jeudi 1 janvier 2015

இறைவனைத் தேடி (சிறுகதை)




ஏய் 'டிம்பிள்' சீக்கிரமாய் கிளம்பு!
போய் அண்ணனை கூப்பிட்டு வா!
நாம் எல்லோரும்  கோவிலுக்கு போகனும் டைம் ஆச்சு!
அம்மா! 'வாணி'யின் குரலை கேட்டதும் பட்டாம் பூச்சு போல் பறந்து வந்தாள் கையில் சீப்புடன் தலை வாரி பூ சூடிக்கொள்வதற்கு !
வயசு பத்து ஆகுது! இன்னமும் தலை வாரிக் கொள்ளத் தெரியவில்லை ! என்றால், பார்ப்பவர்கள் என்ன சொல்லுவார்கள்? என்னைத்தான் கேளியாய் பேசுவார்கள்! என்று தன்னைத் தானே நொந்துக் கொண்டு, அழகுற தலை சீவி அழகு பார்த்தாள் தனது மகளை!
அம்மா இன்று என்ன டிபன்? என்று கேட்டபடியே  கிச்சனுக்குள் நுழைந்தான் அவளது 12 வயது மகன் 'விஜய்'
உனக்கு பிடித்த வெண் பொங்கல், தேங்காய் சட்னி, ஸ்வீட் கேரட் அல்வா செய்திருக்கிறேன். கை அலம்பிட்டு வா ! சாப்பிடலாம் என்று சொல்லிய பின்பு,
அவனுக்கு பரிமாறி கொண்டே, அவன் உண்ணும் அழகை ரசித்து அழகு பார்த்தாள். சரியான நேரத்தில் அப்பா அழகேசனும் அங்கு ஆஜர் ஆனார்.
டிபனை முடித்து கொண்டு நால்வரும் காரில் ஏறி பயணமானார்கள்.
 "ஏங்க இப்ப நாம் எந்தக் கோவிலுக்கு போகிறோம்?"
வா! பிறகு சொல்லுகிறேன்!
ஏன் டாடி! அதான் வந்துட்டோம் இல்லே! சொல்லுங்களேன் ப்ளீஸ் - இது 'டிம்பிளின்' வாய்ஸ்!
நான் சொல்லட்டுமா "லிங்கா" படத்துக்குத்தானே? என்றான் 'விஜய்'!
மூவரும் போட்ட கேள்வி முடிச்சுக்களை  அவிழ்த்து, பதிலை சொல்வதற்குள்,
அவர்கள் போக வேண்டிய இடம் வந்தே விட்டது.
"வெல்கம் மிஸ்டர் அழகேசன்" !
'வாங்க! எல்லோரும்', என்று உள்ளே அழைத்தார்.
அந்த அனாதை ஆஸ்ரமத்தின் தலைமை நிர்வாகி "ஜோசப்"
நீங்க சொன்ன மாதிரி, எல்லா ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது. பிள்ளைகள் அனைவரும் தயாராக உள்ளனர் என்றார்.
உடனே அழகேசன் காரில் தான் வாங்கி வந்திருந்த இனிப்புகளை தனது மனைவி வாணியிடமும்மகன் விஜயிடமும்மகள் டிம்பிளிடமும்  கொடுத்து ஆஸ்ரமத்தில் உள்ள அனைவருக்கும் கொடுக்கச் செய்தார்.
சற்று நேரத்தில் அழகேசன் ஏற்பாடு செய்த சுற்றுலா பேருந்து ஆஸ்ரமத்தை வந்தடைந்தது. 

பின்பு தன் ஆபீஸ் மூலம், அழகேசன் வாங்கி வந்த மொத்தம் 40  டிக்கெட்டுகளையும் எடுத்து, 'ஜோசப்' கரங்களில் கொடுத்தார். முப்பத்தி இரண்டு பிள்ளைகளோடு அவர்களும்(4+4) இணைந்து, அனைவரும் பேரூந்தில் ஏறி அமர்ந்ததும் வண்டி புறப்பட்டது!
எங்கு தெரியுமா?
   "டிஸ்னி லேண்ட்" (Disneyland)  நோக்கி!



அப்போது பேரூந்தில் உள்ள அனைவரது ஒட்டுமொத்தக்குரலிலும்,
மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓங்கி ஒலித்தது என்ன தெரியுமா?

"WISH YOU HAPPY NEW YEAR 2015"

 

"புத்தாண்டு  நல்  வாழ்த்துக்கள்" 

அழகேசன் அவரது குடும்பத்தை அழைத்து  சென்ற கோவில் இதுதானோ?

 

புதுவை வேலு

 

(சந்தோஷத்தில் மிகப் பெரிய சந்தோஷம் பிறரை சந்தோஷப் படுத்தி பார்ப்பதுதான் --பாக்யா-
அதிலும் குறிப்பாக  இதுபோன்றவர்களை சந்தோஷப் படுத்தி பார்ப்பதுதான் - மனிதம்! மனிதநேயம்!) 

45 commentaires:

  1. நல்லதொரு மனிதநேயக்கதை. அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      நல்லதொரு கருத்தாழமிக்க கருத்தினை
      பதிவு செய்தமைக்கு, மனித நேயம் போற்றும்
      நண்பர் சொக்கன் அவர்களே!
      மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சிறப்புச் சிறுகதை வெகு சிறப்பு
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      வெகு சிறப்பு என்று சொல்லி வெகுமதியாக வெல்லம் போல் இனிக்கும் கருத்தினை அளித்தீர்கள்! எறும்பாக ஊர்ந்து சுவைத்தேனய்யா!
      வருகைக்கும், கருத்தினை தந்தமைக்கும் மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமை....

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      "வார்த்தைச் சித்தரின்" பெருமைமிகு கருத்திற்கும், வாழ்த்திற்கும்
      இனிய நன்றி! நண்பரே!
      வருகை தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்... அவன்
    அன்பு மனங்களில் சிரிக்கின்றான்.’
    என்ற பாடல் நினைவுக்கு வருகிறது இந்த கதையைப் படிக்கும்போது. அழகேசன் அவரது குடும்பத்தை அழைத்து சென்ற கோவில் இதுதானோ? என்று நீங்கள் கேட்ட கேள்வி சரிதான்.
    அருமையான கருத்தாழம் கொண்ட கதையை தந்தமைக்கு வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
      அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்

      வேண்டுதல் வேண்டாமை அற்ற மெய்ச்சுடராய்
      விளக்கிட முடியாத தத்துவப் பொருளாய்

      பாடல்: ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்

      நல்லவன் வாழ்வான்
      பாடலாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
      இசை: டி.ஆர். பாப்பா
      சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா


      இந்த பாடலை இந்த வேளையில், மிகவும் பொருத்தமாக நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!

      மேலும், அருமையான கருத்தாழம் கொண்ட கதையை தந்தமைக்கு பாராட்டு தந்திருப்பது, இன்னும் பல நல்ல கதைகளை புனைவதற்கு, ஊக்கத்தைத் தரும்.
      வருகைக்கும், நல்ல கருத்தினை விதைத்தமைக்கும் மிக்க நன்றி அய்யா!
      வருகை தொடர்க!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அருமையான விடயம் நண்பரே வாழ்த்துகள் எல்லோருமே இப்படியாயின் எல்லாம் நலமே...

    RépondreSupprimer
    Réponses
    1. புத்தாண்டின் புதுப் புனலாய் வந்தீரே! கில்லர்ஜீ!
      புனலாய் வந்து புயலாய் கருத்திட்டமைக்கு
      நன்றி நண்பரே!

      "எல்லோருமே இப்படியாயின் எல்லாம் நலமே."

      ஆம்! முதலில் நாம்!
      பிறகு எல்லோருமே!
      என்ன சரிதானே ?
      அபுதாபியில் இருந்து தேவக்கோட்டை கில்லர்ஜீ அவர்களே!

      மீண்டும்! மீண்டும் வருக நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. ஒருத்தர் செய்தால் ஒரு நாள் சந்தோசம்.... இது மாதிரி பலரும் பலநாள் செய்தால்..... பலநாள் சந்தோசம். இதையே அரசே ஏற்று செய்தால் நிரந்தர சந்தோசம்.....சிறகதை.. சந்தோசமாக இருக்கிறது.

    RépondreSupprimer
    Réponses
    1. நிரந்தர மகிழ்ச்சிக்கு
      நிரந்தரத் தீர்வு சொன்னக் கருத்து
      பாராட்டுக்குரியது தோழரே!
      செழுமைமிகு பாராட்டுக்கு மிக்க நன்றி!

      தோழமையுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அருமையான கதை ஐயா! பிறரை சந்தோஷப்படுத்திப் பார்ப்பதில் உள்ள, அதுவும் ஆதரவற்றவர்களின் மகிழ்வில் இறைவனைக் காணலாம்.

    அருமையான கதையில் புத்தாண்டு தொடங்க...

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் ஆசானே!
      மனித நேயம் வளர்க்கும் கதையினை விதையாக வலைப் பூவுலகில் விதைத்து
      புத்தாண்டினை துவங்குகிறேன்! நாளும் தவறாது பதிவு என்னும் பூ விற்கு
      நன்ணீர் வார்க்க வேண்டுகிறேன் அய்யா!
      வருகைக்கு மிக்க நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  8. மனிதநேயம் வளர்க்கும் அருமையான கதை!
    தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!

    RépondreSupprimer
    Réponses
    1. மனித நேயம் போற்றிய வண்ணம்
      நல் எண்ணத்தை கருத்தாய் வடித்தாய் சகோதரி!
      இனிய வருகை "இனியா"வின் வருகை!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. சந்தோஷத்தில் மிகப் பெரிய சந்தோஷம் பிறரை சந்தோஷப் படுத்தி பார்ப்பதுதான் ( k. Bagyaraj ). மனிதநேய சந்தோஷம் மிக அருமை புதுவை வேலு அவர்களே.

    RépondreSupprimer

  10. சந்தோஷத்தில் மிகப் பெரிய சந்தோஷம் பிறரை சந்தோஷப் படுத்தி பார்ப்பதுதான் Bagyaraj ).

    கதைக்கு கரு தந்த தங்களது "குரு" வை நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி!
    அதே வேளையில்,
    அதிலும் குறிப்பாக இதுபோன்றவர்களை அனாதை ஆஸ்ரமத்தில் உள்ளவர்களை சந்தோஷப் படுத்தி பார்ப்பதுதான் - மனிதம்! மனிதநேயம்!
    என்பதை உலகிற்கு கதை வடிவில் தந்தமைக்காக குழலின்னிசை பெருமை கொள்கிறது.
    வருகைக்கும், நல்ல கருத்தை நல்கியமைக்கும் மிக்க நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
    Réponses
    1. ‘’சந்தோசத்துலயே மிகப்பெரிய சந்தோசம் மத்தவுங்களை சந்தோசப்படுத்தி பார்க்கிறது’’

      இதைச்சொன்னது யாரு ? எனக்கேட்டால் கே.பாக்கியராஜ் அப்படினு சொல்வாங்க இதேகேள்வியை கொஞ்சம் படிச்சவங்களிடம் கேட்டால் ? மஹாத்மா காந்தி எனறு சொல்வார்கள் காந்தியும் சொல்லியிருக்கின்றார் ஆனால் ? இதை முதலில் சொன்னது ‘’பகவத்கீதை’’ இதற்க்குமுன் எந்த மானிடனாவது சொல்லியிருக்க முடியுமா ?
      நண்பரே எனது புதிய பதிவு எ.எ.எ.

      Supprimer
    2. அன்பு நண்பர் திருகில்லர்ஜி அவர்களுக்கு,
      வணக்கம்!
      தங்களது கருத்தூட்டமானது "இறைவனைத் தேடி" எனது சிறுகதையினை கருத்தூட்டத்தால் ஒரு தொடர் கதையாக கொண்டு செல்லும் போல் இருக்கிறதே?
      "சந்தோஷத்தில் மிகப் பெரிய சந்தோஷம் பிறரை சந்தோஷப் படுத்தி பார்ப்பதுதான்"

      இதைச்சொன்னது யாரு ? எனக்கேட்டால் கே.பாக்கியராஜ் அப்படினு சொல்வாங்க இதேகேள்வியை கொஞ்சம் படிச்சவங்களிடம் கேட்டால்? மஹாத்மா காந்தி எனறு சொல்வார்கள் காந்தியும் சொல்லியிருக்கின்றார் ஆனால் ? இதை முதலில் சொன்னது ‘’பகவத்கீதை’’ இதற்குமுன் எந்த மானிடனாவது சொல்லியிருக்க முடியுமா ? என்று கேட்டு கருத்திட்டுள்ளீர்கள்.

      இந்த கருத்தை முதலில் சொன்னது பகவத் கீதைதான் என்று சொல்லியுள்ளீர்கள்.
      அனைவராலும் ஏற்கத் தக்க வாசகம் " கடமையை செய் பலனை எதிர் பாராதே" என்பதைத் தான் எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் நான் அறிந்தது.
      பகவானின் பாடல்கள் என்று பொருள் படும் பகவத்கீதையில், இதில்
      700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் உடையதாக கூறப்படும் இந்த நூலில் எந்த ஸ்லோகம் இது பற்றி சொல்கிறது என்று அறியத் தந்தால் அகம் மகிழ்வேன் அய்யா! குழலின்னிசைக்கு பதிலை அறியத் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
      இந்நூலுக்கு விளக்க உரை எழுதிய பலரில் ஆதிசங்கரர், இராமானுசர் மற்றும் மத்வர் சிறப்பிடம் வகிக்கின்றனர். இதில் யாருடைய உரையில் இந்த வாசகம் இடம் பெற்று உள்ளது என்பதை தெரிவித்தால் நானும் படித்து இன்புறுவேன் நண்பரே!

      இரண்டாவதாக,
      இதைச்சொன்னது யாரு ? எனக்கேட்டால் கே.பாக்கியராஜ் அப்படினு சொல்வாங்க இதேகேள்வியை கொஞ்சம் படிச்சவங்களிடம் கேட்டால் ? மஹாத்மா காந்தி எனறு சொல்வார்கள் காந்தியும் சொல்லியிருக்கின்றார் என்று கருத்தை பதிவு செய்துள்ளீர்களே!
      அன்பையும், அஹிம்சையையும் போதித்த அண்ணல் காந்தியடிகளும் சொல்லி இருப்பதாக சொன்னீர்கள் அது என்ன நண்பரே கொஞ்சம் படித்தவர்கள் மட்டுமே காந்தி என்று சொல்லுவார்கள் என்று சொல்லுகிறீர்கள் ? பாமரனும் அறிவான் காந்தியடிகள் சிறப்பினை என்பது குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இங்கு அவசியமாகிறது. இது குறித்த படித்த செய்தியை பகர்வீர்கள் என்று நம்புகிறேன்.

      மூன்றாவதாக முடிவாக ஒரு விளக்கம்

      சந்தோஷத்தில் மிகப் பெரிய சந்தோஷம் பிறரை சந்தோஷப் படுத்தி பார்ப்பதுதான் - பாக்யா
      என்றுதான் நான் பதிவு செய்துள்ளேன். பாக்யா பத்திரிகையின் ஸ்லோகம் அதுதான்.
      அதுவே அந்த பத்திரிகையின் சிறப்பு வாசகமாக அனைத்து வாசகர்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது.
      இதை நான் ஒரு ஜர்னலிசம் படித்தவன் என்ற முறையில் , நல்ல கருத்தை எனக்கு பிடித்த கருத்தை அதை எங்கிருந்து நான் அறிந்தேனோ அவர்களுக்கு நன்றி சொல்லி விட்டு நல்ல செய்தியை மக்களுக்கு அறியத் தந்தேன். அவ்வளவுதான்.
      வலைப் பூ வாசகர்கள் யாவரும்
      அன்னப் பறவை குணம் உடையவர்கள் என்று நான் நம்புகிறேன்.
      நதி மூலம் ரிஷிமூலம் இவையிரண்டும் நன்மை என்னும் காலத்தின் முன் நிர்மூலம் ஆகும் காலம் இது.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவைவேலு

      Supprimer
    3. நண்பர் யாதவன் நம்பி அவர்களுக்கு வணக்கம் தங்களின் பிரமாண்டமான பின்னூட்டம் மிகப்பிரமாண்டமே...

      நண்பா, பகவத்கீதையை நான் முழுமையாக படித்த்தில்லை நண்பா, தங்களால் இனி அதை படித்தேதீரவேண்டுமென்ர ஆவல் கொள்கிறேன்

      இன்றைக்கு சினிமா நடிகர்கள் சொல்லும் வசனமே மக்’’கல்’’ மத்தியில் மேலோங்கி நிற்கிறது
      உதாரணத்திற்க்கு திரைப்படத்தில் வசனம் எழுதியவர் பெயர் வெளியே தெரியாமல் மறைந்தே போய் விடுகிறது

      தமிழ் மொழியே முழுமையாக தெரியாதவன் வாயசைப்பான் அவன் பெயர் எடுத்து விடுகிறான்
      அதைப்போலவே இதுவும் ஆகிவிட்டது என்பதையே இதில் குறிப்பிட்டேன்
      மற்றபடி நான் மதநூல்கள் எதையும் இதுவரை விரும்பியதில்லை இனி எப்படியோ....

      நன்றி.
      கில்லர்ஜி

      Supprimer
    4. நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு,
      வணக்கம்!
      தங்களது கருத்து பேழை கண்டேன்!
      கருத்தின் ஆழம் அறிந்தேன்!
      இனி வரும் காலங்களில்
      அல்லதை விடுத்து, நல்லதை நினைத்து, நலம் பெறுவோமே நாம்! நண்பா!
      பின்னூட்டமிட்டு தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. " ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் "... இல்லேன்னா... " யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம் "... புத்தாண்டில் மனிதநேயம் சொல்லும் சிறப்பான சிறுகதை !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    RépondreSupprimer
    Réponses
    1. பல்வேறு சிறப்பு அலுவல்களுக்கு இடையேயும் இதபோன்று பொறுப்பான வருகை புரிந்து மனித நேயத்தின் மாண்பை போற்றி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி சாமானியரே!
      வாழ்த்துக்கள்! இப்பொழுது தங்களது புதிய பதிவிற்கு கரு களத்தில் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
      மனித நேயமிக்க மறவரே! வருகைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. நல்ல வேலை செய்தார் அழகேசன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. "நல்ல வேலை செய்தார் அழகேசன்"
      உண்மையை உலகறிய கருத்தாய் உரைத்தீர் சகோதரி!
      அழகேசன் மட்டுமல்ல,
      முடியும்பட்சத்தில், நாமும் அத்தகைய நற்பணிகளை செய்தால்,
      மனித நேயம் இன்னும் சிறப்பாக வளருமல்லவா?
      தங்களது புத்தாண்டு வாழ்த்திற்கு மிக்க நன்றி!
      தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் மனங்கனிந்த
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. மனிதநேயம் இன்னும் மறைந்துவிடவில்லை. பிறரை சந்தோசப்படுத்தித்தான் பார்ப்போமே. வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer

  14. வணக்கம்,
    எனது வலைப் பூ விற்கு கருத்து சொல்ல புதிய பூவாக
    வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே.
    உங்களைப் போன்ற புதிய கருத்தினால் மனித நேயம் இன்னும்
    மேலோங்கும் என்று நம்புகிறேன்.
    நன்றி!
    வருகை தொடரவும், நானும் தொடர்கின்றேன்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  15. ஆகா...
    வாழ்த்துக்களுக்கு நன்றி ...
    இப்படியும் புத்தாண்டு வாழ்த்துக்களை சொல்லலாமோ..

    RépondreSupprimer
    Réponses
    1. "இறைவனைத் தேடி" வந்து கருத்து வழங்கிய
      தங்களின் அன்பு மனதைப் போற்றி குழலின்னிசை
      நன்றி இசை இசைக்கின்றது
      வருகை தொடர்க தோழரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. மனிதநேயத்தை எவ்ளோ அழகா சொல்லீர்க்கீங்க
    கதையில் அவர்கள் கோவிலுக்குப்போகவில்லை
    கோவிலையே கொண்டாடக்கூட்டிக்கொண்டு
    சென்று இருக்கின்றனர்.

    RépondreSupprimer
    Réponses
    1. மனித நேயத்திற்கு மகுடம் சூட்டியது தங்களது
      அன்பு நேய வருகையும், கருத்து பின்னூட்டமும்!
      வருக! கருத்தினை நாளும் தருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. அடுத்து நுகரவோர்க்கு காத்திராமல் பகர்வோர் என நிணைவூட்டல் ...........

    RépondreSupprimer
    Réponses
    1. நுகர்வோர்க்கு பகர்வை தந்தாகி விட்டது தோழரே!
      மீள் வருகைக்கு நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  18. அருமையான கதை!! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses

    1. வாழ்த்துக்களை வழங்கிய சகோதரிக்கு மிக்க நன்றி!
      தங்களது கருத்து வசந்தத்தை குழலின்னிசை நாளும் எதிர்நோக்கும்
      சகோதரி!
      வருகைக்கு நன்றி!
      புதுவை வேலு

      Supprimer
  19. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. பல்வேறு அலுவல்களுக்கிடையேயும் பம்பரம்போல் சுழன்று வந்து
      சுகமான கருத்தினை தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
      வருக என்றும் கருத்தின் வாகனத்தில் அமர்ந்து!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  20. இறைவனைத் தேடி சிறுகதை மிக அருமை! வாழ்த்துக்கள்! நன்றி!

    RépondreSupprimer
  21. நன்றி சகோதரி!
    இறைவனைத் தேடி வந்து நடை சாத்தும் நேரத்தில், கருத்து பூஜை செய்தமைக்கு
    மிக்க நன்றி! நன்மைகள் பெற்று நலமோடு வாழ்க!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  22. மனித நேயம் சொல்லும் அருமையான கதை. பாராட்டுகள்.

    RépondreSupprimer
  23. மனித நேயம் பாராட்டிய கருத்தினை வணங்கி ஏற்கின்றேன்
    நண்பரே!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  24. நண்பரே,

    மனிதம் முன் எந்த மதமும் நிற்கமுடியாது. இதைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்களே மக்களைப் பிரிக்கின்றன. அருமையான கட்டுரை. (கதை!)

    RépondreSupprimer
  25. தங்களது பதிவுகளை போன்றே
    தாங்கள் தந்த கருத்தும் மிகச் சிறப்பு!

    வருகை மகிழ்வினை ஈந்தது!
    வருகை தொடர்க!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  26. அருமையான கதைக்கு நன்றி. உங்கள் வலைப்பக்கம் ஃப்ரஞ்சு வார்த்தைகளும் காணப்படுவதால் உங்களுக்கும் ஃப்ரஞ்சு மொழியில் நல்ல பழக்கம் இருக்கும் என எண்ணுகிறேன். :)

    RépondreSupprimer