"கவி காளமேகம்"
சிலேடை என்னும் சில்லெடுத்து (கல்) சிலை வடிக்கும் சிந்தனை சிற்பிகளில் தலையான தலைமைக் கவி யார் ? என்று அறிவோமேயாயின்,
அவர் தான்
"கவி காளமேகம்" புலவர் என்று கூறும் தமிழ்நல்லுலகம்.
அவரது சிலேடை
விளையாட்டின் சிறப்பை சற்றே சீர்தூக்கித்தான்
பார்ப்போமே! வாருங்கள்!
"கர்வமிகு கவிராயர்"
இவ்வுலகில், சில புலவர்கள் தங்களைக் ‘கவிராயர்கள்’ என்று திமிருடன் சொல்லி கொள்வார்கள்.
குறும்புக்காரரான
காளமேகம் அவர்களைப் பார்த்து இப்படி பாடுகிறார் !
வால் எங்கே?
நீண்ட வயிறு எங்கே?
முன் இரண்டுகால் எங்கே?
உள்குழிந்த கண் எங்கே?
சாலப்புவிராயர் போற்றும் புலவீர்காள்
நீவிர் கவிராயர் என்று இருந்தக்கால்!
நூல்: தனிப்பாடல்
பாடியவர்: காளமேகம்
பொதுவாகவே ’கவி’ என்ற சொல்லுக்கு இரண்டு பொருள்கள் உண்டு! ஒன்று – கவிதை எழுதுபவர்,
மற்றொன்று குரங்கு.
அதாவது நீங்கள் உங்களைக் ‘கவி’ராயர்கள் என்று
சொல்லிக்கொள்கிறீர்கள்.
அது உண்மைதானா? எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.
உண்மையிலேயே நீங்கள் ‘கவி’ராயர்களானால்,
உங்களுடைய வால் எங்கே?
நீண்ட வயிறு எங்கே?
முன்னால் இருக்கவேண்டிய இரண்டு கால்கள் எங்கே?
உள்நோக்கிக் குழிந்திருக்கும்
கண்கள் எங்கே?
என்று போகிறப் போக்கில் அத்தகைய கவிகளை
கிண்டல் செய்துவிட்டு போகிறார்.
மற்றொரு தனிப் பாடலில்….
“பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என்று
வாழ்த்துவதின் பொருளை சிறப்புடன் விளக்குகிறார்.
துதி, வாணி, வீரம், விசயம், சந்தானம், துணிவு, தனம்,
அதிதானியம், சௌபாக்கியம், போகம், அறிவு, அழகு,
புதிதாம் பெருமை, அறம், குலம், நோவு அகல் பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே
நூல்: தனிப்பாடல்
பாடியவர்: காளமேகம்
மதுரையில் குடிகொண்டுள்ள பரம்பொருளே, எனக்கு இந்தப் பதினாறு வரங்களைத் தருவாய்:
1.துதி (புகழ்)
2.வாணி (கல்வி)
3.வீரம்
4.விசயம் (வெற்றி)
5.சந்தானம் (குழந்தை)
6.துணிவு
7.தனம் (செல்வம்)
8.அதிக தானிய வளம்
9.சௌபாக்கியம் (சிறந்த இன்பம்)
10.போகம் (சுகம்)
11.அறிவு
12.அழகு
13.தொடர்ந்துதினந்தோறும் கிடைத்துக்கொண்டே இருக்கும்
சிறப்புகள்
14.கொடுக்கின்ற குணம்
15.நல்ல குலப்பிறப்பு
16.நோய் இல்லாமை, நீண்ட ஆயுள்
மணமக்களை நாம் வாழ்த்தும்போது: ‘பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க’ என்று வாழ்த்துவோம் அல்லவா? அதன் அர்த்தம் ‘16 பிள்ளைகள்’ அல்ல!
இந்தப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள 16 வரங்கள்தாம்.
காலத்தல் அழியா கவிதை செல்வத்தை நமக்கு அளித்துவிட்டு
சென்ற
“ஆசு கவி”
காளமேகப் புலவரின் புகழ் ஓங்குக ஓங்குகவே!
அருமையான கவிதைப்பகிர்வுக்கு நன்றிகள்
RépondreSupprimerதனி மரத்தின் சிறப்பு உலகமெங்கும் பரவட்டும்!
Supprimerவருகைக்கும் கருத்து பகிர்விற்கும் இனிய நன்றி
அன்புடன்,
புதுவை வேலு
இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்.
RépondreSupprimerதனி மரத்தின் நிழலில் நான்
Supprimerகுளுமை! மனம் குளிர்ந்த்தது!
அறிமுகம் செய்தமைக்கு அன்பான நன்றி!
புதுவை வேலு
கவி காளமேகப் புலவரின் புகழ் பரவட்டும்
RépondreSupprimerநண்பரே, தங்களுடன் அலைபேசி வழி உரையாடியது மிகுந்த மகிழ்வினை அளித்தது
நன்றி நண்பரே
விருதுக்கு பெருமை சேர்க்கும் வித்தையை கற்றவரே!
Supprimerஎம்மவரே! கரந்தையாரே
குழலின்னிசையை விட உமது குரல் இசை இனிமை அய்யா!
நன்றி!
புதுவை வேலு
நல்ல விளக்கவுரை தந்த நண்பருக்கு வாழ்த்துகள்.
RépondreSupprimerகாந்தி கண்டெடுத்து தந்த அருமை நண்பரே!
Supprimerபோற்றுகிறேன் உம் வரவை!
நன்றியுடன்,
புதுவை வேலு
இனிய செய்திகளை யாவரும் அறியும் வண்ணம் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி..
RépondreSupprimerவாழ்க நலம்..
இன்னலை போக்கும் இனிய கருத்தை தந்திட்ட அண்ணலை வணங்குகிறேன்.
Supprimerவருகைக்கு நன்றி!
புதுவை வேலு
16 ம் பெற்று வாழ்க என்று வாழ்த்துவது உண்டு. அதன் அர்த்தங்கள் ஒரு சில அறிந்திருந்தாலும் முழுவதும் தெரின்ந்துகொண்டோம். அதையும் காளமேகப் புலவரின் பாடலுடன், அவரது குறும்பையும் மிகவும் ரசித்தோம் ஐயா!
RépondreSupprimerதங்கள் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்!
-ஆஹா -ஆஹா -ஆஹா தங்களது குறும்பு சிரிப்பின் விசிறி அய்யா நான்!
Supprimerவருகையில் தற்போது கால தாமதம் ஏற்படுகிறதே ஏன் அய்யா!
ஆசிரியரிடம் கேட்கக் கூடாத கேள்வி அய்யா இது!
வருகை பெருமை சேர்க்கும்.
நன்றியுடன்,
புதுவை வேலு
இந்தப் பதினாறு பற்றிய செய்தி அடிக்கடி கேட்டிருந்தும் நினைவில் நிற்பதில்லை. மீண்டும் மீண்டும் தெரியப் படுத்தப் பட வேண்டும். வாழ்த்துக்கள்.
RépondreSupprimerமீண்டும் மீண்டும் தெரியபடுத்த தங்களை போன்றவரின் ஆதரவும் அன்பும் அவசியமல்லாவா அய்யா!
Supprimerதவறாத வருகைக்கு தறுகின்றேன் நன்றியினை!
புதுவை வேலு
காளமேகப்புலவரின் பாடலும் விளக்கமும் நன்று! வாழ்த்துக்கள்!
RépondreSupprimerநல்ல கருத்தை பதிவு செய்தமைக்கு
Supprimerநன்றி நவில்கின்றேன் நண்பரே!
புதுவை வேலு
காளமேகப்புலவரின் சகமக்களின்பால் (போலி ?? புலவர்கள்) வெறுப்பும், அதே சமயம் பொதுமக்களின்பால் அன்பு உள்ளதை; இறைவனிடம் தனக்கு வேண்டியதை கேட்பதன் மூலம்; மக்களும் இறைவனிடம் இதுபோல் கேட்டு பெற்றுக்கொள்ளவும், தன் கவி திறமையால் விளையாடியதாகவே நான் கருதுகிறேன். புலவரின் குணத்தை அருமையாக பதிந்த புதுவை வேலு அவர்களுக்கு பாராட்டுகள்.
RépondreSupprimersattia vingadassamy
புலவரின் குணத்தை புட்டு புட்டு வைக்கும் சத்தியா அவர்களே!
Supprimerசத்தியமாக சொல்லுங்கள் நீங்களும் ஒரு புலவர்தானே?
புலவரின் வருகைக்கு புதுவை வேலுவின் நன்றிகள்!
கவி காளமேகம் பற்றி கூடுதல் செய்திகளைப் பதிவில் காணமுடிந்தது. 16 செல்வம் பற்றி இவரது பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளதை தங்களின் பதிவு மூலமாகவே அறிந்தேன். நன்றி.
RépondreSupprimerமுனைவரின் வருகையும் கருத்தும் முக்கனிபோல் இனித்தது
Supprimerநன்றியுடன்,
புதுவை வேலு
நல்லதோர் தமிழ்ப்பணி தொடரட்டும் ...
RépondreSupprimer
Supprimerதமிழ்ப்பணி தொடர வருகையை தொடர்ந்து தாருங்கள்
தோழரே!
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி!
புதுவை வேலு
கவி காள “மேகத்தின்“ மழையைப் பொழிய வைத்து விட்டீர்கள் அய்யா!
RépondreSupprimerஅருந்தமிழ்க்கருத்துகளை அறியத்தருவதற்கு நன்றி!
மேகம் பொய்க்கவில்லை
Supprimerகவி மழை பொய்த்துவிட்டது. அப்படித்தானே?
வருகையை வரலாறு சொல்லும்!
நன்றியுடன்,
புதுவை வேலு