jeudi 17 juillet 2014

தீ யே திருந்தி விடு!



தீ யே திருந்தி விடு!




எந்த கோணம் பார்த்தாலும்
அந்த கோணம் மறைவதில்லை!
பள்ளிப் பிள்ளைகள் "தீ"யில் வெந்தக் கோணம்!

அதுதான் கும்ப கோணம்.

 



                                  



பத்து ஆண்டுகள் நகர்ந்ததப்பா!

"94" முத்துக்கள் தீயில் கருகி தகர்ந்தப்பா!

விறகு சுள்ளிகள்  எல்லாம்
பிறகு பள்ளிகள் ஆனால்?
"தீ"க்கு தீனி வேறு எங்கு கிடைக்குமப்பா?


நீதியின் தீர்ப்பே நீ எங்கே போனாய்?
தமிழர் வேஷ்டி_யின் சிறப்பை...
உலகிற்கு உணர்த்தவா போனாய்?

புதுவை வேலு




2 commentaires:

  1. செடிகளாக நிற்கும் செல்லப் பிள்ளைகளை
    பார்க்கும்பொழுது நெஞ்சம் பொறுக்குதில்லையே!
    இந்த நிலைகெட்ட மாந்தரை நினைக்கும்பொழுது
    தீ யே இளஞ் செடிகளை இனி தீண்டாதே!

    ராஜ் சுமி

    RépondreSupprimer
  2. இது போன்ற விபத்துகளை விசாரணை கமிசனுடன் மறந்த்துவிடுவதுதான் அவலம் !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    RépondreSupprimer