mercredi 14 janvier 2015

தை பிறந்தாச்சி! (சிறுகதை)







இனியன்,
படைப்புலக வீதியில் தனது இலக்கியத் தேரை செலுத்துவதில் மிகுந்த இன்பம் கொண்டு செயல்படுபவன். சமூக அக்கறை மிகுந்த எழுத்துக்கள்தான் அவனது படைப்புகளுக்கெல்லாம் ஆனிவேர். அதோ! அன்றும் அப்படித்தான்! அதிகாலையிலேயே
திடுக்கிட்டு எழுந்தான்
"பொங்கல் திருநாள்" சிறப்பு மலருக்கு தான் எழுதி அனுப்பிய  கவிதை பிரசுரம் ஆகியிருக்குமா? என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டான். அவசர அவசரமாக காலைக் கடன்களை முடித்து விட்டு  அந்த கவிதையின் நகலை தேடி எடுத்து சத்தமிட்டு படிக்க ஆரம்பித்தான்


பொங்கி எழுக ! பொங்கலே !

ஆனந்தம்  அருந்தமிழாய் உற்றெடுக்க...
தேனருந்தும் வண்டுகளாய்  எம்மக்கள் !
வானுயர்ந்த சோலையாக வளர்ந்திங்கு!
வாழ்த்திடும் பொங்கலை  ஏற்பீரே!!!


முழு கவிதையை படிக்கும் முன்பே ?
அவனது தாய் சுசிலா போட்ட சத்தம் ,  அவனது காதில் வந்து பாய்ந்தது!

இதோ பார்! இனியா,
வெள்ளை பேப்பருக்கு வெள்ளை/கருப்பெல்லாம் அடிச்சி எழுதறதுக்கு பதிலா,  இந்த வீட்டு சுவரை சுத்தம் பண்ணி வெள்ளை அடிச்சாவாவது பார்க்க அழகா இருக்கும். அதை     விட்டுவிட்டு என்னமோ? கவிதை/கதை/கட்டுரையுன்னு? என்று ஏசியவாறே, கடைத் தெருவுக்கு போய் பொங்கலுக்கு கரும்பு வாங்கி வரச் சொன்னாள்.

தாய் சொல்லை தட்டாத தனையனாகி கரும்பு வாங்குவதற்காக புறப்பட்டான்.
வீட்டு வாயிற்படியை விட்டு தாண்டியதும் பக்கத்து விட்டு கணேசன் அழைக்கும் சத்தம் கேட்டு திரும்பினான்!
ஏம்பா! எங்கே கடைத் தெருவுக்கா?
ஆமாம்!  அம்மா! கரும்பு வாங்கி வரச் சொன்னாங்க! அதான்  கிளம்பிட்டேன் என்றான்.

இனியா!, தேவை இல்லாமல் ஏம்பா! காசை செலவு செய்யுற ?
அதான்! அந்த அரசியல் பிரமுகர் எல்லார் வீட்டுக்கும் இலவசமாய் கரும்பு கொடுத்து கொண்டு இருக்கிறாரே! பக்கத்து தெரு வரை வந்துட்டாங்க!  அடுத்து நம்ம தெருவுக்குத் தான் வருவாங்க என்று அவர் சொல்லக் கேட்டதும்
 ...
‘’எனிமா சாப்பிட்ட எலி’’ போல் துடித்துத்தான் போனான். ஏனெனில் இலவசம் என்பது
ஊழலுக்கான ஊற்றுக்கண் என்பது அவனது பாடம்.

கடை வீதியின் ஓரத்தில் ஏழை விவசாயி கரும்பு விற்றுக் கொண்டுருந்தார். அவரிடம் சென்று  பொங்கலுக்கான கரும்பினை வாங்கிக் கொண்டு  வீடு நோக்கி நடந்தபோது அவனது கண்ணில்பட்டது குழந்தைவேலு புக் ஸ்டாலில் அவன் ஆவலுடன் எதிர் பார்த்து காத்திருந்த, பொங்கல் மலர் புத்தகம் வாயிலில் தொங்கியபடி !


வேகமாக சென்று தனது சட்டை பையிலிருந்து ரூபாய் 50 எடுத்துக் கொடுத்து பொங்கல் மலரை வாங்கினான். பின்பு ஒருவிதமான பதட்டத்துடன் வீடு வந்தடைந்ததும்,  வாசலின் வெளியே அரசியல் பிரமுகர் கொடுத்துவிட்டு சென்ற கரும்பு என்னைத் தாண்டி வருவாயா? என்று ஏக்கத்தோடு பார்த்தபோதும், அதை சட்டை செய்யாமல் வீட்டுக்குள் நுழைந்தான். கடையில் வாங்கி வந்த பொருட்களையெல்லாம் கொடுத்த சிறிது நேரத்தில் பொங்கல் வழிபாடு சிறப்பாக நடந்தேறியது.

தாய் கொடுத்துவிட்டு சென்ற சூரியப் பொங்கலை சுவைத்தபடியே, பொங்கல் மலரின் பக்கங்களை ஒவ்வொன்றாக புரட்டியபோது சர்க்கரைப் பொங்கலாக இனித்தது  ஏழாம் பக்கத்தில் அவனது கவிதை:




பனி படர்ந்த போதும் கற்பித்தாய்
பணிவினை எமக்கு கதிரே!
நனிமிகு நன்னாள் இந்நாள் உமக்கு
புனிதமிகு பொன்னாள் கதிரே!


சுடர் தரும் ஆதவன் அருள் ஓளி
படரிருள் போக்கும் கதிரே!
தொடர் இன்பம் நிலைத்திட வேண்டும்
தொடுவானத்தை தொடு கதிரே !


உணவு பஞ்சம் இன்றி இந்தியாவில்
உழவர்களின் உயிராவாய் கதிரே!
தேன்மதுர தமிழோசை உலகமெல்லாம்
பரவும் வகை செய்வாய் கதிரே!



கவிதையை தனது தாயிடம் கொண்டு சென்று காட்டியதும் கட்டி அணைத்து ஆனந்தத்தை அள்ளித் தந்தாள் அவனிடம்.

இனியா உன்னிடம் சொல்ல மறந்து விட்டேன் உனக்கு மூன்று கடிதங்கள் வந்திருப்பதை!
அதோ அதை சாமி படத்தின் கீழ் வைத்துள்ளேன் எடுத்துப் பார் ! என்றாள்.

மகிழ்ச்சியுடன் அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து பிரித்து படிக்கலானான்.

முதலாவது கடிதம், அவனது படைப்பை பாராட்டி வாசகர் எழுதியது.

இரண்டாவது கடிதம் அவனது படைப்புக்குரிய சன்மானத் தொகைக்கான காசோலை !

மூன்றாவது கடிதத்தை பிரித்தான்!
படித்தான்!....

வணக்கம்!
தங்களது  பணி விண்ணப்பமானது தகுதியின் அடிப்படையில், ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.................................................
..........................................................................................நன்றி!


கதை இலாகா பிரிவில் புகழ் பெற்ற அந்த பத்திரிகையில் தனக்கு வேலை வந்த  செய்தியை தாங்கி வந்த ஓலையைக் கொண்டு ஓடினான் தனது தாயிடம்  காண்பிக்க!
இனியாவை பார்த்து,  அவனது தாய் சொன்னாள் மனதில் மகிழ்ச்சி பொங்க!! பொங்க!!






தை பிறந்தாச்சி!
வழி பிறந்தாச்சி!

அடுத்த தை வந்தால் இனியாவுக்கு  டூம் டூம் டூம், கெட்டி மேளம் ! கெட்டி மேளந்தான்!


புதுவை வேலு

30 commentaires:

  1. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      தங்களின்,
      இனிய வருகையும், கருத்தும்,
      இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
      தங்களின்,
      இனிய வருகை
      இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. நல்ல க[வி]தை!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
      தங்களின்,
      இனிய வருகையும், கருத்தும்,
      இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
      தங்களின்,
      இனிய வருகையும், கருத்தும்,
      இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. கதையும் அருமை அதிலுள்ள கவிதையும் அருமை. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
      தங்களின்,
      இனிய வருகையும், கருத்தும்,
      இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. கதையும்,கதைக்குள் வந்த கவிதையும் அருமை.

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
      தங்களின்,
      இனிய வருகையும், கருத்தும்,
      இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. கதை அருமை நண்பரே,,,, இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
      தங்களின்,
      இனிய வருகையும், கருத்தும்,
      இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. நல்ல கதையும்
    நல்ல கவிதையும்..... தந்ததற்கு நன்றி
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
      தங்களின்,
      இனிய வருகையும், கருத்தும்,
      இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. தைப்பிறந்தாச்சு தங்களுக்கு பொங்கல் வாழ்த்தும் வந்தாச்சு... வாழ்த்துக்கள்.!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
      தங்களின்,
      இனிய வருகையும், கருத்தும்,
      இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. தை பிறந்தால் வழி பிறக்கும், உண்மை
    இனிய கவிதை, அருமையான கதை.
    வாழ்த்துக்கள்.
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
      தங்களின்,
      இனிய வருகையும், கருத்தும்,
      இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அன்புள்ள அய்யா,

    தை பிறந்தாச்சி! (சிறுகதை) கவிஞனைப் பற்றி... அவனின் கவிதை பிரசுரமான மகிழ்ச்சி...பாராட்டு...சன்மானம்....வேலை வந்த வேளை... தைமகள் பிறந்தவேளை... கவிதையும் கதையும் அருமை. வாழ்த்துகள்.
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்புள்ள அய்யா,
      வணக்கம்!
      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
      தங்களின்,
      இனிய வருகையும், கருத்தும்,
      இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். Thanks for remembering me on this auspicious day!!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
      தங்களின்,
      இனிய வருகையும், கருத்தும்,
      இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
      தங்களின்,
      இனிய வருகையும், கருத்தும்,
      இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. கவிதை அழகு, கதை அருமை, தைமகள் வருகை பெருமை, புதுவை வேலு அவர்களே.
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
      தங்களின்,
      இனிய வருகையும், கருத்தும்,
      இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
      வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
      நன்றியுடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. கதையும்,கதைக்குள் வந்த கவிதையும் மிக அருமை!
    தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! நன்றி !

    RépondreSupprimer
  16. வணக்கம்!
    "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!"
    தங்களின்,
    இனிய வருகையும், கருத்தும்,
    இன்பத்தை இரட்டிப்பாக்கித் தந்தது
    வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்!
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer