அவள் அழகுறப்
பேசினால்
அரச மரத்துக்
கிளிகளெல்லம்
ஆலோலம் பாடுவதை
நிறுத்திவிட்டன
கிளிப் பிள்ளையாக
நான்!
அவள் சினம்
கொண்டால்
கொப்பளிக்கும் தீ
பிழம்பை
உள்வாங்கிக்
கொண்டது எரிமலை
பனிமலையின்
பக்கத்தில் நான்!
அவள் சாந்தம்
ஆனால்
"சாந்தசொருபினி"
அவளுக்கு சாமரம்
வீசினால்
பசுவின்
பக்கத்தில் நான்!
அவள் மெல்ல
நடந்தாள்
"பூமித்
தாயின்" பாதங்களுக்கு
ஒத்தடம்
தருவதற்கு ஒத்திகை நடந்தேறியது
பஞ்சுமெத்தையின்
பக்கத்தில் நான்!
என்னவளே
ஏழு
சுரங்களுக்கும் "ஆதி" - நீ
பதினாறு
ராகங்களின் மீதி நான்!
புதுவை வேலு
கனியின் சுவையை காட்டிலும் காதலின் சுவை இனியது என்பதை "என்னவளே"
RépondreSupprimerகவிதையில் உணர்ந்தேன். நறுமலரின் வாசம் உங்கள் கவிதை வரிகளில் வீசுகிறது.கவியே கவி பல புனைக! புதுப் புனலாய் உருவெடுத்து வருக! வருக!
ராஜ் சுமி
" மங்கையவள் கடைக்கண்ணை காட்டினால், மண்ணின் மைந்தர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் " எவ்வளவு உண்மை ! நயமும் சுவையும் நர்த்தனமாடுகின்றனவே !
RépondreSupprimerநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு !
http://saamaaniyan.blogspot.fr/2014/07/blog-post_22.html
( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )
அன்புக்கு (காதல்) நான் அடிமை
RépondreSupprimerஎன்னவள் என்னை கடத்தி விட்டாள்
நான் பட்டாம்பூச்சியாக பூவை தேடி அலைகிறேன்
மறுபடியும் அடுத்த கவிதைக்காக காக்க வைத்த புதுவை வேலு அவர்களுக்கு பாராட்டுகள்.
sattia