vendredi 16 janvier 2015

உழவர் திருநாள் / காணும் பொங்கல் வாழ்த்துக்கள்







வணக்கம் செலுத்தி
வாழ்த்தினைப் பெறுக!

மணக்கும் தமிழ் போல்
மங்கலம் பெறுக!

இணக்கம் செய்து
நட்பினை பேணுக!

உணவை படைத்த
உலகின் இறைவன்

"உழவர் திருநாள்"
காணும் பொங்கலில்

வாழ்த்தினை பகிர்வோம்
வாரீர்! வாரீர்!

புதுவைவேலு








 கவிச் சக்கரவர்த்தி கம்பனின் பார்வையில் வேளாண்மையின் சிறப்பு



ஏரெழுபது என்பது,

 
வேளாண் தொழிலின் சிறப்புப் பற்றிக் கம்பர் எழுதிய நூலாகும். உழுகருவி, வேளாண்மையில் எருதுகளில் பயன்பாடு, வேளாண்மைச் செயற்பாடுகள், வேளாளர்கள் சிறப்பு என்று பல்வேறு வகையான செய்திகளை  இந்த நூலில் சுவைபட கூறுகிறார் கம்பர். 




இந்நூல் வேளாண்மையின் அறுபத்தி ஒன்பது சிறப்புகள் பற்றி கூறகிறது.
  1. உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்பு
  2. ஏர்விழாச் சிறப்பு
  3. அலப்படைவாள் சிறப்பு
  4. மேழிச் சிறப்பு
  5. ஊற்றாணிச் சிறப்பு

  1. நுகத்தின் சிறப்பு
  2. நுகத்துளைச் சிறப்பு
  3. நுகத்தாணியின் சிறப்பு
  4. பூட்டு கயிற்றின் சிறப்பு
  5. கயிற்றின் தொடைச் சிறப்பு

  1. கொழுவின் சிறப்பு
  2. கொழு ஆணியின் சிறப்பு
  3. நாற்றுமுடி, தாற்றுக்கோல் சிறப்பு
  4. உழும் எருதின் சிறப்பு
  5. எருதின் கழுத்துக்கறை சிறஉழும் எருதின் சிறப்பு
  6. எருதின் கழுத்துக்கறை சிறப்புப்பு

  1. எருது பூட்டுதற் சிறப்பு
  2. ஏர் பூட்டலின் சிறப்பு
  3. ஏர் ஓட்டுதலின் சிறப்பு
  4. உழுவோனின் சிறப்பு
  5. உழவின் சிறப்பு

  1. உழுத சாலின் சிறப்பு
  2. மண்வெட்டியின் சிறப்பு
  3. வரப்பின் சிறப்பு
  4. எருவிடுதலின் சிறப்பு
  5. சேறாக்கலின் சிறப்பு

  1. பரம்படித்தலின் சிறப்பு
  2. வித்திடுதலின் சிறப்பு
  3. முளைத்திறனின் சிறப்பு
  4. நாற்றங்காலின் சிறப்பு
  5. நாற்று பறித்தலின் சிறப்பு

  1. முடி இடுதலின் சிறப்பு
  2. உரிய இடத்தினில் முடிசேர்த்தலின் சிறப்பு
  3. நடவு மங்கலப்பாட்டின் சிறப்பு
  4. பாங்கான நடவின் சிறப்பு
  5. உழுதலுடனே நடவு செய்தலின் சிறப்பு

  1. சேறாக்கி எருவிடுதலின் சிறப்பு
  2. வேளாண்மை முதலாதலின் சிறப்பு
  3. பயிர் வளர்திறத்தின் சிறப்பு
  4. நாளும் நீரிறைத்தலின் சிறப்பு
  5. பாய்ச்சும் நீரின் சிறப்பு

  1. நிலம் திருத்தலின் சிறப்பு
  2. சால்பலபோக்கி புழுதியாக்கலின் சிறப்பு
  3. பயிர் நட்டாரின் சிறப்பு
  4. நீர் பாய்ச்சுதலின் சிறப்பு
  5. களைநீக்கலின் சிறப்பு
  6. கருபிடித்தலின் சிறப்பு

  1. கதிர் முதிர்தலின் சிறப்பு
  2. கதிரின் பசிய நிறசிறப்பு
  3. கதிரின் தலைவளைவின் சிறப்பு
  4. விளைவு காத்தலின் சிறப்பு

  1. அறுவடை கொடையின் சிறப்பு
  2. அறு சூட்டின் சிறப்பு
  3. களம்செய்தலின் சிறப்பு
  4. போர் அடிவலியின் சிறப்பு
  5. அடிகோலின் சிறப்பு

  1. போர் சிறப்பு
  2. போர்க்களப் பாடலின் சிறப்பு
  3. இரப்பவரும் தோற்காச் சிறப்பு
  4. நாவலோ நாவல் என்பதன் சிறப்பு
  5. எருது மிதித்தலின் சிறப்பு

  1. நெற்பொலியின் சிறப்பு
  2. நெற்குவியலின் சிறப்பு
  3. நெற்கூடையின் சிறப்பு
  4. தூற்றுமுறத்தின் சிறப்பு
  5. பொலி கோலின் சிறப்பு

  1. நெற்கோட்டையின் சிறப்பு
  2. கல்மணிகளின் சிறப்பு
  3. வேளாளர் பெறும் பேற்றின் சிறப்பு
  4. நன்மங்கல வாழ்த்து உள்ளிட்டவையாகும்
 



ஏரெழுபது - வேளாளர் சிறப்பு

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞ்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே.




வேளாண் குலத்திற்கு நிகரில்லை

வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய நிதிவண்கர் தம்குலமுஞ்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலந் தனக்குநிக ருண்டாகிற் கூறீரே. 


வேளாண் குடிச் சிறப்பு

ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார்
ஊழித்தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ
வாழித்தேவர் திருமக்கள் வையம் புரக்கும் பெருக்காளர்
மேழித்தொவர் பெருமைக்கு வேறே தேவர் கூறேனே.


உழும் எருதின் சிறப்பு

வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே
ஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே
சேனைகொடு பொருமன்னர் செருக்களத்திற் செகுக்குமத
யானைவலி யெவராலே இவரெருத்தின் வலியாலே. 



வரப்பின் சிறப்பு

மெய்வரம்பா நிற்கின்ற வேதநூல் நெறிவரம்பாம்
இவ்வரம்பும் அவ்வரம்பும் இப்புவிக்கு வரம்பாமோ?
பொய்வரம்பு தவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர்
செய்வரம்பு திருத்தாரேல் திசைவரம்பு திருந்தாதே. 



உழுதலுடனே நடவு செய்தலின் சிறப்பு

உலகத்திற் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர்
அலறத்திண் பகடுழுக்கும் அதுவுமொரு முனையாமோ?
உலகத்திற் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர்
சிலவருழச் சிலவர்நடு முனையன்றோ திருமுனையே. 



உழுவோனின் சிறப்பு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்

தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுகில்

எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது

பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே












திருக்கை வழக்கம்




திருக்கை வழக்கம் என்பது வேளாண் பெருமக்களின் கொடைக்

குணத்தைச் சிறப்பித்துக் கூறும் நூலாகும். இந்நூல் 59 கண்ணிகளைக் 

கொண்டு, வெண்டளையான் வந்த கலிவெண்பாவாகும். இராமாயணம்

இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் திருக்கை வழக்கமும்

ஒன்றாகும்.


இவர் கம்ப இராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, திருக்கை வழக்கம் முதலிய

ஒன்பது நூல்களை எழுதியுள்ளார்.




விதைநெல்லைச் சோறாக்கி வழங்கிய கை

அம்பொன்
வளைவாரி வையகமும் வானகமும் போற்ற
முளைவாரி வந்த முழுக் கை. 3


அபயம் கொடுக்கும் கை
கண்ட அளவில்
நீலி தனக்(கு) அஞ்சி நின்ற வணிகேசனுக்காக்
கோலி அபயம் கொடுக்கும் கை. 15


ஏரோட்டம் நின்றால் தேரோட்டம் நிற்கும்
கடல் சூழ்ந்த
பார்பூட்டு மன்னர் பரிகர பூட்டக் கதிரோன்
தேர் பூட்ட ஏர் பூட்டும் செம்பொற் கை. 20



யானைப் பரிசில் தரும் கை
வென்றி தரும்
ஓர்ஆனை; நூறாயிரக் கலம்நெல் ஓர் கவிக்குச்
சீராக நல்கும் தியாகக் கை. 50



கோ தானம் செய்த கை

கனக்கவே
அன்(று) ஈன்ற நா(கு) எழுபதான எருமைத் திறத்தைக்
கன்றோடு நல்கும் கடகக் கை. 49



நீடூழி நிலைக்கும் கற்பகக் கை
தொடுத்த தெல்லாம்
சீராக உண்டாக்கும் செங்கைப் பெருங்கருணைக்
காராளர் கற்பகப் பூங் கை. 59




உலகைத் தழைக்கச் செய்யும் கை
கார் படைத்த
மிஞ்சுமதி கீர்த்தியைப் போல் மேதினி எல்லாம் தழைக்கச்
செஞ்சாலி நாற்றைத் தெளிக்கும் கை. 23



பொன் வழங்கும் பொற்கை
நீள் உலகில்
ஆதுலர்க்குச் செம்பொன் அளிக்கும் கை, ஆகமங்கள்
வேத புராணங்கள் விரிக்கும் கை. 27



பஞ்சத்திலும் வழங்கிய பங்கயக் கை
பார் அறியச்
சங்கை இட்டுத் தள்ளாமல் தன் சோற்றை வந்தவர்க்குப்
பங்கை இட்(டு) இரட்சித்த பங்கயக் கை. 36



விளை நிலத்திற்கு வேலியிட்ட கை
அம்பொன்
விளை பயிரைப் பார்த்து விரைகால் புலத்தை
வளைய மதில் இட்டு வரும் கை. 38




தெய்வப் புலவர் திருவள்ளுவரின் பார்வையில் வேளாண்மையின் சிறப்பு 









பால்: பொருட்பால். இயல்: குடியியல். அதிகாரம்: உழவு.

குறள் 1031:

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
மு. வரதராசன் உரை:
உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது; அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது.


குறள் 1032:

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
மு. வரதராசன் உரை:
உழவு செய்ய முடியாமல் உயிர் வாழ்கின்றவர் எல்லாரையும் தாங்குவதால், உழவு செய்கின்றவர் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்.


குறள் 1033:

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
மு. வரதராசன் உரை:
உழவு செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர்; மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.


குறள் 1038:

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
மு. வரதராசன் உரை:
ஏர் உழுதலைவிட எரு இடுதல் நல்லது; இந்த இரண்டும் செய்து களை நீக்கிய பிறகு, நீர் பாய்ச்சுதலை விடக் காவல் காத்தல் நல்லது.



குறள் 1052:

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

 உரை:
வழங்குபவர், வாங்குபவர் ஆகிய இருவர் மனத்திற்கும் துன்பம் எதுவுமின்றி ஒரு பொருள் கிடைக்குமானால், அப்பொருள் இரந்து பெற்றதாக இருப்பினும் அதனால் இன்பமே உண்டாகும்.



குறள் 1039:

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
மு. வரதராசன் உரை:

நிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால், அந்நிலம் அவனுடைய மனைவியைப் போல் வெறுத்து அவனோடு பிணங்கி விடும்.




காணும் பொங்கலின் கருப் பொருள் நாயகர்களாம் கவிச் சக்கரவர்த்தி கம்பனையும்,
தெய்வப் புலவர் திருவள்ளுவரையும் நினைவுகூர்ந்து  செம்மொழியாம் தமிழ் மொழியினை வாழ்த்தி வணங்கி வழிபடுவோமாக!

நட்புடன்,
புதுவை வேலு
 




 








 


15 commentaires:

  1. Réponses
    1. கம்பனின் கவி போல்
      வள்ளுவனின் குறள் போல்
      அன்பரே நீவீர் பெறுக! பெருஞ்சிறப்பு!
      வருகைக்கு மிக்க நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சிறந்த பதிவு நண்பரே
    காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. கம்பனின் கவி போல்
      வள்ளுவனின் குறள் போல்
      அன்பரே நீவீர் பெறுக! பெருஞ்சிறப்பு!
      வருகைக்கு மிக்க நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமையான தகவல்கள், பாடல்கள், விளக்கங்கள்.

    இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா! நல்ல ஒரு பதிவு!

    RépondreSupprimer
    Réponses
    1. கம்பனின் கவி போல்
      வள்ளுவனின் குறள் போல்
      அன்பரே நீவீர் பெறுக! பெருஞ்சிறப்பு!
      வருகைக்கு மிக்க நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருமையான பதிவு.
    வேளாளர் பெறும் பேற்றின் சிறப்பை அழகாய் சொன்னீர்கள்.
    உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. கம்பனின் கவி போல்
      வள்ளுவனின் குறள் போல்
      நீவீர் பெறுக! பெருஞ்சிறப்பு!
      வருகைக்கு மிக்க நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வணக்கம்
    ஐயா.
    சிறப்பான கருத்தாடல்... கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. கம்பனின் கவி போல்
      வள்ளுவனின் குறள் போல்
      அன்பரே நீவீர் பெறுக! பெருஞ்சிறப்பு!
      வருகைக்கு மிக்க நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அருமையான பதிவு. விளக்கவுரை அருமை
    காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
    நண்பரே இந்த பதிவு டேஷ்போர்டில் திறக்க வுடியவில்லை வேறுவழியில் உள் நுளைந்தேன்.
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    RépondreSupprimer
    Réponses
    1. கம்பனின் கவி போல்
      வள்ளுவனின் குறள் போல்
      அன்பரே நீவீர் பெறுக! பெருஞ்சிறப்பு!
      வருகைக்கு மிக்க நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. கம்பர் மற்றும் திருவள்ளுவரின் பார்வையில் உழவரின் சிறப்புகள் அருமை. கம்பர் என்றால் ராமாயணமே அதிகமாக பெசுபவரிடத்தில், திருக்கை வழக்கம், ஏரேழுபது, போன்ற அறிய பதிவுகளை தொகுத்து வழங்கிய முறை சிறப்பு, புதுவை வேலு அவர்களே. வாழ்த்துகள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  8. கம்பனின் கவி போல்
    வள்ளுவனின் குறள் போல்
    அன்பரே நீவீர் பெறுக! பெருஞ்சிறப்பு!
    வருகைக்கு மிக்க நன்றி
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  9. நின் தொண்டு உனை ஏற்றும்.....

    RépondreSupprimer