பாடல் 2
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
பொருள்
திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து
விடுபட்டு,
அந்த பரந்தாமனின்
திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள்.
நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை
தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள்
அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய
சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது.
இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய
வேண்டும்.
விளக்கம்
ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக்
கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள்
கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை
தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள்
ஆண்டாள். இந்தப் பாடல் 107 வது திருப்பதியான திருப்பாற்கடல் குறித்து பாடப்படுகிறது.
சர்வதேச இடம்பெயர்வோர் தினம்
டிசம்பர் 18: இன்று சர்வதேச இடம்பெயர்வோர் தினம்
உலகளவில் இடம் பெயர்ந்தவர்களுக்குரிய, மனித உரிமைகள் வழங்கப்பட வலியுறுத்தி டிச., 18ம் தேதி, சர்வதேச இடம்பெயர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சமூக, பொருளாதார, கலாசாரத்தில் அவர்களும் முன்னேறுவதற்குரிய வழிமுறைகளை அனைத்து நாடுகளும் செயல்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
புலம் பெயர்ந்தார் புகும் தேசம்
நலம் நாடுவதே நல்!நன்றி!
அட, இன்றைக்கு இடம்பெயர்வோர் தினமா...
RépondreSupprimerசொந்த மண்ணை விட்டு இடம்பெயர்ந்தோர் அனைவருக்கும் இடம்பெயர்ந்தோர் தின வாழ்த்துக்கள்.
நல்வருகைக்கும், நல்ல கருத்தினை வாழ்த்தியமைக்கும் நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
RépondreSupprimerஆண்டாளின் அருள் பாசுரத்தின் இரண்டாம் பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி!
பன்னாட்டு புலம் பெயர்ந்தோர் நாளில் புலம் பெயர்ந்தோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
தெய்வத் தமிழாய் அமைந்த தெவிட்டாத தேன் பாசுரம் படித்து கருத்தினை பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
சென்னை வெள்ளத்தினால் ஏற்பட்ட துன்பங்கள் இன்னமும் நீங்கியபாடு இல்லை. வளசரவாக்கம் முதல் சாலிகிராமம் வரை சாலையின் இருபுறங்களிலும் சாக்கடை நீர் தேங்கி இருக்கிறது. புழுதிப் புயலாக இருக்கிறது.
RépondreSupprimerதுப்புரவு வேலைகள் துரிதமாக நடப்பதாகத் தெரியவில்லை.
மனம் நொந்து போய் இருக்கும் நேரத்தில் பரமனைத் துதிப்பதே வழி எனச் சொல்லிவிட்டீர் போலும்.
இன்றும் திருப்பாவையின் இரண்டாம் பாசுரம் பாடி என் மன வலியை நீக்க அக்கண்ணனை வேண்டி நிற்கின்றேன்.
இங்கு கேட்கலாம்.
www.menakasury.blogspot.com
சுப்பு தாத்தா.
நலப் பணியாளர்கள் பல்கிப் பெருக வேண்டும் அய்யா!
Supprimerபாசுரத்தை தங்களது குரலிசையில் கேட்டேன். அகம் மகிந்தேன்.
நன்றி! தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
இப்படியொரு தினம் இருப்பதை இன்றுதான் அறிந்தேன் நண்பா நன்றி.
RépondreSupprimer"இப்படியொரு தினம் இருப்பதை இன்றுதான் அறிந்தேன்"
Supprimerஅறிந்து அருங்கருத்து வழங்கியமைக்கு நன்றி நண்பா!
நட்புடன்,
புதுவை வேலு
கில்லர் போல நானும் இன்றுதான் அறிந்தேன்!
RépondreSupprimerபுலவர் அய்யாவின் வருகைக்கும், வாக்குக்கும் வளமான நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
ஆண்டாள் பாசுரம் கண்டேன். சர்வதேச இடம்பெயர்வோர் தினத்தை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.
RépondreSupprimerமுனைவர் அய்யாவின் வருகைக்கும், வாக்குக்கும் வளமான நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு