ஆன்மாக்களின்
திருநாள்
(கல்லறைத் திருநாள்)
கல்லறையில் கண் உறங்கும்
விண்ணுலகம் சென்றவரை
மண் உலகில் மாந்தர்கள்
மண்டியிட்டு மனமுருகி
ஆன்மாவுக்கு ஆராதனை செய்வர் !
இரக்கமுள்ள இயேசுவே !
அனைத்து ஆன்மாக்களின் திருநாளில்
கல்லறைத் திருநாளில்...
இறந்தவர்களுக்கு இளைப்பாற்றியைக்
கொடுத்து அருளும்.
ஆண்டவரே! – ஆம்!
மரித்தவர் புகழை சரித்திரம் பேச
கல்லறை வழிபாடு
நல்லறமிக்க செயல்பாடு!
புதுவை வேலு
சிறந்த பக்திப் பா வரிகள்
RépondreSupprimerதொடருங்கள்
மனிதனின் சிந்தை மகத்தானது அது செய்யும் விந்தை அவரவர் அகத்தை பொறுத்தது.
Supprimerநல்லதையே நினைப்போம்! நல்லிணக்கம் பேணுவோம்!
கல்லறையில் துயிலும் கர்மாக்கள் புனிதம் பெறுவதற்கு பூங் கருத்து தந்தீர்கள்.
நன்றி பாவலரே!
புதுவை வேலு
கல்லறைத் திருநாளின் கண்ணீர் வரிகள்! உங்கள் மத நல்லிணக்க எண்ணத்திற்கு நன்றி.
RépondreSupprimer
Supprimerஅன்பின் பரிசு கண்ணீர் என்பதை
கல்லறை உணர்த்தும் உன்னத திருநாள்
"கல்லறைத் திருநாள்"
புதுமுக அறிமுகம் குழலின்னிசைக்கு தாங்கள்!
வருக வருக! தொடர்க! தொடர்க!
நன்றியுடன்,
புதுவை வேலு
அருமையான கல்லறைத் திருநாளின் வரிகள்! வழிபடுவோம்!
RépondreSupprimerவழிபடும் வாழ்த்தினை வழங்கிய அய்யா வாழி!
Supprimerமத நல்லிணக்கம் பேணி இன்புறுவோம் இந்நாளில் அய்யா!
நன்றியுடன்,
புதுவை வேலு
கல்லறையில் செய்யும் மரியாதை நாம் முன்னோருக்கு செய்யும் வழிபாடு - நல்ல கவிதை.
RépondreSupprimer(அரசியல் தலைவர்கள் மாலைகளை தூக்கிக்கொண்டு சிலைகளை தேடி ஒரு நாள் கூத்து ஆடுவது எவ்வளவு கொடுமை - என்ன ஒரு அபத்தம்).
மத சார்பற்ற, நல்லிணக்க, ஒற்றுமை போன்ற அறிய நோக்கத்துடன் குழல் இன்னிசை உலகெங்கும் ஒலிக்கட்டும் - குழல் ஊடுவோம் கொண்டாடுவோம் புதுவை வேலு அவர்களே வாழ்த்துகள்.
sattia vingadassamy
நண்பரே!
Supprimerதங்களது அரசியல் தலையங்கம் கண்டு அரசியல்வாதிகளின் சிலையும் சினம் கொள்ளும். உண்மை நிகழ்வுகளை புடம் போட்டத் தங்கமாக நின்று, தகரத்தை போட்டு உடைப்பது அருமை! அற்புதம்!
ஆன்மாக்களின் திருநாள் சிறப்பினை அடையட்டும்!
நன்றியுடன்,
புதுவை வேலு
இறந்தவர் நினைப்புக்கு கல்லறை திருநாள். அந்நாளில் அவர்கள் விட்டுச்சென்ற கடமைகளை முடித்து வைப்பது இன்னும் நலம் தருவது.
RépondreSupprimerஇன்றைய தலைமுறை ஏற்கத் தக்க மிக நல்ல அறிவுரை அய்யா!
RépondreSupprimerஅனைவரும் கடைபிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்.
தங்களை போன்ற பெருந்தககையினர் வருகையை கண்டு குழலின்னிசை குதுகூலம் அடைகிறது.
வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மனமார்ந்த நன்றி அய்யா!
புதுவை வேலு
சரியாக திருநாள் அன்று இந்தப் பதிவு சற்றுமுன் கவிநாடு கண்மாயில் மெழுகுவர்த்திகள் எரிய ஏதோ பி.சி.ஸ்ரீராம் ஷூட்டிங் மாதிரி இருந்தது...
RépondreSupprimerநின்று பார்த்துவிட்டு வந்தால் இங்கே உமது கவிதை..
அருமை தோழர்
பாராட்டு மழையில் நனைந்தேன்
Supprimerதங்களை தவறாமல் நினைந்தேன்!
பொருத்தம் கவிதையிலும் வேண்டும்
அல்லவா? தோழரே!
நன்றியுடன்,
புதுவை வேலு
முன்னோரை எண்ணும் ஒரு பொன் நாள் அல்லவா
RépondreSupprimerகவி அருமை நண்பரே
எண்ணுவதெல்லாம் உயருள்ளல்
RépondreSupprimerநல்லதையே நினைப்போம்
நலம் பெறுவோம்!
வருகைக்கு நன்றி கரந்தையாரே!
விண்ணப்பம் என்னவாயிற்று?
நன்றியுடன்,
புதுவை வேலு
முன்னோர்களை வழிபட்டால் நம் வாழ்வு சிறக்கும்.
RépondreSupprimerஅருமையான ஒரு கவிதையை கல்லறைத் திருநாளில் சமர்ப்பித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
வாழ்க்கைக்கு வழிகாட்டியவர்களை வழிபடுவது
Supprimerதலைசிறந்தொரு வாழ்வியல் நெறி அல்லவா? நண்பரே!
நெறியொற்றி வாழ்வோமாக!
வருகைக்கு மிக்க நன்றி சொக்கரே!
புதுவை வேலு
கல்லறைத் திருநாளின் கவிதை வாிகள் அருமை! கல்லறையில் கண் உறங்கும் முன்னோா்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவோம் வழிபடுவோம்! நன்றி!
RépondreSupprimerகல்லறையில் கண் உறங்கும் ஆன்மாக்களுக்காக ஆண்டவனிடம் பிராத்தனை செய்து வழி படுவோம் சகோதரியே!
Supprimerவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும், கவிதையை பாராட்டியமைக்கும் மிக்க நன்றி!
புதுவை வேலு