"சாப்பிட மீன் தராதே மீன் பிடிக்க கற்று கொடு "
-சீன பழமொழி-
வறுமை! வறுமை என்று! சொல்வதை விட
வறுமையை விரட்ட வழி தேடு!
நமது தேசத்தை
நாசமாக்கும் !
ஒரு சொல்
இலவசம்.
இலவச வீட்டில்
இலவச அரிசி வாங்கி
இலவச கிரைண்டரில் மாவரைச்சு
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு
இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு...
இலவச மின்விசிறியப் போட்டு
இலவச TV-யப் பாத்துக்கிட்டு நோய் வந்தால் ?
இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று
இலவச 4 கி தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வாங்கி
இலவச அரிசி வாங்கி
இலவச கிரைண்டரில் மாவரைச்சு
இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு
இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு...
இலவச மின்விசிறியப் போட்டு
இலவச TV-யப் பாத்துக்கிட்டு நோய் வந்தால் ?
இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று
இலவச 4 கி தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம் ரூபாய் வாங்கி
கல்யாணம் பண்ணி !
இருபதினாயிரம் உதவியுடன் குழந்தை பெற்று
இலவச சத்துணவுடன்
இலவச கல்வி
இருபதினாயிரம் உதவியுடன் குழந்தை பெற்று
இலவச சத்துணவுடன்
இலவச கல்வி
இலவச புத்தகம்
இலவச சைக்கிள்
இலவச செருப்பு
இலவச சைக்கிள்
இலவச லேப்டாப்
இலவச பேருந்து பாசுடன் !
இலவச முதியோர் பென்சன் கிடைக்கும் போது ?
இலவச சைக்கிள்
இலவச செருப்பு
இலவச சைக்கிள்
இலவச லேப்டாப்
இலவச பேருந்து பாசுடன் !
இலவச முதியோர் பென்சன் கிடைக்கும் போது ?
எது வசம் ? நான் செல்வேன் ? சொல் ? அப்பனே!!!
"மக்களாகிய நாம் சிந்திக்கக் கூடாது."
இலவசம் மூலம் இவர்கள் நம்மை சிந்திக்க விடுவதில்லை !
இனியாவது நாம் சிந்திப்போமா?
இலவசத்தின் இழி குணத்தை பழித்துரைக்கும் ஒரு நீதிக் கதை இதோ:-
" இலவசப் பிச்சை இனி வேண்டாம்"
என்ன தான் கஷ்டம்
வந்தாலும் சரி, இலவசமாக யாராவது எதையாவது தந்தால்
வாங்கக் கூடாது. அது பிச்சை எடுப்பதற்கு சமம்.
ஒருமுறை நாட்டில்
கடும் பஞ்சம் ஏற்பட்டது.
சாப்பிட ஏதுமில்லாமல்
பலர் இறந்தனர்.
அப்போது, ஏழு முனிவர்கள் உணவு தேடி எங்கெங்கோ
அலைந்தனர். சொட்டுத் தண்ணீர் கூட கிடைக்கவில்லை.
ஒருநாள், இறந்து கிடந்த ஒரு மனித உடலைப்
பார்த்தனர்.
பசியின் தாக்கத்தால், ஆன்மிகம், ஜபம்,
தவம்
எல்லாவற்றையும் மறந்து, அந்த உடலையே பிய்த்து தின்ன ஆரம்பித்து
விட்டனர். அப்போது, அந்
நாட்டு அரசன் அவ்வழியே வந்தான்.
அவர்களது செயல் கண்டு
திகைத்துப் போன அவன்,
முனிவர்களே!
ஆன்மிகச் செம்மல்களான
நீங்களே! இப்படி செய்தால், மற்றவர்கள்
கதியென்ன? உங்களுக்கு நான் வேண்டுமளவு அரிசி, பருப்பு,
காய்கறி
வகைகளைத் தருகிறேன்.
என் அரண்மனையில் இருந்து
அனுப்பி வைக்கிறேன்.
நீங்கள் இங்கேயே
காத்திருங்கள், என்றான்.
முனிவர்கள் மறுத்துவிட்டனர்.
மன்னா! பிணத்தைத்
தின்பது என்பது கொடுமையிலும் கொடுமை தான்! ஆனால், பசியின்
முன் பத்தும் பறந்து போய் விடுகிறது.
அதற்காக, ! நீ எங்களுக்கு இலவசமாக உணவு தருவதாகச்
சொன்னாயே! அவ்வாறு உன்னிடம் பிச்சை வாங்கினால் அது அதை விடக் கொடுமை. பிணம்
தின்பதை விட கொடுமையானது ! இலவசத்தை பெறுவது, என்றார்.
இலவசங்களை
ஒதுக்குவோம். பிச்சை எடுப்பதை ஒழிப்போம்.
புதுவை வேலு
நன்றி: தினமலர்
நம் நாட்டைக் கெடுப்பதே இலவசம் தான். மக்களை, உழைக்கும் வர்கத்தைச் சோபேறிகளாக்குவதும், பொருள் ஈட்ட வேண்டி உழைக்காமல், அதே எண்ணம் குழந்தைகளின் பள்ளி, கல்லூரி சேர்க்கையிலும் இனாம் தேடுதல், உழைக்காமல், சுயமரியாதையைக் கெடுத்துக் கொண்டு, தாங்கள் வறுமையானவர் என்று சொல்லிப் பிச்சை எடுப்பது மிகவி இழிவு. அருமையான பதிவு..
RépondreSupprimerஅறிவு பிச்சை ஏற்புடையது என்றே எண்ணுகிறேன் அய்யா!
Supprimerகுழலின்னிசையின் ஆசானே!
வருகைக்கு மிக்க நன்றி அய்யா!
நன்றியுடன்,
புதுவை வேலு
அறிவுப் பிச்சை ஏற்புடையதுதான் ஐயா. ஆனால் நம்மூரில் பணம் உள்ளவன் மட்டுமே கல்வி பெறுவான் அதுவும் எப்படி சாதி கூறி இலவசக் கல்வி எனும் அவலனிலை...திறமை இருந்தும் சாதியினால் புறம் தள்ளப்படும் நிலையும் பணம் கடினப்பட்டுக் கட்டி சேர்ர்கும் நிலையும் இருக்கின்றதே ஐயா. ....
Supprimerஎங்கள் கல்லூரிப் பேராசிரியர் சொன்னது இன்னும் நினைவில் இருக்கின்றது. "அறிவு எங்கு கிடைத்தாலும் பிச்சை எடுத்தேனும் பெற வேண்டும். சுயமரியாதை அங்கு செல்லாது. காலில் விழவும் தயராக இருக்க வேண்டும் " என்று...
ஏற்புடைய ஏற்றமிகு கருத்தினை ஏற்கின்றேன் எளிமையுடன்,
Supprimerஎண்ணம் சிறக்க கருத்தினைன தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
உழைப்பவன் தனது ஊதியத்தை டாஸ்மாக் கடையில் தாரை வார்த்துக் கொடுக்கும்போது, அவன் வீட்டு அடுப்பு எப்படி எரியும் ? மனைவி பிள்ளைகள் எவ்வாறு உயிர் வாழ்வர் ?
RépondreSupprimerஆதலால் தான், ஒரு பாவத்தைச் செய்கிறோமே என்று அதற்கான பிராயச்சித்தமாக இந்த இலவசங்களையும் கொடுக்க வேண்டி நேர்கிறது.
இலவசங்கள் தொடர டாஸ்மாக் தொடரவேண்டும்.வேறு வழியில்லை. இன்றைய அரசின் பொருளாதார சூழ்நிலை இதுவே.
குடியை நிறுத்துங்கள். இலவசங்கள் தேவை இல்லாது போய்விடும்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
குடியை நிறுத்துங்கள். இலவசங்கள் தேவை இல்லாது போய்விடும்.
Supprimerமுற்றிலும் முழு மனதோடு வரவேற்புக்குரிய வளமான கருத்து அய்யா!
வருகைக்கு நன்றி!
தொடர் வருகை தொடரட்டும்!
நன்றியுடன்,
புதுவை வேலு
ஏற்புடைய ஏற்றமிகு கருத்தினை ஏற்கின்றேன் எளிமையுடன்,
Supprimerஎண்ணம் சிறக்க கருத்தினைன தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
கவிதையின் கதையை கூறினீர்.
RépondreSupprimerகற்றுக் கொண்டாம் .நன்றி
உற்சாகம் தரும் உன்னத வரிகள்!
Supprimerபொருள் கொண்டேன்! போற்றுகிறேன்.
தொடர் வருகை தாருங்கள் அய்யா!
நன்றியுடன்,
புதுவை வேலு
கதை அருமை நண்பரே நெஞ்சை சுட்டது.
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அருமை நண்பரே
RépondreSupprimerஇலவசங்களை யார் கேட்டார்
இலவசங்களை நிறுத்த வேண்டும்
உழைப்பிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்
நன்றி நண்பரே
நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
சொன்ன விதம் சிறப்பு...
RépondreSupprimerஅனைவரும் உணர வேண்டிய கருத்துக்கள்...
(பலமுறை முயன்றும் இன்று) Followers-ஆகி விட்டேன்... நன்றி...
நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
RépondreSupprimerநல்வணக்கம்!
திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகளுடன்,
ஊமைக்கனவுகள்.
நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அதனால்தான் காசு உள்ளவனுக்கே எல்லாம் என்று எல்லாத்தையும் தனியார் மயமாக்கி விட்டார்களோ....?? தேர்தலில்போது இலவசங்களை வேண்டாமென்றும், இலவசங்கள் கொடுக்கமாட்டோம் என்று ஒரு ஈஃஃகாக்கா கூட மூச்சு விட மாட்டுதே...நண்பரே...
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
மறைமுகமாக நம்மை ஏமாற்ற படும் இலவசம் அனைத்துமே வேறொருவரின் சுய வளர்ச்சியே - தேர்தல், வியாபாரம், ... போன்றவை.
RépondreSupprimerகல்வி, மருத்துவம், மனிதம், தர்மம், (மன நிம்மதி) அறிவுரைகள், போன்ற இலவசங்கள் தேவையே. நன்றி புதுவை வேலு அவர்களே.
sattia vingadassamy
சிந்தையைத் தூண்டும் சிறப்பு வரிகள்!
Supprimerயோசிக்க வைத்தது!
நன்றியுடன்,
புதுவை வேலு
இலவசம் ...சிந்தனையை தடை செய்யும்
RépondreSupprimerஅருமை..சகோ நன்றி
சிந்தையை தடை செய்யும் இதற்கு (இலவசம்)
Supprimerஎப்போது விடை காண்போம்?
வருகை புரிந்து கருத்தினை வழங்கிய சகோதரிக்கு மிக்க நன்றி!
நன்றியுடன்,
புதுவை வேலு
ஏற்பது இகழ்ச்சி!.. என்றார் ஔவையார்.
RépondreSupprimerஆதரவற்ற வயதானவர்க்கு - நலத்திட்டம் அரசு என உதவி செய்வதில் தவறில்லை என எண்ணுகின்றேன்.
ஆனால், அரிசி வாங்கும் அட்டை உடையவர்க்கெல்லாம் - இலவச வேட்டி சேலை என்றதும் அங்கே நடக்கும் அடிதடியைப் பார்த்திருக்கின்றீர்களா!..
பசி வந்திட பத்தும் பறந்து போகும் என்பது பழமொழி..
இலவசம் என்றால் எல்லாமே மறந்து - பறந்து போகின்றன..
தன்மானம் கூட இலவசங்களை எதிர்ப்பதில்லை.. வாழ்க தமிழகம்!..
ஏற்புடைய ஏற்றமிகு கருத்தினை ஏற்கின்றேன் எளிமையுடன்,
Supprimerஎண்ணம் சிறக்க கருத்தினைன தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerசொல்லிய விதம் சிறப்பாக உள்ளது இதை நம்பி வாழும் மக்கள் எத்தனை... மக்களை சோம்பறியாக்க அரசாங்கம் எடுத்த முயற்சி..இது..பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஏற்புடைய ஏற்றமிகு கருத்தினை ஏற்கின்றேன் எளிமையுடன்,
Supprimerஎண்ணம் சிறக்க கருத்தினைன தந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
இலவசம் எல்லாம் தவறு , வேண்டாம் என்று கூறுபவர்கள் , எனக்குத் தோன்றுகிறது, இலவசமாக எந்த சலுகையும் கிடைக்கப் பெறாதவர்களே.
RépondreSupprimerஏற்புடைய ஏற்றமிகு கருத்தினை ஏற்கின்றேன் எளிமையுடன்,
Supprimerஎண்ணம் சிறக்க கருத்தினைன தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வேடிக்கையாய் சொல்வார்கள்.இலவசமாக விஷம் கிடைக்கிறதென்றால் அதைப்பெற நம் மக்கள் அதற்கும் அடித்துக்கொண்டு நிற்பார்கள் என்று! என்றைக்கு இந்த இலவச மாயை ஒழிகிறதோ அன்றுதான் விடிவுகாலம் பிறக்கும்.
RépondreSupprimerஏற்புடைய ஏற்றமிகு கருத்தினை ஏற்கின்றேன் எளிமையுடன்,
RépondreSupprimerஎண்ணம் சிறக்க கருத்தினைன தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
RépondreSupprimer"அதற்காக, ! நீ எங்களுக்கு இலவசமாக உணவு தருவதாகச் சொன்னாயே! அவ்வாறு உன்னிடம் பிச்சை வாங்கினால் அது அதை விடக் கொடுமை. பிணம் தின்பதை விட கொடுமையானது ! இலவசத்தை பெறுவது" என்ற சொற்றொடர் நிதர்சனமானது. மனதில் நிற்கும் பதிவு. வலைச்சரத்தில் எனது வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டமையைத் தெரிவித்தமைக்கு நன்றி.
ஏற்புடைய ஏற்றமிகு கருத்தினை ஏற்கின்றேன் எளிமையுடன்,
Supprimerஎண்ணம் சிறக்க கருத்தினைன தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
இலவசம் பெறுவது இழிவான செயல் என்று அழகாய்ச் சொன்னீர்கள்.....
RépondreSupprimerபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ஏற்புடைய ஏற்றமிகு கருத்தினை ஏற்கின்றேன் எளிமையுடன்,
RépondreSupprimerஎண்ணம் சிறக்க கருத்தினைன தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு