சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்
சிறுமைப் பிழைகொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண்
நிறைமதீ! நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்.
தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்து போய்
பொன்முகக் கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமாமதீ!
நின்முகம் கண்ணுளவாகில் நீஇங்கே நோக்கிப்போ.
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்
சிறுமைப் பிழைகொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண்
நிறைமதீ! நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்.
தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத் தவழ்ந்து போய்
பொன்முகக் கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமாமதீ!
நின்முகம் கண்ணுளவாகில் நீஇங்கே நோக்கிப்போ.
(பெரியாழ்வார் திருமொழி)
பெரியாழ்வார் அழகாகச் சொல்கிறார்.
கண்ணன் தவழத் தொடங்கினான். யசோதை அம்புலி மாமாவைக் காட்டி (நிலா) சோறு ஊட்டுகிறாள்.
அப்பொழுது அம்புலிப்பருவம்.
"நிலாவை பிடித்து தருகிறேன் கண்ணா சாப்பிடு "னு யசோதை சோறூட்ட, நிலா நிற்காமல் சென்று கொண்டே இருந்ததது.
யசோதைக்கு கோபம் வந்து விட,
"நின்முகம் கண்ணுளவாகில் நீ இங்கே நோக்கிப்போ" .
என் மகன் கோவிந்தன் அவ்வளவு அழகா புழுதி அலைந்து வருகிறார்.
அதை நீ ரசிக்காமல் சென்றுகொண்டே இருக்கிறாயே ?
சந்திரன் திரும்பக்கேட்டார்,
சந்திரன் திரும்பக்கேட்டார்,
"என்ன ?
கண்ணன் ! சின்ன பாலகன்; சிறு பிள்ளை.
இவன் தவழுவனாம், நான் எவ்வளவு பெரிய தேவன். நான் நின்னு பார்க்கனுமா ?"
யசோதை திரும்பச் சொன்னாள்.
"சிறுமையின் வார்த்த தன்னை மாவலியிடைச் சென்று கேள்.
பாலகன் என்று பரிபவம் செய்யேல்".
இவன் சின்னவன் சின்னவன்னு பரிகாசம் பண்ணாதே. இந்த சின்னவன் படுத்தின பாட்டை மகாபலியி சக்ரவர்த்தியிடம் சென்று கேள்.
குள்ளமான வாமன மூர்தியைப்போய்,
மூன்றடி அந்த் சின்னக் காலால் அளந்து வாங்கிண்டு,
உலகத்தையே திருவிக்ரமானத் தாவி அளந்து,
மகாபலி அழிந்தே போனான்.
யாரையும் சிறுமையாய் சிந்தனை செய்யாதே.
எந்தச் சின்னதும் பயன் படும் என்றாள்.
புதுவை வேலு
நன்றி:
மஹாபாரதத்தில் தர்மம்
ஸ்ரீ.உபயவே.க்ருஷ்ணன் ஸ்வாமியின் உபன்யாஸ முத்துக்கள்
சிறுமையை கண்டு ஏளனம் கொள்ளாதே என்று அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.
RépondreSupprimer"ஆளை பார்த்து எடை போடாதே", மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது" என்றெல்லாம் சொல்வதுண்டு. ஆனால் அதை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள் என்று தான் தெரியவில்லை.
சிறுமையை கண்டு ஏளனம் கொள்வது, சிறிய மடந்தை உள்ளவர்கள் செயல் என்பதை ,சிறப்புற உரை எழுதி கருத்து பகிர்ந்த ,நமது சொக்கருக்கு வாழ்த்துக்களும், நன்றிகளும்!
Supprimerஅன்புடன்,
புதுவை வேலு
அருமையான் கருத்து நண்பரே நன்றி
RépondreSupprimerகருத்திட்ட கரந்தையாருக்கு குழலின்னிசை கூறும்
Supprimerநன்றி கலந்த நல் வணக்கம்!
வருக கருத்தினை நாளும் தருக!
புதுவை வேலு
ரொம்பவே ரசித்தோம்...
RépondreSupprimerவாழ்த்துக்கள்
//சிறியனென்று என்னிளஞ்சிங்கத்தை இகழேல்
நிறைமதீ
இளமாமதீ!//
ஆளை பார்த்து எடைபோடாமல்
Supprimerஅறிவை பார்த்து எடை போடும்
செறிவு மிக்க சிந்தை இங்கிருந்தால்
சிறப்புறுமே இவ்வுலகு!
வியக்க வைக்கும் விலை மதில்லாத அருங்கருத்து
பகன்றீர் வாழ்க! வளர்க!
நன்றியுடன்,
புதுவை வேலு
எனக்கு தமிழ் இறை இலக்கியத்தில் காணும் பல பாடல்களில் அவர்களது கற்பனை வியக்க வைக்கும். சிறுமை என்பதை உருவத்தில் சிறியது என்று மட்டும்தான் பொருள் கொள்ள வேண்டும். வாழ்த்துக்கள்.
RépondreSupprimerதமிழ் இறை இலக்கியத்தில் இன்பம் காணும் தங்களைப் போன்றோர் இருக்கும்வரையில் இறை இலக்கியம் அழியாது அய்யா!
Supprimerநம்பிக்கையின் நாற்றாக இருக்கும் தங்களின் வருகைக்கும், கருத்துக்கும்
மிக்க நன்றி!
புதுவை வேலு
அருமையான விளக்கத்துடன்
RépondreSupprimerஅற்புதமான பாடலை
அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தமிழ்கூறும் நல்லுலகில் சிறப்பிடம்
Supprimerஉமக்குண்டு.
நல்ல கருத்தை நவின்றீர்! நன்றி!
புதுவைவேலு
பெரியாழ்வார் தந்த திருமொழி அற்புதமான பாடல் மட்டுமல்ல
RépondreSupprimerஆன்ந்தத்தை அள்ளித் தரும் ஆன்மீகப் பாடலும் ஆகும் அன்பரே!
தங்களின் வருகை குழலின்னிசையின் வளத்தை பெருக்கட்டும்.
நன்றியுடன்,
புதுவை வேலு
"சிறுமையாய் சிந்தனை செய்யாதே" என்ற கருத்தை சொல்லும் பெரியாழ்வாரின் அற்புதமான பாடலை தகுந்த விளக்கத்துடன் அறியத் தந்தமைக்கு நன்றி! "சிறுமையை கண்டு ஏளனம் கொள்ளாதே" என்ற கருத்திற்கு எடுத்துக்காட்டாய் மகாபலி சக்ரவர்த்தியின் கதை. அழகு! மொத்ததில் "அம்புலி மாமா "கதை அற்புதம் ! வாழ்த்துக்கள்!
RépondreSupprimerகதை அழகு!
Supprimerகவிதை அழகு!
இருக்கட்டும் சகோதரி!
நீங்கள் எழுதும் கருத்து நடை அழகு என்பதை மறந்து விடாதீர்கள்!
அழகோ! அழகு உங்களது கருத்து நடை!
நன்றியுடன்,
புதுவை வேலு
இலக்கியச் சுவை சொட்டும்
RépondreSupprimerஇனிய பதிவு இது!
தொடருங்கள்
சுவை சொட்டும் கருத்தினை தந்தமைக்காக
Supprimerபாவலரே!
இலக்கியம், நிச்சயம் உம்மை பாராட்டும்.
நன்றியுடன்,
புதுவை வேலு
அருமையான கவிதையும் விளக்கமும். இலக்கியச் சுவை ததும்பும் இனிய பதிவு. மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள் ....!
RépondreSupprimerஇனிய நன்றி இனியாவுக்கு,
Supprimerஇறை இலக்கியம் தமிழ் மொழியில் ஏராளம்! அவை யாவையும் படிப்பதற்கு வாழ்வில் நாட்கள் போதாது தாராளம்!
நன்றியுடன்,
புதுவை வேலு
யாரையும் சிறுமையாய் சிந்திக்காதே, சிறுமைக்கு பல பொருள்கள் உள்ளது. எதையும் எச்சரிக்கையுடன் கையாண்டு, சொந்த அறிவால் வெற்றிகொள் - நல்ல அறிவுரை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
சிறுமைக்கு பல பொருள்கள் உள்ளது உண்மைதான் நண்பரே!
RépondreSupprimerஇது இறைவனைப் பற்றிய மறை பொருளாக கொள்கிறார் பெரியாழ்வார் அவரது இறை இலக்கியத்தில் இடம் பெற்ற இன்பம் தரும் பாடலாகவே பார்த்தால் படு சுகம்.
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!
புதுவை வேலு
அழகிய கருத்து! ரொம்பவே ரசித்தோம்! தொடர்க! இது போல் நல்ல பாசுரங்களுடனும், விளக்கங்களுடனும்....
RépondreSupprimerஅழகிய விளக்கம் அற்புதம் அய்யா!
Supprimerவருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி!
புதுவை வேலு
சிறு துரும்பும் பல்குத்த உதவும்?
RépondreSupprimerஆழ்வார் பாசுரங்களும் சரி, தேவாரம், திருவாசகமும் சரி , திருப்புகழ் எல்லாமே தமிழில் விளையாடப்பட்டிருக்கும்!
இலக்கிய சுவை சொட்ட சொட்ட இறை இலக்கியங்களில் தமிழ் சிலேடைகள் மேலோங்கி இருப்பதை பார்க்கும்போது மாகவி பாரதி பாடியபடி...
RépondreSupprimer"இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என்றே எண்ணத் தோன்றுகிறது அல்லவா?
அய்யா!
நன்றியுடன்,
புதுவை வேலு