mardi 18 novembre 2014

கனவில் வந்த காந்தி (ஆஹா! காந்தி மகாத்மா)!



கனவில் வந்த காந்தி

 

 


ஆஹா! காந்தி மகாத்மா!


இவர்தான் இன்றைய எனது கனவு நாயகன்.
கனவில் இருந்து விடுபட்டேன் என் எதிரே காந்தி கடும் குளிரில் நடுங்கியபடி நின்றிருந்தார். 

இது "பிரான்ஸ்" நாடு  குளிரில் உடல் நடுங்காமல் என்ன செய்யும்? உடனடியாக அவருக்கு ஒரு கம்பளி போர்வையை தந்தேன்.(கதர் ஆடை தரித்தவருக்கு கம்பளியா என்று கேட்காதீர்கள்.) மகாத்மாவின் நெஞ்சம் என்னை வாழ்த்தியது.


நீங்கள் எதிர்பார்க்கும் கேள்வி பதில் நிகழ்ச்சி எனது கனவில் அரங்கேறத் துவங்கியது.

இதோ !







1.நீ மறுபிறவியில் எங்குப் பிறக்கவேண்டும் என்று நினைக்கிறாய்?

 

எங்கு பிறந்தோம், எங்கு வளர்ந்தோம், எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்.

அண்ணலே! நீ மறைந்து 66 ஆண்டுகள் ஆயிற்றே! (30/01/1948). உனது மறு பிறவியை நீ அறிவாயா
 மகாத்மாவே அறிய முடியாதபோது, சாதாரண ஆத்மாவால் (புதுவை வேலு) எப்படி அறிய இயலும்?.

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்ற வாக்கின்படி வாழ வேண்டும் அவ்வளவுதான் அண்ணலே!

கனவுலக வாழ்க்கை என்பது ஒரு காகிதப் படகு, தற்போது பெருக்கெடுத்து ஓடிவரும் ஊழல் பெருவெள்ளதில் காகிதப் பயணம் என்பது எந்த அளவு சாத்தியம்?
நீதிமன்றத்தின் வாயில் வரை மட்டுமே


2.ஒருவேளை நீ இந்தியாவின் ஆட்சியாளனாக வந்துவிட்டால்?


ஓஸோன் படலத்தில் விழுந்த ஓட்டையை அடைக்கும் ஆசானாக ஆகாவிட்டாலும்,

மாசு நீங்கிய மாஸ் இந்தியாவை உருவாக்கும் மனிதனாக முயற்சி செய்வேன். 
மக்களின் அடிபடைத் தேவை பஞ்சத்தை போக்கும் நெஞ்சம் கொண்டு செயல்பட துணிந்து நிற்பேன். 
முன்னேறிய நாடுகளின் மூல சூத்திரத்தை அறிந்து நம் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் செயல் படுத்துவேன்.மொத்ததில் அரசியல் சாக்கடையை சுத்தம் செய்யும் இந்தியாவின் முதல் குடிமகன்!
 முதல் துப்புரவுத் தொழிலாளி.

 



3.ஒருவேளை வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால்?

 

எதிர்ப்பை எதிர்கொள்வதுதான் ஒரு சிறந்த ஜனநாயகவாதிக்கு அழகு!

எதிர்ப்பு அலையை எனது சாதனை மூலம் ஆதரவு அலையாக மாற்றிக் காட்டுவேன்.

 வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக சில சிறப்பு சட்டங்களை உருவாக்குவேன்.


4.முதியோர்களுக்கு என்று ஏதும் திட்டம் வைத்திருக்கிறாயா?




ஆதரவற்ற முதியவர்களை தத்தெடுத்து அவர்களுக்கு ஊழியம் செய்யும் பணியிடங்களை உருவாக்குவேன்

பட்ஜெட்டில் இதற்காக சிறப்பு தொகை ஒதுக்கப் படும்.

மனமகிழ்ச்சி அடைய பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகள் அரசு சார்பில் நடத்தப் படும்.பல்வேறு அறிவுரை மையங்கள் முதியவர்களைக் கொண்டு இயக்கப் படும்


5.அரசியல்வாதிகளுக்கென்று திட்டம் ஏதாவது?

 

வாழ்க!
ஒழிக!

இரண்டு வார்த்தைகளும் அரசியலில் தடை செய்யப் படும்.

ஊழல் செய்தால் அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்ய சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும்

மேலும், இது குறித்து தகவல்களைப்பெறுவதற்கு திருமிகு.-வலிப்போக்கன் தலைமையில் ஒரு சிறப்பு கமிட்டி அமைக்கப் படும்.

6. மதிப்பெண்கள் தவறென மேல் நீதிமன்றங்களுக்குப் போனால்?


மதிப்பெண்களை மதிக்க கற்றுக் கொள்வேன்.
மேலும்,

பெண்களை மதிக்க கற்றுக் கொண்டாலே
போதும்

மதிப்பெண்கள் மலையெனக் குவியும்.

மேல் நீதி மன்றத்துக்கு நிதி செலவு செய்யும் வேலையே இருக்காது.




 



7. விஞ்ஞானிகளுக்கென்று....ஏதும்

 இருக்கின்றதா?

 


ஏவுகணை போன்று ஏராளமாக இருக்கிறது.
விஞ்ஞானிகளை உருவாக்கும்


நாடாக நம் நாடு மாற வழி செய்வோம்.

விஞ்ஞானப் புரட்சியை ஏற்படுத்துவோம்.

ஆய்வுக்குரிய சகல வசதிகளும் இங்கு

நிறைவேற்றப் படும்.




8. இதை உனக்குப் பிறகு வரும் ஆட்சியாளர்கள் செய்வார்களா?


செய்வார்களா இல்லையா என்பதை மக்கள்தான் உணர்ந்து வாக்களிக்க வேண்டும்.

நினைப்பது நிறைவேறும் எங்களது ஆட்சியில் மட்டுமே இது சாத்தியம்.

அடுத்து வரும் ஆட்சியாளர்கள் ஐந்து ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்வார்களா? என்பதே கேள்வி குறிதான்!



9.மற்ற நாடுகளில் இல்லாத ஏதாவது

 புதுமையாக?

 


மற்ற நாடுகளில் இல்லாத ஒன்றே ஒன்று


உண்டென்றால் அது நமது இந்திய கலாச்சாரம்.

பண்பாடு கலை, இலக்கியம் இவைகளை கட்டிப்

பாது காப்போம்.

புதுமையாக என்று "நீயா நானா"(விஜய் டிவி)கோபி

நாத் பாணியில் ... வேற வேற.. என்று

யோசித்தால்..தென்படுவது மொழியின்மீது

அவர்கள் வைக்கும் பக்தி/மரியாதை.

பெற்றோர்கள் தினம் கொண்டாடும் சிறப்பு

அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டூ வசதி

போன்றவற்றை ஏற்படுத்தி தருவது ஆகும்.



10.எல்லாமே நீ சரியாக சொல்வது போல்

 இருக்கு,

 

ஆனால் நீ மானிடனாகப் பிறந்து நிறைய

 

பாவங்களைச் செய்துவிட்டாய் உனக்கு

மீண்டும்

 

மானிடப்பிறவி கொடுக்க முடியாது ஆகவே

 

வேறு என்ன பிறவி வேண்டுமென்று இறைவன்

கேட்டால்?


தனி பிறவி

தெய்வப் பிறவி

அதிசயப் பிறவி

 
போன்ற பல பிறவிகளை நான் எடுத்து விட்டேன்.

அடுத்து ஒரு பிறவி எனக்கு வேண்டும் என்றால்

அது!

மூன்றாம் உலகப் போர் நிகழ்வதற்கு காரணமாக

இருக்கப் போவது எது தெரியுமா?

"தண்ணீர்"

அந்த பிரச்சனை நமது இந்தியாவில் இனி

இருக்கக் கூடாது!

எனெவே நான் வற்றாத அருவியாக பிறந்து

அனைவருக்கும் சம நிலையில் பயன்பட

வேண்டும்.


"உலகம் சம நிலை பெற வேண்டும்

உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".



மிக்க நன்றி!

திரு பி.ஜம்புலிங்கம்

திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து 


 




 

இதில் பத்து நண்பர்களை இணைக்க வேண்டும்
 
குழலின்னிசை உருவாகி  ஆறுமாதம்கூட ஆகவில்லை!

எப்படி இது சாத்தியாமாகும் ? எனது வலைதளத்திற்கு வாருங்கள்



வந்து பேராதரவு தாருங்கள்.



 



சாத்தியமாகும் உங்களது நிபந்தனைகள்



அதுவரையில் "காந்தி கணக்கில் " வைத்துக் கொள்ளுங்கள்



நன்றி!

 

புதுவைவேலு/யாதவன் நம்பி



http://www.kuzhalinnisai.blogspot.fr



(two in one)

22 commentaires:

  1. ஒவ்வொரு பதிலும் அருமை... + சுவாரஸ்யம்...

    5 + 10 ஆஹா...!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!

      "கனவில் வந்த காந்தி"யை
      நம்-
      நினைவில் நின்ற காந்தியாக
      மாற்றிய தங்களது கருத்து
      வாழ்த்துக்குரியது, வரவேற்புக்குரியது!
      "ஆஹா! காந்தி மகாத்மா"!
      தங்களின் மேலான தொடர் கருத்தினை வேண்டும்

      அன்பன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. 1. மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. உண்மையே, அருமை.
    2. மோடியா அல்லது கேஜிரிவாலா? இல்லை புதுவை வேலு மட்டுமா?
    3. எதிர்ப்பு இருந்தால்தான் அரசியல், நன்று.
    4. முதியோருக்கு மரியாதை.
    5. திருமிகு.-வலிப்போக்கன் தலைமையில் ஒரு சிறப்பு கமிட்டி, அழகு.
    6. மதி உள்ள பெண் இருக்க நீதிமன்றம் எதற்கு ? மதிப்பெண்ணில் (தகுதி) குறை இருந்தால் தவறை சுட்டிக்காட்ட போராடிதான் ஆகவேண்டும்.
    7. ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம், தேவையே.
    8. கர்மவீரர் செய்ததை நினைவு கூறவே முடியும். கொள்கைகள் அப்படி. அருமை.
    9. வேற...வேற... கொபிநாத், சுவாரசியம்.
    10. தண்ணீர். super

    அருமையான வினா-விடை விளையாட்டு. சுவாரசியம், நகைசுவை, நல்ல கருத்து, உண்மையான தேவை (தண்ணீர்), போன்ற பல்சுவை பதில்கள் அழகு.
    6 மாத குழந்தையின் லீலை பிரமிக்க செய்கிறது.

    அதுசரி காந்திக்கு வந்தவுடன் போர்வை கொடுதாச்சி, பதிலை கேட்டு அடுத்த விமானம் எப்போது இந்தியாவுக்குனு கேட்டாரா ? அதை சொல்லவில்லையே புதுவை வேலு அவர்களே. வாழ்த்துகள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. பத்தோடு பதினொன்றாக இல்லாமல்
      முத்தோடு பவளமும் இணைந்தாற் போல்
      கருத்துக்கள் யாவும் களஞ்சியமே !
      அன்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. மகாத்மா கேட்ட ஒவ்வொரு கேள்விகளுக்கும் தங்களின் பதில் அருமை.

    "பெண்களை மதிக்க கற்றுக் கொண்டாலே
    போதும். மதிப்பெண்கள் மலையெனக் குவியும்" அருமையான வாிகள்.
    "தண்ணீா்" மூன்றாம் உலகப் போா் நிகழாமல் தடுக்க எண்ணி வந்த அருமையான பதில்.

    "காந்தி கணக்கில் " இல்லாமல் பதில்கள் அனைத்தும் நிபந்தனை இல்லாமல் நிறைவேற ஆசை .
    வினா-விடை பதிவு அருமை! வாழ்த்துக்கள்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!

      "கனவில் வந்த காந்தி"யை
      நம்-
      நினைவில் நின்ற காந்தியாக
      மாற்றிய தங்களது கருத்து
      வாழ்த்துக்குரியது, வரவேற்புக்குரியது!
      "ஆஹா! காந்தி மகாத்மா"!
      தங்களின் மேலான தொடர் கருத்தினை வேண்டும்

      அன்பன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. முனைப்பாக பதில்கள் எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!

      "கனவில் வந்த காந்தி"யை
      நம்-
      நினைவில் நின்ற காந்தியாக
      மாற்றிய தங்களது கருத்து
      வாழ்த்துக்குரியது, வரவேற்புக்குரியது!
      "ஆஹா! காந்தி மகாத்மா"!
      தங்களின் மேலான தொடர் கருத்தினை வேண்டும்

      அன்பன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. #"பெண்களை மதிக்க கற்றுக் கொண்டாலே
    போதும். மதிப்பெண்கள் மலையெனக் குவியும் #
    சரி ,பெண்களுக்கு எப்படி மதிப்பெண் குவியும் என்பதையும் சொல்லிடுங்க:)

    RépondreSupprimer
    Réponses
    1. தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
      தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
      ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
      அன்னை தந்தையே அன்பின் எல்லை

      தன்னலமற்றது தாயின் நெஞ்சம்
      தாய்மை நிறைந்தது கடவுளின் நெஞ்சம்
      மன்னுயிர் காப்பவர் மாந்தருள் தெய்வம்
      அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

      பொறுமையில் சிறந்த பூமியும் உண்டு
      பூமியை மிஞ்சும் தாய் மனம் உண்டு
      கோவிலில் ஒன்று குடும்பத்தில் ஒன்று
      கருனையும் தெய்வமும் கடவுளும் ஒன்று

      தாயிற் சிறந்த கோவிலும் இல்லை

      #"பெண்களை மதிக்க கற்றுக் கொண்டாலே
      போதும். மதிப்பெண்கள் மலையெனக் குவியும் #

      திருமிகு பகவான் ஜீ அவர்களே! இந்த பாடல் ஒன்றே போதும் என்று எண்ணுகிறேன்
      மதிப்பெண்களை பெற்றுத் தருவதற்கு!

      திருப்தி இல்லை என்றால் இந்த கேள்வியை
      இந்திய மகளிர் மன்றத்திற்கு அனுப்பி வைக்கிறேன்.
      அவர்கள்
      நல்ல பதிலை நமக்கு அளிப்பார்கள் என்று நம்புவோமாக!
      நல்ல கேள்விக்கு நல்லதொரு பதிலை நாம் எதிர்பார்ப்போம்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. வணக்கம்
    ஒவ்வொரு பதிலும் மிகச் சிறப்பாக உள்ளது.. பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. புதிய வருகை!
      புது பொலிவுடன் திகழட்டும் திக்கெட்டும்!
      நன்றி
      "கனவில் வந்த காந்தி"யை
      நம்-
      நினைவில் நின்ற காந்தியாக
      மாற்றிய தங்களது கருத்து
      வாழ்த்துக்குரியது, வரவேற்புக்குரியது!
      ஆஹா! காந்தி மகாத்மா!
      தங்களின் மேலான தொடர் கருத்தினை வேண்டும்
      அன்பன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. வணக்கம் நண்பரே முதல் பகுதிக்கு வந்து திரும்பி விட்டேன் அனைத்து பதில்களும் அருமையாக சொல்லி இருக்கிறீர்கள் 10 வது பதில் மிகசிறந்ததே நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி
      "கனவில் வந்த காந்தி"யை
      நம்-
      நினைவில் நின்ற காந்தியாக
      மாற்றிய தங்களது கருத்து
      வாழ்த்துக்குரியது, வரவேற்புக்குரியது!
      ஆஹா! காந்தி மகாத்மா!
      தங்களின் மேலான தொடர் கருத்தினை வேண்டும்
      அன்பன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. ஓவ்வொரு பதிலும் நன்றாக இருக்கிறது. அருவியாய் பொங்கி வாருங்கள் சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி
      "கனவில் வந்த காந்தி"யை
      நம்-
      நினைவில் நின்ற காந்தியாக
      மாற்றிய தங்களது கருத்து
      வாழ்த்துக்குரியது, வரவேற்புக்குரியது!
      ஆஹா! காந்தி மகாத்மா!
      தங்களின் மேலான தொடர் கருத்தினை வேண்டும்
      அன்பன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. அனைத்து பதில்களும் அருமை நண்பரே. அந்த அரசியல்வாதி பதில் சூப்பர்.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி
      "கனவில் வந்த காந்தி"யை
      நம்-
      நினைவில் நின்ற காந்தியாக
      மாற்றிய தங்களது கருத்து
      வாழ்த்துக்குரியது, வரவேற்புக்குரியது!
      ஆஹா! காந்தி மகாத்மா!
      தங்களின் மேலான தொடர் கருத்தினை வேண்டும்
      அன்பன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. விரிந்த மனம் காட்டும்
    அர்மையான பதில்கள்
    வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி
      "கனவில் வந்த காந்தி"யை
      நம்-
      நினைவில் நின்ற காந்தியாக
      மாற்றிய தங்களது கருத்து
      வாழ்த்துக்குரியது, வரவேற்புக்குரியது!
      ஆஹா! காந்தி மகாத்மா!
      தங்களின் மேலான தொடர் கருத்தினை வேண்டும்
      அன்பன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. மிகவும் அருமையான பதில்கள்! சீரிய பதில்கள்! மிக்க நன்றி ஐயா! எங்கள் வேண்டுகோளை ஏற்று பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி!

    RépondreSupprimer
  12. அரசியல் வாதிக்கான பதிலும், இறுதி பதிலும் மிகவும் அருமை ஐயா!

    RépondreSupprimer