mardi 29 décembre 2015

"திருவரங்கன் திருவடிக் கமலம் சடாரி" திருப்பாவை பாசுரம் 14

‘சடகோபம்’ ‘சடாரி’ 'நம்மாழ்வார் '











 
பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் ஒவ்வொருவரும் தீர்த்தம், திருத்துழாய் என்னும் துளசி, மஞ்சள் காப்பு, குங்குமத்துடன் சடாரியை சிரசில் தரித்துக் கொண்டால்தான் வேண்டுதல் வழிபாடு வெற்றிக் கொண்டதாகக் கருதுவார்கள்.

இறைவன் திருவடிக்கமலங்கள் சடகோபம் என்றும் சடாரி என்றும் நம்மாழ்வார் என்ற ஆழ்வார் பெருமானின் பெயராலும் அழைக்கப்படுகின்றன.
ஆழ்வார் பாசுரங்களை இசையும் ஆடலுமாக அரையர் சேவைஎன்று அபிநயத்துடன் காண்பிக்கும் வழக்கமும் இருந்து வருகிறது.
இன்றைக்கும் 'திருவில்லிபுத்தூர்' மற்றும் 'திருவரங்கம்' பெரியகோயிலில் இவ்வழக்கு சிறப்போடு இருந்து வருகிறது.

இக்கலை அழியாமல்   பக்திக் கலையாக என்றும் பாதுகாக்கப் பட வேண்டும்.


'ஆண்டாள்தான் தந்தருளிய பாசுரத்தில், அரங்கன் சரணாகதிக்குமுதன்மை தந்திருக்கிறார்

"இற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோட
உற்றமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
                                                              (திருப்பாவை- 29)















                                                                    நம்மாழ்வார்
சிறப்புக்குறிய சடாரி என்றால் என்ன? அறிவோமே!

திருவடியார்களை காப்பது திருவடி நிலை
திருவடி நிலையே பாதுகையாகும்,
பாதுகையே சடாரி எனப் படும்.

சடகோபன் என்னும் 'சடாரி' அல்லது 'பாதுகை' மூலம்தான் திருமாலின் திருவடிகளை தலையில் சமர்பித்துக் கொள்கிறேம்.

வைணவ ஆலயங்களில் திருமாள் திருவடிகளின் முன்பாக இருக்கும் பாதுகைகள் கொண்ட திருவடிமுடியே "சடாரி" எனப்படும்.







திருப்பாவை பாசுரம் : 14


உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள் 
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் 
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் 
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்! 
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் 
பங்கயக் கண்ணானைப் பாடேலோ எம்பாவாய்.
























பொருள்:


எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே!




கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே!




உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன.




ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன.



காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.


ஆனால்,பெண்ணே!


சங்கை ஊதி தர்மத்தின் தூக்கம் கலைப்பனும்’,


சக்கரத்தால் சதியின் தலையை கொய்பவனும்,  


சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடைய 



தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான,
கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே ?


















விளக்கம்:

கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது.
வாக்கு கொடுப்பது மிக எளிது.
அதைக் காப்பாற்ற முடியுமா? என தெரிந்து பேச வேண்டும்.
வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே ! என ஆண்டாள் வருந்துகிறாள்.
நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்தாகக் கொள்வோம்.


பகிர்வு
புதுவை வேலு






16 commentaires:

  1. அழகான பாடலுக்கு அற்புதமான விளக்கவுரை.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே,
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சடாரி பெற்றேன். திருப்பாவை படித்தேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer



  3. சடாரி பற்றிய விளக்கமும்,திருப்பாவை பாசுரம் 14க்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கமும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses

    1. நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. மங்களகரமான மார்கழியில் -
    தேனமுது போலத் தித்தித்திருக்கும் திருப்பாசுரம்..

    வாழ்க நலம்..

    RépondreSupprimer
    Réponses

    1. நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. சடாரி விளக்கம், அழகிய புகைப்படங்கள் என அனைத்தும் அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி,


      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. விளக்கத்துடன் அழகிய படங்கள் நன்று நண்பரே

    RépondreSupprimer
    Réponses

    1. நன்றி நண்பரே,
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. விளக்கம் பாடல் எல்லாமே அருமை....பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி ஆசானே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. விளக்கம் நன்று! சுவைத்தேன்!

    RépondreSupprimer
  9. நன்றி புலவர் அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer