jeudi 15 janvier 2015

மாட்டுப்பொங்கல் / திருவள்ளுவர் தினம் வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்


தரணி போற்றும்  தமிழர் திருநாளில்

திருவள்ளுவர் தினம்

மாட்டுப் பொங்கல் - தினத்தில்

வலைப் பூ நண்பர்கள் அனைவருக்கும்
குழலின்னிசை வாழ்த்து இசை இசைக்கின்றது.


அனைத்து அன்புள்ளங்களுக்கும்

திருவள்ளுவர் தினம்

மற்றும்

மாட்டுப் பொங்கல்  நல்வாழ்த்துக்கள்


நன்றியுடன்/நட்புடன்,

புதுவை வேலு




திருவள்ளுவர் தினம்







வாய்மையை போதித்த நம் தெய்வப் புலவன்  வள்ளுவனுக்கு
மத்திய அரசு சிறப்பு செய்து இருப்பது  அதாவது,
'திருவள்ளுவர் பிறந்த தினம், தேசிய அளவில் கொண்டாடப்படும்'
என, மத்திய அரசு அறிவித்திருப்பது.
வரவேற்று பாராட்டத்தக்க அறிவிப்புகளில் ஒன்றாகும்.

இதை அறிவித்த மத்திய அரசுக்கு தமிழ் வலைதள படைப்பாளர்கள் /பதிவாளர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் நமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வோமாக! மேலும்  « திருவள்ளுவர் தினத்தை » சிறப்பு செய்யும் வகையில்
திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டுவோமாக !




குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

குறள் 396:
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

குறள் 291:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

குறள் 183:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
குறள் 271:
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.



 மாட்டுப் பொங்கல்










அனைவரது வாழ்விலும் இரண்டறக் கலந்துவிட்ட கால்நடையான

பசு/காளைகளுக்கு ,

பெருமை சேர்ப்போம்.

"மாட்டுப் பொங்கலை" மகிழ்வுடன்  கொண்டாடுவோம்.


I)


தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு

சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு


தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு


சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு


பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு


பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு


பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு


பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு

 

பாடல் :வாலி




II)
                                       

இணங்காதோர் மனம் கூட இணங்கும்

நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்

 
இணங்காதோர் மனம் கூட இணங்கும்


நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்


வணங்காத...ஆ..... வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும்


வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும்


உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும்


உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும்


வண்ணக் கோமாதா...

கோமாதா எங்கள் குலமாதா


குலமாதர் நலம் காக்கும் குணமாதா


புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா


வண்ணக் கோமாதா..




பாடல்: கண்ணதாசன்


 அனைவரது வாழ்விலும் இரண்டறக் கலந்துவிட்ட கால்நடையான பசு/காளைகளுக்கு ,
பெருமை சேர்ப்போம்.
"மாட்டுப் பொங்கலை" மகிழ்வுடன்  கொண்டாடுவோம்.


நன்றியுடன்/நட்புடன்,

புதுவை வேலு


















 

29 commentaires:

  1. வணக்கம்

    வள்ளுவர் தினத்தை நினைவுபடுத்தி உள்ளீர்கள்.
    இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வள்ளூவன் தினத்தில்
      வாழ்த்துரைத்த
      நண்பருக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. அருமையான வித்தியாசமான சிறப்புப் பதிவு
    மிகவும் இரசித்தோம்

    இனிய பொங்கல் திரு நாள் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்துரை வழங்கிய கருத்தினை
      நல்கிய நண்பரே நல் வணக்கம்!
      வருகைக்கும், கருத்து பகிர்விற்கும்
      மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் நண்பரே

    RépondreSupprimer
    Réponses
    1. அனைவரும் போற்றும் அருந்தகை!
      கரந்தையாரே!
      உமது வருகைக்கும்,வாழ்த்திற்கும்
      உளமார்ந்த நன்றிகள்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருமை ஐயா...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2015/01/Intellect-Part-2.html

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்துரை வழங்கிய வார்த்தைச் சித்தரே!
      நற்கருத்தினை
      நல்கிய தனபாலரே நல் வணக்கம்!
      வருகைக்கும், கருத்து பகிர்விற்கும்
      மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. திருவள்ளுவர் நாளை மய்ய அரசு நாடு முழுதும் கொண்டாடப்படும் என அறிவித்த மகிழ்ச்சியில் நாமும் கொண்டாடுவோம் திருவள்ளுவர் மற்றும் மாட்டுப் பொங்கலை. அனைவருக்கும் திருவள்ளுவர் நாள்/ மாட்டுப்பொங்கல் நல் வாழ்த்துக்கள்! பொருத்தமான பாடல்களை பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. பொருத்தமான கருத்தினை
      கரும்பின் சுவைகூட்டி
      விரும்பி ருசித்துண்ணும் வகையில்
      தந்தீர்கள் அய்யா! மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. திருவள்ளுவர்தினம், மாட்டுப்பொங்கல் சிறப்பு பதிவு அருமை.
    வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி! சகோதரி!
      இனிய வாழ்த்து இதமானது!

      அன்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. வாழ்த்துரை வழங்கிய கருத்தினை
      நல்கிய சகோதரி! நல் வணக்கம்!
      வருகைக்கும், கருத்து பகிர்விற்கும்
      மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. திருவள்ளுவர் தினத்தை அருமையாக சிறப்பித்துள்ளீர்கள் அருமை நண்பரே...வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வள்ளுவம் போற்றி வாழும்
      தேவக்கோட்டையாரே!
      அருமை கருத்தினை அருளியமைக்கு
      மிக்க நன்றி!
      தொடர்க நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. சகோதரருக்கு நன்றி! வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரரே!
      வருக! கருத்தினை என்றும் தருக!

      அன்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. திருவள்ளுவர் தினம் , மாட்டுப்பொங்கல் பதிவுகள் அருமை!
    வாழ்த்துக்கள்! கோமாதாவிற்கு திரு.வாலி,திரு.கண்ணதாசன் அவா்களின் வாிகள் இப்பதிவினை மேலும் அழகுப்படுத்தியுள்ளது! இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நற்கருத்து நவின்றாய் சகோதரி!
      வருகைக்கு மிக்க நன்றி!
      அன்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. நல்ல பகிர்வு. வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்தினை வழங்கிய நல் உள்ளத்திற்கு இனிய நன்றி!
      வருகை தொடர்க!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அருமையாகவும் வித்தியாசமாகவும் மாட்டுப்பொங்கல்/திருவள்ளுவர் தினத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

    தங்களுக்கும்,குடும்பத்தார்க்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பர் சொக்கன் அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு - இதைவிட பெரிய பங்கு இல்லை ஒரு கோமாதாவின் தியாகம்.
    மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம் மிக சிறப்பு. புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. வாழைக்கு ஈடு மாடு (பசு) என்பதை உணர்த்தும் உன்னத கருத்து அய்யா உமது கருத்து!
      வருகைக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. வணக்கம் சகோதரரே!

    திருவள்ளுவர் தினத்தின் சிறப்பையும், நம் வாழ்வின் அங்கமென திகழும் கால் நடைகளின் சிறப்பையும், பற்றி சிறந்த முறையில் பதிவிட்டு இருக்கிறீர்கள்..பகிர்ந்தமைக்கு நன்றி.!

    தங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள், மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள்..

    என் தளம் வந்து வாழ்த்தியமைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    RépondreSupprimer
    Réponses
    1. நம் வாழ்வின் அங்கமென திகழும் கால் நடைகளின் சிறப்பையும்/ திருவள்ளுவர் தினத்தின் பெருமையையும் சிறப்பிக்கும் வகையில் நல்வருகை தந்து கருத்திட்ட திருமதி கமலா ஹரிஹரன் அவர்களே குழலின்னிசை தங்களை வர்வேற்று நன்றி இசை இசைகின்றது.
      வருகை தொடர்க!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. நம் வாழ்வு விவசாயம் சார்ந்த்து மட்டுமல்ல கால்நடைகள் சார்ந்ததும். மிக அருமையான ப்ரு பதிவு கால்நடைகளையும் உழவரையும் போற்றும் பதிவு. வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
  15. விவசாயத்தின் அரும்பெருமையை, கால்நடைகளின் சிறப்பியல்புகளை
    அற்புதமாக எடுத்தியம்பியது அய்யா உமது கருத்து!
    வருகைக்கு மிக்க நன்றி ஆசானே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer