mardi 29 juillet 2014

இன்று ஒரு தகவல் (மதிப்புமிக்க துண்டு காகிதம்)









வலைதள வாசகர்களே வணக்கம்

இன்று ஒரு தகவலை தருவதற்கு முன்பு இன்று உலகம் முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப் படும் புனித ரமலான்  பண்டிகைக்கு எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்!



பிறை கண்டு நிறை செய்யும் நோன்பு
இறை நபி அருளால் அடையுமே மாண்பு!



இஸ்லாமிய நன்பர்களுக்கு ஈகைத் திருநாள்  வாழ்த்துக்கள்.



மதிப்புமிக்க துண்டு காகிதம்


 (அஞ்சல் தலை)

 
 

அஞ்சாத மனம் படைத்த சிலரை சில சமயங்களில் அஞ்ச வைத்துவிடும்
தனிச் சிறப்பு அஞ்சல் தலைக்கு உண்டு! எப்படி என்று நீங்கள் யோசிப்பது எனக்கு புரிகின்றது.




சில முக்கியமான தபால்களை நாம் அனுப்பும்போது
  • அவசரத்தில் தபால் பெட்டியினுள் போட்டுவிடுவோம்! போட்டபின்பு அஞ்சல் தலை ஒட்டினோமா? இல்லையா?என்று நாம் அஞ்சுகிறோம் அல்லவா? அதைத்தான் குறிப்பிட்டேன் இங்கே! சரி இன்று ஒரு தகவல் நாம் அறிவோம்!
    இந்தியாவின் தலைநகரத்தையும் கிராமங்களையும் இணைக்கும் பாலமாகச் செயல்படுவது அஞ்சல் துறைதான். இந்தியாவில் செயல்படும் மத்திய அரசு துறைகளில் மிகவும் பழைமையான துறை அஞ்சல்துறை. அதுமட்டுமல்ல உலகின் மதிப்புமிக்க சிறிய துண்டுக் காகிதம் அஞ்சல் வில்லைதான்.
    1965, ஜனவரி 26 அன்று போயிங் - 707 எனும் விமானம் நியூயார்க் விமான நிலையத்திலிருந்து லண்டன் நகரத்தில் வந்து இறங்கியது. அந்த விமானத்தை உலக பத்திரிகையாளர்கள் சூழ்ந்துக்கொண்டார்கள். அந்த விமானத்திலிருந்து இறங்கியவர் ஃபின்பர் கென்னி எனும் இங்கிலாந்து நாட்டுக்காரர். அவர் பத்திரிகையாளர்கள் முன் வந்து நின்று ஒரு சென்ட் அஞ்சல் தலையைக் காட்டி இதை 2,00,000 பவுண்ட் மதிப்பீட்டில் இன்ஷ்யூர் செய்வதாக கூறினார். மேலும், இங்கிலாந்து நாட்டில் நடைபெறவிருக்கிற ஸ்டான்லி கிப்பன்ஸ் கேடலாக் நூற்றாண்டு விழாவில் இந்த அஞ்சல் தலைதான் கதாநாயகன் என்றும் அறிவித்தார். ஐரோப்பிய நாடுகளில் மறுநாள் அதுதான் தலைப்புச்செய்தி. அந்த அஞ்சல் தலைக்கு அப்படி என்னதான் சிறப்பு? உலகின் முதல் அஞ்சல் தலை அது.
    உலகின் முதல் அஞ்சல் தலையை வெளியிட்ட நாடு கியானா. "நாம் கொடுக்கிறோம், பதிலுக்கு நாம் பெறுகிறோம்' எனும் அதிகாரபூர்வமான வாசகத்துடன் அந்த தபால்தலையை அந்த நாடு வெளியிட்டது. அந்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டைச் சரியாகக் கணிக்க முடியவில்லை.




     
    1856-ஆம் ஆண்டு ஒரு நபர் அந்த அஞ்சல் தலையை வெறும் 6 ஷில்லிங் விலைக்கு ஒருவரிடம் விற்றார். அந்த அஞ்சல் தலை பல்லாண்டுகள் பல பேரிடம் கை மாறி கை மாறி கடைசியாக ஒரு ஆஸ்திரேலியர் வசம் வந்தது. அந்த அஞ்சல் தலையை கிப்பன்ஸ் (உலகின் முதன்முதலில் அஞ்சல் தலையை சேகரித்தவர்) நூற்றாண்டு விழாவிற்காக பிரிட்டிஷ் அரசு பெரிய தொகையைக் கொடுத்து வாங்கிவந்து கிப்பன்ஸ் தபால் தலை கண்காட்சியில் வைத்தது. அந்த தபால் தலை கருப்பு வெள்ளையில் அச்சடிக்கப்பட்ட எண்முக வடிவம்
    கொண்டதாகும். இது ஒரு புறமிருக்க, உலகின் மக்களுக்கான முதல் அஞ்சல் தலை எனப் போற்றப்படுவது பென்னி பிளேக் என அழைக்கப்படும் பிரிட்டன் நாட்டு அஞ்சல்தலையாகும். 1840, மே 6 அன்று அந்த தபால் தலையை அந்த அரசு வெளியிட்டது. அடுத்து அஞ்சல்தலையை வெளியிட்ட நாடு பிரேசில்.
    1688-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் காலூன்றிய பிறகு 1766-ஆம் ஆண்டு ராபர்ட் கிளைவ் தபால் முறையை ஒழுங்குப்படுத்தினார். முதல் தபால் போக்குவரத்து சென்னைக்கும், மும்பைக்கும் இடையே நடைபெற்றது.
    அது அரசு நிர்வாக அடிப்படையில் மட்டும் இயங்கியது. பிறகு 1774-ஆம் ஆண்டு முதல், தபால், பொது மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. 100 மைல் தூரம் வரை 2 அணா பெறப்பட்டு தபாலை உரியவரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கப்படும் எனும் உறுதிமொழியுடன் அஞ்சல் துறை செயல்படத் தொடங்கியது. அதை உறுதிப்படுத்துவதற்காக 1837-ஆம் ஆண்டு போஸ்ட் ஆபீஸ் சட்டம் இயற்றப்பட்டது. அந்தச்சட்டம்தான் இன்று வரை நடைமுறையில் இருக்கிறது. இந்தியா மற்றும் ஆசியாவின் முதல் அஞ்சல் தலை என்பது கிழக்கிந்திய கம்பெனியின் சின்னமான அகன்ற அம்புதான்.
    இந்திய சுதந்திரப்போராட்டத்தில் அஞ்சல் துறையின் பங்களிப்பு அளப்பரியது. தென்னாப்பிரிக்காவில் கருப்பர் இன மக்களுக்காகப் போராடிக்கொண்டிருந்த காந்தியை இந்தியாவிற்கு கொண்டு வந்துச் சேர்த்தது அஞ்சல் துறைதான்.
    காந்தியையும் ஜின்னாவையும், திலகரையும், பெரியாரையும், ராஜாஜியையும் ஒன்றுச்சேர்த்தது அத்துறையே. பிரிட்டிஷார் நினைத்திருந்தால் அஞ்சல் துறையின் வாயிலாக சுதந்திரப் போராட்டத்தையே முடக்கியிருக்க முடியும்.
    ஜாலியன் வாலாபாக் படுகொலை துயரச்சம்பவம் நடந்தேறிய பிறகு பிரிட்டிஷ் வைஸ்ராய்க்கு காந்தி எழுதிய கடிதம் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகும். அந்தக்கடிதத்தை இன்றும் இங்கிலாந்து அரசு பாதுகாத்து வருகிறது.
    அன்றைய பிரிட்டிஷ் அரசு நினைத்திருந்தால் அந்தக்கடிதத்தை முடக்கியிருக்க முடியும். ஆனால், அன்றைய அரசு அப்படி செய்திடவில்லை. பிரிட்டிஷார் காலத்தில் அஞ்சல் துறை கடமை, கண்ணியத்துடன் இயங்கியது.
    இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, ஜின்னா } நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
    என் வாழ்நாளில் நான் செய்த பெரிய தவறு, இந்திய தேசத்திலிருந்து பாகிஸ்தானைப் பிரித்ததுதான்.
    அந்தக் கடிதம் இன்றும் இந்திய நாடாளுமன்றத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அத்தகைய சிறப்பு மிக்க அஞ்சல் துறை இன்று இயங்கும் விதம் கவலையளிப்பதாக உள்ளது.
    அஞ்சல் துறை இன்று நஷ்டத்தில் இயங்கி வருகிறது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அதே நேரம், வருமானத்தை பெருக்கும் பொருட்டு தொடங்கப்பட்டப் பல்வேறு திட்டங்களை மேலும் முனைப்புடன் செயல்படுத்தி அஞ்சல் துறையின் வருமானத்தை பெருக்கலாமே.
    அஞ்சல் துறையில் கிராம ஆயுள் காப்பீடு மூலமாக பணம் சேமிக்கும் முறை இருக்கிறது. தபால்காரர்களிடம் மக்கள் காப்பீடு எடுத்துக்கொள்கிறார்கள். அத்தோடு சரி. அதன்பிறகு மக்கள் அதை தொடர்ந்து புதுப்பிக்க அஞ்சல் அலுவலர்கள் மக்களுக்கு தூண்டுகோளாக இருப்பதில்லை.
    உலக நாடுகளில் தபால் வில்லைகளில் அதிகமாக இடம்பெற்றத் தலைவர் இந்தியாவின் தேசத்தந்தை எனப் போற்றப்படும் காந்தியே. முதலில் தபாலை விமானத்தில் அனுப்பி புரட்சிச் செய்த நாடு இந்தியா.
    1911 பிப்ரவரி, 18 அன்று 6,500 கடிதங்களுடன் அலகாபாத்திலிருந்து ஒரு விமானம் நைனிடால் நோக்கிச் சென்றது. ஏர் மெயில் தபால் வில்லையை வெளியிட்ட முதல் நாடும் இந்தியா. "அட்ஹெஸிவ்' வில்லை என அழைக்கப்படக்கூடிய பின்புறம் பசையுடன் கூடிய வில்லையை வெளியிட்டதும் இந்தியாதான்.
    அத்தகைய சிறப்புமிக்க இந்திய அஞ்சல்துறை வருமானத்தில் குன்றி, தாற்காலிக ஊழியர்களைக்கொண்டு தத்தளிப்பதை எண்ணி கவலைப்படாமல் இருக்க முடியவில்லை. 


    வலைதளங்களின் வாழ்விற்கு அஞ்சல் தலை தனது சிறப்பை சீராக தந்து விட்டதோ  என்னவோ?



    புதுவை வேலு
    நன்றி(sura-dinamani)
     

    Aucun commentaire:

    Enregistrer un commentaire