mardi 1 juillet 2014

உயிரில் கலந்த உறவு

சிறகுகள் இல்லாமல்
பறவைகள் இல்லை
உறவுகள் இல்லாமல்
மனிதர்கள் இல்லை

பயன் தரும் சிறகே
பறவைக்கு ஆயுதம் !
பயன் தரும் உறவே
மனிதருக்கு ஆயுதம் !

வண்டமிழ் உறவே !
தீண்டாமை உறவை...
தீயிட்டு கொளுத்துவோம் !
ஏழை எளியவர் உறவை
மேம்பட போற்றுவோம் !

பணத்தால்...!
உயர்ந்தவர் - தாழ்ந்தவர்
வேறுபாட்டை - எங்கும்
வேரொடு வீழ்த்துவோம் !

மனிதர் வாழ்வில் -
நன்மை எது ?
தீமை எது ?
எடுத்துச் சொல்லி
நல்வழி படுத்தும்
மூத்த உறவுகளை...
முத்தமிட்டு வணங்குவோம் !
அந்த...
உத்தம உறவுகளை
சத்தமிட்டு வாழ்த்துவோம் !
வாழ்த்துவோம் வாரீர் !!!

உயிரில் கலந்தே - இனி
உறவுகள் வாழ்க !




புதுவை வேலு

Aucun commentaire:

Enregistrer un commentaire