இன்று ஒரு தகவல்
நவம்பர்-25-
"பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம்"
ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்கு எதிரான
அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாளாக
(International Day for the Elimination of Violence against Women)
இந்நாள் கடைபிடிக்கப்பட்டு வருவதை நாம்
நன்கறிய வேண்டியது அவசியமாகும்.
இத்தினத்தை, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை
ஒழிப்பு தினமாக அறிவித்தது.
உண்மையில் இந்நாள், டொமினிக்கன் குடியரசில் 1960
நவம்பர் 25 இல் மிராபெல் சகோதரிகள் என
அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின்
அன்றைய ஆட்சியாளர் ரபாயெல் ட்ருஹியோவின் (1930-961) உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டதை
நினைவு கூறும் விதமாக உருவாக்கப்பட்டது.
பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே
இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள்.
”மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்"
என்று பின்னர் உலகில்
பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான
வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.
அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் ரபாயெல்
டுருஜிலியோவின் (உத்தரவின்
பேரில் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூறும் விதமாக உருவாக்கப்பட்டது.
பெண்களுக்கு
எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னணியில்
இருப்பது துயரம் தோய்ந்த சம்பவம் ஒன்று.
டொமினிக்கன்
குடியரசு நாட்டைச் சேர்ந்த மரியா தெரஸா மிராபெல், மினர்வா மிராபெல், பேட்ரியா மிரபெல் ஆகிய மூன்று சகோதரிகள்
(மிராபெல் சகோதரிகள்) 1960-ல் இதே நாளில்
கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
டொமினிக்கன்
குடியரசின் அதிபர் ரஃபேல் ட்ருஹியோ சர்வாதிகார ஆட்சியில் மக்கள் மிகுந்த
துன்பங்களை அனுபவித்தனர். நாட்டின் வளங்களைச் சுரண்டி, ட்ருஹியோவும் அவரது ஆதரவாளர்களும்
பதுக்கினார்கள்.
வெளிப்பார்வைக்கு
ஜனநாயகத்தை அங்கீகரிப்பவர்போல் வேடமிட்ட ட்ருஹியோ, எதிர்க் கட்சிகள் சுதந்திரமாகச் செயல்பட
அனுமதித்தார். ஆனால், தனக்கு
எதிரானவர்கள் யார் என்பதை அறிந்து, அவர்களைக்
கொன்றழிப்பதுதான் அவரது மறைமுகத் திட்டம். அவருக்கு எதிரானவர்களைக் கண்டறிந்து
கொல்ல ‘தி 42’ என்ற பெயரில் ஒரு குழுவே இயங்கியது.
இவரை
எதிர்த்துதான் அந்தச் சகோதரிகள் குரல்கொடுத்தனர். சற்று வசதியான விவசாயக்
குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்களுக்குப் போராட்ட குணத்தை அளித்தவர், அவர்களது உறவினர் ஒருவர். மினர்வா சட்டம்
பயின்றவர். அவரை ஆசைநாயகியாக வைத்துக்கொள்ள விரும்பிய ட்ருஹியோ அவரை அணுகினார்.
ஆனால், அதற்கு மினர்வா எதிர்ப்பு
தெரிவித்ததால், வழக்கறிஞராகப்
பணிபுரிய அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கிடையே,
ட்ருஹியோவின் அடியாட்கள்
செய்த படுகொலை நிகழ்வை நேரில் பார்த்த பேட்ரியா, தனது சகோதரிகளுடன் இணைந்து போராட்டத்தில்
இறங்கினார். அந்தப் பெண்களின் கணவர்களும் அவர்களுடன் இணைந்து போராடினார்கள்.
அவர்கள் அனை வரும் கைதுசெய்யப்பட்டபோது, உலக அளவில் ட்ருஹி யோவுக்கு எதிர்ப்பலை எழுந்தது. பின்னர் மூன்று சகோதரி களும்
விடுவிக்கப்பட்டாலும் அவர்களது கணவர்கள் விடுவிக்கப்படவில்லை.
சிறையில் இருந்த
அவர்களைக் காண 1960-ல் இதே நாளில்
மூன்று சகோதரிகளும் காரில் சென்றார்கள். திரும்பி வரும் வழியில் காரை நிறுத்திய ட்ருஹியோவின்
அடியாட்கள் மூன்று பெண்களையும், கார்
ஓட்டுநரையும் கொடூரமாகக் கொன்றார்கள். விபத்துபோல சித்தரிக்க, உடல்களை அதே காரில் வைத்து மலையிலிருந்து
தள்ளிவிட்டார்கள். 1961-ல் ட்ருஹியோ
அவரது அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்ட பின்னர்தான் இந்த உண்மை வெளிச்சத்துக்கு
வந்தது.
அந்தச்
சகோதரிகளின் நினைவாகத்தான், பெண்களுக்கு
எதிரான வன்முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
1999-ல் இந்த நாளை
அதிகாரபூர்வமாக ஐ.நா. அறிவித்தது.
மிராபெல் சகோதரிகளின் கதை ‘இன் தி டைம்ஸ் ஆஃப் பட்டர்ஃப்ளை’ என்ற பெயரில் நாவலாகவும், திரைப்படமாகவும் உருவாக்கப்பெற்றது.
2001-ல் வெளிவந்த திரைப்படத்தில் மினர்வாவின் வேடத்தில் சல்மா ஹேயக்
நடித்திருந்தார்.
"தையலை உயர்வு செய்"ய வந்த "வையகத்து வைரக்கவி"
நம் பாரதியின் பெண்கள் குறித்த பார்வையை இந்த நாளில் பகிர்வது மிகவும் சிறப்பாக இருக்கும் அல்லவா?
பெண்கள் விடுதலை
பாரதியின் பாடல்
காப்பு
பெண்கள் விடுதலை பெற்ற மகிழ்ச்சிகள்
பேசிக் களிப்பொடு நாம்பாடக்
கண்களி லேயொளி போல வுயிரில்
கலந்தொளிர் தெய்வம்நற் காப்பாமே.
கும்மியடி!தமிழ் நாடு முழுதும்
குலுங்கிடக் கைகொட்டிக் கும்மியடி!
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின
நன்மை கண்டோ மென்று கும்மியடி!
(கும்மி)
ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்
போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.
(கும்மி)
மாட்டை யடித்து வசக்கித் தொழுவினில்
மாட்டும் வழக்கத்தைக் கொண்டு வந்தே,
வீட்டினில் எம்மிடங் காட்ட வந்தார்,அதை
வெட்டி விட்டோ மென்று கும்மியடி!
(கும்மி)
நல்ல
விலை கொண்டு நாயை விற்பார்,அந்த
நாயிடம் யோசனை கேட்ப துண்டோ ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை
கூட்டிவைத் தார்பழி கூட்டி விட்டார்.
(கும்மி)
கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத் திப்பெண்ணைக்
கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.
(கும்மி)
பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்
பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை கணென்று கும்மியடி!
(கும்மி)
வேதம்
படைக்கவும் நீதிகள் செய்யவும்
வேண்டி வந்தோ மென்று கும்மியடி!
சாதம் படைக்கவும் செய்திடுவோம்;தெய்வச்
சாதி படைக்கவும் செய்திடு வோம்.
(கும்மி)
காத
லொருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி!
(கும்மி)
பார் போற்றும் பாரதியின் பாவவையர் குறித்த பார்வையினை படித்தேனும் பாழும் மனம் படைத்த வீணர்கள் திருந்துவார்களா?
திருந்தியே தீர வேண்டும்! தீர்க்கமாக !
"பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம்"
கொண்டாடும் இந்த நாளில்!.
புதுவை வேலு
நன்றி: தி-இந்து நாளிதழ்
"பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு தினம்" கொண்டாடும் இந்த நாள்
RépondreSupprimerஅவசியம் வேண்டிய தினமே நண்பரே.. தெரியாத விசயத்தை எமக்கு தெரிய வைத்தமைக்கு நன்றி பொருத்தமான பாரதியின் கவி அருமை.
எமது புதிய பதிவை காண்க,,,
பாரதியின் கூற்றை மெய்பிப்போம் "தையலை உயர்வு செய்வோம்"
Supprimerமகளீர் பற்றிய செய்திக்கும் மனம் திறந்து கருத்து தெரிவித்த உங்களது நல்ல மனம் வாழ்க! வளர்க!
தவறாது தங்களது பதிவை இனி தொடருகிறேன்.
நன்றியுடன்,
புதுவை வேலு
தேடித்தேடி மனித முக்கியத்துவ சேவையை செய்யும் யாதவ நம்பிக்கு (கண்ணன்) ஆசை முத்தங்கள். புதுவை வேலு அவர்களே அனைத்து உரிமைகளை பற்றி பதிவு செய்ய வேண்டும் என காத்திருக்கும் உண்மை வாசகன். வாழ்த்துகள்.
RépondreSupprimersattia vingadassamy
தேடி தேடி நல்ல தகவல்களை... ஓடி ஓடி என்னால் தேட இயலும். ஆனால் உம்போன்ற உண்மை கருத்து உரைப்பவர்களை தேடினாலும் காண்பது அறியது அய்யா!
Supprimerஉண்மையின் உரைகல் நீவிர்!
நன்றியுடன்,
புதுவை வேலு
மிக அருமையானத் தகவல்கள் தொகுப்பு ஐயா! இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளுமே பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக இருந்தால் நல்லதுதானே ஐயா!
RépondreSupprimerபாரதியின் அரை கூவலையும் இணைத்து அருமையான பதிவு!
இந்தச் சகோதரிகளைப் பற்றி அறிந்திருக்கின்றோம். எங்கள் தளத்திலும் முன்பு இடுகை போட்டுள்ளோம்.
அன்பு என்னும் நெறியை பின்பற்றி வன்முறையை அழித்தொழிப்போம்.
Supprimerதங்களது தளத்தில் வெளியான இந்தச் சகோதரிகளைப் பற்றிய செய்தியினை படித்திட ஆவல்!
வருகை பெருமைசேர்த்தது.
நன்றியுடன்,
புதுவை வேலு
மிக்க நன்றி ஐயா!
RépondreSupprimerஅகம் மகிழ்ந்தேன் வருகைக்கும், கருத்து பகிர்விற்கும்.
Supprimerநன்றியுடன்,
புதுவை வேலு
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் பற்றியும் மிராபெல் சகோதரிகளை பற்றியும் அறிந்துகொண்டேன்! சிறப்பான பதிவு! நன்றி!
RépondreSupprimerஎன்றும் வாடாத "தளிர்" தரும் கருத்து
Supprimerவளமான நற்படைப்புக்கு உரிய வித்து! அன்பரே! தங்களுக்கு,
குழலின்னிசை என்றும் இசைக்கும் நன்றி இசை!
நன்றியுடன்,
புதுவை வேலு
அனைவரும் காண வேண்டிய பதிவு ... அத்துமீற ஆயத்தமாகும் ஆணவத்தை அடக்கியாண்டு பழக புகழ் நம்மோடு....
RépondreSupprimerஅத்துமீற ஆயத்தமாகும் ஆணவத்தை அடையாளம் கண்டு அழித்தொழிக்க வலு சேர்க்கும் நண்பரே! தங்களது அழகிய கருத்து!
Supprimerவருக நற்பல கருத்தினை நாளும் தருக!
நன்றியுடன்,
புதுவை வேலு
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் பற்றியும் மிராபெல் சகோதரிகளை பற்றியும் தொிந்துக்கொண்டோம்! பாரதியின் "பாவவையர் குறித்த பார்வையினை" இணைத்தது அருமை ! மிக சிறந்த பதிவு! நன்றி!
RépondreSupprimer"பாவவையர் குறித்த பார்வையினை" பறை சாற்றிய சகோதரியே உம்மை
Supprimerஒளி படைத்த கண்ணிணாய் வா வா! என்றே கருத்தினை பகர்வதற்கு வரவேற்கின்றேன்.
நன்றியுடன்,
புதுவை வேலு
அனைவரும் உணர வேண்டிய அறிய வேண்டிய செய்திகள் நண்பரே
RépondreSupprimerநன்றி
"கரந்தையார் கருத்து இல்லாமல் குழலின்னிசை யில் வருத்தம் என்னும் நாதம் இசைத்தது என்பது உண்மையே! இனி இன்ப இசைதான் இசைக்கும்.
Supprimerகரந்தையார்தான் வந்து விட்டாரே! கருத்தினை தந்து விட்டாரே!
வருக வருக அமுதமென அழிகிய கருதினை அனுதினமும் அருள்க!
நன்றியுடன்,
புதுவை வேலு
அருமையான தகவல்
RépondreSupprimerகரந்தையார் ஒருமுறை சொன்னதாக நினைவு..
மறக்கமுடியுமா? வண்ணத்துப் பூச்சிகளை..
வாருங்கள் தோழரே!
Supprimerவண்ணத்துபூச்சிகளின் நல்ல எண்ணத்தினை போற்றுவோம்!
வருக!
சிந்தனை சிறப்புகளை சிந்தாமல் தருக!
நன்றியுடன்,
புதுவை வேலு
பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்!.. - என்றார் மகாகவி பாரதியார்.
RépondreSupprimerநானும் எனது பதிவுகளில் - ஆடி வெள்ளி மற்றும் மார்கழிப் பொழுதுகளில் பெண்மையைச் சிறப்பிக்கத் தவறியதே இல்லை..
நல்ல கருத்தினைப் பதிவிட்டதற்கு மகிழ்ச்சி.. வாழ்க நலம்..
ஆடி வெள்ளி மற்றும் மார்கழிப் பொழுதுகளில் பெண்மையைச் சிறப்பிக்க வரும் தங்களது படைப்புகளை படித்து பயன்பெற விருப்பம்!
Supprimerவருகைக்கு நன்றி
புதுவை வேலு
வலைச்சர அறிமுகத்தில் தங்களின் தளம். வாழ்த்துக்கள். திரு.யாதவன்நம்மி அவர்களே!!
RépondreSupprimerசெய்தியை அறிய தந்த நண்பருக்கு நான் உரைப்பேன் நன்றியினை!
Supprimerநன்றியுடன்,
புதுவை வேலு