படம் சொல்லும் பாடம்
நன்றி!
பட உதவி: தினகரன்
இனி!
இந்த இல்லத்தில்
இடமில்லை
உங்களுக்கு
என்று!
சில குடும்பங்கள்
வார்த்தைகளை
எரிமலையாக
கக்கும் பொழுது!
"வேலை காலி
இல்லை"
என்று!
ஓலை ஓடி வந்து
தகுதியான
சிலருக்கு!
துன்ப மாலையை
சூடும் பொழுது!
இலக்கிய வாழ்வில்
"புதுக்
கவிஞர்களை"
சிலர்!
மரபுக்
கவிஞர்களாக
ஏற்க மறுத்து
வெறுத்து ஒதுக்கும்
பொழுது!
இணையற்ற
காரணங்கள்
இன்னும் பல
இருந்தாலும்
இப்படித்தான்
சிலர்!
"நம்பிக்கை "
என்னும்!
காற்றின்
துணையோடு
சிறகை விரிக்க
வாய்ப்பு
கிடைக்கின்றது!
அருமை நண்பரே தங்களின் எண்ணக்குவியல் வாழ்த்துகள்.
RépondreSupprimerவணக்கம் நண்பா!
Supprimerதங்களின் எண்ணங்களை குவித்து
கருத்தாக பதிவு செய்தீர். மிக்க நன்றி!
தங்களின் கருத்து வாகனம்தான் விரைந்து வந்து
முதல் கருத்தினை பதிவு செய்துள்ளது!
பாராட்டுக்கள்!
நன்றியுடன்,
புதுவை வேலு
உண்மை...சார்..துன்பங்களே சிறகை விரிக்க காரணமாகின்றன
RépondreSupprimerதென்றலாக வருகை தந்து தேன்கருத்து நல்கிய நல் உள்ளத்திற்கு
Supprimerநன்றி சகோதரி!
மீனகம் திரட்டித் தரும் படைப்புகள் யாவையுமே நற்சிறப்பு !
தங்களின் வருகைக்கும், குழலின்னிசையில் இணைந்தமைக்கும் மிக்க நன்றி!
நன்றியுடன்,
புதுவை வேலு
"நம்பிக்கை " யில்தான்
RépondreSupprimerநானும்
காற்றின் துணையோடு
சிறகை விரிக்க
சிறகை விரித்து
பறந்து கொண்டு இருக்கிறேன். நண்ரே.......
உயர உயர பறந்து உயர்ந்தவர் ஆவீர்!
Supprimerதோழரே!
நம்பிக்கையுடன்,
புதுவை வேலு
“நம்பிக்கைச் சிறகு“ அருமை.
RépondreSupprimerதங்களது வலைப் பூ படம்
Supprimerவெள்ளை சிறகை விரித்தபடியே
பறந்து வந்து வெற்றிக் கருத்தினை
தந்து விட்டு சென்றது.
மிக்க மகிழ்ச்சி
குழலின்னிசையில் இணைந்தமைக்கு நன்றி!
நன்றியுடன்,
புதுவை வேலு
அருமையான ஒரு நம்பிக்கை கவிதை.
RépondreSupprimerஉண்மை தான் தோல்வி தானே வெற்றிக்கான படி.
Supprimerதோல்விதான் வெற்றிக்கான முதல் படி என்பதை முத்தாய்ப்பாக சொன்னீர்கள் சொக்கரே!
வாழ்த்துக்கள்!
மீண்டும் வருக! கருத்தினை தருக!
நட்புடன்,
புதுவை வேலு
நம்பிக்கையே வாழ்க்கை என்பதை நயம்பட கவிதையில் சொல்லியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்!
RépondreSupprimer
Supprimerவழி நடத்தும் நல்ல கருத்தினை
தாங்கள் நாளும் நல்கிட,
தொடர்ந்து நம்பிக்கையுடன்
எதிர்நோக்கி காத்திருக்கிறேன் அய்யா!
நன்றியுடன்,
புதுவை வேலு
நம்பிக்கைக்கு ஈடு இணை எதுவுமில்லை. அதில் நம்பிக்கை வைக்கவேண்டும்.
RépondreSupprimerநம்பிக்கைக்கு ஈடு இணை எதுவுமில்லை.
Supprimerஉண்மை அய்யா!
தங்களது தொடர் வருகையை நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன் அய்யா!
நன்றியுடன்,
புதுவை வேலு
அருமை...
RépondreSupprimerநம்பிக்கையுடன் வெற்றி நடை பயிலுவோம் நண்பரே!
Supprimerகருத்து நல்கியமைக்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நம்பிக்கைச் சிறகடித்து பறக்க அருமையான ஒரு கவிதை படைத்திருக்கிறீா்கள். நன்றி
RépondreSupprimerநம்பிக்கை என்னும் சிறகை விரித்து நாம் பறக்கும் போது
Supprimerவானமும் நம் வசம்!
வசந்தமும் நம் வசம்!
வருகைக்கும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி! சகோதரி!
நன்றியுடன்,
புதுவை வேலு
சில குடும்பங்கள்
RépondreSupprimerவார்த்தைகளை
எரிமலையாக கக்குவதற்கு காரணம் புறநிலையா...அகநிலையா கவிஞரே....
சில குடும்பங்கள்
Supprimerவார்த்தைகளை
எரிமலையாக கக்குவதற்கு காரணம்
புறநிலையா...அகநிலையா?
என்றால்?
அங்கு நடுநிலை இல்லாது போவதுதான் காரணமாக எனது பார்வைக்கு படுகிறது தோழரே!
வருகைக்கு மிக்க நன்றி!
தோழமையுடன்,
புதுவை வேலு
நம்பிக்கை தான் வாழ்க்கை.
RépondreSupprimerஒரு மனிதனுக்கு இக்கட்டான சூழ்நிலையில்தான் நம்பிக்கை என்னும் வெளிச்சம் எளிதில் தெரியும். நல்ல உதாரணங்கள்.
அருமை புதுவை வேலு அவர்களே.
sattia vingadassamy
நம்பினோர் கெடுவதில்லை என்பதை தங்களது ஆனித்தரமான கருத்தால் பதிவு செய்துள்ளீர்கள். நன்றி! நண்பரே!
Supprimerவருகை தொடரவும்.
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான கவிதை! நம்பிக்கை விதைக்கும் வரிகள்! வாழ்த்துக்கள்!
RépondreSupprimerநம்பிக்கை விதைக்கும் கவிதை வரிகளை வாழ்த்தி
Supprimerகருத்தினை தந்தமைக்கு மிக்க நன்றி! நண்பரே!
தொடர் கருத்தினை நல்க வேண்டுகிறேன்.
நன்றியுடன்,
புதுவை வேலு
உண்மை நண்பரே
RépondreSupprimerதுன்பங்கள்தானே நமது வலிமையை நமக்கே தெரியப்படுத்துகின்றன
நன்றி நண்பரே
வணக்கம்!
Supprimerகரந்தையாரே!
"துன்பங்கள்தானே நமது வலிமையை நமக்கே தெரியப்படுத்துகின்றன"
தங்களது உண்மை கருத்துக்கும்,
உண்மை நட்புக்கும்,
உண்மையாகவும், உறுதுணையாகவும் இருப்பேன்!
வருகை கண்டு மகிழ்ச்சி!
தொடர் வருகை புரிக!
நட்புடன்,
புதுவை வேலு
புறக்கணிப்புகளும் அவமானங்களும் நம்மை செதுக்குகிறதுதான்/
RépondreSupprimerநன்றி நண்பரே!
Supprimerநம்பிக்கை என்னும் சிலையை செதுக்கி செம்மை படுத்தும் கருத்தினை வடித்தமைக்கும்,
வருகை புரிந்தமைக்கும் குழலின்னிசையின் நன்றி கலந்த பாராட்டுக்கள்!
வருக! மீண்டும்!
நட்புடன்,
புதுவை வேலு
"வேலை காலி இல்லை"..-----....அதனால் வேலையும் காலி செய்யப்படும்.
RépondreSupprimer"உண்டு உண்டு என்று எண்ணி உயர்வடைவோம்" ஆசானே!!
Supprimerஅருமையான விளக்கம்!
வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல வரிகள்! ஐயா! நம்பிக்கைதானே வாழ்க்கை. அடுத்த துளி நொடிகூட நம் கையில் இல்லாத போதும் கூட நாம் வாழ்வோம் என்ற நம்பிக்கையில் தானே இந்த உலகமே இயங்குகின்றது.
RépondreSupprimer"உண்டு உண்டு என்று எண்ணி உயர்வடைவோம்" ஆசானே!!
Supprimerஅருமையான விளக்கம்!
வருகைக்கும் கருத்து பதிவிற்கும் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தூக்கி வீசும் போது தான்
RépondreSupprimerதுணிவும் பிறக்கிறது
வலி காண
விழி தேடியலைய
வழி பிறக்கிறது
விடிவிற்காய்.
ஒரு கதவு மூட இன்னொரு கதவு திறக்கும் அல்லவா
நம்பிக்கை யூட்டும் வரிகள் அருமை அருமை !வாழ்த்துக்கள் ....!
நம்பிக்கையின் நற்சிறப்பை நவின்றாய் சகோதரி!
Supprimerநம்பிக்கு கை கொடுத்த நற்கருத்து உம் கருத்து!
நன்றியுடன்,
புதுவை வேலு
உங்களுடைய இந்த இடுகை யினை இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-6.html அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்!
RépondreSupprimer