ஐயிரண்டு
திங்களிலே அன்னை யவள்
மையிரண்டு
முகமுடைய யுன்னை
ஓங்கிய ஓசை யொளித்து ஈன்றெடுப்பாள்
பாலூற்றை
பண்புடனே பகிர்ந்தளிப்பாள்
குழிவிழுந்த
குங்குமச் சிமிழுன் கன்னத்தில்
முத்தமழை
மும்மாரி பொழிந்திடுவாள்
அன்பின் அணைகட்டி
அழகின் சிரிப்புடனே
அதில் சென்று
நீந்திடுவாள்
எண்ணிரண்டு
பதினாறு அகவைநீ! காணும்வரை
தன்னிரண்டு
விழிகளை பதித்திடுவாள்
நல்லோர்
நவின்றுறைத்த நற்கல்வி உனக்களித்து
உலக நலம்
மேம்படவே செய்திடுவாள்
தன் நலம் பேணாத
தாயவளை தூயவளாய்
பொன் உலகில்
இனங்காண
அவள்தாழ்
போற்றிப் பணிந்திடுக!
அன்னையை ஆராதனை
செய்திடுக!
உள்ளம் உருகியது நெஞ்சம் நெருடியது புதுவை வேலு அவர்களே
RépondreSupprimerஉங்களின் உண்மையான தாய்ப் பாசம் கவிதையை காணும்போது.
தாயின் ஆசிர்வாதம் உங்களுக்கு நிச்சயம் கிட்டும். வாழ்க!
ராஜ் சுமி
எல்லா உயிர்களுக்கும் தாய் உண்டு
RépondreSupprimerதாய்யை சிறந்த தெய்வமும் இல்லை
தாயின் ஸ்பரிசத்தை அறிந்தவர் நாம்
நாம் பெரும் சுகங்கள் தாய்க்கு
சமர்ப்பணம்