"திருப்பாவை பாசுரம்:10"
மாயவனாகிய திருமாலைக் கட்டிப்போட ஆண்டாள்
இருவித மாலைகளைக் கட்டினாள்.
ஒன்று பூமாலை.
மற்றொன்று தமிழ் பாமாலை.
பாமாலையைப் பாடிச் சமர்ப்பித்தாள்.
பூமாலையைச் சூடி அரங்கனுக்கு உகந்து
அளித்தாள். அதனால்,
"சூடிக்கொடுத்த
நாச்சியார்'
என்னும்
பெயர் பெற்றாள்.
ஆண்டாள் என்றால் "ஆள்பவள்' . அவள் அன்பினால் பூமாலை புனைந்து கண்ணனை
ஆண்டாள்.
திருப்பாவை பாசுரம் - 10
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே
பொருள்:
முற்பிறவியில், எம்பெருமான்! நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக,
இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக்கின்ற பெண்ணே!
உன் இல்லக் கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை,
பேசவும் மாட்டாயோ?
நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த ‘நாராயணனை’
நாம் போற்றி பாடினால், அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான்.
முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு உதாரணமாகச் சொல்வார்கள்.
உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல் தெரிகிறது.
‘சோம்பல் திலகமே’
கிடைத்தற்கரிய அணிகலனே!
விளக்கம்:
யாராவது நன்றாகத் தூங்கினால் "சரியான கும்பகர்ணன்" என்று சொல்வார்கள்.
இது! ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன "நகைச்சுவை" உணர்வு என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது.
நகைச்சுவை உணர்வு ஆயுளை அதிகரிக்கும்.
"வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்" என்பார்கள்.
ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் மூலம் ஆயுள்விருத்தியைத் தந்திருக்கிறாள்.
பகிர்வு:
புதுவை வேலு
ஆண்டாள் பாசுரங்களில் பக்தியோடு நகைச்சுவையும் உள்ளது என்பதை அறிந்துகொண்டேன். அருமையான விளக்கத்திற்கு நன்றி!
RépondreSupprimerவணக்கம் அய்யா,
Supprimerதீங்கனியை தீண்டாது,
திருவரங்கனையே வேண்டி நின்றாளை "ஆண்டாள்"
அருங்கருத்து கொண்டு வாழ்த்தியமைக்கு
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
தமிழ் ஆளட்டும்
RépondreSupprimerதம +1
ஆளப் பிறந்த மொழி நம் செம்மொழி தமிழ்!
Supprimerநன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
ஆண்டாள் பாசுரத்தை விளக்கும் உங்களைப் போற்றுகிறேன்!
RépondreSupprimerதங்களது போற்றுதலுக்கு மேலும் உழைக்க வேண்டும் புலவர் அய்யா!
Supprimerஊக்கமிகு கருத்துரைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
திருப்பாவை பாசுரம் தொடர்கிறேன் நண்பா
RépondreSupprimerவாழ்வினை வளமாக்கும் வல்லமை கருத்து தந்தமைக்கு நன்றி நண்பா
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா
அற்புதமான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 6
எனது பக்கம் வாருங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மகிழ்வினை அளிக்கும் மங்களம் பாசுரம்
Supprimerநன்றி கவிஞரே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான பாசுரம்! அழகான விளக்கம்! நன்றி!
RépondreSupprimerகோதை ஆண்டாள் பாசுரம் பற்றி கருத்துரை தந்தமைக்கு நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
சிறு வயதில் மார்கழி மாதத்தில் அதிகாலையில் திருப்பாவை பாக்களை தந்தையிடம் ஒப்புவித்ததை நினைவு படுத்திவிட்டீர்கள்
RépondreSupprimerவாருங்கள் அய்யா!
RépondreSupprimerநினைவூட்டும் நிகழ்வோடு பாசுரத்தின் பயன்பாட்டை பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி
நட்புடன்,
புதுவை வேலு