நாம் "ஹலோ' என்ற சொல்லை தினமும் பலமுறை உபயோகிக்கிறோம்.
ஹலா, ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் இருந்து "ஹலோ' என்ற சொல் வந்துள்ளது.
இது தமிழில் வணக்கம், அழைத்தல், நலம் போன்ற அர்த்தங்களில் பயன்படுத்த படுவதை நாம் அறிவோம்!
இச்சொல் முதன்முதலில் எழுத்து வடிவத்தில் 1833 ம் ஆண்டு டேவிட் கிரக்கட் எழுதிய ""தீ ஸ்கெட்சஸ் அண்ட் எசென்ட்ரிசிட்டியஸ் ஆப் கால்'' என்ற அமெரிக்க புத்தகத்தில் வெளியானது.
எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே
1973ல் நடந்த போர் முடிவுக்கு வந்ததை அடுத்து,
அதனை மக்கள்,
உலக ஹலோ தினமாக (நவ., 21) கொண்டாடி வருகின்றனர்.
தற்போது 180 நாடுகளில் உலக ஹலோ தினம்
கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொருவரும் உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
"ஹலோ' தினத்தின் முக்கியத்துவம் பற்றி அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சாதனையாளர்கள் பலர்,
சக மனிதர்களுடனான உறவை மேம்படுத்துவதன் மூலமாக,
உலக மக்களிடம் அமைதியை நிலை நாட்ட முடியும் என்று கூறி
இருப்பது...
"உலக ஹலோ தினத்தின்" சிறப்பை உலகிற்கு பறை சாற்றுகிறது.
குறைந்தது 10 பேரிடம் "ஹலோ' சொல்வதன் மூலம்
உலக ஹலோ தினத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைப்போம்.
வாருங்கள் வாட்ஸ்-அப் கலக்கல் மூலம்/கைப் பேசி /தொலைப் பேசி/
நேரில்/ போன்ற பல வழிகளில் அவரவர் வசதிக்கேற்ப "ஹலோ"
சொல்லுவோம் !
« அன்பால் அனைத்தையும் வெல்லுவோம் »
.
இதோ ஆதிமனிதனிடமிருந்து எனக்கு முதல் அழைப்பு.......
ஹலோ!
ஹலோ!ஹலோ!ஹலோ!ஹலோ!ஹலோ!ஹலோ!ஹலோ!ஹலோ!ஹலோ!ஹலோ!
பத்து முறை சொல்லியாயிற்று!
இதனை படிக்கும்
நீங்களும் இதை பத்து பேருக்கு சொல்லுங்களேன்! "ஹலோ"
புதுவை வேலு
சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
RépondreSupprimerஅறியாதனவும் நிறைய அறிந்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அறியாததை அறிவுறுத்துவது அருந்தமிழுக்கு அழகு அல்லவா?
Supprimerஅறிவோம் அறிவொளியினை அகிலமெல்லாம் நாம் தேடி!
அன்புடன்,
புதுவை வேலு
ஹலோ என்பது டெலிபோணைக் கண்டு பிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் அவர்களின் சகோதரியின் பெயர் என படித்திருக்கிறேன்.
RépondreSupprimerஹலோ என்பது...............எந்த நாட்டு மொழி நண்பரே............ தெரிந்து கொள்ள ஆவல்தான்.
Supprimerபடித்ததை இங்கு நினைவு கூர்ந்தமைக்கு
Supprimerமிக்க நன்றி கில்லர்ஜீ அவர்களே!
வருக! வருக! நாளும் பல நற்கருத்து தருக!
நன்றியுடன்,
புதுவை வேலு
ஹலா, ஹொலா என்ற பழங்கால ஜெர்மன் மொழி வார்த்தைகளில் இருந்து "ஹலோ' என்ற சொல் வந்துள்ளது.
Supprimerஅன்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerபுதுமையான விடயம் நான் அறிய வில்லை அறியத்தந்தமைக்கு நன்றிகள் பல..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்முகம் காட்டும் இனியவரின் வருகை
Supprimerஎனதுள்ளத்தில் உவகையை ஊற்றெடுக்கச் செய்தது!
வருக! கருத்தினை தருக!
நன்றியுடன்,
புதுவை வேலு
உலக அமைதிக்கான முயற்சியில் ஈடுபட நான் தயாா். இரண்டு "ஹலோ" சொல்லி விட்டேன். மூன்றாவது "ஹலோ" என் சகோதரரான உங்களுக்குத் தான் .
RépondreSupprimer"ஹலோ, உலக அமைதிக்கான முயற்சியில் நாம் அனைவரும் ஈடுபடுவோம் ."
தினம் தினம் அறியாத பல விஷயங்களை அறிய செய்யும் குழல் இன்னிசையில் இன்றைய தகவலும் புதுமையே! வாழ்த்துக்கள் ! நன்றி !
புதுமையை போற்றும் புதுமைப் பெண்ணே
Supprimerபூவுலகில் புகழுடன் வாழ்க!
நன்றியுடன்,
புதுவை வேலு
உலக மக்களின் அமைதிக்காக நானும் ஹலோ சொல்கிறேன் புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
உலக மக்களின் அமைதிக்காக "ஹலோ" சொல்லிய
Supprimerநண்பரை தொடர்ந்து நானும் ஹலோ சொல்லுகிறேன்
உலகத்தில் என்றும் அமைதி நிலவட்டும்.
நன்றி!
புதுவை வேலு
ஹலோ! நன்றி அய்யா!
RépondreSupprimerநண்பரே!
Supprimerநன்றி! வணக்கம்!
நாளும் வருக நற்கருத்தை தருக!
அன்புடன்,
புதுவை வேலு
எங்களுக்கு ஒரு ஆசிரியர் இருந்தார். அறிந்தவர் அறியாதவர் என்று எவரிடமும் சிநேக பாவம் பாராட்ட இது போல் வேறு மொழிகளில் இல்லை என்பார்.
RépondreSupprimerஉண்மையான கூற்றை உலகிற்கு உரைத்தீர் அய்யா!
Supprimerநன்றியுடன்,
புதுவை வேலு
பிறர் பதிவுகளில் உங்கள் பதிவை அறிமுகப் படுத்தும் போது அந்தப் பதிவரின் பதிவுகளையாவது படிக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றுகிறது
RépondreSupprimerஅறிவுரையினை செவிமடுத்தேன்!
Supprimerசெயலாற்றுவேன் செம்மையாக!
நன்றி அய்யா!
அன்புடன்,
புதுவை வேலு
ஹலோ தெரியாத விஷயம் அறிவித்ததற்கு நன்றி.
RépondreSupprimerதங்களின் அன்பு ஆராதனையில்(பாராட்டு) மனம் நெகிழ்ந்தேன்!
Supprimerதொடர் வருகை பூக்கட்டும்!
நன்றி!
புதுவை வேலு
சுவையான தகவல்கள்! ஹலோ சொல்லி கூப்பிட்டு நல்ல தகவல்களை சொன்னமைக்கு நன்றி!
RépondreSupprimerஅழைப்பை ஏற்று வருகை தந்த "தளிர்" சுரேஷ்
Supprimerஅவர்களுக்கு, நாளும் நன்றியுடன் "குழலின்னிசை" இசைக்கும் இன்ப இசையினை!
நன்றியுடன்,
புதுவை வேலு
நண்பர் கில்லர்ஜி படித்த தாக பதிவிட்டது உண்மைதானோ...............!!!!
RépondreSupprimerவலிமையான கேள்வி நண்பரே!
Supprimerஇந்த கேள்வியை அன்பர் கில்லர்ஜி அவர்களிடம் சேர்ப்பித்து விடுகிறேன்.
நன்றி!
புதுவை வேலு
அருமை.
RépondreSupprimerநன்றி.
அருமை என்று பாராட்டிய அருந்தமிழை வணங்குகிறேன் அய்யா!
Supprimerபெருமை சேர்த்தது உமது வருகை!
நன்றியுடன்,
புதுவை வேலு
ஹலோ! வரலாறு நன்று
RépondreSupprimerதங்கள் தேடலுக்குப் பாராட்டுகள்
தொடருங்கள்
தேடலுக்குப் பாராட்டுகள் தெரிவித்தீர்கள்
Supprimerமிக்க நன்றி!
தங்களையும் சில நாட்களாக காணவில்லையே!
அதனால் தங்களையும் நான் தேடிக் கொன்டிருந்தேன் அய்யா!
நன்றியுடன்,
புதுவை வேலு
ஹாலோ அருமையான பகிர்வு.
RépondreSupprimerகனிவான கருத்தினை தந்திட்ட
Supprimer"தனி மரத்தின்" நிழலில் தவம் இருக்கும்
திரு சிவநேசன் அய்யாவே! உம் புகழ் ஓங்குக!
தொடர் வருகை புரிக!
நன்றியுடன்,
புதுவை வேலு
ஹலோ ஹலோ ஹலோ
RépondreSupprimerதகவலுக்கு நன்றி
தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை
Supprimerசெய்திடவே மென் பொறியாளர் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்
அரும்பணியினை ஆற்றுகிறார் தமிழ் உலகிற்கு
வாழ்க! வளர்க! வளமான வருகையினை நாளும் நல்குக!
நன்றியுடன்,
புதுவை வேலு
ஹலோவைப் பற்றி பல புதிய செய்திகளைத் தங்கள் பதிவு மூலமாகத் தெரிந்துகொண்டேன். எனது நண்பர் (அமரர்) திரு சிவசூரியன் எப்பொழுது தொலைபேசியை எடுத்தாலும் வணக்கம் என்று கூறிவிட்டே பேசுவார். ஹலோ என்ற சொல்லை பயன்படுத்துவதில்லை. அவரிடமிருந்து நான் அந்தப் பழக்கத்தைக் கற்றேன். தொலைபேசி அழைப்புகளுக்கு எனது முதல் மறுமொழி வணக்கம் என்ற சொல்லாகும். தங்களின் பதிவிற்கு நன்றி.
RépondreSupprimerதமிழ்கூறும் நல்லுலகின் நாயகரின் வரவை போற்றுகிறேன்.
Supprimerதங்களது நண்பர் திரு சிவசூரியன் அமரராகி விட்டாலும்,
அவரது சொல் (வணக்கம்) அமரத்துவம் பெறாது அய்யா!
அமரத்துவம் பெறாத சொல்லை விட்டுசென்ற அன்பர் திரு சிவசூரியன் அவர்களை இந்த வேளையில் நாம் நினைவு கூறுவோமாக!
அன்புடன்,
புதுவை வேலு
ஹலோ ஹலோ ஹலோ
RépondreSupprimerஅன்புடன் DD
வலைச் சித்தரின் வருகை
Supprimerவரலாறு போற்றும்!
திரளான கருத்தை தித்திக்கும் வகையில் தினம் தருக!
அன்புடன்,
புதுவை வேலு
தெரியாத விடயம் சுவையான பதிவுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ....!
RépondreSupprimerசகோதரியே!
Supprimerசுவையான பகுதியாக மாறியமைக்கு
உமது வருகையும் ஒரு காரணம்.
நன்றியுடன்,
புதுவை வேலு
ஹலோ ....
RépondreSupprimerநானும் பதிவு பண்ணீட்டேன்..
நல்ல தகவல் தோழர்
தோழரே வணக்கம்!
Supprimerதோகை விரித்தாடும் மயிலின் அழகு
உமது கருத்து! உள்ளம் மகிழ்ந்தேன்.
நன்றி!
புதுவை வேலு
ஹலோ நண்பரே.. முதல் ஹலோவை உங்களிடமிருந்தே ஆரம்பிக்கிறேன்...
RépondreSupprimerமுதல் வணக்கம்(ஹலோ) சொல்லிய திரு பாந்து அவர்களுக்கு
Supprimerகுழலின்னிசையின்
குதுகுல நன்றி!
அன்புடன்,
புதுவை வேலு
ஹலோ .....ஹலோ ஐயா!
RépondreSupprimerஎன்பதைப் பற்றி வாசித்திருக்கின்றோம் என்றாலும் அது உலக தினமாகக் கொண்டாடப்படுகின்றது என்பதைப் பற்றிய தகவல் தங்களிடமிருந்தே! தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி!
நமது நண்பரின் படம் மிகவும் அருமை!
ஹலோ .....
RépondreSupprimerநாளும் நன்றியுடன் "குழலின்னிசை" இசைக்கும் இன்ப இசையினை!
நன்றியுடன்,
புதுவை வேலு
ஹலோ ..ஹலோ .. யார் பேசுறது... ஹலோ கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .
RépondreSupprimer