார் அண்ணா. ஆட்சி பொறுப்பை
ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை
உறுதிபடுத்தினார். மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில்
நீங்கா இடம் பெற்றார்.
தொலைநோக்குப்
பார்வை
1960-ம் ஆண்டில்
ஹோம்லேண்ட் ஆங்கில வார ஏட்டில், ‘குறைந்தபட்சம்
ஆயிரம் கோடி ரூபாய் நிதியாவது சென்னை மாநிலத்துக்கு ஒதுக்குக’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில்…
சமமான வளர்ச்சி,
பணவீக்கத்தையும்,
பற்றாக்குறை
நிதியாக்கத்தையும் சீர்செய்தல், மாநிலத்தின்
தொழில் வளங்களை வளர்த்தெடுத்தல், வேளாண்
துறையின் சிக்கல்களை நீக்குதல், சேது
சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுதல், தூத்துக்குடி துறைமுகத்தைப் பெரிய துறைமுகமாக மாற்றுதல்,
கடலோரப் பகுதிகளில்
கப்பல் தொழில்களைக் கட்டமைத்தல், சூரிய
சக்தியைப் பயன்படுத்தல், நிலச்
சீரமைப்புக்கும், சாலை
அமைப்பதற் கும் பெரும் மக்கள் படையை உருவாக்குதல், சென்னை நகர வளர்ச்சிக்காகப் பெருநகர்
திட்டத்தை உருவாக்குதல் ஆகியன அண்ணா முன்மொழிந்த முன்னோடித் திட்டங்களாகும்.
இந்தக் கட்டுரையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ‘அனைவரையும் உள்ளடக்கும் திட்டம்’(இன்க்ளூசிவ் பிளான்) என்கிற புதிய
கருத்தை முன்மொழிந்தார்.
11-ம் ஐந்தாண்டுத் திட்டத்தில் (2007-12) ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’(இன்க்ளூசிவ் குரோத்) என்ற கருத்துருவை
இந்தியாவில் நடுவண் அரசு வலியுறுத்தியது. ஆழமான பொருளியல் சிந்தனையைத்
தொலைநோக்குப் பார்வையோடு அண்ணா 1960-ம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டியது நம்மை
வியப்பில் ஆழ்த்துகிறது.
அண்ணாவின் படைப்புகள்:
1939 –கோமளத்தின்கோபம்
1942 –களிங்கரணி
1943 –பார்வதி-B.A
1943–சந்ரோதயம்
194-சிவாஜிகண்டஇந்துசாம்ராஜ்யம்
1946–வேலைக்காரி -
1946–குமரிகோட்டம்
1948–நல்லதம்பி
1948–ஓர்இரவு
1953–சொர்கவாசல்
1955–சூர்யாகுமாரி
1965 – தழும்புகள்
1942 –களிங்கரணி
1943 –பார்வதி-B.A
1943–சந்ரோதயம்
194-சிவாஜிகண்டஇந்துசாம்ராஜ்யம்
1946–வேலைக்காரி -
1946–குமரிகோட்டம்
1948–நல்லதம்பி
1948–ஓர்இரவு
1953–சொர்கவாசல்
1955–சூர்யாகுமாரி
1965 – தழும்புகள்
குறிப்பிடத்தக்க படங்கள்:
1946 – வேலைக்காரி
1948 – ஓர் இரவு
1956 -ரங்கூன் ராதா
1963 – பணத்தோட்டம்
1967 – வாலிப விருந்து
1946 – குமரி கோட்டம்
1982 – நீதிதேவன் மயக்கம்
1948 – ஓர் இரவு
1956 -ரங்கூன் ராதா
1963 – பணத்தோட்டம்
1967 – வாலிப விருந்து
1946 – குமரி கோட்டம்
1982 – நீதிதேவன் மயக்கம்
காலவரிசை:
1909 – தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தார்
1930 – ராணி என்ற பெண்ணை மணமுடித்தார்.
1934 – சென்னையிலுள்ள பச்சையப்பா கல்லூரியில் இளங்கலை பட்டம்
பெற்றார்.
1935 – ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தார்.
1938 – காஞ்சிபுரத்தில் நடை பெற்ற முதல் ஹிந்தி
எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.
1944 – நீதிகட்சி திராவிடர் கழகம் என பெயர்மாற்றம்
செய்யப்பட்டது.
1948–அண்ணாவின் முதல் படமான “நல்லதம்பி”
திரையிடப்பட்டது.
1949 – திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க.) நிறுவப்பட்டது.
1962 – ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
1967 – சென்னை மாகாண முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1968 – யேல்பல்கலைக்கழகத்தில்சுபப்ஃபெல்லோஷிப்பட்டம் பெறப்பட்டது.
1969 – சென்னைஅரசுதமிழ்நாடுஎனபெயர்மாற்றம்செய்யப்பட்டது.
1969–பிப்ரவரி3ம்தேதிதன்னுடைய 59 வது வயதில்சென்னையில்காலமானார்.
1972–அண்ணாதிராவிடமுன்னேற்றகழகம் (அதிமுகஉருவாக்கப்பட்டது.
1978 – அண்ணாபல்கலைக்கழகம்அவருடையபெயரில்நிறுவப்பட்டது.
1987 – திமுகதலைமைஅலுவலகமானஅண்ணாஅறிவாலையம்கட்டப்பட்டது.
2010-அண்ணாநூற்றாண்டுநூலகம் சென்னையில் நிறுவப்பட்டது.
அண்ணாவை நினைவு
கூறும் வகையில் சென்னையிலுள்ள ஒரு குடியிருப்புக்கு “அண்ணா
நகர்” என
பெயரிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின்
முதன்மையான தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர்
சூட்டப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள
தற்போதிய திமுக தலைமைச்செயலக
கட்டிடத்துக்கு அவரின் நினைவாக “அண்ணா
அறிவாலயம்” என்றும் பெயர்சூட்டப்பட்டுள்ளது.
சென்னையின் முக்கிய சாலையான மவுண்ட் ரோடு “அண்ணா
சாலை” என அவரது பெயரால் பெயர்
மாற்றம் செய்யப்பட்டு, சிலை கூட அங்கு
அமைக்கப்பட்டது, மேலும் “அண்ணா
நூற்றாண்டு நூலகம்” அண்ணாதுரை என்ற உயர்ந்த மனிதருக்கு காணிக்கையாக
2010 ஆம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்டது.
சீரான சிந்தனை, செறிவான சமூக நோக்கு, அதிகாரக் குவியல்மிக்க டெல்லிக்கு அடிபணிந்து போகாத ஆட்சிமுறை ஆகியவற்றை முன்னிறுத்தித் தமிழ்நாட்டுக்குச் சரியான தடம் அமைத்துக் கொடுத்தார்.
தன்னைக் கடுமையான முறையில் யார் பேசினாலும் ஏசினாலும் கவலை கொள்ளாமல் கொள்கை சார்ந்த நெறிகளுக்கு முன்னுரிமை அளித்தார். அதுதான் அவருக்கு வெற்றியை வழங்கியது.
(பேரரிஞர்
அண்ணா அவர்கள் மறைவெய்திய போது
கலைஞர் மு.கருணாநிதி பாடிய கவிதாஞ்சலியிலிருந்து)
கலைஞர் மு.கருணாநிதி பாடிய கவிதாஞ்சலியிலிருந்து)
'தோண்டுகின்ற இடமெல்லாம்
தங்கம் வரும் தமிழகத்தில் மீண்டும் நீ பிறந்திடவேண்டு' மென்றாள்.
'தங்கம் எடுக்கவா' என்றான்;
'தமிழர் மனம் வாழ்வெல்லாம் தங்கமாக ஆக்க' என்றாள்.
'இன்றென்ன ஆயிற்' றென்றான்
'குன்றனைய மொழிக்கு ஆபத்' தென்றான்;
'சென்றடையக் குடிலில்லை ஏழைக்' கென்றான்;
'கடிதோச்சி மெல்ல எறியத் தெரியாமல்
கொன்றெறியும் கோல் ஓங்கிற்' றென்றாள்;
'அறிவில் - கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள்
அழுத கண்ணைத் துடைத்தவாறு
அமுத மொழி வள்ளுவனும்
'அம்மா நான் எங்கே பிறப்ப' தென்றான்.
தொழுத மகன் உச்சி மோந்து - ஆல
விழுதனைய கைகளாலே அணைத்துக்கொண்டு
உழுத வயல் நாற்றின்றிக் காயாது இனிமேலே என மகிழும்
'தங்கம் எடுக்கவா' என்றான்;
'தமிழர் மனம் வாழ்வெல்லாம் தங்கமாக ஆக்க' என்றாள்.
'இன்றென்ன ஆயிற்' றென்றான்
'குன்றனைய மொழிக்கு ஆபத்' தென்றான்;
'சென்றடையக் குடிலில்லை ஏழைக்' கென்றான்;
'கடிதோச்சி மெல்ல எறியத் தெரியாமல்
கொன்றெறியும் கோல் ஓங்கிற்' றென்றாள்;
'அறிவில் - கன்றனையோர் வீணில் கதைக்கின்ற கதையும் சொன்னாள்
அழுத கண்ணைத் துடைத்தவாறு
அமுத மொழி வள்ளுவனும்
'அம்மா நான் எங்கே பிறப்ப' தென்றான்.
தொழுத மகன் உச்சி மோந்து - ஆல
விழுதனைய கைகளாலே அணைத்துக்கொண்டு
உழுத வயல் நாற்றின்றிக் காயாது இனிமேலே என மகிழும்
உழவன் போல் உள்ளமேல்லாம் பூரிப்புத் துள்ளி எழ
காய்ந்த வயிற்றுக்குக் கஞ்சி வார்த்திடவே 'கற்கண்டே! தேன்பாகே! திருக்குறளே! நீ காஞ்சியிலே பிறந்திடுக' என்றாள்,
பிறந்திட்டான் நம் அண்ணனாக;
அறிவு மன்னாக - பொதிகைமலைத் தென்றலாய்
போதாகி மலர்கின்ற தமிழ் உணர்வின் புதுமணமாய்
பதிகத்துப் பொருளாய்
பழந்தமிழர் புறப்பட்டாய்
வந்துதித்தான் அண்ணன் - கீழ்
வானுதித்த கதிர்போல -
புரியாதார்க்கு ஒரு புதிர் போல!
அவன் புகழைப் பாடுதற்கு
அவன் வளர்த்த தம்பி நானும்
அவன் தந்த தமிழ் எடுத்து
இவண் வந்தேன் இதுதான் உண்மை
தலைவவென்பார், தத்துவ மேதை என்பார்
நடிகர் என்பார் நாடக வேந்தர் என்பார்,
சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார்.
மனிதரென்பார் மாணிக்கமென்பார் மாநிலத்து அமைச்சரென்பார்
அன்னையென்பார் அருள்மொழிக் காவல் என்பார்
அரசியல் வாதி என்பார் - அத்தனையும்
தனித்தனியே சொல்வதற்கு நேரமற்றோர் நெஞ்சத்து அன்பாலே
'அண்ணா' என்ற ஒரு சொல்லால்
அழைக்கட்டும் என்றே - அவர் அன்னை பெயரும் தந்தார்.
அந்த அன்னைக் குலம்
போற்றுதற்கு ஔவைக்கோர் சிலை;
அறம் வளர்த்த கண்ணகிகோர் சிலை;
வளையாத நெஞ்சப் பாரதிக்கும்
வணங்காமுடிப் பாரதிதாசருக்கம் சிலை;
வீரமா முனிவருக்கும் சிலை
கால்டுவெல்போப்புக்கும் சிலை;
கம்பர்க்கும் சிலை
தீரமாய்க் கப்பலோட்டிய தமிழர்க்கும் சிலை
திக்கெட்டும் குறள் பரப்ப திருவள்ளுவர்க்கும் சிலை
பத்து சிலை வைத்ததினால் - அண்ணன்
தமிழின் பால் வைத்துள்ள
பற்றுதலை உலகறிய;
அந்த அண்ணனுக்கோர் சிலை
சென்னையிலே வைத்த போது. . .
ஆட்காட்டி விலல் மட்டும் காட்டி நின்றார்
. . .
ஆனையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்.
அய்யகோ; இன்னும்
ஆனையிடுகிறார் எம் அண்ணா என்றிருந்தோம்.
அய்யகோ; இன்னும்
ஓராண்டே வாழப் போகிறேன் என்று அவர்
ஓர்விரல் காட்டியது இன்றன்றோ புரிகிறது!
எம் அண்ணா . . . இதயமன்னா . . .
படைக்கஞ்சார் தம்பியுன்டென்று பகர்ந்தாயே;
எமை விடுத்துப் பெரும் பயணத்தை ஏன் தொடர்ந்தாய் . . . ?
உன் கண்ணொளியின் கதகதப்பிலே வளர்ந்தோமே;
எம் கண்ணெல்லாம் குளமாக ஏன் மாற்றிவிட்டாய்?
நிழல் நீ தான் என்றிருந்தோம்; நீ கடல்
நிலத்துக்குள் நிழல் தேடப் போற் விட்டாய்; நியாந்தானா?
கடலடியில் இருக்கின்ற முத்தெல்லாம் முத்தல்ல;
நான்தானடா நன்முத்து எனச் சொல்லிக் கடற்கரையில் உறங்குதியோ?
நாத இசை கொட்டுகின்ற நாவை ஏன் சுருட்டிக் கொண்டாய்?
விரல் அசைத்து எழுத்துலகில்
விந்தைகளைச் செய்தாயே; அந்த விரலை ஏன் மடக்கிக் கோண்டாய்?
கண் மூடிக்கொண்டு நீ சிந்திக்கும்
பேரழகைப் பார்த்துள்ளேன் . . .
இன்று மண் மூடிக் கொண்டு உன்னைப் பார்க்காமல்
தடுப்பாதென்ன கொடுமை
கொடுமைக்கு முடிவி கண்டாய், எமைக்
கொடுமைக்கு ஆளாக்கி ஏன் சென்றாய்?
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்
இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்?
கடற்கரையில் காற்று
வாங்கியது போதும் அண்ணா;
எழுந்து வா எம் அண்ணா . . .!
வரமாட்டாய்; வரமாட்டாய்;
இயற்கையின் சதி எமக்கத் தெரியும் அண்ணா . . . நீ
இருக்குமிடந்தேடி யான் வரும் வரையில்
இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா . . . நான் வரும்போது கையோடு கொணர்ந்து அஃதை
உன் கால் மலரில் வைப்பேன் அண்ணா. . . !
தமிழன்னைக்கு
சிறப்பு சேர்த்த தமிழ்க் குடிமகன் அறிஞர்அண்ணா அவர்கள் இன்று
நம்மிடையே இல்லையாயினும்,அவரின் புகழ்
அணயா விளக்காய் தமிழர்களின் நெஞ்சங்களில்
ஒளி விளக்காய் திகழ்கிறது.
புதுவை வேலு
நன்றி: (thehindu/maalaimalar/freeencyclopedia)
Aucun commentaire:
Enregistrer un commentaire