samedi 26 juillet 2014

இன்று ஒரு தகவல்(பொன்னியின் செல்வன்)

கல்கி வார இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியருமான ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்ற கல்கி, தமிழ் மொழியின் தலை சிறந்த சரித்திர நாவலாசிரியர். பலராலும் விரும்பி படிக்கப்பட்ட அவரது மாபெரும் படைப்பான, பொன்னியின் செல்வன்,

ஆக., 3, 2014ல் கல்கி வார இதழில், மீண்டும் ஆரம்பமாகிறது. இதுகுறித்து, தற்போதைய கல்கி இதழ் ஆசிரியரும், கல்கியின் பேத்தியுமான லட்சுமி நடராஜனும், கல்கி பொறுப்பாசிரியர், ஆர்.வெங்கடேஷும், வாரமலர் இதழுக்கு அளித்த பேட்டி:
கடந்த பல ஆண்டுகளாக, சென்னை புத்தக கண்காட்சியிலும், மற்ற புத்தக விற்பனை விழாக்களிலும், தொடர்ந்து மிக அதிகமாக விற்பனை ஆகும் புத்தகம், என் தாத்தா எழுதிய பொன்னியின் செல்வன் தான். விற்பனையில் மாபெரும் சரித்திரம் படைத்துள்ள பொன்னியின் செல்வனுக்கு, மற்றொரு சாதனையும் உண்டு.
தமிழ் வார இதழ்களில் வெளிவந்த, சரித்திர தொடர் கதைகளில், மிக அதிக காலம், வெளியான தொடரும், இது தான். அக்., 29, 1950ல் கல்கி வார இதழில் ஆரம்பித்து, 1954ம் ஆண்டு வரை, வாரா வாரம் வெளியாகி, லட்சக்கணக்கான வாசகர்களால் விரும்பி படிக்கப் பட்ட தொடர்கதை இது.
'ராஜ ராஜ சோழனின் இளம் பிராயத்தில் சோழ நாட்டிலும், ஈழ நாட்டிலும் நிகழ்ந்த மகத்தான சரித்திரக் கதை. அக்., 29, 1950ல் இதழில் ஆரம்பம்' என்ற எளிமையான வாசகத்துடன், அக்., 22, 1950ல் வெளியான கல்கி இதழில் அரை பக்க அறிவிப்புடன் ஆரம்பமானது, பொன்னியின் செல்வன்.
'சாதனை படைத்த சரித்திர நாவலுக்கு இவ்வளவு சின்ன விளம்பரம் தானா?' என, விளம்பர உக்திகளை அறிந்த எவருக்கும், இது ஆச்சரியமாகத்தான் இருக்கும். வேறு எந்தவித பப்ளிசிட்டியும் கிடையாது.
என் தாத்தா, பொன்னியின் செல்வன் கதையை ஆரம்பிப் பதற்கு முன், பெரிய அளவில் குறிப்புகளோ, கதைச் சுருக்கமோ வைத்திருந்ததாக தெரியவில்லை. எல்லாமே அவரது மனதில் தான் இருந்திருக்க வேண்டும். தொடர்கதை ஆரம்பித்த பின், அவரும், தன் சிறந்த ஓவியங்களால், கதையின் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த ஓவியர் மணியமும், கதை நிகழும் பல இடங்களுக்கு பயணம் செய்து, சரித்திர நிகழ்வுகளை மீண்டும் உறுதிப்படுத்தி கொண்டுள்ளனர்.
என் தாத்தா ரெகுலராக யோகா செய்வார்; அவருக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தது. யோகா பயிற்சி, அவருக்கு நல்ல, 'ரிலீப்'பை வழங்கியது. அவர் காலையில் யோகா செய்யும் போது, என் தந்தை கல்கி ராஜேந்திரன் அப்போது இளைஞனாக அவருடன் இருந்து, கடிகாரத்தைப் பார்த்து, ஒவ்வொரு ஆசனம் செய்யும் போதும், எவ்வளவு நிமிடங்கள் என்று சொல்ல வேண்டும். மூன்று நிமிடம் சிரசாசனம் செய்ய வேண்டிய என் தாத்தா, பாதியிலேயே திடீரென்று குதித்து எழுந்து, 'சேந்தன் அமுதனை ராஜாவாக ஆக்கிவிட்டால் என்ன?' என்று கூறுனாராம். யோகா செய்யும் போது கூட அவருக்கு இந்த யோசனை தான் இருந்திருக்கிறது.. பொன்னியின் செல்வன் நூலின் கரு, அவரது உடலிலே ஊறிப் போயிருந்திருக்கிறது.
பொன்னியின் செல்வன் நாவலில், 42 முக்கிய பாத்திரங்கள் உண்டு. அவற்றைத் தவிர, நிறைய, உப கதாபாத்திரங்கள், கதைக்குள் கதை என்று நிறைய கிளை கதைகள் மற்றும் திருப்பங்கள் உண்டு. ஆனால், அவை அனைத்தும், நேர்த்தியாக, அழகாக பின்னப்பட்டிருக்கும். எந்த பாத்திரமோ, நிகழ்வோ, நாவலில் அந்தரத்தில் விடப்படவில்லை, அனைத்தும் நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கும்.
ஐந்து மாபெரும் சாதனை யாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் செயல்பாட்டில் கல்கி உருவானது. டி.கே.சி.,யின் இலக்கிய பின்னணி, சதாசிவத்தின் வியாபார, விற்பனை, நிர்வாக திறமை, கல்கியின் ஆசிரியர் பணி,
எம்.எஸ்., அம்மாவின் மூலதனம், குருவாக ராஜாஜியின் வழி காட்டுதல் போன்ற இவர்களால் தான் கல்கி உருவாகி, வளர்ந்து நிற்கிறது என்கிறார், லட்சுமி நடராஜன்.

கல்கி இதழின் பொறுப் பாசிரியர், ஆர்.வெங்கடேஷ் தொடர்ந்து கூறுகிறார்:
கடுந்தமிழிலிருந்து விடுபட்டு, தன் எளிய பழகு தமிழ் மூலம் அனைத்து வாசகர்களையும் கவர்ந்தவர் ஆசிரியர் கல்கி. பத்தாம் நூற்றாண்டில் சோழர் காலத்திய கலாசாரம், கலை, வாழ்க்கை முறை, இயற்கை வளம், எல்லாமே பொன்னியின் செல்வனில் அழகாக, சுவையாக காணப்படும். இப்போதைய, 21வது நூற்றாண்டிலிருந்து நாம் மகிழ்ச்சியாக, பத்தாவது நூற்றாண்டிற்குள் சென்று ரசிக்கலாம்.
கல்கி வசித்த அடையாறு வீட்டில், இரவு நேரங்களில் தான் கல்கி எழுதுவார். மறுநாள் ஓவியம் மணியம் அருகில் இருந்து, அவர் எழுதியதை ஓவியத்தில் வடித்து காண்பிப்பார். தான் நினைத்த மாதிரி ஓவியங்கள் வரும் வரை, திருத்தி திருத்தி கரெக் ஷன் சொல்லி, மாற்றச் சொல்வார் கல்கி. முழு திருப்தி வந்த பின் தான், ஓவியங்களை ஓ.கே., செய்வார்.
மணியம் பல நாட்கள் அங்கேயே இருந்து, படங் கள் வரைந்து, கல்கி எதிர்பார்க்கிற காட்சி, முகபாவம் அனைத்தையும் கொண்டு வருவார். ஒவ்வொரு வாரமும், இரண்டு அத்தியாயங்கள் வரும். குறைந்தது பதினாறு பக்கங்கள், ஐந்து ஓவியங்களுடன். வேறு எந்த தொடர்கதைக்காவது வாரம் ஐந்து அல்லது ஆறு ஓவியங்கள் போட்டி ருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஒவ்வொரு அத்தியாயத்திலும் நிறைய விஷயங்கள் இருக்கும். விறுவிறுப்பாக கதை நகரும்.
கல்கியின் வாழ்க்கை சரிதையை, எழுதிய, சுந்தா, கல்கியை ஒரு, 'மர்மிஸ்ட்' என்று குறிப்பிடுவார். அதாவது, ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒரு மர்மம் இருக்கும். படிக்க, ஆரம்பித்தால், முடிக்காமல் இருக்க முடியாது என்பார் சுந்தா.
ஏஜென்டுகள் சந்திப்பு, வாசகர் சந்திப்பு போன்ற நிகழ்வுகளில், பலரும் மீண்டும், பொன்னியின் செல்வன் கதையை தொட ராக வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அக்., 29, 1950லிருந்து, ஓவியர் மணியம் வரைந்த ஓவியங்களுடன், 1954 வரை, அந்த தொடர் வந்தது. அடுத்து, ஓவியர் வினு, வரைந்த ஓவியங்களுடன் இந்த தொடர், 1968 - 1972 ஆண்டுகளில் வெளியானது. மூன்றாம் முறையாக, 1978 - 82ல் மீண்டும் ஓவியர் மணியம் வரைந்த படங்களுடன், தொடர் வந்தது. நான்காவது முறையாக, 1998 - 2002ல் ஓவியர் பத்மவாசன் ஓவியங்களுடன், இந்த தொடர் வெளிவந்தது.
இப்போது, அடுத்த தலைமுறையினர் இந்த நாவலை படித்து மகிழ வேண்டும் என்பதற்காக, மீண்டும் வெளியிட முடிவு செய்தபோது, யாருடைய ஓவியங்களை போடலாம் என்று விவாதித்தோம். தற்போது பத்திரிகைகளில் படங்கள் வரையும் ஓவியர்களில், புராண சரித்திர கதைகளுக்கு பொருத்தமான ஓவியங்கள் வரையும் ஒரு சில ஓவியர்களில், வேதா தனித்தன்மையோடு வரைவது தெரிகிறது. எனவே, கல்கி இதழின், 73வது ஆண்டு ஆரம்பத்தில் வரவிருக்கும் இந்த தொடருக்கு, வேதா ஓவியங்கள் வரைவது மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தோம்.
கல்கியின் தற்போதைய ஆண்டு சந்தா, 800 ரூபாய். நான்கு ஆண்டுகளுக்கு, 3,200 ரூபாய். பொன்னியின் செல்வன் தொடர்கதை ஆரம்பமாவதை ஒட்டி சிறப்பு சலுகையாக, 25 சதவீதம் குறைத்து, 2,400 ரூபாய் என்று சிறப்பு சந்தா சலுகை தரவிருக்கிறோம். மற்றும் வாசகர்களுக்கு விசேஷ போட்டிகளும் உண்டு.
உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களை சென்று அடையும் வகையில், 'டிவி' பத்திரிகைகள், இணைய தளம் என்று பல ஊடகங்கள் மூலமும், விளம்பரங்களை பெரிய அளவில் செய்யவிருக்கிறோம்.
சமீபத்தில் அரிய முயற்சியாக, 'பொன்னியின் செல்வன்' மேடை நாடகமாக அரங்கேறியிருக்கிறது. எல்லா காட்சிகளும், அரங்கு நிரம்பிய காட்சிகளாக, பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. இந்த நாடகத்தை, அரங்கிற்கு வந்து ரசித்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் தான் என்பது, குறிப்பிடத்தக்கது. இளைஞர்கள் இந்த தொடரை ரசித்து, விரும்பி, படிப்பர் என்பதற்கு, இது ஒரு அத்தாட்சி.
பொன்னியின் செல்வன் தொடர்கதையில், சம்பவங்கள் இடம் பெறும் தஞ்சாவூர், வீராணம் ஏரி, கொடும்பாளூர், பழையாரை, கோடிக்கரை, இலங்கை போன்ற இடங்களில், சோழ சாம்ராஜ்யம் பற்றிய வரலாற்று சரித்திர சான்றுகள் இன்றும் உள்ளன.
வாருங்கள், இப்போதைய, 21ம் நூற்றாண்டிலிருந்து, காலச்சக்கரத்தில் பின்னோக்கிச் சென்று, பத்தாம் நூற்றாண்டில், வந்தியத் தேவன், அருள்மொழி வர்மன், குந்தவி, பூங்குழலி உள்பட அனைவரையும், அனைத்தையும் ரசித்து மகிழலாம்.
— இப்படி கூறி முடித்தார் வெங்கடேஷ்.

பொன்னியின் செல்வன் நாவலை, மங்கள நூலகம் என்ற நிறுவனம் தான், முதன் முதலில் புத்தகமாக கொண்டு வந்தனர். ஆனால், பொன்னியின் செல்வன் புத்தகத்தை, கல்கி பார்க்கவில்லை. டிச., 5, 1954ல் அவர் மறைந்து, சில காலம் கழித்து தான், புத்தகம் வந்தது. சரித்திரம் படைத்த, படைத்து கொண்டிருக்கும் இந்த நாவலை, புத்தக வடிவில் அவர் பார்க்கவில்லை என்பது வருத்தமான விஷயம்.
கல்கியும், டி.கே.சி.,யும் இணைந்து, நிறைய இலக்கிய கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றுவர். இலக்கிய கூட்டங்கள் என்று தற்போது அழைக்கப்படும் கூட்டங்களுக்கு, அப்போதைய பெயர்: வட்ட தொட்டி. ஆசிரியர் பணியில் ரொம்ப பிசியாக இருந்தாலும், இலக்கிய கூட்டங்களுக்கு நேரம் ஒதுக்கி, பேசுவார் கல்கி.
கடந்த, 1958ல் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்க எம்.ஜி.ஆர்., விரும்பினார். மூன்று ஆண்டுகளுக்குள் திரைப்பட பணி ஆரம்பிக்க முடியாததால், மீண்டும் மூன்று ஆண்டுகள் நீடித்து ஒப்பந்தம் போட்டார். என்ன காரணத்தினாலோ, அந்த முயற்சி, கைவிடப்பட்டது. பின், பல ஆண்டுகள் கழித்து கமலும், அதற்குப் பின் மணி ரத்தினமும் இந்த கதையை படமாக்க முயன்றனர். அவர்களும் முயற்சியை கைவிட்டு விட்டனர்.
கடந்த, 1999ல்  கல்கியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப் போதைய காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தலைமையில், கல்கி நூற்றாண்டு கமிட்டி, இந்தியாவின் பல முக்கிய நகரங்களிலும், தமிழ்நாட்டின் பல முக்கிய இடங்களிலும், கல்கிக்கு விழா எடுத்து, கொண்டாடினர். மத்திய அரசு, கல்கியின் உருவம் பதித்த தபால் தலை வெளியிட்டு கவுரவித்தது. மேலும், அவரது படைப்புகளை தேசியமயமாக்கியது. அதன்படி, 1999க்கு பின், யார் வேண்டுமானாலும், கல்கியின் எழுத்துக்களை புத்தகமாக வெளியிட லாம்.
ஐந்து பகுதிகள் கொண்ட, பொன்னியின் செல்வன் நாவல், 190 ரூபாயிலிருந்து 1,350 ரூபாய் வரை பல விலைகளில் கிடைக்கிறது. இந்த கதை தொடராக வந்த போது, ஓவியங்கள் வரைந்த மணியம் ஒரிஜினல் ஓவியங்களுடன், ஆனந்த விகடன் பதிப்பகம் ஐந்து பகுதிகள் கொண்ட தொகுப்பை வெளியிட்டிருக்கிறது.
இந்த நாவலின் இடையே, கல்கி எழுதியுள்ள பல பாடல்களும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு முறை பொன்னியின் செல்வன் தொடர், கல்கியில் ஆரம்பமாகும் போதும், கல்கி வார இதழ் விற்பனை, மிகப்பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது. எழுதப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், தமிழ் வாசகர்கள், விரும்பி அந்த தொடரை படித்து, ரசித்து வந்திருக்கின்றனர்.
பொன்னியின் செல்வன் நாவலை எழுதி முடித்த பின், கல்கி 'அமரதாரா' என்ற சமூக தொடர்கதை எழுதினார். ஆனால், பாதியிலேயே, கல்கி அமரராகி விட்டார். கல்கியின் மகள் ஆனந்தி, கல்கியின் குறிப்புகளிலிருந்து, அமரதாராவை தொடர்ந்து எழுதி முடித்தார்.

ஓவியர் வேதா சென்னை ஓவிய கல்லூரியில், 1981 முதல் 1985 வரை படித்தவர். பட்டம் பெற்ற பின், பிரபல ஓவியர் மணியம் செல்வனிடம் உதவியாளராக இருந்தார். 'பொன்னியின் செல்வன், தொடர்கதைக்கு ஓவியம் வரையும் வாய்ப்பு கிடைத்தது, முற்றிலும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே இந்த கதைக்கு, பிரமாதமாக ஓவியங்கள் வரைந்திருக்கும் ஓவிய மேதைகளின் படங்களிலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டும். அதே சமயம், கதைக்கும், காட்சி அமைப்பிற்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, சற்று பயத்தோடும், மிகுந்த பொறுப் போடும் ஓவியங்களை வரைகிறேன். கல்கி ஆசிரியர் குழுவின் அங்கீகாரம் கிடைத்திருப்பது போல, தமிழ் வாசகர்களும், என் ஓவியங்களை விரும்புவர் என்று நினைக்கிறேன்...' என்றார் வேதா.

எஸ்.ரஜத்

ஓவியர் வேதா சென்னை ஓவிய கல்லூரியில், 1981 முதல் 1985 வரை படித்தவர். பட்டம் பெற்ற பின், பிரபல ஓவியர் மணியம் செல்வனிடம் உதவியாளராக இருந்தார். 'பொன்னியின் செல்வன், தொடர்கதைக்கு ஓவியம் வரையும் வாய்ப்பு கிடைத்தது, முற்றிலும் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி. ஏற்கனவே இந்த கதைக்கு, பிரமாதமாக ஓவியங்கள் வரைந்திருக்கும் ஓவிய மேதைகளின் படங்களிலிருந்து மாறுபட்டு இருக்க வேண்டும். அதே சமயம், கதைக்கும், காட்சி அமைப்பிற்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, சற்று பயத்தோடும், மிகுந்த பொறுப் போடும் ஓவியங்களை வரைகிறேன். கல்கி ஆசிரியர் குழுவின் அங்கீகாரம் கிடைத்திருப்பது போல, தமிழ் வாசகர்களும், என் ஓவியங்களை விரும்புவர் என்று நினைக்கிறேன்...' என்றார் வேதா. நன்றி! (தினமலர் - எஸ்.ரஜத்)

புதுவை வேலு

Aucun commentaire:

Enregistrer un commentaire