jeudi 22 janvier 2015

"எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்"











"குழலின்னிசை" பதிவினை தொடர்ந்து படித்து வரும்
நண்பர் ஒருவர் என்னிடம் சமீபத்தில் கூறுகையில்,
என்னது உனது பதிவில், அன்பு,  மனித நேயம்,  நட்பு,  நன்னெறி விளக்கம்,  என்றே அதிக அளவில் எழுதி வருகின்றாயே!
இது இன்றைய சூழலில் எங்கே இருக்கிறது?
அது அனைத்தும் சுய நலம்! சுத்த ஹம்பக்!

உண்மையை வெளிச்சம் போட்டு எழுது!
இருக்கும் நிலையை வெளிச்சம் போட்டு காட்டு!
பணத்தை சார்ந்தே பாதை வகுக்கும் உலகம் இது!
நடப்பதை வெளிச்சம் போட்டு காட்டு! என்றாரவர்!

நான் அவருக்கும்,  அவரது கருத்தை ஆமோதிக்கும் அன்பர்களுக்கும்
இதன் மூலம் சொல்லிக் கொள்வது இதுதான்!
உங்களது கருத்தில் நியாயம் இருப்பது போல்தான் தோன்றும். அத்தகைய பணிகளை பல்வேறு வகையான ஊடகங்களும், செய்தித் தாள்களும் செய்து வருகின்றனவே!

அச்சம் தரும் செய்திகளை அள்ளித் தந்து மனிதருக்குள் இருக்கும் துணிவினை கிள்ளி எறிவதற்கு நான் யார்?

அன்றைய கல்விமுறையில் நன்னெறி வகுப்பு  நடத்தப் பட்டது. இப்போது அது நகர்த்தப் பட்டது.

ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய பெற்றோர்களும், பணிச் சுமையின் காரணமாக,  பிள்ளைகளுக்காக பணத்தைச் சுமந்து வர அயல் நாடுகளில் அதிக அளவில் அல்லாடுகிறார்கள்!

 இதனால்தான் ஒழுக்கமானது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கின்றது.









1)
பாதகம் செய்பவரை கண்டால் நீ

பயம் கொள்ளல் ஆகாது பாப்பா

மோதி மிதித்து விடு பாப்பா !

அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா !





2)

அச்சம் இல்லை அச்சம் இல்லை

 அச்சம் என்பது இல்லையே!

இச்சகத்து உ(ள்) ளோர் எலாம்

 எதிர்த்து நின்ற போதிலும்

அச்சம் இல்லை அச்சம் இல்லை 

 அச்சம் என்பது இல்லையே!

துச்சமாக எண்ணி நம்மைத்

 தூறு செய்த போதிலும்

அச்சம் இல்லை அச்சம் இல்லை

 அச்சம் என்பது இல்லையே!


பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை

 பெற்றுவிட்ட போதினும்

அச்சம் இல்லை அச்சம் இல்லை
 
 அச்சம் என்பது இல்லையே!


கச்சு அணிந்த கொங்கை மாதர்

 கண்கள் வீசு போதிலும்

அச்சம் இல்லை அச்சம் இல்லை

  அச்சம் என்பது இல்லையே!


நச்சை வாயிலே கொணர்ந்து

 நண்பர் ஊட்டும் போதினும்

அச்சம் இல்லை அச்சம் இல்லை 

அச்சம் என்பது இல்லையே!


பச்சை ஊன் இயைந்த வேல்

 படைகள் வந்த போதினும்

அச்சம் இல்லை அச்சம் இல்லை

 அச்சம் என்பது இல்லையே!


உச்சிமீது வான்இடிந்து

 வீழுகின்ற போதினும்

 அச்சம் இல்லை அச்சம் இல்லை

 அச்சம் என்பது இல்லையே!


-மகாகவி பாரதியார்


என்ற பாரதியின் கவிதைகளில்தான் அச்சத்தை போக்கிடும்
அரும் மருந்துகள் அடங்கி உள்ள அல்லவா?







3)

வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு

விளையாட போகும் போது சொல்லி வைப்பாங்க!

உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க!

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை

வேடிக்கையாகக்கூட நீ நம்பி விடாதே! - நீ

வீட்டிற்க்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே!


- பாவலர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்.




 "இளந்தளிறுக்கு நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சிய பொதுவுடமை

கருத்தினை போதித்த பாவலர் பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம்

 பாடலில்தான் !

எத்தகைய நம்பிக்கை காற்று வீசுகிறது!

இதுபோன்ற நம்பிக்கை நாற்றை இன்று நாம் நட்டால்

நாளை துணிவுள்ள பாரதம் தூய்மையான பாரதம் மலராதா?

என்ற ஏக்கம்தான் நண்பரே !
 
இதுபோன்ற பதிவுகள் மலர்வதற்கு காரணம்.

சிறிதளவு பலன் கிடைத்தாலும் எனது பாக்கியமே!

தமிழ்கூறும் நல்லுலகிற்கும் நன்றி!




திருமதி.மனோ சாமிநாதன் 

 

 



"ஒரு பழைய பாட்டு இருக்கிற‌து,  சீர்காழி கோவிந்தராஜன் பாடியது,

 'எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்'

 என்று! அதை என் கொழுந்தனார் தன் மொபைலில் வைத்திருக்கிறார்.

அவருக்கு ஃபோன் செய்பவர்கள் எல்லோருமே, 'உடனே எடுத்து விடாதீர்கள்

அந்தப்பாடலை கொஞ்சம் கேட்கிறோம்' என்பார்களாம்! நல்ல

வார்த்தைக்களுக்கும் நல்ல இசைக்கும் மனிதர்கள் எப்படி அடிமையாகிறர்கள்

பாருங்கள்!" என்று (22/01/2015) 

வலைச்சரத்தில் ராகங்கள்- 3 ல், திருமதி.மனோ சாமிநாதன்  அவர்கள்

குறிப்பிட்டு எழுதி இருந்தார்கள். 

அம்மையாருக்கு மிக்க நன்றி !

இதுபோன்ற நல்வினைக் கருத்துக்களை எடுத்துச் சொன்னமைக்கு! 

எனது நினைவில் நித்தமும் நீந்திவரும் "கருப்புப் பணம்" படத்தில்

இடம்பெற்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல்/  சீர்காழி கோவிந்தராஜன் 

அவர்கள் குரலில் ஒலித்த பாடல் இதுதான்:!



பாடல்



எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்...இங்கு

 இல்லாமை இல்லாத நிலைவேண்டும்!

வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை- நீங்கி

 வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை! 


இருட்டில் மறைந்து கொள்ள விளக்கணைப்பார் - சிலர்

 கிணற்றில் இருந்து கொண்டு உலகளப்பார்! 

நெருப்பை மடியில் வைத்து மறைத்திருப்பார் - அந்த

 நீசரை யார் உலகில் பொறுத்திருப்பார்


பாலென அழுவோர்க்குப் பால் தருவோம்- பசுங்

 கூழெனத் துடிப்போர்க்குச் சோறிடுவோம்!

தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - யாவும் 

 தனக்கென நினைப்போரைச் சிறையிடுவோம்!


 (குழுவினருடன்)

எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் - இங்கு

 இல்லாமை இல்லாத நிலைவேண்டும்!

வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை - நீங்கி

 வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை!

எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்.



இந்த பாடலைத் தொடர்ந்து இது தொடர்பாக நான் படித்தறிந்த நன்னெறிக் 

கதையினை பகிர்ந்தளிக்கின்றேன்.




"எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்"

 

 

 







ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள்,

 புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள்

சண்டை ஏற்பட்டது. விஷயம் முனிவரிடம் வந்தது. அவர் சீடர்களிடம்

சீடர்களே! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய 

தாமதாமாகும். அதோ! இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும்

பழங்களைப் பறித்து வாருங்கள், என்றார். குருவிடம் மிகவும் பணிவாக

நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை

நெருங்க முடியாமல், முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடன் சற்று

பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே

தாண்டில் மரத்தை தொட்டான். பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான்.


மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா!

கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன், என்றான் பெருமையோடு.


இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி

ஒரு பாதை அமைத்தான். அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு

வந்தனர். அவர்கள் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று, பழங்களைப்

பறித்து சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். சிஷ்யனும்

தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்தான். இப்போது முனிவர்

முதல் சீடனிடம், இரண்டாவது சீடன் தான் அதிபுத்திசாலி

என்றார்.முதலாமவன் கோபப்பட்டான். சுவாமி! இன்னும் போட்டியே

வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படி சிறந்தவன் என சொன்னீர்கள்?

என்றான்.முனிவர் அவனிடம், சிஷ்யா! நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு

வகை போட்டி தான்! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது

சுயநலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய்.

நான் மட்டுமே பலன் அடைந்தேன். இரண்டாம் சீடனோ பாதையைச் 

சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும் இன்னும் பல நாட்கள்

பழங்கள் கிடைக்கும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே

அதிபுத்திசாலி, என்றான்.இங்கே செயல் ஒன்று தான். ஆனால், செய்த

விதத்தில் தான் வித்தியாசம்.

சிறக்கட்டும் சிறப்புத் தமிழ்!

தழைக்கட்டும் நல்லொழுக்கம்

நலம் பெறுவோம்!

வளம் பெறுவோம்!

புதுவை வேலு

நன்றி: தினமலர்

50 commentaires:

  1. கதம்பமாக சிறப்பான பதிவு நண்பரே...

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறன்தே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகின்றதே
      நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
      ஏற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. அருமையாக எழுதியிருக்கிறீர்கள் வேலு! பாராட்டுக்கள்! உங்களை மாதிரி இளைஞர்கள் நல்ல சிந்தனைகளை தொடர்ந்து எழுதும்போது மனதில் எதிர்காலத்தைப்பற்றியும் இளந்தலைமுறைகளைப்பற்றியும் நம்பிக்கை பிறக்கிறது. தளராமல் தொடர்ந்து நற்சிந்தனைகளை எழுதுங்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறன்தே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகின்றதே
      நறுந் தமிழ் அன்னை நாவின் கருத்தை
      ஏற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. உண்மைதான் ! தனிமனித ஒழுக்கம் மட்டுமே ஒரு சமுதாயத்தை செம்மை படுத்தும். அதே நேரத்தில் அந்த ஒழுக்கமும், நேர்மையும் முற்றிலும் மறைந்துவிடவுமில்லை.

    தனித்த நிலையில் யோசிக்கும் ஒவ்வொருவனையும் அவனது மனசாட்சி அவனை சுயபரிசோதனையில் ஈடுபடுத்திக்கொண்டுதான் இருக்கும் ! என்ன ஒன்று... சமூகத்தின் ஜாதி, மத, சுயலாபநோக்க அரசியல், வணிகம் என குழு மனப்பான்மைக்கு வித்திடக்கூடிய பரப்புரைகள் மேலோங்கும்போதுதான் மனிதன் மனிதத்தை மறந்துவிடுகிறான் !

    தொடரட்டும் உங்கள் பணி !

    நன்றி
    சாமானியன்

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறன்தே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகின்றதே
      நறுந் தமிழ் அன்பர் நாவின் கருத்தை
      ஏற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. நல்ல சிந்தனை...
    அருமையான எழுத்து...
    பாராட்டுக்கள் நண்பரே...

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. நல்லாக்கங்கள் தொடர்ந்து மலரட்டும்...அருமையான செய்திகளை தொடர்ந்து அள்ளித்தாருங்கள்...வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்னை 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. உங்களுடைய சிந்தனைகளைப் பாராட்டுகிறேன். தனி மனித ஒழுக்கம் என்பது சமூக கலாச்சாரத்துடன் பின்னி இணைந்து இருக்கிறது. அதனால்தான் ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தை அழியாமல் காக்கவேண்டும் என்று அறிஞர்க்ள சொல்கிறார்கள். ஆனால் இன்றுள்ள இளைஞர்களுக்கு ஏன் சில பெரியவர்களுக்கே கூட அந்த உணர்வு இல்லை.

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. நல்ல மேற்கோள்களுடன், நன்றாகவே எழுதி இருக்கிறீர்கள். கவிஞர் கண்ணதாசனின் “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்” எனக்கும் பிடிக்கும். வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வணக்கம்

    தாங்கள் எழுதும் ஒவ்வொரு படைப்புகளையும் நான் இரசித்து படிப்பதுவழக்கம். தங்களின் நண்பன் கேட்ட வினாவுக்கு.. நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள். அத்தோடு இறுதியில் சொல்லிய. சீடன் குரு கதையும் நன்று.
    அன்பு எங்கு இருக்கோ.அங்கு மனித நேயம் இருக்கும் மனித நேயம் இருந்தால். நல்ல செயல் பிறக்கும்...இப்படியாக சொல்லிக்கொண்டு போகலாம்...பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. பேசும் பேச்சு, மேற்கொள்ளப்படும் செயல், நடந்துகொள்ளும் முறை, பழகும் பாங்கு என்ற நிலைகளில் நிதானமாகவும் அன்பாகவும் பொறுமையாகவும் இருக்கும் நிலையில் மனம் வளர்ச்சி அடையும். அதே நேரத்தில் எதிர்மறை எண்ணங்களைத்தவிர்ப்பதும் சூழலை மேம்படுத்தும். நல்ல உதாரணங்கள். இதுபோன்ற பதிவு இன்றைய சமுதாயத்திற்குத் தேவை.

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. நண்பர் யாதவன் நம்பி என்கிற புதுவை வேலு,

    படித்தேன் பதிவை. மனிதம் வளர்க்கும் பணியில் தொடர்ந்து பதிவுகள் எழுதிக்கொண்டிருக்கும் உங்களுக்குப் பாராட்டுக்கள். வாழ்க்கை சிறிய நிகழ்வுகளால் ஆனது என்று சொல்வார்கள். அந்த சிறிய நிகழ்வுகளில் ஒளிந்திருக்கும் அன்பை மனித நேயத்தை அடையாளம் காட்டுவது இன்றை சூழலில் மிக அவசியம்.

    திருமதி மனோ சாமிநாதனின் வலைச்சரம் 3இல் குறிப்பிட்டிருந்த எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் பாடல் பற்றிய குறிப்பை கண்டதுமே அவர்களுக்குப் பதில் எழுத நினைத்தேன். முடியவில்லை. உங்களின் இந்தப் பதிவைக் காண்கையில் நான் எழுத நினைத்த சில எண்ணங்களை நீங்கள் எழுதிவிட்டதாகவே தெரிகிறது. பாடலுக்கு கவிதை தேவையில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மையில்லை என்பதை உணர்த்தும் பாடல்.

    வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. அனைத்தும் சிறப்பான பாடல்...

    சீர் படுத்தும் எண்ணங்கள் தொரட்டும்... சிறக்கட்டும்...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. அன்புள்ள அய்யா,

    "எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்"-கவியரசர் கண்ணதாசனின் பொதுவுடைமைப் பாடல் நாட்டிற்கு நல்ல கருத்தைச் சொல்லும் அருமையான பாடல்.
    அன்பு, மனித நேயம், நட்பு, நன்னெறி விளக்கம், என்றே அதிக அளவில் எழுதி வருவது மிகவும் நல்ல விசயம்தானே! அவைகளை நாடித்தானே தேடித்தானே சமூகம் செல்லவேண்டியிருக்கிறது.
    பாரதியின் ‘அச்சமில்லை...அச்சமில்லை’ பாட்டு பயமில்லாமல் மனிதன்இருக்கப் பாடிய உச்சத்தின் எச்சம்.
    பாதகம் செய்பவரை கண்டால் நீ

    பயம் கொள்ளல் ஆகாது பாப்பா…

    மோதி மிதித்து விடு பாப்பா !

    அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா !......


    பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை

    பெற்றுவிட்ட போதினும்

    அச்சம் இல்லை அச்சம் இல்லை

    அச்சம் என்பது இல்லையே!
    தன் வாழ்க்கையில் பட்ட துன்பத்தை பாட்டில் வடித்த மேதையவர்.

    பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் ‘வேப்ப மர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு’

    மூடநம்பிக்கை ஒழிக்க மிகமிக அருமையான பாடல்... இளைய சமுதாயம் அவசியம் கேட்டுப் பயனடையவேண்டிய கருத்துள்ள பாடல்.
    நான்கூட ஒரு பாடலை ரிங்டோனாக வைக்கவேண்டி நினைத்திருக்கிறேன்.
    ‘எல்லோருக்கும் நல்ல வாழ்க்கை உண்டு’ பாலுமகேந்திரா‘மறுபடியும்’ படத்தில் இடம் பெற்ற பாடல் என்று எண்ணுகிறேன்.
    முனிவர் சீடர் கதை எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே சிறந்தவன் என்ற சிந்தனை நன்றாக இருந்தது.
    குழல் இசை இனிது!


    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer

  14. வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை- நீங்கி

    வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை! -----வாழ்த்துக்கள்......அடுத்த தி. தனபாலன் வந்துவிட்டார் என்று படிக்கும்போது தோன்றியது.....!!!!

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் அருமையான பதிவு. நற்சிந்தனைகள் தூண்டும் வரிகள். நல்ல ஆக்கம் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்னை 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. அருமையான பதிவு. பாரதியாரையும், பட்டுக்கோட்டையாரையும் ஒருங்கே நினைக்க வைத்துவிட்டீர்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. நல்ல ஆக்கம் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. அருமையான பதிவு! நல்ல கருத்துக்களை முன்வைப்பதிலும் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பதிலும் நல்லது செய்துவரும் தங்கள் பணி தொடர்க! மிக நல்லபதிவு !

    உலகம் சமனிலை பெற வேண்டும்
    உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்

    RépondreSupprimer
  19. வருகை வளம் பெருகி வழிகிறதே
    தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
    நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
    பெற்றேன் நவின்றேன் நன்றி!

    இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  20. நீங்கள் சொன்னதுபோல அன்றைய கல்விமுறையில் நன்னெறி வகுப்பு நடத்தப்பட்டது. இப்போது அதெல்லாம் மறைந்தொழிந்துவிட்டது
    திரை கடலோடியும் திரவியம் தேடு என்றார்கள் நம் முன்னோர்கள். அதற்காக செய்யவேண்டிய கடைமைகளை செய்யவேண்டாம் என சொல்லவில்லை. ஆனால் இன்று எல்லோரும் பொருளீட்டுவதிலேயே கருத்தாய் இருப்பதால் தனி மனித ஒழுக்கம் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பூனைக்கு யார் மணி காட்டுவது என்பதுதான் இப்போதைய நிலை.

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் அன்பர் 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  21. எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் பதிவு அழகு.
    அன்பு, மனிதநேயம், நன்னெறி விளக்கம் போன்ற ஒழுக்கமான வார்த்தைகளை வைத்து பின்னிய பதிவு அருமை. இதில் நம்பிக்கை இல்லை என்ற நண்பர், ஒருவர் புதுவை வேலு அவர்களுக்கா ?
    நன்றி.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் சத்தியா 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  22. எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
    ஆகா என்னவொரு பாடல்
    உலகம் சமனிலை பெறட்டும்
    உயர்வு தாழ்விலா நிலையினை அடையட்டும்
    அருமை
    நன்றி நண்பரே

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் கரந்தையார் 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  23. ஆஹா பாடலும் கதையும் அருமை.....நீங்கள் கூறுவது உண்மை தான்...அழிவைச்சொல்ல ஆயிரம் இதழ்கள் உண்டு அன்பை சொல்ல உங்கள் கவிகள் பயன்படட்டும்..வாழ்த்துகள்

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் சகோ.கீதா 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  24. குழல் இன்னிசை மிக இனிமை. பகிர்ந்த விஷ்யங்கள் அனைத்தும் மிக அருமை. பாரதியார் பாடல், பட்டுக்கோட்டையார் பாடல், மனோசாமிநாதன் குறிப்பிட்ட பாடல், கதை என்று பதிவு மிக அருமை.
    எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.
    வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
    உறுப்பினர் ஆகி விடுகிறேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் சகோ. கோமதி அரசு 'நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  25. //அன்றைய கல்விமுறையில் நன்னெறி வகுப்பு நடத்தப் பட்டது. இப்போது அது நகர்த்தப் பட்டது.

    ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய பெற்றோர்களும், பணிச் சுமையின் காரணமாக, பிள்ளைகளுக்காக பணத்தைச் சுமந்து வர அயல் நாடுகளில் அதிக அளவில் அல்லாடுகிறார்கள்!

    இதனால்தான் ஒழுக்கமானது ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கின்றது.//

    சரியாகச் சொன்னீர்கள். மிக அழகாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துகள். மனதுக்கு இதம் தரும் பதிவு.

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் சகோ' Geetha Sambasivam நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  26. கடந்த மூன்று நாட்களாக வலைப்பக்கத்திற்கு வர இயலாமல் போய்விட்டது.

    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற இந்த சிந்தனை எத்தனை பேருக்கு வரும்.
    பாராட்டுக்கள் நண்பரே.

    RépondreSupprimer
    Réponses
    1. வருகை வளம் பெருகி வழிகிறதே
      தரும் கைகள் அருங்கருத்தை பொழிகிறதே
      நறுந் தமிழ் சகோ' Chokkan Subramanian நா'வின் கருத்தை
      பெற்றேன் நவின்றேன் நன்றி!

      இனிய வருகை! இனிய கருத்து! இன்பம்!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer