samedi 19 décembre 2015

"ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை " - பாசுரம் 04
                                   ஆழிமழைக்கண்ணா!
 


ஆண்டாள் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தவள்.  ஒவ்வொரு மாதமும் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்தால் நல்லது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் தலத்தில் ஆண்டாளை வணங்க செவ்வாய்க்கிழமை ஏற்ற தினமாகும்.  துளசி வனத்தில் ஆண்டாள் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்டதால் அன்று முதல் செவ்வாய்க்கிழமை வழிபாடு சிறப்பானதாக கருதப்படுகிறது.
ஸ்ரீஆண்டாளுக்கு அரக்கு கலர் புடவை,  கற்கண்டு சாதம்,  தாமரை மலர் ஆகிய மூன்றும் மிகவும் பிடித்த மானவையாகும்.

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதும்,  ஆழ்வார்களுள் பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம்,  மற்றும்  108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும்.

திருவில்லிபுத்தூர் திருக்கோயிலில்,  மார்கழி மாதம் ஆண்டாள் எண்ணெய்க்காப்புக்கு 61 வகை மூலிகைகள் அடங்கிய 40 நாட்களில் காய்ச்சிய தைலம் பயன்படுத்தப்படுகின்றது.
நல்லெண்ணெய்,  பசும்பால்,  நெல்லிக்காய்,  தாழம்பூ, இளநீர்  முதலான பல பொருட்கள் சேர்த்து ஏழுபடி எண்ணெய்விட்டு இரண்டு பேர் நாற்பது நாட்கள் காய்ச்சுவர்.  இதில் நாலு படி தைலம் கிடைக்கும். மார்கழி மாதத்தின் ஆண்டாள் எண்ணெய்க்காப்பு உற்சவத்தின் எட்டு நாட்களிலும் ஆண்டாளுக்கு இந்த தைலமே சாற்றப்படுகின்றது.
மார்கழி மாதம் முடிந்த பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக இந்த தைலப்பிரசாதம் தரப்படுகின்றது. பக்தர்களால் நோய் தீர்க்கும் மருந்தாக இந்தத் தைலம் நம்பப்படுகின்றது.


ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை - பாசுரம் 04

ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுட்புக்கு முகந்து முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


விளக்கம்:


உலகில் நல்ல செயலைச் செய்யத் தொடங்கினால் பலரும் வந்து தன்னால்  இயன்றய உதவியைச் செய்வார்கள்.


நல்ல மழைபொழிந்து நாட்டில் நன்மை ஏற்படுவதற்காக கிருஷ்ண பக்தர்களான ஆயர் சிறுமியர், நோற்கும் நோன்புக்குத் தானும் உதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு, மழையைத் தரும் வருணதேவன் இவர்களின் எதிரில் வந்து நிற்கிறான்.


அவனை ஆழிமழைக்கண்ணா! என்றழைத்து நாங்களும் கண்ணனும் மகிழ்ந்து நீராடும்படி மழைபொழிய வேண்டும் என்று அவனுக்குக் கட்டளை இடுகிறார்கள்.


மழைபொழியும் செயலைக் கண்ணும் கருத்துமாக நடத்தும் வருணதேவனே! உன்னுடைய கொடைத்தன்மையில் சிறிதும் மறைத்துக் கொள்ளாமல், மழைபொழிந்து எல்லோருக்கும் உதவவேண்டும்.


நிறைய மழையைத் தர தண்ணீருக்கு எங்கே போவது ? என்று நினையாதே! நடுக்கடலுக்குச் சென்று முகத்தைத் தண்ணீரில் வைத்து உனக்குத் தேவையான அளவு தண்ணீரைப் பருகு!
ஆரவாரித்துக்கொண்டு வானத்திற்குச் செல் 


ஊழி முதல்வனின் உருவம்போல் கருமை நிறத்தைப் பெறு !


மிக்க வலிமையுடைய பத்மநாபனின் வலக்கையில் இருக்கும் சக்கரம்போல் சுடரொளியால் மின்னலை மின்னிக்காட்டு !
பகவானின் கையில் இருக்கும் வலம்புரிச் சங்குபோல் ஒலித்துக்காட்டு !


ராமனுடைய கையில் இருக்கும் திருச்சார்ங்கத்திலிருந்து கிளம்பும் ராமபாணம்போல் அனைவரும் வாழ இவ்வுலகினில் மழைபொழிந்திடாய்!

நாங்களும் கண்ணனும் மகிழ்ந்து நீராட தாமதிக்காமல் மழைபொழிந்திடு என்கிறார்கள். பிறருக்கு உதவுவதே நம் கடமையாகும்.


(இந்த பாசுரத்தில் "திருவனந்தபுரம்"  திவ்ய தேசம் குறிப்பிடுகிறது)
புதுவை வேலு

16 commentaires:

 1. திருப்பாவை படித்தேன். திருவனந்தபுரம் சென்றேன். நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. நல்வருகை சிறக்கட்டும்
   நல் வளம் பெருகட்டும்
   நலம் விளையட்டும்
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. you may listen to this pasuram here
  www.menakasury.blogspot.com

  RépondreSupprimer
  Réponses
  1. நல்வருகை சிறக்கட்டும்
   நல் வளம் பெருகட்டும்
   நலம் விளையட்டும்
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. Réponses
  1. நல்வருகை சிறக்கட்டும்
   நல் வளம் பெருகட்டும்
   நலம் விளையட்டும்
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. Réponses
  1. நல்வருகை சிறக்கட்டும்
   நல் வளம் பெருகட்டும்
   நலம் விளையட்டும்
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. வணக்கம்
  ஐயா
  அற்புத விளக்கம் ஐயா படித்து மகிழ்ந்தேன் த.ம4

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses
  1. நல்வருகை சிறக்கட்டும்
   நல் வளம் பெருகட்டும்
   நலம் விளையட்டும்
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. ஆண்டாள் திருப்பாவை நன்று நண்பா.

  RépondreSupprimer
  Réponses
  1. நல்வருகை சிறக்கட்டும்
   நல் வளம் பெருகட்டும்
   நலம் விளையட்டும்
   நன்றி!நண்பா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. Réponses
  1. நல்வருகை சிறக்கட்டும்
   நல் வளம் பெருகட்டும்
   நலம் விளையட்டும்
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. பாசுரத்திற்குத் தெளிவான உரை தந்திருக்கிறீர்கள். படித்ததும் சந்தோஷமாக இருந்தது. நன்றி

  RépondreSupprimer
 9. நல்வருகை சிறக்கட்டும்
  நல் வளம் பெருகட்டும்
  நலம் விளையட்டும்
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer