அவதாரப் புருஷரே! ஆன்மீக அரசரே!- நின்புகழை அரிநாமம் கொண்ட நான் போற்றுகின்றேன்! மண்ணில் மறைந்தாலும் விண்ணில் பறந்தாலும் கண்ணில் மறையாது கன்னித் தமிழ்போல் வாழியவே
நறுந் தமிழின்று நம்மைவிட்டு -வாலி அருந்தமிழ் அகலின் சுடரொளிப் பட்டு பருந்தாய் பறந்தே பரந்தாமனைத் தொட்டு பேருலகம் சென்றாய் கவிப் பெருந்தகையே வாழ்க!
பூமியில் மாண்டாலும் வாலியே! - நின்புகழ் பாண்டவர் பூமியிலும் ஓங்கி ஒலிக்குதப்பா! வராளி வைகுண்டம் வான்வழியிலும் தெரியுதப்பா! மாதவம் செய்கின்றோம் மாதவனே!- வாலியே நீ! மண்ணில் மீண்டும் "கிருஷ்ண விஜயம்" செய்வாயா?
Aucun commentaire:
Enregistrer un commentaire